badge

Followers

Saturday, 31 December 2016

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.....

                             





                                          புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...



2017 இதோ புதியதாய் பிறக்கப் போகிறது...

இந்த வருடம் நமக்கு  அமைதியையும் ,

ஆனந்தத்தையும்,சுபிக்ஷத்தையும்,

தெய்வ அனுகிரகத்தையும்,

தளராத தன்னம்பிக்கையும்,

எடுத்த காரியத்தில் வெற்றியையும் 

முடிக்க முடியாத காரியங்கள் 

தடை ,தாமதமின்றி இனிது முடியவும்,

தேக ஆரோக்கியத்தையும் , 

மனநிம்மதியையும் ,

அபரிமிதமாக  அள்ளித்தரும் 

காமதேனுவாக ,கற்பகத்தருவாக  இருக்கட்டும்....



Wednesday, 28 December 2016

​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?




​​ நம்மை நாமே பாசிட்டிவாக வைத்துக் கொள்வது எப்படி?
1.பாசிட்டிவாக இருப்பவர்களோடு பழகுங்கள்
நம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம்.
எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக்கொள்ளாதீர்கள்.


2) உற்சாகமாக இருங்கள் :-
சோகத்தை விட்டொழியுங்கள். எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்துவிட முடியாது என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.


3. பவர்ஃபுல்லாக உணருங்கள் : -
உடல் வலிமை, பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி மனவலிமை மிக முக்கியம்.
உங்களை போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை. உடனே சிரிக்காதீர்கள்.
இது தான் நிஜம். உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.
உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.


4.உங்களை நீங்களே நேசியுங்கள்.
இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
உங்களை உங்களுக்கு பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.
உங்களின் முதல் காதலியோ, காதலனோ நீங்களாகவே இருங்கள். உங்களை நீங்களே வெறுக்காதீர்கள்.
உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்கு புரியவையுங்கள்.
உங்களை போல அழகானவர் யாரும் இல்லை, உங்களை போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.


5. பயணப்படுங்கள் :-
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றிகள் எளிதில் வரும், சிலருக்கு தாமதமாக வரும்.
அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
வாழ்க்கையில் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கிறதோ இல்லையோ,
உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும்,
உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்​...

முயன்று பாருங்களேன் ....

Monday, 26 December 2016

ஆணும் பெண்ணும்......பல வித்தியாசங்கள் உண்டு...ஒரு மனோதத்துவ அலசல்...



ஆணும் பெண்ணும் உடலால் மட்டும் அல்ல....உணர்வாலும், மூளையாலும் சமம் அல்ல...பல வித்தியாசங்கள் உண்டு...
பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது!

உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்கு தேவையான பணிவிடையையும் செய்ய முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.)
ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது!
(அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும்
அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது!)

மொழி;
பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள
முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.

பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS);
ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.

வாகனம் ஓட்டுதல்;
வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது,
தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.
ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த
கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்” ஆகும்.
உதாரணமாக வாகனம் செலுத்தும் போதுஇசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம்
செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள். (ஹெட் போனில் பாட்டு கேட்டுக் கொண்டு scooty ஓட்டும் பெண்கள் ஜாக்கிரதை).

பொய்ப்பேச்சு;
ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. (என் மனைவி ஒன்றும் தெரியாத அப்பாவி என்று 99 சதவீதம் ஆண்கள் இன்றும்கூட தவறாக நம்பி கொண்டு இருப்பார்கள். ) எ காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!

பிரச்சனைக்கான தீர்வுகள்:
பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும்.
இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில்
தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.
ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின்
மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக
சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும்.
சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.


தேவைகள்:
மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.
ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில்
பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும்.

மகிழ்ச்சியின்மை:
ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்…
அவர்களால், அவர்களின் வேலையில் கவணம்
செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது.

உரையாடல்;
பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள்.

எண்களை ஆண்கள் அதிகம் நினைவில் வைத்து கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். (காதலன் அல்லது கணவன் பிறந்த நாளை மறந்து விட்டால் பெண்கள் ஈசி யாக எடுத்து கொள்ள வேண்டும். ஏன் மறந்தாய என் டார்சர் தர கூடாது. ) பெண்கள் தனது முன்னாள் காதலன் பின்னால் காதலன் அம்மா அப்பா அண்ணன் தம்பி தங்கை பிள்ளைகள் என்று எல்லார் பிறந்த தினமும் மனதில வைத்துக்கொண்டு இருப்பாள். அது அவளுக்கு சுலபமானது.


நடவடிக்கை;
பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்!
ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில்
ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல்
காரணம் இதுதான்...


Friday, 23 December 2016

ஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...ஜெய் சாய் ராம் ...



ஓம் சாய் நமஹா .....
          ஓம் சாய் ராம் ...ஸ்ரீ சாய் ராம் ...
                         ஜெய் சாய் ராம் ...
இதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....


ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...

Thursday, 22 December 2016

ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....ஒரு சிறிய வீடியோ...





