badge

Followers

Thursday 10 May 2012

மறக்க முடியாத மூன்று விருந்துகள்! ( 1)




South Indian thali meals

எத்தனையோ விருந்துகள் ,விதவிதமாய் உணவுகள் என்று சாப்பிட்டு இருந்தாலும் ,
என்னால் மறக்க முடியாத மூன்று விருந்துகள் பற்றி இந்தப்பகிர்வில் சொல்லப்போகிறேன்...


இந்த விருந்துகளில் அப்படி என்ன ஸ்பெஷல் ? என்று கேட்கிறீர்களா?

இருங்க...சொல்கிறேன்!!!



முதலில்...

ஒரு இளம் தம்பதியர் ...(கணவர் ஆபீசில் வேலை செய்பவர்) புது மனைவி ஊரில் இருந்து வந்த சந்தோஷத்தில் பாஸ் + அவர் மனைவியை (கணவர் + நான்)  கட்டாயப்படுத்தி விருந்துக்கு அழைக்க...நாங்களும் ஒரு கிப்ட்டை வாங்கிக்கொண்டு அவர்கள் வீட்டில் சரியாகக் எட்டு மணிக்கு ஆஜர்!

உள்ளே போனால் அந்தப்பையன் அசடு  வழிகிறான்...

அந்தப்பெண்ணோ பேய் அறைந்தது போல முழிக்கிறாள்!

உபசார சம்பாஷனைகள் ,விசாரிப்புகள் நடந்தாலும் அங்கு ஏதோ பிசிறு அடிக்கிறது...

"முதலில் ஆரஞ்சு ஜூஸ் " என்று அவள் கொண்டுவந்து நீட்டினாள்!

ரச்னாவை குடித்து தாகசாந்தி செய்துகொண்ட பிறகு நேரம் போகிறது...

"சாப்பிட வாங்க "என்று புருஷனும் பெண்டாட்டியும் கூப்பிடும் வழியே காணோம்!

சரி தான்! "இன்று ஆஹிரி கேட்டு விட்டோம் போலிருக்கிறது" என்று நினைத்த படி இருக்க...

அவள் மெதுவாக...

"ஆண்டி ...உங்களுக்குஅதிக  காரம் பிடிக்குமா?"

என்று கேட்க..."இல்லை மா ...ரொம்பக்காரம் சாப்பிடமாட்டேன்"

அவள் முகத்தில் சற்று நிம்மதி...

"எனக்கு தெரிஞ்ச அளவில் சமைசிருக்கேன்!கொஞ்சம் உள்ளே வந்து ருசி பாருங்களேன்"

என்று அழைத்த பொது கிட்டத்தட்ட ஒரு லேப் வெள்ளலி போல உணர்ந்தேன்!

சமையல் அறை ...பேட்டை யுத்தம் நடந்து முடிந்தது போல இருந்தது!

ஒரு ஹாட் கேசில் இருந்து ஏதோ கொழகொழப்பாக ஒரு ஸ்பூனில் எடுத்து நீட்டினாள் !

வாயில் தைரியமாகப்போட்டுகொண்டேன்! 

சூடாக ...உப்பு ருசியுடன் கொஞ்சம் மசாலா-தீசல் வாசனையுடன் ஒரு வஸ்து!

"புலாவ் செஞ்சேன் ஆண்டி ...கொஞ்சம் தண்ணி ஜாஸ்த்தி ஆயிடிச்சு! ஆனால் காரம் ரொம்பப்போடலை ஆண்டி..." என்றாளே பரிதமாய் ....

"தயிர் பச்சிடி சரியா இருககா ?என்று அவள் நீட்டிய கிண்ணத்திலிருந்து புளித்த வாசனை ஊரை கூடியது!

"சின்னப்போண்ணு ...போனால் போகட்டும்..." என்ற படி 

தட்டில் விஜிடப்ல் பொங்கல்(!) + புளிச்ச தயிர் பச்சிடி + சிப்ஸ் (நல்ல வேளை ! கடையில் வாங்கியது!) வடக்...வடக் சப்பாத்தி ...வேகாத உருளைக்கிழங்கு மசாலா என்று பரிமாறி எங்களை திக்கு முக்கட வைத்தால்!

"பலி கடா ரேஞ்சில் என் கணவரும் சப்பாத்தியை கஷ்டப்பட்டு மெல்ல அந்தப்பையன்
"சாருக்கு இன்னொரு சப்பாத்தி கொண்டா ..." என்று அவளை விரட்டினான்!

"பரவா இல்லையா  சார்?"என்றவனிடம் ...

"நல்ல homely சாப்பாடு!"என்று பாராதினார்!


கடைசிஇல் ...

" ஸ்வீட் சாப்பிடுங்க.."என்று  ஜீராவில் ஊறிய கருங்கல் போல எதையோ நீடினாலே பாருங்கள்...

இன்ஸ்டன்ட் குலாப் ஜாமுன் தயாரிப்பாளர் யாராவது அதை சாபிட்டால் தற்கொலை செய்து கொள்வார் !!!!!!

