badge

Followers

Wednesday, 24 August 2016

நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...



நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...

 தினம் தோறும்  காலைப் பொழுதை சுடச்சுட இட்லியும் ஆரம்பிக்கும் நம்மைப் பொறுத்தவரை இட்லி ஒரு சுத்தமான தமிழக உணவு....

ஆனால் ,ஒரு உண்மை தெரியுமா?

இட்லி போன்ற அரைத்துப்புளிக்க வைத்த  சமையல் முறை,மற்றும் ஆவியில் அவிக்கும் சமையல் முறை  தமிழகத்துக்கு வந்ததே பதிமூன்றாம் நூற்றாண்டில் தான்....

இந்த வகை உணவு இந்தோனேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்று சொன்னால் நம்புவது கூடக்கடினம் தான்...

கடல் கடந்து  போர் புரியச்சென்ற சோழ அரசர்கள் கீழை நாடுகளை வென்றபோது அவர்களுக்கு வந்த பொன் ,பொருள் பரிசுகளோடு அந்த நாடு இளவரசியாரும்  மனைவியராக நம் நாடு வந்தனர்...

அந்த இளவரசியரோடு வந்து இந்தோனேசிய சேடிகள் ,அடிமைகள்,சமையல் கலைஞர்களோடு தமிழகம் வந்தது தான்  நம்ம இட்லி....

ஆனால் ,அன்று  அரைத்துப் புளிக்கவைத்த உளுந்து மாவு மட்டுமே வேகவைக்கப்பட்டு உணவானது....நாளடைவில் அத்துடன் நாம் அரிசியையும் சேர்த்து அரைத்து இன்றைய இட்லிக்கு வடிவம் கொடுத்தோம்....

அந்த மாவையே கல்லில் ஊற்றி தோசையாக்கிய வித்தையும் நமக்கு மட்டுமே சொந்தம் அல்ல...

பல மாவட்டங்களிலும்,உலகின் பல நாடுகளிலும் சூடான வழவழப்பான கல்லில்  (ஆம் ...கல்லே தான்.இரும்புக்கல்லா,நான்ஸ்டிக் கல்லோ அல்ல) தான் அரைத்த தானியங்களை  மாவாக்கி சுட்டெடுத்து  உண்டார்கள்...




 நம்ம ஊத்தப்பம் இல்லை /இங்கிலிஷ் பான் கேக் !!!!



மேற்கில் "பான் கேக் " ஆப்பிரிக்காவில்  "இஞ்சேரா ",மகாராஷ்டிரத்தில்  "தாலிபீத் ",ஆந்திராவில்  "பெசரட்டு ",ராஜஸ்தானில் "சில்லா "என்று பல பெயர்களுடன் ,பல வடிவங்களில் நம்ம  தோசை,அடை,ஊத்தப்பம்  வகைகளின் சொந்தங்களை நாம் இன்றும் காணலாம் !

அது சரி ...ஹோட்டலுக்குப் போய்  சூடாக ஒரு மசால் தோசையை ஒரு புடி பிடிக்காதவர்கள்  யாராவது உண்டா?

அந்த மசால் தோசை 1940களில் தான் பிறந்தது என்றால் நம்புவீர்களா?

இந்த மசால் தோசையின் பிறப்பிடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரின் ஒரு ஹோட்டல் ஆகும்.(அந்த ஹோட்டல் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது)

ஆனால் ஒன்று....அன்றைய மசால் தோசையில் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்க்கப்பட்டது...வெங்காயம் கிடையாது....காரணம்...உடுப்பி  கிருஷ்ணர் கோவில் அருகே உள்ள அந்த ஹோட்டலில் ஆச்சாரம் கருதி வெங்காயம் சேர்க்கப்படவில்லை...இன்றும் அங்கே சமையலில் வெங்காயத்திற்கு அனுமதி இல்லை !

இந்த இட்லி,தோசை,சாதம் என்று எல்லாவற்றுடன் நாம் ரசித்து உண்ணும் சாம்பார் கூட நம் ஏக  போக கண்டுபிடிப்பல்ல...

மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் படைகளுக்கு உணவளித்த சமையல் காரர் தான்,சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்து வீரர்களுக்காக செய்த உணவு ஒன்று தான் அது....

