badge

Followers

Friday, 20 April 2012

என் வீட்டில் அக்ஷய மூலைகள் !!!!!

                                                        

இதோ... வந்தாச்சு ...தங்கம் வாங்கும் பண்டிகை...

அதான் ...அக்ஷய திரிதியை!!!

10 -12  வருஷங்களுக்கு முன் நகை கடைகளில் அக்ஷய திரிதியை க்யூவும்  தங்கம் வாங்கும் சாங்கியமும் யாருமே கேள்விப்பட்டதில்லை...

ஆனால், தாராலமயமாகுதல் வந்தது...வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் உள்ளே வந்து நம் சம்ப்ரதாயங்களை நோண்டிப்பார்த்து நமக்கே தெரியாத ஒரு கலாசாரத்தை நம் மேல் இலகுவாக திணித்து விட்டு இந்த நாளில் ரெகார்ட் சேல்ஸ் நடத்திக் கல்லா கட்டுகிறார்கள் நகை வியாபாரிகள்!

அக்ஷய திரிதியை அன்று எது செய்தாலும் அது பல்கிப்பெருகும் என்பது ஐதீகம்...

அன்று தானங்கள் செய்து புன்யங்களை பெருக்கியது அந்தக்காலம்!

எப்பாடு பட்டாவது தங்கம் வாங்கி தங்கள் தங்க குவியலை பெருக்குவது இந்தக்காலம்!

அது சரி...

அக்ஷயம் என்றால்...அள்ள அள்ள குறையாதது என்றல்லவா பொருள்!

அப்படிப்பார்த்தால் என் வீட்டில் சில பல அக்ஷய மூலைகளும் இடங்களும் உள்ளன...

அந்த இடங்களில் உள்ள பொருட்கள் அள்ள அள்ளக் குறையவே குறையாது!!!

அதென்ன அப்படிப்பட்ட அக்ஷய ஸ்தலங்கள் என்று பார்ப்போமா?



என் வீடு சோபா...





சாதாரண வீட்டு சோபாக்களில் மனிதர்கள் சொகுசாக உட்காருவார்கள்...
அனால் என் வீட்டு சோபா செட்டில் எப்படி அள்ளினாலும் குறையாத அளவு பொருட்கள் வந்து சேருவதைப்பார்த்தல்  இதென்ன குப்பைகளின் ஊற்றோ? என்று தோன்றும்...

அதில் கட்டாயம் இருப்பது ....செய்திதாள்கள்...அதன் இடுக்கில் ஒளிந்து கொண்டிருக்கும் பால் பாயிண்ட் பேனா ...யார் போட்டது என்று தெரியாத டவல் ...எதற்காக அங்கே வந்தது என்றே தெரியாத நோட்டீஸ் ...மூன்று மாதம் முன் வாங்கிய புத்தகம்...மொபைல் போன்...எ .சி.ரெமாட்,   இன்னும் என்னென்னமோ அதில் 
பெர்மனன்ட் ஜாகை ....

முதுகு ஓடிய அதை சுத்தம் செய்து விட்டு நிமிர்ந்தால் மீண்டும் அதில் ஒரு கசங்கிய கைக்குட்டை முளைதுப்பார்த்து இளிக்கும்!!!
இப்போது சொலுங்கள்...என் வீட்டு சோபா ஒரு அக்ஷய ஸ்தலம் தானே...

சோபாவுடன் ஒட்டிய செண்டர் டேபிள் இருக்கிறதே...
அதைப்பற்றி நான் சொல்லாவிட்டால் சரியாக இருக்காது...

அதை வாங்கிய அன்று தான் அது பளிச் என்று காலியாக இருந்தது...

அதில் அழாக ஒரு பூஜாடி ஏறி உட்கார...உடன் வந்து ஒட்டிகொண்டது சில வாரப்பத்திரிகைகள்...
அவற்றுடன் தினசரி வரும்  தபால்,பாக்கெட்டில் இருந்து எடுத்த சில்லறை,கார் சாவி,டி .வீ. ரிமோட் ,காபி டம்ளர்,நமுத்த முறுக்கு துண்டு...என்று ஏதாவது உட்கார்ந்துகொண்டு இருக்கும்...

கொஞ்சம் தள்ளி நகர்ந்தால் டைனிங் டேபிள் ....




சாப்பாடு ,தட்டுகள்,தண்ணீர் கிளாஸ்...மட்டும் இருப்பது ஹோட்டல் டைனிங் டேபிளில்...
என் வீட்டு டைனிங் டேபிளில் அவற்றுடன் space  sharing  செய்வது...
ஆபீஸ் பைல்கள்...டோபி கணக்கு நோட்...வாடிய கல்யாண தாம்பூலம்...ஹோட்டலில் இருந்து வாங்கிய ஸ்வீட்,காரம்...நறுக்க வேண்டிய காய்கள்...இன்னும் எத்தனையோ புதிது புதிதாக வந்து  உட்காரும்...

