badge

Followers

Wednesday, 24 August 2016

நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...



நம்ம ஊர் உணவுவகைகள் பிறந்த இடங்கள்...

 தினம் தோறும்  காலைப் பொழுதை சுடச்சுட இட்லியும் ஆரம்பிக்கும் நம்மைப் பொறுத்தவரை இட்லி ஒரு சுத்தமான தமிழக உணவு....

ஆனால் ,ஒரு உண்மை தெரியுமா?

இட்லி போன்ற அரைத்துப்புளிக்க வைத்த  சமையல் முறை,மற்றும் ஆவியில் அவிக்கும் சமையல் முறை  தமிழகத்துக்கு வந்ததே பதிமூன்றாம் நூற்றாண்டில் தான்....

இந்த வகை உணவு இந்தோனேசியாவிலிருந்து தமிழகத்திற்கு வந்தது என்று சொன்னால் நம்புவது கூடக்கடினம் தான்...

கடல் கடந்து  போர் புரியச்சென்ற சோழ அரசர்கள் கீழை நாடுகளை வென்றபோது அவர்களுக்கு வந்த பொன் ,பொருள் பரிசுகளோடு அந்த நாடு இளவரசியாரும்  மனைவியராக நம் நாடு வந்தனர்...

அந்த இளவரசியரோடு வந்து இந்தோனேசிய சேடிகள் ,அடிமைகள்,சமையல் கலைஞர்களோடு தமிழகம் வந்தது தான்  நம்ம இட்லி....

ஆனால் ,அன்று  அரைத்துப் புளிக்கவைத்த உளுந்து மாவு மட்டுமே வேகவைக்கப்பட்டு உணவானது....நாளடைவில் அத்துடன் நாம் அரிசியையும் சேர்த்து அரைத்து இன்றைய இட்லிக்கு வடிவம் கொடுத்தோம்....

அந்த மாவையே கல்லில் ஊற்றி தோசையாக்கிய வித்தையும் நமக்கு மட்டுமே சொந்தம் அல்ல...

பல மாவட்டங்களிலும்,உலகின் பல நாடுகளிலும் சூடான வழவழப்பான கல்லில்  (ஆம் ...கல்லே தான்.இரும்புக்கல்லா,நான்ஸ்டிக் கல்லோ அல்ல) தான் அரைத்த தானியங்களை  மாவாக்கி சுட்டெடுத்து  உண்டார்கள்...




 நம்ம ஊத்தப்பம் இல்லை /இங்கிலிஷ் பான் கேக் !!!!



மேற்கில் "பான் கேக் " ஆப்பிரிக்காவில்  "இஞ்சேரா ",மகாராஷ்டிரத்தில்  "தாலிபீத் ",ஆந்திராவில்  "பெசரட்டு ",ராஜஸ்தானில் "சில்லா "என்று பல பெயர்களுடன் ,பல வடிவங்களில் நம்ம  தோசை,அடை,ஊத்தப்பம்  வகைகளின் சொந்தங்களை நாம் இன்றும் காணலாம் !

அது சரி ...ஹோட்டலுக்குப் போய்  சூடாக ஒரு மசால் தோசையை ஒரு புடி பிடிக்காதவர்கள்  யாராவது உண்டா?

அந்த மசால் தோசை 1940களில் தான் பிறந்தது என்றால் நம்புவீர்களா?

இந்த மசால் தோசையின் பிறப்பிடம் கர்நாடக மாநிலத்தில் உள்ள உடுப்பி நகரின் ஒரு ஹோட்டல் ஆகும்.(அந்த ஹோட்டல் இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது)

ஆனால் ஒன்று....அன்றைய மசால் தோசையில் உருளைக்கிழங்கு மட்டுமே சேர்க்கப்பட்டது...வெங்காயம் கிடையாது....காரணம்...உடுப்பி  கிருஷ்ணர் கோவில் அருகே உள்ள அந்த ஹோட்டலில் ஆச்சாரம் கருதி வெங்காயம் சேர்க்கப்படவில்லை...இன்றும் அங்கே சமையலில் வெங்காயத்திற்கு அனுமதி இல்லை !

இந்த இட்லி,தோசை,சாதம் என்று எல்லாவற்றுடன் நாம் ரசித்து உண்ணும் சாம்பார் கூட நம் ஏக  போக கண்டுபிடிப்பல்ல...

மராட்டிய மன்னர் சத்திரபதி சிவாஜியின் படைகளுக்கு உணவளித்த சமையல் காரர் தான்,சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்து வீரர்களுக்காக செய்த உணவு ஒன்று தான் அது....

மராட்டியர்கள் சமையலில் kokum  எனப்படும் கொடம்புளியை உபயோகப்படுத்தி சமைப்பார்கள்...
போன இடத்தில நாம் உபயோகப்படுத்தும் புளி தான் கிடைத்தது...அதை கரைத்துத்துவிட்டு ,அதில் கிடைத்த காய்கறிகளையும் சேர்த்து,பருப்பையும் வேக விட்டு ,உப்பு காரம்,வாசனை பொருட்கள்(மசாலா ) சேர்த்து கொதிக்கவைத்து சமையல்காரர் அதை சூடான சாதத்துடன் பரிமாற அது ஒரு சூப்பர் ஹிட்டானது!

உடனே அந்த உணவுக்கு இளவரசர்  சாம்பாஜியின் பெயரை சூட்டினார்!

சாம்பார் பிறந்தது...பிறகு பலவிதமான சாம்பார்கள்  கிளம்பின....ஆனால் எத்தனை அவதாரம் எடுத்தாலும் பெயர் மட்டுமே சாம்பார் தான்!




நம் திருமண விழாக்களில் பரிமாறப்படும் பல உணவுவகைகளுக்கும் தான் வீடு மராட்டியம் தான் என்றால் நம்ப முடிகிறதா?

சரபோஜி மன்னர்கள் நமக்கு தஞ்சை பாணி ஓவியங்களை மட்டும் தரவில்லை....

மராட்டிய உணவுவகைகள் பலவற்றயும் நம் பாரம்பரிய உணவாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்...

மராட்டிய இனிப்பான "பூரன்  போலி " தான் நாம் விரும்பி  உண்ணும் போளி ...

"பித்லே " என்று மராட்டியர்கள் செய்யும் குழம்பு வகை தான்
நம் "பிட்டலா /பிட்லை "! இப்போது புரிகிறதா....நம்ம வீட்டில் செய்யும் கத்திரிக்காய்  பிட்லாவின் தாயகம் எது என்று?

ரசவாங்கி,கோசுமல்லி,மோர் குழம்பு, மோதகம் ,போன்ற பல உணவு வகைகள் மஹாராஷ்டிராவில் பிறந்தவை தான்!









4 comments:

  1. தகவல்கள் புதியதாகவும்
    மிகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் இருக்கிறது
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...

      Delete
  2. சுவையான பதிவு.

    ReplyDelete
  3. தகவல்கள் புதிது பாராட்டுகள்

    ReplyDelete