மராட்டியர்கள் சமையலில் kokum  எனப்படும் கொடம்புளியை உபயோகப்படுத்தி சமைப்பார்கள்...
போன இடத்தில நாம் உபயோகப்படுத்தும் புளி தான் கிடைத்தது...அதை கரைத்துத்துவிட்டு ,அதில் கிடைத்த காய்கறிகளையும் சேர்த்து,பருப்பையும் வேக விட்டு ,உப்பு காரம்,வாசனை பொருட்கள்(மசாலா ) சேர்த்து கொதிக்கவைத்து சமையல்காரர் அதை சூடான சாதத்துடன் பரிமாற அது ஒரு சூப்பர் ஹிட்டானது!

உடனே அந்த உணவுக்கு இளவரசர்  சாம்பாஜியின் பெயரை சூட்டினார்!

சாம்பார் பிறந்தது...பிறகு பலவிதமான சாம்பார்கள்  கிளம்பின....ஆனால் எத்தனை அவதாரம் எடுத்தாலும் பெயர் மட்டுமே சாம்பார் தான்!




நம் திருமண விழாக்களில் பரிமாறப்படும் பல உணவுவகைகளுக்கும் தான் வீடு மராட்டியம் தான் என்றால் நம்ப முடிகிறதா?

சரபோஜி மன்னர்கள் நமக்கு தஞ்சை பாணி ஓவியங்களை மட்டும் தரவில்லை....

மராட்டிய உணவுவகைகள் பலவற்றயும் நம் பாரம்பரிய உணவாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்...

மராட்டிய இனிப்பான "பூரன்  போலி " தான் நாம் விரும்பி  உண்ணும் போளி ...

"பித்லே " என்று மராட்டியர்கள் செய்யும் குழம்பு வகை தான்
நம் "பிட்டலா /பிட்லை "! இப்போது புரிகிறதா....நம்ம வீட்டில் செய்யும் கத்திரிக்காய்  பிட்லாவின் தாயகம் எது என்று?

ரசவாங்கி,கோசுமல்லி,மோர் குழம்பு, மோதகம் ,போன்ற பல உணவு வகைகள் மஹாராஷ்டிராவில் பிறந்தவை தான்!









Tuesday, 23 August 2016

கிருஷ்ணரின் இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....






