badge

Followers

Monday, 30 October 2017

கருவுக்கும் கடவுளுக்கும் ஒரு உரையாடல்...




கருவுக்கும் கடவுளுக்கும் ஒரு உரையாடல்


பிரசவிக்கப் போகும் ஒரு பெண்ணின் பிரசவத்திற்கான ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.

உறவினர்கள் எல்லாம் காத்திருக்க அந்த தாய் வலியில் கதறிக் கொண்டிருந்தாள்.

வயிற்றிலிருக்கும் குழந்தைக்கு வழக்கத்திற்கு மாறன சத்தம் ஏதேதோ கேட்டது நமக்கு என்ன நடக்கப் போகிறதோ என்ற குழப்பம் குழந்தையின் மனதில் ஊசாடியது,

அமைதியாக ஆனந்தமாக மிதந்துக் கொண்டிருந்த நமக்கு என்ன ஆகப்போகிறது,

வழக்கமாக நாம் பேசும் கடவுளையே கேட்டு விடலாம் என்று குழந்தை கடவுளை அழைத்தது.

குழந்தை :
இறைவனே என்னை எங்கு அனுப்பப் போகிறாய் வழக்கத்துக் மாறான ஏதேதோ சத்தம் கேட்கிறதே எனக்கு ஒன்றும் புரியவில்லையே.

கடவுள் :
குழந்தாய் இனி நீ மனிதர்களுடன் வசிக்கப் போகிறாய்

குழந்தை :
நான் இங்கு சந்தோசமாகத் தானே இருக்கிறேன் நான் ஏன் அங்கு போக வேண்டும்

கடவுள் :
இல்லை குழந்தாய் நீ இங்கிருப்பது போலவே அங்கும் இருப்பாய் சென்று வா

குழந்தை :
என்னை நீ இங்கு பாத்துக் கொள்வது போல் யார் என்னை அங்கு பார்த்துக் கொள்வார்.

கடவுள் :
கவலைப் படாதே குழந்தாய் அங்கு உன்னைப் பார்த்துக் கொள்ள ஒரு தேவதையை ஏற்பாடு செய்திருக்கிறேன், அந்த தேவதை உனக்காக பாடும் உன் மீது அன்பு செழுத்தும் அந்த அன்பை நீ உணர்வாய்.

குழந்தை :
மனிதர்களிடம் என்னை தனியாக அனுப்புகிறாய் நான் மிகச் சிறியவன் என்னால் நடக்க முடியாது என்னால் பேச முடியாது, இன்னும் அவர்கள் மொழியைக் கூட புரிந்துக் கொள்ள முடியாது.

கடவுள் :
அது மிகவும் சுலபம் உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை எல்லாவற்றையும் கவனித்துக் கொள்ளும் உனக்கு பேசக் கற்றுக் கொடுக்கும், உனக்கு நடக்க கற்றுக் கொடுக்கும் நீ பயப்படத்ப் தேவையில்லை.

குழந்தை :
(அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் கடவுளையே பார்த்தது) ம்ம்ம்;;…. நான் உன்னோடு பேச வேண்டும் என்றால் என்ன செய்வேன்.

கடவுள் :
(மென்மையாக சிரித்து) நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை இதையும் உனக்கு சொல்லிக் கொடுக்கும்.

குழந்தை :
உலகில் கெட்ட மனிதர்கள் இருப்பார்கள் என்று இங்குள்ள தேவதைகள் பேசிக் கொள்கிறார்களே அவர்களிடமிருந்து என்னை யார் காப்பற்றுவார்.

கடவுள் :
வாஞ்சையுடன் குழந்தையை தடவி) உனக்கு நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதை தன்னுயிர் போனாலும் உன்னை பாதுகாக்கும்.

குழந்தை:
(மிகவும் சோகமான முகத்துடன்) இனி நான் உன்னை பார்க்கவோ பேசவோ முடியாதா.

கடவுள் :
(குழந்தையை அன்பாக அணைத்து) உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையிடம் நீ போனதுமே என் பெயர் உனக்கு சொல்லும் சதா என்னைப் பற்றி உன்னிடம் பேசும், என்னிடம் திருப்பி வரும் வழியையும் உனக்கு சொல்லித் தரும், நான் உன்னோடு தான் இருப்பேன் ஆனால் நீ என்னைப் பார்க்க மாட்டாய்.
உலகின் சத்தங்கள் அதிகமாக குழந்தைக்கு கேட்க தொடங்கின

குழந்தை :
(மிகவும் கடவுளைப் பிரியும் சோகத்துடன்) இறைவனே இன்னும் கொஞ்ச நேரத்தில் உன்னை விட்டு பிரியப் போகிறேன் நீ எனக்காக ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயரையாவது சொல்

கடவுள் :
குழந்தாய் தைரியமாக சென்று வா உனக்காக நான் ஏற்பாடு செய்திருக்கும் அந்த தேவதையின் பெயர் முக்கியமில்லை அவளை
நீ
அம்மா
என்று
அழைப்பாய்.

