badge

Followers

Thursday, 5 April 2012

அந்தமானில்...ஜாரவா தேசத்தில்...


அதிகாலை பிளைட்டில் அந்தமான் நோக்கிப் பறந்த போது சிரித்துக்கொண்டேன்...

அம்மாவின் கவலைகளை நினைத்து...

"உனக்கு ஊர் சுத்திப்பார்க்க வேறு இடமே கிடைக்கலையா?

"ஆனா ஊனா பூகம்பம் வர இடம்... "

"அங்கே சாப்பிட மீன் தான் கிடைக்குமாமே...எதுக்கும் ரொட்டியும் ஜாமும் எடுத்துண்டு போ!"

"அங்கே காட்டுமிராண்டிகள் இருப்பர்கலாமே... விஷ அம்பு விட்டு ஆளை கொள்வார்களாமே...கவலையாய் இருக்கு..."

அம்மாவுக்கு ராவெல்லாம் தூக்கம் இல்லை...


அந்தமானை நெருங்கிய போது வானில் இருந்து பார்த்தல்...

அழகு நீலக்கடலில் கிடக்கும் மரகதக்குவியல்களாக காட்சி அளித்தன தீவுக்கூட்டங்கள்...

காலை 7  மணிக்கு போர்ட் பளைர் வீர சர்வார்கர் ஏர்போர்ட்இல் தரை இறங்கிய போது வெயில் சுட்டு எரித்தது...

காரணம்...

நம் ஊருக்கு வரும் முன்பு 2 மணி நேரம் முன்பே சூரியன் அங்கே உதித்து விடுகிறான்!!!

File:Andaman.jpg
ஊர்...அழகோ அழகு  ...

எந்த இடத்தில இருந்து பார்த்தாலும் கூப்பிடு தூரத்தில் கடல்...

அதுவும் அலை அடிக்காத அமைதியான அழகான aquamarine blue  நிற கடல்...

நம்ம ஊர் டவுன் பஸ் மாதிரி அங்கே ஸ்டீமர்,போட் பயணம்...



ROSS  ISLAND ,CHIDIYA TAPU ,CORBYN  BAY ,செல்லுலர் சிறை,விஜய நகர் பீச் ...என்று பல இடங்களையும் சுற்றி அடித்த பிறகு (அந்தக்கதை எல்லாம் இன்னொரு பதிவில் விவரிக்கிறேன்)



"நாளை அதிகாலை 3.30 க்கு ரெடியாக   இருங்க ...ஜாரவாக்கள் வாழும் காடுகள் வழியே பயணித்து பாராடங் சுண்ணாம்பு குகைகளை பார்க்கப்போகிறோம்..திரும்பி வரும் வழியிலும் ஜாரவாகளை பார்க்கலாம் ...உங்களுக்கு லக் இருந்தால்...."

கேட்ட உடனே எனக்கு ஆர்வம் கலந்த உற்சாகம்...

விடியும் முன்பே காரில் கேமரா ,வாட்டர் பாட்டில்,பாக் செய்த உணவு சகிதம் ஏறியாச்சு...

மனிதனை பார்க்க மனிதன் போகும் HUMAN  SAFAARI ...

"அந்தமானின் தீவுகளை இணைக்கும் அந்தமான் TRUNK ரோடு போட்ட பிறகு தான் அவர்கள் வாழும் காடுகள் வழியே நாம் போக முடிகிறது...இந்த ரோடால் அந்தமானின் வர்த்தகம் மிகவும் முன்னேறியிருக்கிறது.. அதில் தான் நாம் போகிறோம்...."

டிரைவர் சொல்லிக்கொண்டே வந்தார்...

JAARAWAAS ,ONGEES ,SENTINALESE  ஆகியோரே அந்தமானின் பூர்வ குடியினர்...

