badge

Followers

Tuesday, 21 February 2012

சொர்க்கம் என்பது நமக்கு...



                                                       



இறந்த பின் ஒருவர் மேல் லோகம் சென்றார்...

அங்கே அவருடைய பாப புண்ய  கணக்குகள் சரி பார்க்கப்பட்டன...

இவர் செய்த நன்மைகள் கொஞ்சம் அதிகமாகவே  இருந்தன...

இவர் சொர்கத்துக்கு அனுப்பப்பட்டார்...


சொர்கதுக்குப்போகும்  வழியில் இவருக்கு ஒரு அற்ப ஆசை!


"நரகம்  எப்படி இருக்கிறது  என்று ஒரே ஒரு முறை பார்த்து விட்டு சொர்க்கம் போகலாமே"




அழைத்துச்செல்பவர் சம்மதித்து அவரை நரகத்துக்கு  அழைத்துச் சென்றார்...




அங்கே...




அழகான தோட்டங்கள்...பூத்துகுலுங்கும் மலர் வனங்கள்...மாளிகைகள்...


அதன் உள்ளே பெரிய உணவுகூடங்கள்...உணவு மேஜையின் மீது

வித விதமாய் அறுசுவை விருந்துகள் காத்துக்கிடந்தன...



"அட ...பரவாயில்லையே...நரகமே இப்படி இருந்தால்..

.சொர்க்கம் எப்படி இருக்கும்?"



அடுத்தது சொர்க்கம் சென்றார்...

துணுக்குற்றார்...




அங்கே...

அழகான தோட்டங்கள்...பூத்துகுலுங்கும் மலர் வனங்கள்...மாளிகைகள்...

அதன் உள்ளே பெரிய உணவுகூடங்கள்...உணவு மேஜையின் மீது

வித விதமாய் அறுசுவை விருந்துகள் காத்துக்கிடந்தன...

அவருக்கு கோபமும் ஆச்சர்யமும் ஒருசேர  வந்தது...

"ஒரு வித்யாசமும் இல்லை.ஒரே மாதிரி இருக்கிறது...

பூமியில் இத்தனை ஒழுக்கசீலனாக வாழ்ந்து சொர்க்கம் சென்று என்ன பயன்?

பாபிகள் செல்லும் நரகத்துக்கும் அதற்க்கும் ஒரு வித்யாசமும் இல்லையே..."

புலம்பினார்...

"ஒருமணி நேரம் பொறுத்து வந்து பாருங்கள்...வித்யாசம் தெரியும் ..."

என்றார் அழைத்து வந்தவர்...

ஒரு மணி நேரம் சென்றது...

உணவு நேரம் வந்தது...

முதலில் ,நரக்கத்து dining ஹால் பக்கம் சென்று எட்டிபார்த்தார்கள்...


நரகவாசிகள் அனைவரும் அறுசுவை உணவுகள் நிரம்பிய உணவு

 மேஜைமுன் அமர்ந்திருந்தனர்...


அனைவர் கரங்களிலும் 5  அடி நீளமுள்ள கரண்டிகள் கட்டப்பட்டு இருந்தன...

அதனால் எப்படி எடுத்தாலும் உணவை தங்கள் வாயில் போட

முடியவில்லை...

எடுத்த உணவு கொட்டியது...எதிராளி இதைப் பார்த்து சிரிக்க கோபம் வந்து


கரண்டியாலேயே  அவன் தலையில் ஒன்று போட்டன் ஒருவன்...


மற்றொருவன் எரிச்சலில் ஒரு குண்டான் பாயசத்தை தன கையில்


உள்ள கரண்டியால் தட்டி விட்டான்


சண்டையும் கூச்சலும் குழப்பமும் வலுத்தது...






உணவு நேரம் முடிந்தது...


அனைவரும் சாப்பிடாமலே வெளியே சென்றனர்..
.


"இது தான் நரகம்"






அடுத்தது....சொர்கத்து உணவுக்கூடம்...

அங்கு அனைவரும் உணவு உண்ணததயார்.



இங்கும்...

அனைவர்  கைகளிலும் 5  அடி கரண்டி கட்டபட்டிருன்தது...






ஆனால்...

ஒரு சத்தமில்லை...குழப்பமில்லை....


அழகாக ஒவ்வொருவரும்  தங்கள் கைக் கரண்டியால் உணவை எடுத்தனர்...


அதை சிந்தாமல் சிதறாமல் எதிர் வரிசையில் அமர்ந்திருப்பவர்  வாயில் ஊட்டி


விட்டனர்..

அனைவைர்  வயிறும்  நிரம்பின...அனைவரும் திருப்தியுடன்

 உண்டு மகிழ்ந்தனர்...

"இவர் புரிந்து கொண்டார்...சொர்கமும் நரகமும் நம் கையிலே

 தான் இருக்கிறது..." என்பதை

அடுத்தவருடன் பகிர்தல்...உதவுதல்...யோசித்து செயல் படுதல்

 எந்த இடத்தையும் சொர்க்கம் ஆகிவிடும் என்று...






(ஒரு மேடையில் கேட்ட கதை)


7 comments:

  1. //சொர்கமும் நரகமும் நம் கையிலே
    தான் இருக்கிறது..."//

    என்பதை எங்களுக்கும் மிக அழகாகச் சொல்லி விட்டீர்கள்.

    வெகு அருமையான விஷயம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. நானும் ஏற்கனவே இந்தக்கதை படிச்சிருக்கேன். நல்லவிஷயங்களைச்சொல்லும் கதைகள் எத்தனை தடவை படிச்சாலும் அலுக்கவே அலுக்காது

    ReplyDelete
  3. திரு வை.கோ., திருமதி .லக்ஷ்மி,

    தங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

    நீங்கள் தரும் ஊக்கத்துக்கும்

    நன்றிகள் பல...

    ReplyDelete
  4. சொர்கமும் நரகமும் நம் கையிலே

    தான் இருக்கிறது..." என்பதை

    அடுத்தவருடன் பகிர்தல்...உதவுதல்...யோசித்து செயல் படுதல்

    எந்த இடத்தையும் சொர்க்கம் ஆகிவிடும்

    அருமையான பகிர்வு.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. இந்த எளிய உண்மையை புரிந்து கொண்டால் எல்லாமே சொர்க்கம் தான் அல்லவா...
    வருகைக்கு நன்றி,ராஜராஜேஸ்வரி

    ReplyDelete