ஸ்வாமியே சரணம் ஐய்யப்பா .....
ஒரு  சிறிய வீடியோ...
விடீயோவைப் பார்க்க படத்தை சொடுக்கவும்...






Wednesday, 21 December 2016

தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது...


டெல்லியில் ஒரு பெரிய கம்பெனி முன்பிருந்த கடையில் ஒரு பெரியவர் சமோசா விற்றுக் கொண்டிருந்தார்.
அந்த வட்டாரத்தில் இவர் கடை பிரபலம்....
ஒரு நாள் அந்த கம்பெனி மேனேஜர் கடைக்கு வந்து சாப்பிட்டுக் கொண்டே....
"நீங்க நல்லா நிர்வாகம் பண்ணுறீங்க....
தொழிலை நல்லா வளர்த்திருக்கீங்க...
இதுவே என்னைப் போல பெரிய கம்பெனில வேலையில் இருந்திருந்தா நீங்களும் என்னைப்போல பெரிய அளவு முன்னேரிருக்கலாம் இல்ல" என்றார்....
பெரியவர் புன்னகைத்துவிட்டு சொன்னார்...
"இல்லை, நான் உங்களை விட நன்றாகவே முன்னேரிருக்கேன்"
"எப்படி?"
"பத்து வருஷத்துக்கு முன் நான் இந்த தொழிலில் நுழைந்து கூடையில் சமோசா விற்ற போது நீங்கள் இந்த கம்பெனியில் வேலைக்கு சேர்ந்திருந்தீங்க...
அப்போ என் வருமானம் மாசம் ஆயிரம் ரூபா...
உங்கள் வருமானம் மாசம் பத்தாயிரம்...
நீங்க இப்போ மேனேஜர் ஆகிட்டீங்க...
மாசம் ஒரு லட்சம் சம்பளம் வாங்குறீங்க....
இப்போ எனக்கு சொந்தமா இந்த கடை இருக்கு...
இந்த வட்டாரத்தில் நல்ல பேர் (Good Will) இருக்கு...
நானும் மாசம் ஒரு லட்சமோ இல்லை அதைவிட அதிகமாகவே சிலசமயம் சம்பாரிக்கிறேன்....
நாளை என் வாரிசுகளுக்கு இந்த தொழிலை நான் தர முடியும்...
அவர்கள் என்னைப்போல ஜீரோவில் இருந்து துவங்க வேண்டாம்...
நேரடியாக முதலாளியாக வந்து கடையை வளர்த்தால் போதும்...
ஆனால் உங்களுக்கு அப்படியில்லை...
உங்கள் பதவியை உங்கள் மகனுக்கு அப்படியே தர முடியாது...
உங்கள் இத்தனை வருஷ உழைப்பின் பலன் உங்கள் முதலாளி மகனுக்குத்தான் போகும்....
உங்கள் மகன் மீண்டும் ஜீரோவில் இருந்து துவங்க வேண்டும்...
நீங்கள் பட்ட அத்தனை கஷ்டத்தையும் அவனும் படுவான்....
உங்கள் மகன் உங்களைப் போல மேனேஜர் ஆகும்போது, என் மகன் எந்த நிலையில் இருப்பான் என்று நீங்கள் கணக்குப் போட்டுக்கோங்க....
ஒருவேளை என் மகனிடம் வேலைக்கு வந்தாலும் வரலாம்" என்றார்....
மேனேஜர் சமொசாவுக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ஓடிவிட்டார்...

நீதி:
"தொழிலும் விவசாயமும் கைகொடுப்பது போல எதுவும் கைகொடுக்காது"




Tuesday, 20 December 2016

13 வகையான சாபங்கள்...


சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?????

1) பெண் சாபம்,
2) பிரேத சாபம்,
3) பிரம்ம சாபம்,
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம்,
6) கோ சாபம்,
7) பூமி சாபம்,
😎 கங்கா சாபம்,
9) விருட்ச சாபம்,
10) தேவ சாபம்
11) ரிஷி சாபம்
12) முனி சாபம்,
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

*1) பெண் சாபம்

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

*2) பிரேத சாபம்

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

*3) பிரம்ம சாபம்:*

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

*4) சர்ப்ப சாபம்:*

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

*5) பித்ரு சாபம்:*

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

*6) கோ சாபம்:*

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

*7) பூமி சாபம்:*

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

*8) கங்கா சாபம்:*

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும்.
கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

*9) விருட்ச சாபம்:*

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

*10) தேவ சாபம்:*

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

*11) ரிஷி சாபம்:*

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

*12) முனி சாபம்:*

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

*13) குலதெய்வ சாபம்

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.

Monday, 19 December 2016

ஸ்ரீ மகா லட்சுமி....தஞ்சை பாணி ஓவியங்கள்


ஸ்ரீ மகா லட்சுமி ....தஞ்சை பாணி ஓவியங்களின் 

தொகுப்பு ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....

ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும்...



Saturday, 17 December 2016

ஸ்ரீ கிருஷ்ணா....தஞ்சை பாணி ஓவியங்கள்



இதோ என் புதிய ஸ்லைடு ஷோ 

ஸ்ரீ கிருஷ்ணரின்  தஞ்சை பாணி ஓவியங்களின் கோர்வை....