எப்படியோ கொஞ்சம் சாப்பிட்டதாக பெயர் பண்ணிவிட்டு கிளம்பினோம்!

"சாரி ஆண்டி ...ரொம்ப நல்லாவே இல்லையா?" என்று கேட்ட போது 

"சின்னப்பொண்ணு ...போகப்போக சரியா சமைக்க வந்துடும்! கவலை படாதே ...நாம் ஒவ்வருவரும் இப்படிதான் சமையல் கற்று கொள்கிறோம் ..."

என்று சமாதனம் சொல்லிவிட்டு வந்தேன்!

திரும்பி வரும் வழியில்...

காரை நிறுத்தி ஐஸ் க்ரீம் வாங்கி வந்த என் கணவரை பார்த்து சிரித்தேன் ...

"என்ன சிரிக்கறே?"

என் mind voice ஐ கேட்டு விட்டார் .போல.....

"கலியுகத்துல கைமேல பலன் என்று சும்மாவா சொன்னார்கள்?"என்றேன் ...

"புரியலே ..."

"நேத்து என் சமையலை பற்றி ஒரு 40 பக்க நோட் நிறைய எழுதும் அளவுக்கு குறை  கண்டுபிடித்தீர்கள்...இப்போ வாய் திறக்காமல் விருந்து சாப்பிட்டதை பார்தேன்..."

வீடு வரும் வரை அவர் வாய் திறக்கவில்லை!

பிறகு சில மாதங்கள் என் சமையலை குத்தம் சொன்னால் ..."விருந்து...விஜிடப்ல் பசை...வரட்டி சப்பாத்தி..homely  food ....."என்று நான் சங்கேத மொழி பேசினால் மீண்டும்

" கப்ப் சிப்!!!!!!!!!!!!!!!!!!"



(அடுத்த விருந்து தொடரும்...)

11 comments:

  1. ஹா.....ஹா..ஹா.....நல்ல அனுபவம். எனக்கு இது வரை யாரிடமும் இப்படி ஏற்பட்டதில்லை. நானும் இப்படி யாரையும் படுத்தியதில்லை. கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் கற்றுகொள்வது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் தெரிகிறது.



    நண்பர் ஒருவரின் அனுபவங்களை கிழ் காணும் சுட்டியில் படியுங்கள்.



    www.thakkudupandi.blogspot.in

    ReplyDelete
  2. //"கலியுகத்துல கைமேல பலன் என்று சும்மாவா சொன்னார்கள்?"என்றேன் ...

    "புரியலே ..."

    "நேத்து என் சமையலை பற்றி ஒரு 40 பக்க நோட் நிறைய எழுதும் அளவுக்கு குறை கண்டுபிடித்தீர்கள்...இப்போ வாய் திறக்காமல் விருந்து சாப்பிட்டதை பார்த்தேன்..."//

    நிழலின் அருமை வெயிலில் போய்ப் பார்த்தால் தான் தெரியும்.

    நம் வீட்டு சமையல் தான் நமக்கு ருசிப்படும். பிறர் வீடுகளில் சாப்பிட்டுப் பார்த்தால் தான் நம் வீட்டு சமையலின் தரமும், நம் வீட்டுக்காரியின் கைப்பக்குவமும், அருமை பெருமைகளும் தெரியவரும்.

    இதை பலமுறை உணர்ந்து தான்
    நான் கூடுமானவரை பிறர் வீடுகளில்
    சாப்பிடுவதைத் தவிர்த்து விடுவேன்.

    நன்றாக்வே ந்கைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    ReplyDelete
  3. தானைத்தலைவி,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

    //கல்யாணத்துக்கு முன்னாடி சமையல் கற்றுகொள்வது எவ்வளவு பெரிய தவறு என்று இப்போது தான் தெரிகிறது.//

    சமையல் கறப்பது தப்பா ?

    ReplyDelete
  4. சமையல் தெரியாமல் இருந்திருந்தால் இந்த மாதிரி ஒரு பதிவு எழுத சுவையான அனுபவம் கிடைச்சிருக்குமே.

    ReplyDelete
  5. தானைத்தலைவி

    ...ஹஹஹஹா......
    டூ லேட் ...இந்த யோசனை முன்பே வந்திருந்தால் ....ஐயோ பாவம் உங்களவர்!!!!

    ReplyDelete
  6. VGK சார்...
    தங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!
    நீங்கள் சொல்வது போல நிழலின் அருமை வெயிலில் தான் தெரியும் !

    ReplyDelete
  7. உஷா அக்கா மிகவும் அருமையான விருந்து போலிருக்கு . நல்ல அனுபவம் இது உங்களுக்கு சாதகமாக (கப்..சிப் ..) அமைந்துவிட்டது.

    ReplyDelete
  8. Viji..

    Hahahahahaha....

    Finding a positive in a negative (!) makes us successful!!!!!!

    ReplyDelete
  9. அடுத்த விருந்து தொடரும்...)

    eஎஸ்கேப் !!

    ReplyDelete
  10. Pinnootathukku nandri,Jaleela and Rajareshwari

    ReplyDelete