கடைசியாக உனக்கு ஒரு அறிவுரை நீ வளர்ந்து பெரியவனானதும் அந்த தேவதையின் மனம் புண்படும் படி எதுவும் பேசி விடாதே.

குழந்தை வீறிட்டு அழுதபடி உலகில் பிறந்தது….



  நன்றி 
-இணையம் 

Sunday, 29 October 2017

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!




உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!

260_கோடி_வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.

#ரொம்ப_ரொம்ப_சிறந்த_மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.

#தீபதரிசன_மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.

#கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.

#ஆறுவிரல்_ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.

#கண்ணொளி_கீரையும்_உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.

#மீனின்_பெயர்_செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.

#தங்கமலை_ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.

#கிரிவலம்_செய்யும்_முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.

#நந்திக்கு_பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.

#அண்ணாமலை_பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.

#செந்தூர_விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்...,


Courtesy-Net

Saturday, 28 October 2017

பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள் !!!







பணம் சார்ந்த பழமொழிகள் மற்றும் அனுபவ மொழிகள் !!!

தங்கத்தை விட்டெறிபவன், செம்பை பொறுக்கியெடுக்கும் படி ஆகும் நாள் விரைவில் வரும்.

ஒரு பொருளை அடகுவைப்பதை விட, விற்றுவிடு.

உடனே கொடுத்தவன், இரு மடங்கு கொடுத்தவனாகிறான்.

பணம் நல்ல பணியாள்;ஆனால் மோசமான எஜமான்.

பொருளுக்கு மனிதன் அடிமை;பொருள் யாருக்கும் அடிமையில்லை.

அழகு வல்லமையுடையதுதான்.ஆனால்,அதைவிட சர்வ வல்லைமை யுடையது பணம்தான்.

செல்வச் செருக்குடையவர்கள், தங்களுடைய உடமைகளை மட்டுமல்ல;உள்ளத்தையும் அடமானம் வைக்கத் தயங்கமாட்டார்கள்.

உனது வாயையும்,பணத்தையும் கவனமாக திற!
அப்போதுதான் இரண்டிற்கும் நல்ல மதிப்பிருக்கும்.

செல்வம் என்பது வருமானத்தைப் பொறுத்தது அல்ல.நிர்வாகத்திறமையைப் பொறுத்தது.

செலவுகள் யாவற்றிலும் காலத்தை வீணாக்குவதே அதிகச் செலவும்,ஊதாரித்தனமும் ஆகும்.

அனுபவிக்கிற வசதியில் சிறிது குறைந்தாலும், சிலர் தாங்கள் ஆண்டியாகிவிட்டதாகவே நினைக்கிறார்கள்.

ஊதாரி தன் வாரிசையே கொள்ளையடிக்கிறான்.கஞ்சன் தன்னையே கொள்ளையடிக்கிறான்.

தேவையானதை வாங்காதே.தவிர்க்கமுடியாததை வாங்கு.

இக்காலத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (ஆளுமைத்திறனுடன்) வளர்ப்பதில்லை.அவர்கள் வளர பணம் மட்டுமே கொடுத்து உதவுகிறார்கள்.பணத்தின் குணம்,அதன் மதிப்பு,அதை எப்படி பயன்படுத்துவது? என்பதை சொல்லித்தருவதே இல்லை.அதனால்தான்,பொறுப்புள்ள குடும்பங்கள் இன்று உருவாகுவது இல்லை.(இந்த பழமொழிக்கு மார்வாடிகள்,சேட்டுகள் விதிவிலக்கு)

லாபத்தினால் மட்டும் ஒருவன் பணக்காரனாவதில்லை.சேமிப்பதால் மட்டுமே !

ஒருமுறை சேமித்த பணம் , இருமுறை சம்பாதித்த பணத்திற்குச் சமம்.

முதுமைக்காலத்தில் அடுத்தவர் கட்டுப்பாட்டில் உள்ள பணம், நமது ஆயுள்காலச்சிறைக்குச் சமம்.