படத்தை சொடுக்கி விடியோவை பார்த்து 

தங்கள் கருத்தை சொல்லுங்கள்...

விரும்பினால் இந்த YOUTUBE  சேனல்லுக்கு  subscribe  செய்ய்யவும் ...

Friday, 16 December 2016

ஹரே கிருஷ்ணா ..... ஒரு சிறிய வீடியோ .....




ஹரே கிருஷ்ணா .....

ஒரு சிறிய  வீடியோ .....

சின்ன கிருஷ்ணன்...குட்டிக் கிருஷ்ணனின் 
ஓர் சின்னஞ்சிறிய வீடியோ உங்களுக்காக ....

Thursday, 15 December 2016

சாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான்




சாய் ராம் ...சாய் ஷாம் ...சாய் பகவான் ....

இதோ ஸ்ரீ ஷீர்டி சாய்பாபாவின் படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடு ஷோ 

என் YouTube Channel இல் இருந்து...

Wednesday, 14 December 2016

வர்தா புயல் ...என் பார்வையில்...



வருதா ,வராதா என்று எல்லோரும் பட்டிமன்றம் 
நடத்திக்கொண்டு இருக்கும் போதே சொன்ன டைமுக்கு கரெக்ட்டாக வந்து சென்னையை ஒரு கலக்கு கலக்கி,பிரட்டி,உருட்டி,கிழித்துப் போட்டுவிட்டு தன்  வழியே போய்விட்டது...

வர்தா  புயல் 


சென்னையின் மழையின்மை ,நல்ல குளிர் போன்றவைகளுக்கு இடையே வர்தா  என்ற பெயர் சூடிய புயல் வரப்போகிறது என்று டீ வி கூவினாலும் முழு நம்பிக்கை இல்லை தான்.

ஏனென்றால் ,புயல்கள் சாதாரணமாக சென்னையை மிரட்டிவிட்டு மழையாய் கொட்டி தீர்த்துவிட்டு ஆந்திராவை ,அல்லது ஒரிஸ்ஸாவை அடிக்கும்...இதுவே அதற்க்கு ஒரு பிழைப்பு....என்று சென்னைவாசிகள் கிண்டல் செய்தது கேட்டு விட்டதோ என்னவோ...வந்தது வர்தா ....

ஞாயிறு மாலை...மிக  இதமான தூறல் மழை...சில்லென்ற குளிர்....சென்னையில் ஷால் போர்த்திக்கொள்ள  வேண்டிய சீதோஷணம்.

எதற்கும் டீ வீ காரர் சொன்னதைக் கேட்டு வைப்போம் என்று ஒரு ப்ரெட்டும் ,கொஞ்சம் பிஸ்கெட்டும் வாங்கி வைத்தேன்...


நடு இரவில் தூறல் கொஞ்சம் கனத்தது...

விடியக்காலை  நோ கரண்ட் ......

தூறல் இன்னும் பலத்து...

சென்னை ஊட்டி குளிர் அனுபவித்தது...

மதியம் 11 மணிக்கு மழை ,காற்றோடு பலத்து....

12 மணிக்கு எங்கள் காம்ப்ஸ்ஸில்  உள்ள மரங்கள் பயங்கரமாக சாமியாட ஆரம்பித்தன....
ஊஊஊஒ ...... ஓஓஓஓஓஓஓ ..........ஷ்ஷ்ஷ்ஹ்ஷ் ....என்ற பாக்கிரௌண்ட் ம்யூஸிக்குடன்....

வீடெல்லாம் இருட்டு....
சார்த்தி வைய்த்த கண்ணாடி ஜன்னல்கள் படபடக்க....
சுமார் 100 மீட்டருக்கு அப்பால் உள்ள மிக பிரம்மாண்ட ஷெட் ஒன்றின் கூரை ஷீட்கள் ஒன்றொன்றாய் பறந்தன....ஒரு மணி வாக்கில் ஷெட் வெறும் எலும்புக்கூடு...

வீட்டை சுற்றி உள்ள மரக்கிளைகள் பெரிய சத்தத்துடன் முறிந்தன....

என் வீட்டு ஜன்னலுக்கு ஜஸ்ட் 10அடிக்கு அப்பால் ஒரு நெடிய கிளை முறிந்து விழுந்தது...

என் அதிருஷ்டம் கிளையின் நுனி என் AC யை தொடவில்லை...

கிளைகளுக்கு அடியில் கார்கள் பாவமாய் நசுங்கி....
பைக்குகள் விழுந்து...
மொபைல் சார்ஜ் இல்லை...
டீ வீ  இல்லாததே தனிமையில் தள்ளியது போல இருந்தது...

கணவர் இந்த
மருத்துவக்கல்லூரி +மருத்துவமனை 
வளாகத்திலேயே வேலை என்பதால் பெரிய கவலை இல்லை.

மாலை ...
இவர் வீடு வந்தபின் ....
"வேற என்ன நியூஸ்..."

