அன்னையர் தினத்தில் அம்மாவை பற்றிய பாடல்கள்,புகழாரங்கள் ,மனதைதொடும் எழுத்துக்கள்...பேச்சுக்கள்... எல்லாம் கட்டாயம் ஆகிவிட்டது....
இறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் அம்மாவை சிருஷ்டிதான்...
ஆண்டவன் கூட just தசாவதாரம் தான் எடுத்தார்...
ஆனால்....
அம்மா...அவள் ,அவளுக்கே தெரியாமல் எடுக்கும் அவதாரங்கள் எத்தனை ,எத்தனை....
குழநதையை கருவாய் ௧௦ மாதங்கள் சுமக்கும் சுமைதாங்கி...
குழந்தையின் அழுகையை வைத்தே அது பசி அழுகையா...வலி அழுகையா...அல்லது சும்மா அழும் செல்ல அழுகையா என்று கண்டுகொள்ளும் சங்கேத மொழி நிபுணி!
குழநதை நெற்றியை தொட்டுபார்த்தே குழந்தையின் காய்ச்சல் அளவை சரியாகச்சொல்லும் நடமாடும் தெர்மோமீட்டர்...
குழந்தையை கன்னல் பார்த்தே வயிறு பசிக்கிறது என்று கரெக்டாக சொல்லும் உயிருள்ள xray machine!!!
தாலாட்டுப்பாடும் பாடகி...
பாடம் சொல்லித்தரும் ஆசிரியை...
பாராட்டும் ரசிகை...
பொய் சொன்னால் முகம் பார்க்காமலே கண்டு பிடிக்கும் LIE DETECTOR ...
குழந்தைகளுக்காக அப்பாவிடம் தூது போகும் சமாதான தூதுவர்...
குழந்தைகளை யார் என்ன தவறாக சொன்னாலும் சம்மன் இல்லாமல் ஆஜார் ஆகும் வக்கீல்...
காலம் முழுவதும் குழந்தைக்காக சம்பளம் வாங்காமல் முழு நேரமும் உழைக்கும் சமயல்க்காரி...ஆயா... காவல்க்காரி...நர்ஸ்...கதைசொல் லி...அழகுக்கலை நிபுணி...ஆடை வடிவமைபாளினி...ஆலோசகர்.... மனோதத்துவ நிபுணர்...
குழந்தைகள் வளர்ச்சியை காலமெல்லாம் உலக அதிசயம் போல ஆச்சரியப்பட்டு ரசித்து வியக்கும் வெகுளி...
குழந்தைகளின் வெற்றி தோல்விகளை தன்னுடையதாக நினைத்து உருகும் முகம் காட்டும் கண்ணாடி...
குழந்தைகளுக்காக எதையும் கூசாமல் த்யாகம் செய்யும் த்யாகி...
இவள் காலமெல்லாம் சுமந்த குழநதை இவளை பாரமாக நினைத்து ஒதுக்கினாலும்
"அவனுக்கு என்ன கஷ்ட்டமோ? "என்று சொல்லும் பைத்தியக்காரி...
தாயைப்பற்றிய மிக நல்லதொரு அலசல்.
ReplyDelete//இவள் காலமெல்லாம் சுமந்த குழநதை இவளை பாரமாக நினைத்து ஒதுக்கினாலும்,
"அவனுக்கு என்ன கஷ்ட்டமோ? "
என்று சொல்லும் பைத்தியக்காரி...//
வெகு அழகாகச் சொல்லி முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
அன்பான அன்னையர் தின நல் வாழ்த்துகள்.
ReplyDeleteஇறைவன் எல்லா இடத்திலும் இருக்க முடியாது என்பதால் அம்மாவை சிருஷ்டிதான்...
ReplyDeleteஆண்டவன் கூட just தசாவதாரம் தான் எடுத்தார்...
இனிய அன்னையர் தின வாழ்த்துகள் !
அருமையான பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
நண்பரே,
ReplyDeleteநல்ல பதிவு ...
முதல் பக்கத்தில் இணைத்து உள்ளேன்
பார்க்க
தமிழ் DailyLib
அவசியம் logo ஐ இணைத்து கொள்ளுங்கள்
To get the Vote Button and Logo
தமிழ் DailyLib Vote Button
Thanks,
Krishy
மிகவும் அருமையாக தாயின் பாசத்தை சொன்னதர்க்கு நன்றி அக்கா.
ReplyDeleteஎன்னால் அன்னையர் தினத்தன்று பர்க்கமுடியாமல் போயி விட்டது உங்களது அருமையான பதிவை. இப்போது தான் பார்த்தேன் அக்கா. அதனால் வாழ்த்துக்கள் சொல்லமுடியாமல் தவிக்கிறேன்.
மிக அருமை !!!
ReplyDeletevery nice
ReplyDelete'பைத்தியக்காரி'யை மிகவும் ரசித்தேன் :)
ReplyDeleteதங்கள்மேலான கருத்துக்களுக்கு நன்றி
ReplyDeleteVGK சார்,ராஜராஜேஸ்வரி,ரத்னவேல் நடராஜன் சார்,
க்ரிஷி, ராஜ்குமார்,அருள் ,விஜி& தக்குடு :)))
இறுதி அவதாரம் தான் நெகிழ வைக்கிறது ...
ReplyDeleteWelcome,Sravaani...
ReplyDelete