இவர்களில் ஒன்கீஸ் இப்போது சற்று நாகரீகம் அடைந்து விட்டனர்...
SENTINALEESE மிகவும் காடுமிராண்டிதனமாக இருப்பார்கள்...நாகரீக மனிதர்களை கண்டாலே விஷ அம்புகள் எய்து கொன்று விடுவார்கள்...சுனாமி தாக்கிய பிறகு SENTINALESE உயிருடன் இருக்கிறார்களா என்று பார்க்க அந்தப்பக்கம்  ஹெலிகோப்டேரில் போன  பொது அவர்கள் பறக்கும் ஹெலிகோப்டேரை அம்பால் தாக்க ஆரம்பிக்க "சரிதான்...அவர்களுக்கு ஆபத்து இல்லை" என்று திரும்பினார்களாம் இராணுவத்தினர்...,

ஆனால் ஜாரவாகள் (450  பேர்  மட்டுமே உள்ள இனம்) இன்று நாகரீகத்தின் தாகத்தால் வேகமாக அழிந்து வருகிறது...


அதிகாலை 5  மணிக்கே ஜாரவா RESERVE  ஏரியா வின் முன்பு மூடிய காட்டின் முன் நின்றோம்..

எங்களுடன் மேலும் 10 -12  வாகனங்கள்...காத்திருந்தன...








கேட் அருகே பெரிய போர்டு...நாம் ஜாரவாக்கள் வாழும் பகுதியில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதிகள் எழுதப்படிருந்தன...





வாகனங்கள் குழுவாகத்தான் செல்ல வேண்டும்.
எக்காரணம் கொண்டும் காட்டை கடக்கும் வரை நிறுத்தக்கூடாது.
ஜரவாக்களை உற்று பார்க்கக்கூடாது
அவர்களை போட்டோ எடுக்க கூடாது
அவர்களுக்கு தின்பண்டங்கள்,பாக்கு ,சிகரெட் கொடுக்ககூடாது...
வேகத்தை குறைக்கவோ கூடவோ கூடாது...

என்று கண்டிஷன்கள் நீண்டன...

 


6 .30 க்கு கேட் திறக்க...

முதலில் ,ஆயுதம் தாங்கிய போலீஸ் வாகனம்
அடுத்தது ,பஸ் 
பிறகு கார்கள் 
கடைசியில் ஆயுதம் தாங்கிய வண்டி...
என்றுமுதல் ட்ரிப்பில்  ஊர்வலமாகக்கிலம்பினோம்...
(அடுத்த ட்ரிப் 2  மணி நேரத்துக்குப்பிறகு...)

"மொபைல்,பர்ஸ்,கேமரா, எல்லாத்தையும் உள்ள வையுங்க...கார் கண்ணாடிகளை மேலே ஏற்றி விடுங்கள்...ஜரவக்களை பார்த்தால் எந்த சத்தமும் போடாதீர்கள்..."

பச்சை பசேல் காட்டில் 15 நிமிடங்கள் போன பிறகு...
ரோட்டோர மேட்டில் இரண்டு கரிய ஜரவா பெண்கள்...

தலையில் இருந்து ஊஞ்சலாடும் கூடை..
இடுப்பில்  சிவப்பு மஞ்சள் கயிறுகள்...அதில் சொருகிய அம்பு...தொழில் மாறிய வில்...கையில் ஒரு நீண்ட கம்பு...

                                            

உலகிலெயே பழமை வாய்ந்த மனித இனத்தின் முதல் தரிசனம்...
சில கிலோமீட்டர்கள் சத்தமில்லாத பயணம்...

அங்கே காட்டின் இடையே சிறிய சமதரை...அதில் சின்ன சின்ன குடில்கள்...

அட...ஜாரவா கிராமம்?

சினிமா செட்டிங் போல அழகாய் இருந்தது...