Friday, 27 October 2017

மஹிஷாஸுர மர்தினி ஸ்தோத்திரம்.... அயிகிரி நந்தினி நந்தித மேதினி....






மஹிஷாஸுர மர்தினி ஸ்தோத்திரம்

1.அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

3. அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

4. அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

5. அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

6. அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

12. அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

13. கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

14. கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே

15. கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

17. பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே

20. அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
                              ரம்ய கபர்தினி சைலஸுதே





ஷீரடி சாய் பாபாவின் உதியின் மஹிமை ...



ஷீரடி சாய் பாபாவின் உதியின் மஹிமை ...


 பாபாவின் உதியானது...


1, பிரச்சனைகளில் இருப்பவர்களுக்கு தீர்வை தருகிறது.
2, நோயிலிருந்து நிவாரணம் தருகிறது.
3, படிப்பு வராதவர்களுக்கு படிப்பைத் தருகிறது.
4, வேலையில்லாதவர்களுக்கு வேலை தருகிறது.
5, திருமணம் தடைப்பட்டால்,அதை நிவர்த்தி செய்து நல்ல வாழ்க்கை தருகிறது.
6, பிள்ளைப் பேறு இல்லாமல் போனால்,பிள்ளை வரம் தருகிறது.
7, காணாமல் போனவர்களை கண்டுப்பிடித்துத் தருகிறது.
8, இருந்து உபத்திரவம் தருகிறவர்களக விலக்கி வைக்கிறது.
9, பிரிந்தவர்களை சேர்க்கிறது, சேரக்கூடதவர்கள் சேர்ந்து இருந்தால் அவர்களைப் பிரிக்கிறது.
10, போகும் வழிகளில் ஆபத்து நேராமல் காக்கிறது.ஆபத்து வந்துவிட்டால் உதவி செய்கிறது.
11, வறுமை தரும் வெறுமையை மாற்றுகிறது,வளத்தைக் கொண்டுவந்து நம் காலடியில் கொட்டுகிறது.
12, மனதை மாற்றி நம்மை நல்லவராக மாற்றுகிறது. தீய நடத்தைகளைத் தேய்த்துவிடுகிறது.

 உதியால் நடக்காதது ஒன்றுமே இல்லை என்கிற அளவுக்கு எல்லாவற்றையும் செய்கிறது.

உடலையும்,மனதையும் ஒரு சேர மாற்றுவதில் இந்த உதிக்கு நிகர் எதுவுமே இல்லை என்பதால் தான் பாபாவின் உதிக்கு அவ்வளவு மகத்துவம்.இந்த மகத்துவத்தை  அனுபவித்த சாய் பக்தர்கள் ஏராளமானவர்கள்.அந்த அனுபவத்தை அவர்கள் பிறருக்கு உதியைத் தந்து பகிர்ந்து கொள்கிறார்கள். இப்படி உதியைத் தருபவர்களே நாளடைவில் அடியார்கள் என்று அழைக்கப்படும் அளவுக்கு உயர்கிறார்கள்.
ஓம் சாய் ராம்.


Monday, 16 October 2017

ஸ்ரீ கிருஷ்ணன் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ


(விடியோவை பார்க்க படத்தை சொடுக்கவும்)
ஸ்ரீ கிருஷ்ணன் ...ஒரு சிறிய ஸ்லைடு ஷோ 


சின்ன சின்ன  மணிச்சலங்கைகள் கொஞ்சும் 

பாதங்களை தூளியின் வெளியில் நீட்டியபடி 

ஒய்யாரமாய் உறங்கும் உலகலளந்தான் ...கண்ணன்...

அம்மாவின் அணைப்பில் உறங்கும் அழகன்...

அம்மா இடுப்பில் உட்கார்ந்து நிலாச்சோறு உண்ணும் பாலகிருஷ்ணன் ....

வெண்ணை உண்ணும் குறும்புக்கார செல்லக்குட்டி...

காளிங்கன் தலை மீது கால் வைத்து நடனம் இடும்  முகுந்தன்...

கோபியர் கொஞ்சும் ரமணன்...

உலகையே தன மாயக்குழல் இசையாய் 

மயக்கும்  வேணு கோபாலன் .....

கண்ணா....உன்னை எந்த வடிவத்தில் பார்த்தாலும் ஆனந்தமே ....

நினைத்தாலே பரமானந்தம்...



தீபாவளி வாழ்த்துக்கள்....