ஒரு சமயம் ஸ்ரீகிருஷ்ணர், அவரது சகோதரர் பலராமர், அர்ஜுனன் இம்மூவரும் ஒரு அடர்ந்த வனத்தின் வழியாகச் சென்றனர். இரவாகி விட்டது. மூவரும் ஒரிடத்தில் தங்கிவிட்டு விடிந்ததும் செல்லலாம் என்று எண்ணினர்.
🌻வனத்தில் துஷ்ட மிருகங்கள் இருக்கும் என்பதால் மூவரும் ஒரு சேரத் தூங்கக்கூடாது என்றும், ஜாமத்திற்கு ஒருவராகத் காவல் இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர்.
🌷அதன்படி ஸ்ரீகிருஷ்ணரும், பலராமரும் தூங்கச்செல்ல, அர்ஜுனன் காவல் இருந்தான்.அப்போது திடீரென புகை மண்டலம் சூழ்ந்தது.
🍄அதிலிருந்து ஒரு பயங்கர உருவம் வெளிப்பட்டது. அகன்ற நாசியும், தூக்கிய பற்களும், முட்டைக் கண்களுமாக இருந்தது அவ்வுருவம்.
🌳மரத்தடியில் இருவர் தூங்குவதையும், ஒருவன் காவல் இருப்பதையும் கண்ட அவ்வுருவம் தூங்கும் இருவரின் அருகில் சென்றது. அதைக்கண்ட அர்ஜுனன் கோபத்துடன் அதைத் தடுத்தான்.
💥அப்போது அவ்வுருவம் அவ்விருவரையும் தான் கொல்லப்
போவதாகவும் அதற்கு அர்ஜுனன் துணை செய்ய வேண்டும் என்றும் கேட்டது.
🌻 அதைக்கேட்டு கோபம் மிகக்கொண்டு அவ்வுருவத்தைத் தாக்கினான்.
🌷 அர்ஜுனனின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தில் பலமும் அதன் வடிவமும் பெருகியது.
🌴அர்ஜுனன் ஆக்ரோஷத்தோடு அதனுடன் போரிட அது பூதாகாரமாய் விளங்கியது. அர்ஜுனனை பலமாகத் தாக்கிவிட்டு மறைந்தது.
🌂இரண்டாம் ஜாமம் தொடங்கவும் பலராமரை எழுப்பிவிட்டு அர்ஜூனன் தூங்கச் சென்றான்.பலராமர் காவல் இருந்தார்.
🌲அப்போது மீண்டும் அவ்வுருவம் அங்கு தோன்றி அர்ஜுனனிடம் கூறியதுபோல பலராமரிடமும் கூறியது. அதைக்கேட்டு கோபம் கொண்ட பலராமர் அதனுடன் சண்டையிட்டார்.
👬 அவ்வுருவம் அடிபணிவதாய் இல்லை.
🍂பலராமரின் கோபம் அதிகமாக அதிகமாக அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் பெரிதானது.பின் பலராமரையும் பலமாகத் தாக்கிவிட்டு அவ்வுருவம் மறைந்துவிட்டது.
🌂மூன்றாம் ஜாமம் தொடங்கவும் பலராமர் கிருஷ்ணரை காவலுக்கு எழுப்பிவிட்டு படுக்கச் சென்றார். அப்போதும் அப்பொல்லாத உருவம் தோன்றியது.
🍀 அதைப்பார்த்த கிருஷ்ணர் கடகடவெனச் சிரித்தார். ஏன் சிரிக்கிறாய்? என்றது அவ்வுருவம்.
🎃உனது தூக்கிய பற்களும், அழகான முட்டைக் கண்களையும் கண்டுதான், என்றார் சிரிப்பை அடக்க முடியாமல். அவர் தன்னைக் கேலி செய்வதைக் கண்டு ஆக்ரோஷத்துடன் அது சண்டை போட்டது.
😀கிருஷ்ணரோ புன்னகையை மாற்றாமலே, சண்டை போட்டார்.
😝கிருஷ்ணர் சிரிக்கச் சிரிக்க அவ்வுருவத்தின் பலமும் அதன் வடிவமும் குறைந்துகொண்டே வந்தது.
😊கடைசியில் அவ்வுருவம் சின்னஞ்சிறு புழுவாக மாறி தரையில் நெளிந்தது.🐛
ஸ்ரீகிருஷ்ணர் அப்புழுவை எடுத்து ஒரு துணியில் முடிந்து வைத்தார்.
பொழுது விடிந்தது. பலராமரும், அர்ஜுனனும் எழுந்தனர்.
🌿இருவரும் இரவில் ஒரு பயங்கர உருவம் வந்ததும், அவர்களைத் தாக்கியதும் அவ்வுருவம் வளர்ந்து வளர்ந்து பெரிதாகியது பற்றியும் பேசினர்.
💥அப்போது கிருஷ்ணர் துணியில் முடிந்திருந்த புழுவைக் காட்டி, நீங்கள் இருவரும் சண்டை போட்ட உருவம் இதுதான்.
😡நீங்கள் அதனுடன் சண்டை போடும் போது கடுமையாகக் கோபப்பட்டீர்கள். உங்கள் கோபம் அதிகரிக்க அதிகரிக்க அதன் பலமும் வடிவமும் அதிகரித்தது.
😀நான் சிரித்துக்கொண்டே சண்டை போட்டதால் இதன் பலமும் வடிவமும் குறைந்து கொண்டே வந்து புழுவாக மாறிவிட்டது.
👊வம்பு சண்டைக்கு வருபவனை விட்டு புன்னகையோடு வெளியேறி விட்டால், அவன் புழுவுக்கு சமமாகி விடுவான்.
😡 கோபத்தைக் குறைப்பவனே ஞானி, என்றார்.


கிருஷ்ணரின்  இந்த உபதேசம் நமக்கும் பல பல சூழல்களிலும் பொருந்தும்....

