ரமேஷ் மேத்தா ...
வட இந்தியர்...
ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ...
பழக இனியவர் ...
தீபாவளி விருந்து என்றால் நாம் தீபாவளி அன்று அல்லது அதற்கு முதல் நாள் நடத்துவோம்...
அவர் வீட்டில் கிட்ட தட்ட 10 நாட்கள் விருந்து நடக்கும் ...
ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வித விருந்தினர்களை கூப்பிடுவார்...
ஒரு நாள் ஆபீஸ் நண்பர்கள்...ஒரு நாள் உறவு...ஒரு நாள் மனைவியின் உறவினர் ...ஒரு நாள் அபார்ட்மென்ட் நண்பர்கள்...என்று...
எங்களை அழைத்த அன்று தான் நான் முதல் முதலாக அவர் வீட்டுக்குப் போனேன்....
மிக அழகாக , நறுவிசாக இருந்தது அவர் வீடு...
அதை அவ்வளவு அருமையாக வைதிருப்பது அவர் மனைவியும் ,திருமணமாகத சகோதரியும்...
டைனிங் டேபிள் கொள்ளாத அளவு வித விதமான பதார்த்தங்களுடன் விருந்து...
சூடான சூப்,கொறிக்க மசாலா முந்திரி,குட்டி குட்டியாக கட்லெட் ,விதவிதமான சப்பாத்தி கள்...பூரிவகைகள்...சுவையான தால் ,பனீர் சப்ஜி ,புலாவ்,4 வகை இனிப்புகள்...(சுடசுட...)
5 star ஹோட்டல் களில் கூட கிடைக்காத வடஇந்திய ஸ்பெஷல் சோள ரோட்டி ,டால் பாட்டி ,போன்ற வகைகள் என்னை திக்கு முக்கட வைத்தன...
அதன் பிறகு ,"என்ன இருந்தாலும் உங்கள் ஊர் சாப்பாடு தான் உங்களுக்கு பிடிக்கும் " என்று சாதமும் ரசமும் ,தயிர் ,மாவடுவும்-அம்பிகா அப்பளாம் கடையில் வாங்கியது!
பிறகு ,வீட்டில் செய்த குல்பி...
சாப்பிட்ட பிறகு அரட்டை அடித்துக்கொண்டிருந்த போது
திருமதி மேத்தாவிடம் ,சில உணவுக் குறிப்புகளை கேட்டு கொண்டேன் ...
"விருந்தை வாயார ,மனமார பாராட்டினேன் ..."
அவர்கள் வீட்டில் சமையலுக்கு உதவ ஆளும் இல்லை என்று தெரிந்த போது
"அப்படியானால் ,நீங்கள் இந்த விருந்தை மதியமே தயார் செய்ய ஆரம்பித்து இருக்க வேண்டுமே..."என்றேன் ...
" குல்பியை காலையிலே செய்ய ஆரம்பித்து விட்டென்...நாத்தனார் கையோடு
மாவு பிசைந்து காய் நறுக்கினார் ...நான் மதியம் குழந்தைகள் ஸ்கூலில் இருந்து வரும் முன் ஸ்வீட் கள் செய்ய உட்கார்ந்து விட்டேன்..."என்றார் சிரித்த படி ...
4-5 பேர் சாப்பிட இரண்டு பெண்கள் கிட்டத்தட்ட 8 மணி நேரம் உழைத்து எனக்கு சங்கடத்தை தந்தது...இவர்கள் சமையல் இயந்திரங்கள் போல உழைத்து தெரிந்ததும் ஏனோ கூசியது...
தீபாவளியும் வந்தது...
மேத்தா வீட்டுக்கு வாழ்த்து சொல்ல போன் பண்ணினால் யாரும் எடுக்க வில்லை...
அடுத்த நாள் ,விஷயம் தெரிந்தது...
திருமதி மேத்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார் என்று...
