badge

Followers

Friday, 6 February 2015

எதற்கு என்ன சாப்பிடலாம் ?


* ரத்த சோகைக்கு கேரட், பீட்ரூட், முட்டைகோஸ் மற்றும் தக்காளி சாப்பிடலாம்.
* ஆஸ்துமாவுக்கு தேன், கேரட், அன்னாசிப்பழம் சாப்பிடலாம்.
* சர்க்கரை நோய்க்கு முளைவிட்ட சிறுதானியங்கள் - பீன்ஸ், பாகற்காய், வெள்ளரி - சாப்பிடலாம்.
* வயிற்றுப் புண்ணுக்கு கேரட் மற்றும் பூசணி சாப்பிடலாம்.
* இதய நோய்க்கு ஆப்பிள், ஆரஞ்சு, அன்னாசிப்பழம், மாதுளைப் பழம் சாப்பிடலாம்.
* கொழுப்பு குறைய கொள்ளு மற்றும் கேரட் நிறைய சாப்பிடலாம்.
* சளித் தொல்லைக்கு துளசி இலைச்சாறு, ஆரஞ்சு மற்றும் எலுமிச்சைச்சாறு சாப்பிடலாம்.
* வெங்காயத்தை உப்பில் தொட்டு தின்ன இரத்த வாந்தி குணமாகும்.
* முருங்கைப் பூவை பருப்புடன் சமைத்து உண்ண வாய் உளறல், வாய்க் கசப்பு குணமாகும்.
* புளியந்தளிரை துவையலாக்கி உண்ண வயிற்று மந்தம் தீரும்.
* பிரண்டைத் துவையல் செரியாமையை நீக்கி பசியைத் தூண்டும்.
* நாள் தோறும் ஒரு பப்பாளித் துண்டு சாப்பிட்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

2 comments:

  1. நிஜமாகவே
    அட அப்படியா என உணர்ந்தேன்
    அறியாத தகவல்களாய் அனைத்தும் இருந்ததால்..

    ReplyDelete
  2. பசுமையான காய்கறிப்படங்களைப் பளிச்சென்று காட்டி, அதன் பயன்களையும் சொல்லியுள்ளது அழகோ அழகு. மிக்க நன்றி, மேடம்.

    ReplyDelete