"புயல் தான்...பயங்கரம்...இங்கே மட்டும் 300 மரங்களுக்கு மேல விழுந்திருக்கு...நிறைய கார்கள்,அவுட் ..."
"ஒரு பையன் ...வீட்டை விட்டு அப்போதான் வெளியே வந்திருக்கான். மரக்கிளை மேல விழுந்திடுத்து...இங்கே emergency க்கு தூக்கி வந்தால்...கதை அப்பவே முடிந்தாச்சு...அந்த பையன் இங்கே வேலை பார்க்கும் ஒரு செக்யூரிட்டி யின்  மகன்.....கதறுகிறான் பெத்தவன்...தாங்க முடியவில்லை..."
அடி வயிற்றில் நரம்புகள் இழுத்தன...

கார்த்திகை   தீபங்கள்....வீட்டுக்குள்ளே ஒளி வீசி இதமளித்தன...அப்பம் ,பொரி  இல்லாத கார்த்திகை....பயம் சூழ்நத கார்த்திகை....

கார்த்திகை விளக்கு ஒளியில் தோசை டின்னர் ....

இடைவிடாத காற்றின் ஓலம்...

இருட்டு...

பயமுறுத்தத்தான் செய்தது....

விடிய விடிய  ..தொடர்ந்தது...

காலை....புயலுக்குப்பின் அமைதி...

கரண்ட் இல்லை....மொபைல்  இல்லை....

டோட்டல்  கம்யூனிகேஷன் கட்...



புயல் எனக்கு சொன்ன செய்திகள்...


போன டிசம்பரில் சென்னை மிதந்தது ....

இந்த டிசம்பரில் சென்னை பறந்தது....

ஆனால், போன வருஷத்தை விட இது சற்று பெட்டர் தான்....

புயலுக்கு மக்களும்,அரசாங்க இயந்திரமும் இன்னமும் தயார் நிலையில் இருந்தனர்...

எச்சரிக்கை படி வீட்டுக்குள் இருந்தவர்கள் பத்திரமாக இருந்தனர்...
ஆடும் மரம் முன் செல்பீ  எடுக்க சென்றவர்கள் அதிகம் அடி பட்டனர்...
வீடுகள் ,வாகனங்கள் சேதப்பட்டாலும் இன்சூரன்ஸ் செய்தவர்கள் கொஞ்சம் பிரச்னை இல்லாமல் இருக்கலாம்...

ஒரு தெருவில் ஓரிருவர்  பாதிக்கப்பட்டனர்....ஆனால் வெள்ளத்தின் போது இன்னும் பலபல மக்கள் எதிர்பாராமல் பாதிக்கப்பட்டனர்....ஏரியாவே மொத்தமாக மூழ்கியது...

வெள்ளம் man made  disaster ...இது இயற்கையின் வெறியாட்டம் ....

விழுந்த மரங்களும் மீண்டும் வளர 10 - 20  வருடங்கள் ஆகும்...

மின்சாரம் நிறுத்தப்பட்டதால் பல விபத்துகள் தவிர்க்கப்பட்டன...

மின்சாரம் நீண்ட நேரம் இல்லாவிட்டால் இன்வெர்ட்டர் ,மொபைல் போன் பிளாஷ் லைட் எல்லாம் வேலைக்கு ஆகாது....அந்தக்கால டார்ச் லைட் ,மெழுகு வர்த்தி தான் பெஸ்ட் .

மின்சாரம்,நெட்ஒர்க் , போனால் paytm ,debit ,credit card ,ஆன்லைன் transfer எல்லாம் எட்டு சுரைக்காய் தான்...

கையில் இருக்கும் காசே கடவுள்...

அதிலும் 2000/- வேலைக்கு ஆகவில்லை .

"கேஷ் லெஸ் "விட  "லெஸ் கேஷ் " உத்தமம்....

கையில் கோடாலியுடன் மரம் வெட்டிய போலீஸ் காரர்களுக்கும் ,மாநகராட்சி ஊழியர்களுக்கும்,  சேவகர்களுக்கும் என் வணக்கங்கள்....

Sunday, 11 December 2016

ஓம் சாய் நமஹா ...என் புதிய ஸ்லைடு ஷோ....






ஓம் சாய் நமஹா .....
இதோ,என் புதிய ஸ்லைடு ஷோ....



சதா சர்வ காலமும் பாபாவின் நினைவுடன் இருப்பதே உண்மையான 

வழிபாடாகும். இதுவே தன்னிச்சையான இயல்பான வழிபாடு ஆகும். 

சுருங்கச்சொன்னால் பாபாவை அன்புடனும், இடைவிடாதும் 

நினைத்தவண்ணம் இருப்பதே உன்னதமான வழிபாடு எனலாம். பாபா 

தனது பக்தர்களிடம் தனக்கான பூஜைமுறைகளையோ, விரதம் 

இருக்கவோ கூறியதில்லை. நாம் எல்லா நேரங்களிலும், எல்லா 

சூழல்களிலும் அவரை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதே 

பாபாவின் விருப்பம். அப்படி தன்னை மட்டுமே நினைத்துக் 

கொண்டிருக்கும் பக்தனை கூடவே இருந்து காப்பாற்றுவதே அவரது 

வாக்குறுதி.


