ஒரு துறவி தினமும் தன் குடிலுக்கு ஆற்றிலிருந்து இரண்டு பானைகளில் தண்ணீர் எடுத்து செல்வார்...
அதில் ஒன்று நல்ல பானை...ஒன்று விரிசல் விழுந்த பானை...
ஆற்றில் இருந்து தண்ணீர் நிரப்பி குடிலுக்கு வரும் போது நல்ல பானையில் நீர் தளும்பும்...
விரிசல் விட்ட பானையில் பாதி அளவே தண்ணீர் இருக்கும்...
மீதி தண்ணீர் தான் வழியில் ஒழுகி விடுகிறதே...
நல்ல பானைக்கு இதனால் தன்னைபற்றி ஒரு கர்வம் ...தானே சிறந்த பானை என்று!!!
ஒழுகும் பானைக்கு ஒரு வித அவமானம்...வருத்தம்...தாழ்வு மனப்பான்மை...
ஒரு நாள் வேதனை தாங்காமல் ஒழுகும் பானை துறவியிடம் கேட்டது...
"என்னை எதற்காக வைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?
தூக்கி எரிந்து விடுங்கள்...
நான் உபயோகம் அற்றவன்...
என்னை நினைத்து எனக்கே அவமானமாக இருக்கிறது...ஒரு நாள் கூட என் கடமையை என்னால் ஒழுங்காக செய்ய முடியவில்லை...செய்யவும் முடியாது...நான் தான் ஓட்டை பானை ஆயிற்றே..."
என்று அழுதது...
"கொஞ்ச நாள் காத்திரு...உன்னைப்பற்றி நீயே புரிந்துகொள்ள்வாய்" என்றார் துறவி...
ஆறு மாதங்கள் கடந்தன...
ஓட்டை பானையின் அவமானமும்
நல்ல பானையின் கர்வமும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது...
ஒரு நாள் துறவி இரண்டு பானைகளிடமும் சொன்னார்...
"தண்ணீர் கொண்டுவரும் போது என்ன பார்த்தீர்கள் என்பதை குடிலுக்கு வந்த பிறகு எனக்கு சொல்லுங்கள்..." என்றார்...
அன்று தண்ணீர் கொண்டு வந்த பிறகு இரண்டு பானைகளும் தாங்கள் பார்த்ததை சொல்ல ஆரம்பித்தன...
"கற்கள்...முட்கள்...தான் என் கண்ணில் பட்டன..."என்றது நல்ல பானை...
"பச்சை செடிகள்...பூக்கள்...கொடிகள்...என் பாதையில் பார்த்தேன் " என்றது ஒழுகும் பானை...
துறவி புன்னகைத்தார்...
"நீ ஒரு சொட்டு நீர் கூட வழியில் சிந்தாமல் வந்தாய்...உன் பக்கம் கல்லும் முள்ளுமே இருக்கிறது... ஆனால்,நீ வழி முழுவதும் பாதி நீரை சொட்டு சொட்டாக கசிந்து கொண்டு வந்தாய்...அந்த நீரினால் உன் பக்கம் செடிகள் முளைத்தன...பூக்கள் பூத்தன...."
"உன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொண்டால் வாழ்கை சோலைவனம் ஆகும்...
உன்னுடையதை பூட்டி வைத்தால் உன்னை சுற்றிலும் பாலைவனம் ஆகும்"
என்றார்...
இரண்டு பானைகளுக்கும் ஏதோ புரிந்தாற்போல இருந்தது...
குறையும் நிறையும் நாம் சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் தான்...என்பதை உணர்ந்தன பானைகள்...
நல்லதோர் நீதிக்கதை.
ReplyDeleteஎன் பேத்தியின் ஆங்கிலப் புத்தகம் ஒன்றில் எப்போதோ படித்த ஞாபகம் உள்ளது.
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கும் தனித் தகவலுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நீ வழி முழுவதும் பாதி நீரை சொட்டு சொட்டாக கசிந்து கொண்டு வந்தாய்...அந்த நீரினால் உன் பக்கம் செடிகள் முளைத்தன...பூக்கள் பூத்தன...."
ReplyDelete"உன்னிடம் இருப்பதை பகிர்ந்துகொண்டால் வாழ்கை சோலைவனம் ஆகும்...
உன்னுடையதை பூட்டி வைத்தால் உன்னை சுற்றிலும் பாலைவனம் ஆகும்"
பூவாளியாக நீர்தூவி
பூ வளர்த்த பானை..
அருமையான தத்துவம்.. பாராட்டுக்கள்..
நச்சென்று புரிந்த நயம். இதை நினைவில் வைத்துக் கொள்கிறேன்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
திரு .v g k சார்,ராஜராஜேஸ்வரி,அப்பாதுரை அவர்களுக்கு...
ReplyDeleteதங்கள் பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி....
நான் எப்போதோ படித்த ஜென் கதை இது...
குறையும் நிறையும் நாம் சமுதாயத்துக்கு பயன்படும் வகையில் தான்...என்பதை உணர்ந்தன பானைகள்...
ReplyDeleteநல்ல சிந்தனையுள்ள கதை. நன்றி!
Mikka nandri
Delete