badge

Followers

Wednesday, 9 May 2012

காலை எழுந்தவுடன் க்ராஸ் வோர்ட் ...


சில பழக்கங்கள் எப்பொழுது ,ஏன் ,எதற்காக ஆரம்பித்தது என்றே தெரியாது ...
ஆனால் ,நாம் தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்!

அது போல பலபல வருஷங்களாக என்னிடம் ஒட்டிகொண்டுள்ள ஒரு சிறிய பழக்கம்-செய்தித்த,பத்திரிகைகளில் (இப்போது இணையதில்) வரும் கிராஸ்வோர்ட் /குறுக்கெழுத்து புதிர்களை போடுவது...

இப்பழக்கம் என் அப்பாவிடமிருந்து எனக்கு வந்தது என்று கூட சொல்லலாம் ...

ஆனால் ,அப்பாவுக்குப்பிடித்த புதிர் சட்று கடினமான வகை குறுக்கெழுத்து...

நான் ,சாதா தினமலர் வாரமலர்,உமன்ஸ் இரா ...போன்ற பத்திரிகைகளில் வரும் புதிர்கள் என் இலக்கு!

"இதை போட மூளையே வேண்டாம்..." என்று என் மகன் கேலி செய்வான் !

வாஸ்தவம் தான்!
"இந்தப்புதிர்களை விடுவிக்க அதீத அறிவு தேவை இல்லை தான்!

மக்குக்கும் சுமார் ராகத்துக்கும் இடைப்பட்ட அறிவு போதும் ..."என்பேன் .

ஆனால்,இதை விடுவிக்கும் பொழுது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே ...அது அலாதி...

யோசித்துப்பார்க்கும் போது ....

வாழ்க்கையே ஒரு குறுக்கெழுத்து புதிர் போல தான் ...

ஒரு சமயம் பார்த்தால் ஒன்றுமே புரியாது...தலை சுற்றும் !

நாம் பிரச்சனைகளால் சூழ்ந்து இருப்பது போல இருக்கும்!

ஏதோ ஒரு சிறு துப்பு கிடைத்து குறுக்கெழுத்தில் ஒரு வார்த்தை எழுதிவிட்டால் அதை பிடித்துக்கொண்டே மேலும் ஓரிரு வார்த்தைகள் புலப்படும்...

அதை போலவே...

நடைமுறை வாழ்க்கையிலும், ஒரு சிறு பிரச்னை தீரும் போது ,மேலும் ஒரு சில பிரச்சனைகள் தீர்ந்து விடும்...(இது நான் அனுபவித்த உணமை ...)

ஒரு சிறு தவறு (அறியாது) செய்தாலும் ,தொடர்ச்சியாக பல தவறுகள் நடக்கும் ...எங்கோ ஒரு தவறு சரி செய்ய பட்டால் பல தவறுகள் சரியாகும்!

எப்போதும் சரி செய்ய தயாராக இருந்தால் புதிர்கள் விலகு...பிரச்சனைகளும் தான் !

நாம் கஷ்ட்டப்பட்டு முயலாமலே சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும்...

மண்டையை உடைதுக்கொன்டாலும் சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்காது!

நாம் எதையோ செய்யப்போக வேறு ஏதோ சரியாகும் !

நாம் சில குறுக்கேழுது க்கட்டங்களை கவனித்து இருக்கவே மாட்டோம் ! ஆனால் ,அவைகளில் சரியான விடை தானே வந்து உத்கார்ந்து இருக்கும்  !

நாம் பார்க்கத போதே சில பிரச்சனைகள் சுமூகமாக தீர்ந்து விடும்...

கிராஸ் வோர்ட் ஐ  சரியாக முடிக்கும் பொது- ஒரு சாதனை செய்தது போல உணர்வோம்!

இதே போல நம் பிரச்சனைகள் தீரும்/தீர்ப்போம் என்ற எண்ணம் வரும்...

தன்னம்பிக்கை பிறக்கும்...

அன்றைய பிரச்சனைகளை புது உற்சாகத்துடன் அணுகுவேன்!

நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்...





11 comments:

  1. //நாம் சில குறுக்கேழுது க்கட்டங்களை கவனித்து இருக்கவே மாட்டோம் ! ஆனால் ,அவைகளில் சரியான விடை தானே வந்து உத்கார்ந்து இருக்கும் !//

    எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

    ReplyDelete
  2. //நடைமுறை வாழ்க்கையிலும், ஒரு சிறு பிரச்னை தீரும் போது ,மேலும் ஒரு சில பிரச்சனைகள் தீர்ந்து விடும்...(இது நான் அனுபவித்த உணமை ...)

    ஒரு சிறு தவறு (அறியாது) செய்தாலும் ,தொடர்ச்சியாக பல தவறுகள் நடக்கும் ...எங்கோ ஒரு தவறு சரி செய்ய பட்டால் பல தவறுகள் சரியாகும்!

    எப்போதும் சரி செய்ய தயாராக இருந்தால் புதிர்கள் விலகு...பிரச்சனைகளும் தான் !

    நாம் கஷ்ட்டப்பட்டு முயலாமலே சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்கும்...

    மண்டையை உடைதுக்கொன்டாலும் சில பிரச்சனைகளுக்கு விடை கிடைக்காது!

    நாம் எதையோ செய்யப்போக வேறு ஏதோ சரியாகும் !//

    வாழ்வியலோடு குறுக்கெழுத்துக் கட்டங்களை ஒப்பிட்டுச் சொல்லியுள்ளது மிக அருமை.

    மனமார்ந்த பாராட்டுக்கள்.
    மிக நல்ல பகிர்வு, ;))))

    ReplyDelete
  3. நடைமுறை வாழ்க்கையிலும், ஒரு சிறு பிரச்னை தீரும் போது ,மேலும் ஒரு சில பிரச்சனைகள் தீர்ந்து விடும்...(இது நான் அனுபவித்த உணமை ...)


    அருமையான வாழ்வியல் பார்வைகள் ..பாராட்டுக்கள்..

    ReplyDelete
  4. நடைமுறை வாழ்க்கையிலும், ஒரு சிறு பிரச்னை தீரும் போது ,மேலும் ஒரு சில பிரச்சனைகள் தீர்ந்து விடும்...(இது நான் அனுபவித்த உணமை ...)

    ஒரு சிறு தவறு (அறியாது) செய்தாலும் ,தொடர்ச்சியாக பல தவறுகள் நடக்கும் ...எங்கோ ஒரு தவறு சரி செய்ய பட்டால் பல தவறுகள் சரியாகும்!

    .......
    எனக்கும் இந்த அனுபவம் உண்டு அக்கா.
    மிகவும் அருமை.

    ReplyDelete
  5. VGK சார்,ராஜராஜேஸ்வரி ,விஜி பார்த்திபன் ஆகியோருக்கு ....
    தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!
    என் கிராஸ் வோர்ட் அனுபவம் சில உங்களுக்கும் உண்டு என்பதை அறிய சந்தோஷம்...

    ReplyDelete
  6. உண்மை அதை விடுவிக்கும் பொழுது கிடைக்கும் திருப்தி இருக்கிறதே அது அலாதி தான் !!!

    ReplyDelete
  7. varamalar kurukelthu ennoda favourite

    ReplyDelete
  8. Thanks for the feedbacks,
    Rajkumar and LK :)

    ReplyDelete
  9. குறுக்கெழுத்து = வாழ்க்கை மிகவும் யதார்த்தமாக எழுதி இருக்கிறீர்கள்.
    பாராட்டுக்கள்!
    தாமதமான பாராட்டுக்கு மன்னிக்கவும்

    ReplyDelete
  10. நானும் குறுக்கெழுத்துகளை உருவாக்குகிறேன், நேரமிருந்தால் வந்து பாருங்கள், உங்கள் தந்தைக்கும் அறிமுகம் என் தளத்தை அறிமுகம் செய்யுங்கள், கண்டிப்பாக விரும்புவார்
    http://tamil-puzzles.yoogi.com

    ReplyDelete