-சாய் ராம் -


Friday, 9 December 2016

ஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ...



ஓம் ஸ்ரீ சாய் ராம் ....ஒரு சிறு ஸ்லைடு ஷோ ......

எங்கே உண்மையான ஆர்வமும் , ஏக்கமும் 

இருக்கின்றதோ, பாபா தம்மைத்தாமே 

அவ்விடத்தில் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்

 - ஸ்ரீ சாய் சத்சரித்திரம்.



Wednesday, 7 December 2016

தயிர் சாதத்தின் அற்புதங்கள்...




தயிர் சாதத்தின் அற்புதங்கள்....
'புளிப்பை ரொம்ப சேர்த்துக்காதே... உடம்புக்கு ஆகாது!'' என்று பாட்டி காலத்தில் இருந்து நம் அம்மாக்கள் சொல்லி வரும் அட்வைஸ். ஆனால், பாலை, தயிராக்கிச் சாப்பிடும்போது அதே புளிப்பு, நம் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்பது ஆச்சர்யம்தானே.
நம்மில் பலரும் தயிர்சாதம் என்றாலே, ஏதோ ஏழைகளின் உணவு என்பதுபோல, இளக்காரமாக நினைக்கிறோம். அதிலும் இனிவரும் அடைமழைக் காலத்தில், ''இந்த க்ளைமேட்ல போய் தயிர்சாதம் சாப்பிடுவாங்களா?'' என்று தோள் குலுக்கித் தவிர்த்துவிடுவோம். ஆனால், அதில் நம் உடலுக்குத் தேவையான முக்கியமான சத்துக்கள் இருக்கின்றன. அதை 'ப்ரோபயாடிக்’ உணவு என்று சொல்வோம்.'' இவ்வாறு, ப்ரோபயாடிக் உணவின் மகத்துவத்தை விளக்குகிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள் காந்திமதி மற்றும் பவானி.
ப்ரோபயாடிக் உணவு என்றால் என்ன?
''இரண்டு வகையான நுண்ணுயிரிகள் (மைக்ரோ ஆர்கானிசம்ஸ்) நம் உடலில் உள்ளன. ஒருவகை நுண்ணுயிரியானது, நம் உடல் நலத்துக்கும், உயிர் வாழ்தலுக்கும் அவசியம். மற்றொரு வகை நுண்கிருமி, நோய்களை ஏற்படுத்தி உடலுக்குக் கெடுதல் விளைவிக்கக் கூடியது. இப்படி நன்மை செய்யும் நுண்ணுயிரிகளை ப்ரோபயாடிக் என்று சொல்வோம்.
நம் உடல் நலத்தை மேம்படுத்த உதவும் பாக்டீரியா, ஈஸ்ட் போன்ற நுண்ணுயிரிகள் தயிர், இட்லிமாவு போன்ற நம்முடைய உணவுகளில் அதிக அளவில் காணப்படும். இவற்றையே ப்ரோபயாடிக் உணவு என்கிறோம். நம்முடைய செரிமான மண்டலத்தில் மட்டும் 500 வகையான பாக்டீரியா உள்ளன. இவை உணவு செரித்தலுக்குப் பெரிதும் உதவியாக இருப்பதுடன், செரிமான மண்டலத்தின் சிறப்பான செயல்பாட்டுக்கும் உதவுகிறது.
நன்மை தரும் பாக்டீரியா, நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் கெட்ட பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும் தன்மையும் நல்ல பாக்டீரியாவுக்கு உண்டு.
இந்த நன்மை செய்யும் பாக்டீரியா பாதிக்கப்படும்போது, வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்படும். நோய்த் தொற்று, ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக்கொள்ளும்போது இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
ப்ரோபயாடிக் உணவு இயற்கையாக இருப்பது மிகவும் நல்லது. பாலை உறைவிட்டு சில மணி நேரங்கள் கழித்துப் பார்த்தால், தயிராக உறைந்து இருக்கும். இந்தச் செயல்தான், முதல் நாள் அரைத்துவைக்கும் இட்லி மாவை, அடுத்த நாள் காலையில் புளிக்க வைத்து, பொங்கி நுரைத்து வரச் செய்கிறது. இதற்குள் தான் 'பைஃபைடோ’ மற்றும் 'லாக்டோ’ என்ற நல்ல பாக்டீரியா உருவாகி இருக்கும்.
இதைத் தவிர ப்ரோபயாடிக் என பிராண்ட் செய்து கடைகளில் விற்கப்படும் பானங்களில் கூட நன்மை செய்யும் பாக்டீரியா கிடைக்கும். தயிரில் ப்ரோபயாடிக் இருப்பதால், தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தயிர், மோர் தவிர, இட்லி, தோசை, ஆப்பம், முளைகட்டிய பீன்ஸ், முட்டைக்கோஸில் உப்பு சேர்த்து ஊறவைத்து எடுப்பது, யோகர்ட் போன்றவை நல்ல ப்ரோபயாடிக் உணவு.
நன்மைகள்
வயிற்றுப் பிரச்னைகள், அஜீரணக் கோளாறுகள், மந்தம், ஆண்மைப் பிரச்னைகள் போன்றவற்றுக்கு ப்ரோபயாடிக் உணவுகள் மிகவும் நல்லது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும். இதய நோயைத் தவிர்க்க வல்லது.
தாகத்துக்கு ஏற்ற பானம் மோர். இது உடனடியாக உடல் சோர்வை நீக்கி, சக்தி தரும்.
உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கும் ப்ரோபயாடிக் உணவு மிகவும் நல்லது.
கற்றாழையுடன் சேர்த்து ப்ரோபயாடிக் உணவுகளைக் கலந்து தந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்துவிடும்.
சமீபத்திய ஆய்வுகள் மூலம் ப்ரோபயாடிக் உணவுகளில் கான்சரைத் தடுக்கும் ஆற்றல் இருப்பதைக் கண்டறிந்துள்ளார்கள்.
கர்ப்பமான பெண்களுக்கு, தயிர் மிகவும் நல்லது. நோய் எதிர்ப்புத் திறன் அதிகம் இருப்பதால், பிறக்கும் குழந்தைக்கு நல்லது