பல விஷயங்களுக்கு நாம் ரியாக்ட்  செய்யாமலிருந்தாலே அந்த விஷயம் பிரச்சனையாகாமல் பிசுபிசுத்துப் புழு போல ஒன்றுமில்லாமல் போய் விடும்....

முயன்று  தான் பார்ப்போமே....

தமிழன் கண்டறிந்த தொழில் நுட்பம்!!!







பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள் கடலில்
போட்டால் அது எங்கு போய் சேரும் தெரியுமா?
தனுஷ்கோடிக்கு. ஆம். அது தமிழன் கண்டறிந்த
தொழில் நுட்பம்!
தன் நுண்ணறிவால்
நீரோட்டத்தை பயன்படுத்தி தமிழன் செய்த சாதனைகள்
நிறைய.
தமிழகத்தில் 79 கோயில்களில் கடல் ஆமை சிற்பங்கள்
உள்ளன. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
கடல் ஆமைகள் கடலில் இருக்கும்
நீராட்டத்தை பயன்படுத்தி 150 கி.மீ
வரை மிதந்தபடி சுலபமாக பல இடங்களையும்
சென்றடைந்தன. இதை கவனித்த நம் தமிழன் கப்பல்
போக்குவரத்தை நீரின்
ஓட்டத்தை பயன்படுத்தி செலுத்த துவங்கினான்.
இதனால் அவன் 20,000 க்கும் மேற்பட்ட கடல்
தீவுகளை கண்டறிந்தான். இதுவரை எந்த நாட்டின்
கடல்படையும் போகமுடியாத பல
இடங்களை துறைமுகங்களை கண்டறிந்தான்!
மத்திய
தரைக்கடல், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பல
வியாபாரம் புரிந்து பெரும் வெற்றி அடைந்தான்.
பல நாடுகளையும் கைப்பற்றினான். கடலில்
பாறைகளில் கப்பல் மோதினால் அதன் முன்பகுதியை
அப்படியே கழற்றிவிடும் தொழில் நுட்பம் தமிழன்
மட்டும்தான் பயன்படுத்தினான். பிற்காலத்தில்
ஐரோப்பியர்கள் நம்மிடம் கற்றுக்கொண்டனர்.
உலகில் பிரேசில், ஜப்பான், சீனா, ஆஸ்திரேலியா,
கொரியா போன்ற நாடுகளின் பல பகுதியை தமிழ்
மன்னர்கள் ஆட்சி புரிந்து வந்திருக்கின்றனர்.
கொரியாவை தமிழ் அரசி ஒருவர் ஆண்டிருக்கிறார்.
சீனாவில் 5 ஊர்கள் பாண்டியன் என்ற பெயரில்
இருக்கின்றன. பாண்டியன் என்றால் சீனா அகராதியில்
பொருளே இல்லை. சீனாவில் இருக்கும் கலைகள்
அனைத்துக்கும் முன்னோடி தமிழன்தான்.
போதிதர்மன் நினைவுக்கு வருகிறாரா? அதுதான்
உண்மை!
கொலம்பஸ் கண்டறிந்தது எல்லாம் தமிழன்
தொழில்நுட்பம் தான் . அதாவது, கொலம்பஸ்
கண்டறிந்த வழித்தடமும், ஆமைகளின் நீரோட்ட
வழித்தடமும் ஒன்றுதான்!
ஆமைகளின் உருவம் கோயிலில் அமைக்க
இது மட்டுமா காரணம்? இல்லை. நம் பண்பாட்டுக்கும்
ஆமைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆம்
தமிழ் பெண்கள் மகப்பேறுக்காக தாய் வீடு செல்வர்.
விலங்குகளில் ஆமைக்கு மட்டுமே இந்த பழக்கம்
உண்டு. தான் பிறந்த
இடத்துக்கு இனப்பெருக்கத்திற்கு ஆமைகள் செல்லும்.
தமிழகத்தில் மட்டுமே இந்த பண்பாடு உண்டு.

Monday, 22 August 2016

கோவையை பற்றிய தகவல்கள்....!!!!