"இரண்டு வாரமாக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் வேலை...இவங்களுக்கு சர்க்கரை,ரத்த அழுத்தம் ,மூட்டுவலி எல்லாம் உண்டு...அதை கவனிக்காமல் விட்டு நேற்று மயக்கம் போட்டு விழுந்துவிட்டார் ...அலைச்சலால் இடுப்பு வலி வேறு அதிகமாகி traction போடுகிறார்கள்.." என்று கேள்விப்பட்ட பொது நிஜமாகவே கஷ்டமாக இருந்தது...அந்த பெண் யந்தரத்தை நினைத்து...
ஹாஸ்பிட்டல் போயி அவரை பார்த்த போது "அவருக்கு இந்த உபாதைகள் வர காரணமாக இருந்த விருந்துக்கு"ப்போன என் மீதும் கோபம் வந்தது...
அவர் கணவருடன் நாங்கள் பேசி "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது விருந்துக்கு மட்டும் அல்ல...விருந்தோம்பல் செய்பவருக்கும் தான் என்று புரிய வைத்தோம"
அடுத்த தீபாவளி விருந்தை ரமேஷ் மேத்தா ஒரே நாள் விருந்தாக கொடுத்தார் ...
ஒரு நல்ல caterer இடம் உணவை ஆர்டர் செய்து....
திருமதி மெத்தா வும் சோர்வு இன்றி அனைவரையும் உபசரித்தார்...
மிகவும் அருமையான விருந்து. நல்ல அனுபவ மிக்க பகிர்வுக்கு நன்றி உஷா அக்கா.
ReplyDeleteஉடல்நிலை சரியில்லாவிட்டால், மனதில் எவ்வளவோ ஆசைகள் இருப்பினும், விருந்தினர்களை மகிழ்வித்து அனுப்புவது சிரமாகவே தான் இருக்கும்.
ReplyDeleteவீட்டில் இருப்பவர்களுக்கும், விருந்தாளியாக வருபவருக்கும், தர்ம சங்கடமாகவே போய்விடக்கூடும்.
நல்லதொரு அனுபவப் பகிர்வு.
வீட்டில் இருக்கும் பெண்களின் நிலையை புரிந்து கொள்ளாமல் இயந்திரம் போல் நடத்தும் ஆண்கள் மேல் கோபம் கோபமாக தான் வருகிறது.
ReplyDeleteவிருந்து முதல் பகுதியையும் படித்தேன், 2வது பகுதியையும் படித்துவிட்டேன், மனிதர்கள்தான் எத்தனை விதம்?! :)
ReplyDelete10நாட்கள் விருந்து கொடுப்பது பரவாயில்லை, ஆனால் அதற்கு உடல் ஒத்துழைக்கும் நிலையில் செய்யலாம். இப்படி உடம்பைக் கெடுத்துக்கொண்டு விருந்து கொடுத்த மனைவி,கணவர் இருவருமே விளைவுகளை யோசித்துப் பார்க்கவேண்டும்.
//அவருக்கு இந்த உபாதைகள் வர காரணமாக இருந்த விருந்துக்கு"ப்போன என் மீதும் கோபம் வந்தது...// I don't agree! விருந்தினர்கள் என்னங்க செய்யமுடியும்? போனபிறகுதானே என்ன விருந்துன்னே தெரியும்?! ;)
"அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம் என்பது விருந்துக்கு மட்டும் அல்ல...விருந்தோம்பல் செய்பவருக்கும் தான் என்று புரிய வைத்தோம"
ReplyDeleteபுரியவைத்ததற்கு பாராட்டுக்கள்..வாழ்த்துகள்...
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்...
ReplyDeletesariyaaka solli irukkiinga
ReplyDeletepadissiddu rompa mansu sangkadam
virunthu super
ReplyDeleteKaruthukku mikka nandri,
ReplyDeleteVGK Sir,
Rajarajeshwari
VijiParthiban
Thaanaithalaivi
Mahi
&
Jaleela
:)))