badge

Followers

Wednesday, 15 August 2012

மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலம் ...




தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி
 (தாயே)

தையலே கேளடி உந்தன் பையனைப் போலவே இந்த
வையகத்தில் ஒரு பிள்ளை அம்மம்மா நான் கண்டதில்லை
 (தாயே)

காலினில் சிலம்பு கொஞ்சக் கைவளை குலுங்க முத்து
மாலைகள் அசையத் தெரு வாசலில் வந்தான்
காலசைவும் கையசைவும் தாளமோடு இசைந்து வர
நீலவண்ணக் கண்ணன் இவன் நர்த்தனம் ஆடினான்


பாலனென்று தாவி அணைத்தேன் அணைத்த என்னை
மாலையிட்டவன் போல் வாயில் முட்டமிட்டாண்டி
பாலனல்லடி உன் மகன் ஜாலம் மிக செய்யும் கிருஷ்ணன்
நாலு பேர்கள் கேட்கச் சொல்ல நாணமிக ஆகுதடி
 (தாயே)

முந்தாநாள் அந்தி நேரத்தில் சொந்தமுடன் கிட்டே வந்து
விந்தைகள் அனேகம் செய்து விளையாடினான் ஒரு
பந்தளவாகிலும் வெண்ணை தந்தால்தான் விடுவேன் என்று
முந்துகிலைத் தொட்டிழுத்துப் போராடினான்


அந்த வாசுதேவன் இவன் தான் அடி யசோதா!
மைந்தன்என்று தொட்டுஇழுத்து மடிமேல் வைத்து
சுந்தர முகத்தைக் கண்டு சிந்தை மயங்கும் நேரம்
அந்தர வைகுந்தமோடு எல்லாம் காட்டினான் அடி!
 (தாயே)





2 comments:

  1. //மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலம் ...//
    அழகான தலைப்பு.

    //தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த
    மாயன் கோபால கிருஷ்ணன் செய்யும் ஜாலத்தைக் கேளடி (தாயே)//

    அற்புதமான இனிமையான பாடல்.

    வரைந்துள்ள வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் படத்தில் நல்ல தெய்வாம்ச கலை உள்ளது.

    பார்க்கப்பார்க்க பரவஸம் ஏற்படுத்தும் மிகச்சிறப்பான கலைநயம் மிக்கதோர் அருமையான படம். ;)

    மிகவும் சந்தோஷம். மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள். நன்றிகள்.

    பிரியமுள்ள
    கோ பா ல கி ரு ஷ் ண ன்


    ReplyDelete