கோவையை பற்றிய தகவல்கள்....!!!!
தலைநகர் அந்தஸ்தில் இருக்கிறது சென்னை;
மதுரையைக் கடக்கிறது வைகை;
நெல்லையை தழுவிச் செல்கிறது தாமிரபரணி;
தூத்துக்குடியிலே துறைமுகம் இருக்கிறது;
திருச்சியிலே "பெல்' (பாரத் ஹெவி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்) இருக்கிறது; என்.ஐ.டி., இருக்கிறது;
#என்னதான் இருக்கிறது இந்த கோவையில்...?.
வற்றாத ஒரு நதியுமில்லை;
வானளாவிய ஒரு கோவிலுமில்லை;
இதிகாசத்திலே இடமுமில்லை;
எந்த அரசும் இந்நகரைக் கவனிப்பதுமில்லை;
இன்னும் சொல்வதானால், 1927ம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆவணப்படி, "குடிநீரும், சுகாதாரமும் இல்லாத இந்த ஊரில்', மக்கள் வாழத்தகுதியே இல்லை....
அப்புறம் எப்படி இந்த ஊரிலே குடியேறினார்கள் இத்தனை லட்சம் பேர்?.
தலைவர்கள் இருப்பதால், தலைநகருக்குக் கவனிப்பு அதிகம்; மற்ற ஊர்களுக்காக பரிந்து பேச, ஆங்காங்கே ஒரு தலைவர் இருக்கிறார்.
இந்த கோவை மண்ணுக்காக குரல் கொடுக்க, இன்று வரை ஒரு நல்ல அரசியல் தலைவர் இங்கே இல்லை;
ஆனாலும், இந்த நகரம் இத்தனை கம்பீரமாய் வளர்ந்து நிற்கிறதே...எப்படி?
விரக்திகளும், வேதனைக்குரிய கேள்விகளும் நிறைய இருந்தன; இப்போதும் இருக்கின்றன;
ஆனால், எல்லாவற்றையும் வெற்றிச்சரித்திரமாக்குவதுதான் இந்த கோவை மண்ணின் மகத்துவம்.
இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் இது ஒரு நகரமில்லை; இன்றைக்கு இந்த நகரைத் தவிர்த்து, தமிழக வரலாறே இல்லை.
சென்னையிலே பிழைப்பது எளிது; வாழ்வது கடினம்.
மதுரையிலே வாழ்வது எளிது; பிழைப்பது கடினம்.
கோவையில் எளிதாய்ப் பிழைக்கலாம்; உழைத்தால் செழிக்கலாம்.
வந்தாரை மட்டுமல்ல; வாழ்வில் நொந்தாரையும் தந்தையாய் அரவணைத்து, வாழ வழி கொடுக்கும் உழைப்பின் பூமி இது.
எந்த அரசின் ஆதரவுமின்றி, இந்த நகரம் இத்தனை பெரிதாய் வளர்ந்ததன் ரகசியமும் இதுவே.
பஞ்சாலை நகரம் என்ற பெயரையும் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து வந்தாலும், இந்த "டெக்ஸ் சிட்டி', சமீபகாலமாய் "ஹை-டெக் சிட்டி'யாய் மாறி வருகிறது என்பதுதான் உண்மை.
உயர் கல்விச் சாலைகள், தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள், அதிநவீன மருத்துவமனைகள், அகில உலகிற்கும் சவால் விடும் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்...
அரசு அமைத்து சோபிக்காமல் போன "டைடல் பார்க்' தவிர, இந்த நகருக்கு இத்தனை பெரிய வளர்ச்சியை வாரிக்கொடுத்தது இங்குள்ள தனியார் தொழில் முனைவோர்தான்.
எத்தனை வேகமாய் வளர்ந்தாலும், இன்னும் கட்டமைப்பு வசதிக்காகப் போராடுகிற நிலைதான் இங்கே. ஆனாலும், சோதனைகளைக் கடந்து சாதனை படைக்கிறது கோயம்புத்தூர் நகரம்.
இடையிலே ஒரு சங்கடம் வந்தாலும், அதிலும் "பீனிக்ஸ்' பறவையாய் மீண்டெழுந்து, இன்று "ஒற்றுமையின் ஊராக' பெயர் பெற்றிருக்கிறது கோவை.
அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்து, கூடுகிறார்கள் ஐயாயிரம் பேர்;
குளங்களைக் காக்க குரல் கொடுக்கிறது "சிறுதுளி';
மரங்களை வெட்டினால், ஓடோடி வருகிறது "ஓசை';
ரயில் சேவைக்காக போராடுகிறது "ராக்'.
மரியாதைக்குரிய கொங்குத் தமிழ்,
அத்துப்படியான ஆங்கிலம்,
இதமான காலநிலை,
சுவையான சிறுவாணி,
அதிரடியில்லாத அரசியல்...
இவற்றையெல்லாம் தாண்டி,
அமைதியை விரும்பும் மக்கள் இங்கே இருக்கிறார்கள். சாதி, மதங்களைக் கடந்து, உழைப்பால் ஒன்று பட்டு நிற்கும் கோவையின் மண்ணின் மைந்தர்களே, ஆலமரமாய் எழுந்து நிற்கும் இந்த நகரத்தின் ஆணிவேர்கள்.
புதுப்புது நுட்பங்களால் கண்டு பிடிப்புகளில் கலக்கும் தொழில் முனைவோராலும், சமூக அக்கறையும், சமத்துவ நேசமும் கொண்ட மனிதர்களாலும், கோயம்புத்தூர் நகரம் தினமும் புத்துணர்வோடு புகழின் சிகரம் நோக்கி நடை போடுகிறது.....
அந்த பெருமையுடன் எல்லா கோவை நட்புகளும் இறுமாப்பாய் சொல்லுங்க ...
என்ர ஊரு கோயமுத்தூருங்கோ.....!!!!!