இந்த வாஷிங் மிஷீனும் சமையல் அறை சின்க்கும் இருக்கிறதே...

அவைகளை தொடர்ந்து மூன்று மணி நேரம் காலியாகப்பார்க்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை!

ஆனால் அவற்றில் தேக்க வேண்டிய பாத்திரங்களும் துவைக்க வேண்டிய துணிகளும் எப்போதுமே பொங்கி வழியும்...

என் வேலைகளும் அக்ஷயமாய் பெருகும்....





பிரிஜ்ஜை பற்றி சொல்லவே வேண்டாம்...அதில் கிண்ணம் ,கிண்ணமாக குழம்பு,விதவிதமாய் புளித்த தோசை மாவு(ஊத்தப்பம் செய்யலாம்),தயிர் வாடி/வாடாத காய்கள் வழியும்...

தோல் சுருங்கிய ஆப்பிளை எடுத்த என் கணவர் "இது மூணு வருஷமாய் இங்கே தானே இருக்கு!" என்று கேட்க " இல்லை ...போன போன ஜன்மதிலிருந்தே இங்கே பார்த்த ஞாபகம்" என்றேன் !!!!

இந்த துணிகள் வைக்கும் அலமாரிக்களின் ஓவர் லோட் கதையே தனி...

ஒரு வேளை....வீடு கட்டும் போது அக்னி மூலை,ஈசான்ய மூலை என்பது போல அக்ஷய மூலையில் இவைகள் அமைந்து விட்டனவோ?

அப்படி ஒரு மூலை நிஜமாகவே இருந்தால் சொல்லுங்களேன்...
பணப்பெட்டியை அங்கே வைத்து விடுகிறேன்!!!!!






12 comments:

  1. அக்ஷயம் அள்ள அள்ளக்குறையாதது என்பதை அழகாக நகைச்சுவையாகக் கூறிவிட்டீர்கள். ;)))))

    எங்கள் வீட்டிலும் எங்கு பார்த்தாலும் அக்ஷயமாக அனைத்து அடசல்களும் இருக்கும் தான். என்ன செய்வது?

    சம்சாரி வீடு, குழந்தைகுட்டிகள் உள்ள வீடு என்றால் அக்ஷயத்திற்கு ஒரு போதும் குறைச்சலே இருக்காது.

    அதுவும் அக்ஷயமாக இறைவன் தந்துள்ள பரிசு தானே!

    மகிழ்ச்சி கொள்வோம்! ;)

    பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றிகள், மேடம்.

    ReplyDelete
  2. தங்கள் உடனடியான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி , VGK சார்...
    நீங்கள் சொல்வது போல் இதுவும் குடுமத்தில் சந்தோஷம் தரும் அக்ஷயம் தான்...

    ReplyDelete
  3. வேலைகளும் அக்ஷயமாய் பெருகும்..

    நினைத்தாலே ஆறமாட்டேங்குதுங்க...

    ஒருநாளும் வேலைகள் முடிந்ததில்லை.

    ReplyDelete
  4. தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி,ராஜராஜேஸ்வரி...
    வீட்டில் வேலைகள் மட்டுமா அக்ஷ்யமாக பெருகுகிறது?பொறுப்புகளும் தான்!...

    ReplyDelete
  5. ரொம்ப நல்ல பகிர்வு அக்கா " அக்ஷய திரிதியை " பற்றி.
    தோல் சுருங்கிய ஆப்பிளை எடுத்த,......... "இது மூணு வருஷமாய் இங்கே தானே இருக்கு! ,..........." இல்லை என்பது போன்ற அக்ஷய கதைகள் என்வீட்டிலும் உண்டு அக்கா. very nice.

    ReplyDelete
  6. Thank you,Viji :-)
    Welcome to my blog!

    ReplyDelete
  7. Thank you,Viji :-)
    Welcome to my blog!

    ReplyDelete
  8. en veettilum ethae kathai than.

    ReplyDelete
  9. Welcome to my blog,Kasthuri:-)
    We are birds of a feather!!!!hahahahaha....

    ReplyDelete
  10. aha ha namma veedu than akshya pathiram endru ninathukondirunthen

    ReplyDelete
  11. b viswanathan delhi17/09/2012, 09:29

    வீட்டிற்கு வீடு வாசற்படி என்றில்லாமல்
    இதைப் படித்தவர்கள் மாறினால் சரி

    ReplyDelete
  12. vijayalakshmi,dwarka,new delhi17/09/2012, 09:40

    அக்ஷய திருதையின் புது "அலசல்"

    ReplyDelete