ஸ்வேத வர்ண தாமரையில் அமர்ந்திருப்பவளே
ஸ்ரேஷ்டமான வாழ்க்கை அமைத்து தந்தவளே ஸ்லோகங்களில் குடியிருந்து காட்சி தருபவளே ஸ்ரத்தையாக எனைஸ்லோகம் எழுததூண்டுபவளே ஸரத்கால மேகம்போல் கருத்தகூந்தல் உடையவளே ஸுஸ்வரமாக பாடலை பாட அருள் செய்பவளே ஸகல கலா வாணி எனை சதா ரக்ஷிப்பவளே ஸந்ததியர்க்கு சகல கலைகளையும் அருள்பவளே ஸாஸ்வதமாக ஸ்லோகங்களை பக்திபிரவாகமாக ஸர்வ காலமும் எழுதும் திறமையை தந்து ஸ்ரேயஸ்யோடு முக்தி கிடைக்க அருள்வாயே ஸரஸ்வதியே சகல கலைவாணியே சரணம் தாயே |
Followers
Friday, 29 September 2017
ஸ்வேத வர்ண தாமரையில் அமர்ந்திருப்பவளே....
Saturday, 23 September 2017
துக்க நிவாரண அஷ்டகம்.....
மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே;
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே;
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி;
கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்;
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே;
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே;
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்;
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்;
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே;
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே;
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே;
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்;
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்;
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்;
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!
ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி;
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி
Friday, 22 September 2017
ESP என்றால் என்ன..?
(புலன் புறத்தெரிவு) என்பது நமது ஐந்து புலன்களை தாண்டி நமது ஆழ்மனதின் மூலம் செய்யப்படும் அல்லது உணரப்படும் விடயங்கள் ஆகும்.
இது அறிவியலுக்கும் சாதாரண மனித அறிவுக்கும் அப்பாற்பட்டு விளங்குவதால் என்றும் மனிதனுக்கு இதன் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.
ESP -இன் வகைகள்:-
Telepathy : பிறரின் எண்ணங்களை அறிதல் அல்லது பிறருக்கு குறிப்பிட்ட எண்ணத்தை அனுப்புதல்.
Clairvoyance : தொலைதுரத்தில் நடைபெறும் நிகழ்சியை பார்த்தல் அல்லது அங்கு இருக்கும் பொருள்களை பார்த்தல்.
Precognition : எதிர்க்காலத்தை கணித்தல்.
Retrocognition : கடந்த கால நிகழ்வுகளை பார்த்தல்.
Mediumship : இறந்தவர்களின் ஆவிகளுடன் பேசுதல்.
Psychometry : ஒரு பொருளை பார்த்து ஒரு குறிப்பிட்ட மனிதரை பற்றியோ அல்லது நிகழ்வுகள் பற்றியோ சொல்லுதல்.
Apportation : பொருள்களை ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மறைய செய்தல்.
Aura reading : மனிதனை சுற்றியுள்ள ஒளி அலையை காணுதல்.
Automatic writing : சுயநினைவு இன்றி ஆழ்மனதின் உதவயுடனோ அல்லது பிறசக்திகளின்உதவியுடனோஎழுதுதல்.
Bilocation : ஒரே நேரத்தில் பல இடங்களில் இருத்தல்.
Death-warning :பிறரின் இறப்பை முன்கூட்டியே காணுதல.
Divination :குறி சொல்லுதல்
Dowsing :தங்கம்,புதையல் ,நீர் அல்லது கண்களுக்கு புலப்படாத பொருள்களை குறிப்பிட்ட சில உபகரணங்களை வைத்து கணித்தல்.
Energy medicine : Healing சிகிச்சை முறைமூலம் மனித உடலின் குறிப்பிட அலைவரிசையை சரிசெய்தல்.
Levitation : ஆழ்மனத்தின் உதவியுடன் காற்றில் மிதத்தல்.
Psychokinesis or telekinesis : மனத்தால் பொருள்கள் நகர்த்துதல்
இவ்வாறு பலவிதமான ESP சக்திகள் உள்ளன. ஆனால் விஞ்ஞான பூர்வமான பலதும் நிருபிக்கபடவில்லை.
ஆனால் மேலே கூறப்பட்ட பல சக்திகளும் பல காலங்களில் பல்வேறு மனிதர்களால் நிகழ்த்தப்பட்டு கொண்டுதான் இருக்கின்றன.
தியானம்,யோகா,
இயற்கையோடு சேர்த்த வாழ்க்கை முறை, முன்னோர்களின் வழிகாட்டல்கள் போன்றவற்றின் மூலமாக இந்த சக்திகளை மனிதனால் பெற முடியும் என்பது சான்றோர்களின் கருத்து.
காரணம் இச் சக்திகள் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் மறைந்துகிடக்கும் சக்திகள் ஆகும்.அதை வெளிக்கொண்டு வர அவனால் மட்டும் தான் முடியும்.
-Courtesy Internet
Subscribe to:
Posts (Atom)