Tuesday, 6 December 2016

ஷீர்டி சாய்பாபா-ஒரு சிறிய ஸ்லைடு ஷோ


இதோ ,ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா அவர்களின் பிம்பங்கள் அடங்கிய
ஒரு சிறிய  ஸ்லைடு ஷோ .....

யூடியூபில் பார்க்க படத்தை சொடுக்கவும்...விரும்பினால் என் youtube channel ஐ subscribe செய்யவும்...


YouTube ...




" நான் எங்கும் இருக்கிறேன் - நீரிலும், நிலத்திலும்,
 காய்ந்துபோன கொம்பிலும், மனிதர்களிடையேயும், 
வனத்திலும், இந்த தேசத்திலும், வெளிதேசங்களிலும் 
எங்கும் இருக்கிறேன்.
 நான் எந்த தேசத்தின் எல்லைகளுக்கும் 
உட்பட்டவன் அல்லன். 
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா."

Monday, 5 December 2016

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா -ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....




ஸ்ரீ ஷீரடி சாய் பாபா- ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....






உன் தந்தை நானிருக்க கலக்கம் ஏன்? 
என் குழந்தைகள் கலங்க மாட்டார்கள், எது வந்தாலும் எதிர்கொள்வார்கள், வருவது எல்லாம் என்னாலோ, அல்லது என்னைத்தாண்டியோ மட்டும்தான் வரும் என்பதை தீர்க்கமாக அறிந்திருப்பார்கள். நல்லதோ கெட்டதோ எல்லாம் நன்மைக்குத்தான் என்பதை தீர்க்கமாக உணர், முடிந்தால் தாங்கிக்கொள் இல்லையேல் என் பாதங்களில் சுமத்திவிடு ,எதுவும் நிரந்தரம் இல்லை.எல்லாம் ஒரு நாள் மாறும், நான் மட்டும் உன்னை விட்டு மாறமாட்டேன்,என்னிடம் தஞ்சம் புகுந்தவர்கள் எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் அவர்களை தாங்கி நிற்ப்பேன். "நானிருக்க பயமேன்" இது வெறும் வார்த்தையல்ல, என் சத்திய வாக்கு.

Thursday, 1 December 2016

புயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன?: தமிழக அரசின் 15 அறிவுரைகள்...!



புயல் நேரத்தில் மக்கள் செய்ய வேண்டியது என்ன?: தமிழக அரசின் 15 அறிவுரைகள்...!
புயல் நேரத்தில் மக்கள் பொது மக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறி்தது தமிழக அரசு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.
புயல் நேரத்தில் பொது மக்கள் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை குறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை 15 அம்ச அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் வருவாய்த் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:


1.ரேடியோ மற்றும் தொலைக்காட்சியினை தொடர்ந்து கவனித்து கால நிலை அறிவிப்புகளை அறிந்து கொள்ளவும். இச்செய்தியினை பிறருக்கும் தெரிவிக்கவும்.
2.ரேடியோ மற்றும் தொலைக்காட்சியில் பெறப்படும் அதிகார பூர்வமான செய்தியை மட்டுமே பிறருக்கு தெரிவிக்கவும்.
3.புயல்காற்று கதவு மற்றும் ஜன்னல்களை சேதப்படுத்த வாய்ப்புள்ளதால் அவற்றை இறுக்கமாக மூடி வைக்கவும்.
4.கடற்கரை மற்றும் நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் இருந்தால் மேடான பகுதிக்கு விரைவாக வெளியேறவும். நீர் சூழ்வதற்கு முன்னரே பாதுகாப்பான பகுதிக்கு சென்று விடவும்.
5.தங்கள் குடியிருப்பு வெள்ளம் மற்றும் புயலால் பாதிக்கப்படாதுயெனில்வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கவும். எனினும் அதிகார பூர்வமாக கேட்டுக்கொள்ளப்பட்டால் உடன் வெளியேறவும்.
6.நீர்நிலைகள் மற்றும் ஆற்று கரைகளிலுள்ள குடியிருப்புகளுக்குள் கன மழை காரணமாக நீர் சூழ வாய்புள்ளதால் கரையோரங்களில் குடியிருப்போர் கவனமாக இருக்கவும்.
7.சமைக்காமல் உண்ணக்கூடிய உணவுகள் (பிரட், பிஸ்கட், பழங்கள்) தேவையான அளவு இருப்பு வைக்கவும், போதுமான குடிநீர் பாதுகாப்பான பாத்திரங்களில் சேமித்து வைக்கவும்.
8.நீர் சூழ்வதால் வெளியேற வேண்டிய பகுதியில் நீங்கள் குடியிருந்தால், பொருட்சேதங்களை தவிர்ப்பதற்காக விலை உயர்ந்த பொருள்களை வீட்டில் உயரமான பகுதியில் வைத்து பாதுகாக்கவும்.
9.குழந்தைகள் மற்றும் சிறப்பு உணவு தேவைப்படும் முதியோருக்கு தேவையான உணவுப் பொருளை இருப்பு வைக்கவும்.
10.மழைநீரில் செல்வதாயின், கையில் கொம்பு ஒன்றினை வைத்துக் கொள்ளவும். பாம்பு, பூச்சிகள் கடிக்க வாய்ப்புள்ளதால் கவனம் தேவை.
11.மின் வயர்கள் அறுந்து கிடக்க வாய்ப்பு உள்ளதால் தெருக்களில் கவனமாக நடக்கவும்.
12.அமைதியாக சூழ்நிலையை புரிந்து கொள்ளவும். ஆபத்து நேரத்தினை அமைதியாக எதிர் கொள்ளும் உங்களது திறன் மற்றவர்களுக்கும் பயன்படலாம்.
13. அதிகார பூர்வமாக அறிவிக்கும் வரை புயல் பாதுகாப்பு மையங்களிலிருந்து வீட்டிற்கு திரும்பி செல்ல வேண்டாம்.
14.மின்கம்பங்களிலிருந்து தளர்வான / அறுந்த மின்கம்பிகளை கவனமாக தவிர்க்கவும்.
15.பேரிடரால் பாதுகாப்பிற்கு உள்ளான பகுதிக்கு தேவையில்லாமல் வேடிக்கை பார்க்க செல்ல வேண்டாம். உங்களது உதவி தேவைப்படும் எனில் மட்டுமே செல்லவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் !!!





வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம் !!!

ஒவ்வொரு மனிதனும் மிக அதிகமாக அவஸ்தைப் படுவது GAS TROUBLE  என்னும் வாயுப் பிரச்சனையில் தான்...

இது ஆளைக் கொல்லாவிட்டாலும் அவஸ்தைப்படுத்தும்....தூக்கத்தைக்கெடுக்கும்....
இந்தப் பிரச்சனைக்கு சில எளிய கைவைத்தியங்கள்...சில பயனுள்ள டிப்ஸ்கள்...

சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .
சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்
கொண்டால் வாயு சேராது.
பசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி
குடித்தால் வாயு சேராது .
இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித
வாயுக் கோளாறும் தீரும்.
புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு
வர வாயு அகலும்.
வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்
இலை இவைகள் வாயுவைப் போக்கும்.
ஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு ,
சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும்
வாயுவைப் போக்கும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது ,
இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு
நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத்
தடுத்திட முடியும்,
வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :
காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம்,
மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும்
மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி
பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன்
உண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.
திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால்
ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக்
குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.
ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு
கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்
அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,
முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால்
உண்டான உடல் அசதித் தீரும்.
இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி
ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை
அறவே நீங்கும்.
புளியேப்பம் தீர :
இஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம்
ஆகியவை தீரும்.
சூதக வாய்வுக்கு :
கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி
இருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி
நலம் பெறலாம்.
சூலைவாய்வு தீர :
சுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி
சம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து
தேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு
குணமாகும்.
கபால வாய்வுக்கு :
வாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.
இதற்கு மருந்து.....
250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி
இலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி
வடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,
சனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன்
வெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.
வாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :
தூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி
மிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு
சாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல்
கலகலப்பாகும்.
வாய்வு ,வயிற்று வலி தீர :
பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,
வாய்வு , வயிற்று வலி தீரும்
வாய்வு தீர :
வெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,
மிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.
எலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால்
வயிற்றிலுள்ள வாயுத்தொல்லை அகலும்
வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு
தொல்லைத் தீரும்.
சுக்கு மல்லி காப்பி வாயுக்கு நல்லது .
சுக்கை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக்
கொண்டால் வாயு சேராது.
பசும்பாலில் பத்து பூண்டு பற்களை ப் போட்டுக் காய்ச்சி
குடித்தால் வாயு சேராது .
இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க எல்லாவித
வாயுக் கோளாறும் தீரும்.
புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி ,உப்பு ,புளி ,மிளகாய் ,
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்து உணவுடன் சாப்பிட்டு
வர வாயு அகலும்.
வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்
இலை இவைகள் வாயுவைப் போக்கும்.
ஓமம்,கடுக்காய்,வால்மிளகு , வெள்ளைப் பூண்டு, மிளகு ,
சுண்டைக்காய் ,சாதிப் பத்திரி , வெங்காயம் இவைகளும்
வாயுவைப் போக்கும்.
மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது ,
இலேசாக வாயு தோன்ற ஆரம்பித்த உடனே இரண்டொரு
நாட்கள் பத்திய உணவை கடைப்பிடித்தால் வாயுவைத்
தடுத்திட முடியும்,
வாயுப் பிடிப்பினால் உண்டாகும் மூட்டுவலிக்கு :
காலையில் சுக்குமல்லி காப்பி தாயிரித்துக் குடிக்கலாம்,
மதிய உணவில் பூண்டுக் குழம்பு தயாரித்து சாப்பிடவும்
மறுநாள் முடக்கத்தான் கீரையை எண்ணையில் வதக்கி
பூண்டு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்து உணவுடன்
உண்ண வாயுப் பிடிப்பு ,மூட்டு வலி குறைந்திருக்கும்.
திடீரென்று வயிற்றில் வாயு உருண்டு கொண்டு வந்தால்
ஒரு கரண்டி சுக்குப் பொடியை வடித்த சுடுநீரில் கலக்கிக்
குடித்தால் உடனே வாயு கலைந்து விடும்.
ஒரு கரண்டி துளசிச்சாறுடன் ஒரு கரண்டி இஞ்சிச் சாறு
கலந்து காலை, மாலை இருவேளையாக ஏழு நாட்கள்
அருந்த சகலவித வாயுக் கோளாறுகளும் தீரும்,
முடக்கத்தான் ஈர்க்குகளை ரசம் செய்து அருந்த வாய்வினால்
உண்டான உடல் அசதித் தீரும்.
இஞ்சிச் சாறுடன் கருப்பட்டி (பனைவெல்லம்) சேர்த்து க் காய்ச்சி
ஏலம், கிராம்பு , ஜாதிக்காய் , சேர்த்துக் கிளறி வைத்துக் கொண்டு
ஒரு தேக்கரண்டி அளவு உண்டு வர வாயுத்தொல்லை
அறவே நீங்கும்.
புளியேப்பம் தீர :
இஞ்சி முறப்பா உண்டு வர புளியேப்பம் ,வயிற்று மந்தம்
ஆகியவை தீரும்.
சூதக வாய்வுக்கு :
கறிவேப்பிலைப் பொடியுடன் சர்க்கரைக் கலந்து தினசரி
இருவேளை உண்டு வர சூதக வாயு சூதக வலி நீங்கி
நலம் பெறலாம்.
சூலைவாய்வு தீர :
சுக்கு , மிளகு , இந்துப்பு , ஓமம் இந்த நான்கையும் தூளாக்கி
சம அளவில் கலந்து வேளைக்கு அரைத் தேக்கரண்டி எடுத்து
தேனில் கலந்து காலை , மாலை உண்டு வர சூலை வாயு
குணமாகும்.
கபால வாய்வுக்கு :
வாய்வு சிரசில் ஏறி பலவிதத் தொல்லைகள் விலைவிக்கும்.
இதற்கு மருந்து.....
250 மில்லி நல்லெண்ணையுடன் ,250 மில்லி குப்பை மேனி
இலைச்சாறு கலந்து காய்ச்சி ,தைலப் பக்குவத்தில் இறக்கி
வடிகட்டி வைத்துக்கொண்டு , வாரம் இருமுறை ( புதன் ,
சனி ) காலையில் தலையில் தேய்த்து இளஞ்சூட்டுடன்
வெந்நீரில் குளிக்க கபால வாயு நீங்கும்.
வாய்வைக் கலைக்கும் தூதுவளைத் துவையல் :
தூதுவளை இலையை நெய்விட்டு வதக்கி உப்பு ,புளி
மிளகாய் சேர்த்து அரைத்து துவையளாக்கி சுடு
சாதத்துடன் உண்ண வாய்வு கலைந்து உடல்
கலகலப்பாகும்.
வாய்வு ,வயிற்று வலி தீர :
பெருங்காயத்தை உணவில் சேர்ப்பதால் சுலபமாக ஜீரணமாகும்,
வாய்வு , வயிற்று வலி தீரும்
வாய்வு தீர :
வெள்ளைப்பூண்டு , பெருங்காயம் , நெல்லிக்காய் , ஏலக்காய் ,
மிளகு சாதம் ஆகியவைச் சாப்பிடலாம்.
எலுமிச்சைச் சாறுடன் மோர் கலந்து அருந்தி வந்தால்
வயிற்றிலுள்ள வாயுத்தொல்லை அகலும்


வெள்ளைப் பூண்டை நெய்யில் வதக்கி உப்பு . புளி ,மிளகாய்
தேங்காய் சேர்த்து துவையல் அரைத்துச் சாப்பிட வாய்வு
தொல்லைத் தீரும்.