கத்திரிக்காயில் என்ன இருக்கு???





கத்திரிக்காயில் என்ன இருக்குன்னு இனி கேட்காதீர்கள்...
நாட்டு கத்தரிக்காய் குறைந்த கலோரியும் நிறைய சத்துக்களும் அடங்கியது. எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஏற்றது...
நாட்டு கத்தரிக்காயின் தாயகம் இந்தியாதான். ஆண்டு முழுவதும் விளையக்கூடியது. உலகம் முழுவதுமுள்ள வெப்பமண்டல பகுதிகளில் கத்தரிக்காய் விளைகிறது. பச்சை, வெள்ளை, அடர் நீலம் என பல நிறங்களிலும், முட்டை வடிவம், நீள வடிவம், உருண்டை வடிவம் என பல வடிவங்களிலும் கத்தரி விளைகிறது.
கொழுப்பு சத்து குறைந்தது கத்தரிக்காய். குறைந்த ஆற்றல்தரக் கூடியது. 100 கிராம் கத்தரிக்காய் உடலுக்கு 24 கலோரிகள் ஆற்றல் தருகிறது. 9 சதவீதம் நார்ச்சத்து உள்ளது. ‘ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் கத்தரிக்காய் அதிக பங்கெடுப்பதாக பிரேசில் நாட்டு பல்கலைக்கழகம் ஒன்று கண்டறிந்துள்ளது.
அடர் நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ஆந்தோசயானின் எனப்படும் பிளேவனாய்டு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்பொருளாகும். புற்றுநோய், முதுமை, நரம்பு வியாதிகள், உடல் எரிச்சல் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தன்மை வழங்கும்.
‘பி காம்ப்ளக்ஸ் வகை விட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட் (விட்டமின் பி 5), பைரிடாக்சின் (விட்டமின் பி 6), தயமின் (விட்டமின் பி 1), நியாசின் (விட்டமின் பி 3) ஆகியன அடங்கி உள்ளன. கொழுப்பு, புரதம் மற்றும் காபோஹைட்ரேட் போன்ற ஊட்டச்சத்துக்களின் வளர்ச்சிதை மாற்றித்திற்கும் உடற்செயலியல் மாற்றங்களுக்கும் இந்த விட்டமின்கள் அவசியமாகும்.
நாட்டு கத்தரிக்காயில் தாதுஉப்புக்களும் நிறைய உள்ளன. மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. மாங்கனீசு நோய் எதிர்ப்பொருள்களின் துணைக் காரணியாக செயல்படும் பொட்டாசியம் அதிக ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், உடற்செல்களின் எரிபொருளாகவும் பயன்படுகிறது.