"இந்த ஏரியா போம்ப மோசம்க...திடீர்னு மரத்துல இருந்து  வண்டி டாப்ல இந்த ஆளுக குதிப்பாங்க..நாம வண்டியை நிறுத்த முடியாது...கொஞ்ச தூரம் போன பிறகு "டபால்"னு  குதிப்பாங்க..."
டிரைவர் கொஞ்சம் பயமுறுத்தினார்..."சாயங்காலம் 5 மணிக்குப்பிறகு இந்த ரோட்ல வண்டி போகக்கூடாது..."
                                                                  
"இவங்க பச்சை உணவு சாப்பிட்டே பல ஆயிரம் வருடங்களாக பழகிட்டாங்க...
சமைத்த உணவு அவங்களுக்கு ஜீரணம் ஆவதில்ல...மேலும் ,இவங்களுக்கு சமைத்த உணவு கெட்டுப்போகும் என்று தெரியாது... டூரிஸ்ட்கள் அவர்களுக்கு சமைத்த உணவு பொட்டலத்தை தூக்கிப்போட்டு விட்டு போகிறார்கள்...அதை நாட்கணக்கில் பத்திரப்படுத்தி வைத்து ,கெட்டுப்போன பிறகு உண்டு foodpoisoning  இல் இறந்து விடுகிறார்கள்...தவிரவும் நம் மூலம் ஜரவக்களுக்கு 
 பல வித நோய்கள் தொற்றிகொள்ள்கிறது...

 தவிர ,சமைத்த உணவு ருசி பிடித்துப்போய் அவைகள் உணவு தேடி ஊருக்குள் வந்து தாக்குகிறார்கள்...வேட்டைக்குப்போக சோம்பல் படுகிறார்கள்...



                                       


"நிம்மதியாக காட்டில் வாழந்தவர்கள் இடத்தில ரோடு போட்டதால் லோரி,பஸ்,போக்குவரத்து அதிகம் ஆகி விட்டது...

லோரி,பஸ்,ஓட்டுனர்கள்,இவர்களை சும்மா சீண்டிப்பார்க்க போதை பாக்கு,பீடா...போன்றவற்றை சாப்பிடக்கொடுத்து குறிப்பாக சிறுவர்களுக்கு)போதை அடிமைகள் ஆகிவிட்டார்கள்..."

கேட்க மனம் பாரமானது...

மீண்டும்...சில ஜரவாகள்...

மஞ்சள் படிந்த கண்கள்...மைகருப்பு உடல்...அடர்ந்த சுருட்டை முடி...

நிர்வாணம் ...ஆனாலும்...அவர்களுக்கு அது normal ஆகா இருந்தது...

ஆனால் நான் பார்த்த சில காட்சிகள்...நெஞ்சை பதிக்க வைத்தன...


கையில் அழுக்கு மினரல் வட்டார் பாடல்லுடன் ஒரு சிறுவன்...பிளாஸ்டிக் பையை தலையில் மாட்டிய ஒரு பெண் ...யாரோமுட்டாள் டூரிஸ்ட் தூக்கிப்போட்ட உள்ளடயை கழுத்தில் தொங்க விட்ட படி சிரித்த ஒருவன்...

இவர்களை எல்லாம் பார்க்கப்பார்க்க நம்மை போன்றவர்கள் மீது கோபம் வந்தது...


சட் என்று மொபைல் போனை எடுத்து ஜரவா சிறுவனை  எங்கள் முன்னால் உள்ள காரில் வந்தவர் போட்டோ எடுத்த போது எங்கிருந்தோ தப தப என்று வந்த இரண்டு ஜரவக்கள்...காரை மறித்தனர்...ஒருவன் அம்பை ஆட்டிய  படி 
கார் கண்ணாடியை தட்டி ஏதோ கத்த......
அந்த கார் டிரைவர் செல் போனை வாங்கி அந்த ஜரவாவிடம் கொடுத்தார்...

ஊர்வலம் சத்தமில்லாமல் தொடர்ந்தது...

"இப்படி தான் நம்ம ஆட்கள் செய்யறாங்க..."டிரைவர் சொன்ன போது கோபம் வந்தது...


கொஞ்ச நேரத்தில் காடு பயணம் முடிவுக்கு வர...


                                  
  ஸ்டீமரில் ஏறி சதுப்பு நிலக்காடுகள் வழியே ஒரு மணி நேரத்துக்கு  மேல் பயணம்...









baratang caves  ...

அவை இயற்கை செதுக்கிய அற்புத சிற்பங்கள்...












                                      


                                         






சிறு டார்ச் லைட் ஒளியில் குகைகளுக்குள் தெரியும் படிவங்கள்...மிக அற்புதம்...
சங்கு,சிங்கம்,மீன்,யானை.உருவங்களை கைட் டார்ச் ஒளியில் காட்டிய பொழுது அதிசியமாக இருந்தது...




அங்கிருந்து...




                                              
சேற்றை உமிழும் எரிமலை ( பார்க்க சற்று ஏமாற்றமாக இருந்தது..


".கிராம கேணி தூர் வாரினா மாதிரி இருக்கு..."
என்று யாரோ கமென்ட் அடித்ததை கேட்டு சிறிது விட்டேன்...








மீண்டும் காடு வழி பயணம்...


இந்த முறை 40 - 50   ஜாரவாகளை பார்த்தோம்


                               
அவர்கள்...சற்று கடுப்புடனே இருப்பது போல தோன்றியது...

எங்கள் கார் அருகே ஒரு திருப்பத்தில் சில ஜாரவாசிறுவர்கள் மறித்து...

பிச்சை எடுப்பது போல கை ஏந்தி

"பாண் தேதோ "  (போதை பாக்கு/பீட கொடுங்க)     என்று கேட்க டிரைவர் காரை விரட்டினார்...

சட சட வென்று காரை தாக்கியது அவர்கள் எறிந்த கற்கள்...

(தப்பிச்சோம்டா சாமி....)

"சாயங்காலம் ஆனால் ,எல்லாரையும் மறிச்சு பாண் ,பிஸ்கட் ,எல்லாம் கேட்பாங்க..." என்றார் டிரைவர்...

"இப்போ அவங்க ரொம்ப கேட்டுபோயிடாங்க...நேர பாக்கெட்ல கை இட்டு பர்சை அடிக்கறாங்க..." அதை நம்ம ஆளுக கிட்ட கொண்டு போயி கொடுத்தா
இவங்களுக்கு பாண் பீடா தருவாங்க.."

என்று டிரைவர் சொன்ன போது அதிர்ச்சியாக இருந்தது...

காடுகளில் நிம்மதியாக வாழ்பவவரை போதை அடிமை ஆகி,திருடர்களாக மாற்றி,(சமீபத்தில் வந்த YOUTUBE  நிர்வாண நடன படம்சர்ச்சை  நினைவுக்கு வருகிறதா?) அவர்கள் இனத்தை அழிக்கும் நாம் காட்டுமிராண்டிகளா?
சுனாமி வருவது முன்பே அறிந்து ஒரு நாள் முன்பே கடல் கரைகளை காலி செய்து பத்திரமான இடங்களுக்கு சென்று 10  நாட்களுக்கு பிறகு வெளியே வந்த இவர்கள் காட்டுமிராண்டிகளா?




இப்போது இந்த வழியில் டூர் களை நிறுத்த வேண்டும் என்று பல மனித உரிமை ஆர்வலர்கள் குரல் எழுப்புகிறார்கள்...


நல்லது நடக்கட்டும் ...ஜாரவாகளுக்கு...


(ஜரவா ,மற்றும் பல புகைப்படங்கள் இணையத்திலிருந்து...)


4 comments:

  1. அவை இயற்கை செதுக்கிய அற்புத சிற்பங்கள்...


    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  2. நன்றி,ராஜராஜேஸ்வரி...

    ReplyDelete
  3. நல்ல ஒரு பதிவு !!!

    ReplyDelete