வலைப்பதிவர்கள் அனைவருக்கும் 
என் மனம் கனிந்த 
இனிய 

தீபாவளி வாழ்த்துக்கள் ...... 

இந்த தீபாவளி திருநாளில் 
உங்கள் இல்லத்தில் 
மகிழ்ச்சியும்,மனநிறைவும்,
ஆரோகியாமும்,ஐஸ்வரியமும் 
நிறையட்டும்....

Wednesday, 11 October 2017

மழைக்காலம் வருகிறது -- சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம்



மழைக்காலம் வருகிறது --  சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்போம்.  இதுக்கெல்லாம் அரசாங்கத்தை எதிர்பார்க்கக் கூடாது.

1. வீட்டிலே ஒரு நாலு நாளைக்காவது அரிசி பருப்பு ஸ்டாக் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும் ( இது கூட இருக்காதான்னு கேக்காதீங்க…. சென்னை பெருமழையின் போது  ஒரு நாள் மழைக்கே மாடி வீட்டில் இருந்தவர்கள் கூட எதுவுமே இல்லாததுபோல பேசியது மறக்கவில்லை)

2. கையிலே அவரவர்கள் சக்திக்கு ஏற்றவாறு கொஞ்சம் பணமாகக் கையில் வைத்துக் கொள்ளுங்கள். (இது எல்லா காலத்துக்கும் பொருந்தும்)

3. ஜுரம், தலைவலி, வயிற்றுப் போக்கு, வாந்தி, சளி, இருமல் போன்றவற்றிற்கு மாத்திரைகள் தைலம் முதலியவற்றை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்

4. வீட்டின் சமையலறையில் உருளைக்கிழங்கு, வெங்காயம், சேப்பங்கிழங்கு, வேப்பம்பூ போன்ற சீக்கிரம் கெட்டுப்போகாத பொருட்களை வைத்திருக்கவும்.

5. தண்ணீர் கேன் ஒன்று கூடுதலாக வைத்திருக்கவும். அப்படியே கேஸ் சிலிண்டரும்.

6. குடை, டார்ச், ரெயின் கோட் போன்றவற்றை தூசு தட்டி எடுத்து வைக்கவும்

7. விளக்குகளைத் துடைத்து வைக்கவும்.  கடையிலிருந்து இலுப்பை எண்ணை ஒரு லிட்டர் வாங்கி வைத்துக் கொள்ளலாம் – இது நின்று எரியும் வெகு நேரம்

8. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் தொலைபேசி எண்கள் மற்றும் முகவரியை (ஈமெயில் முகவரி இல்லீங்க) ஒரு டயரியில் அல்லது நோட்டில் எழுதி வைத்துக் கொள்ளவும்

9. எப்படியும் இன்றைக்கு எல்லோரும் குறைந்தது இரண்டு சிம்மாவது வைத்திருக்கிறோம். அப்படியே வீட்டுக்கு குறைந்த பட்சம் ஒரே ஒரு பி எஸ் என் எல் சிம் வைத்திருக்க வேண்டும் – அதுதான்  ஆபத்து காலத்திலும் வேலை செய்த ஒரே ஒரு நிறுவனம்

10. ஸ்மார்ட் ஃபோனை மட்டும் நம்பியிருக்காமல் அந்தக் காலத்து நோக்கியா போன்ற சாதாரண மொபைல் ஃபோன் ஒன்றாவது வைத்திருக்கவும் – இதுதான் குறைந்த பட்சம் 2-3 நாட்களாவது தாக்குப் பிடிக்கும்

11. நானோ சிம்முக்கான அடாப்டர் கைவசம் இருக்கட்டும் – பிற ஃபோன்களில் உபயோகப்படுத்த தேவைப்படும்

12. வண்டிகளில் பெட்ரோலை ரிசர்விலேயே வைத்திருக்காமல் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்காவது குறைந்த பட்சம் 3-4 லிட்டர் மோட்டார் சைக்கிளிலும் 10-15 லிட்டர் காரிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்

13. அந்தக் காலத்தில் கிரிக்கெட் கமெண்டரி கேட்போமே ஒரு சின்ன பாக்கெட் ரேடியோ – ஞாபகமிருக்கிறதா?  அதே போல ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு பேட்டரியும் கைவசம் வைத்திருக்கவும் – புயல் மழை பெருவெள்ளம் போன்ற காலங்களில் அரசின் அவசர செய்திகள் ரேடியோ மூலமாகவே சென்றடைகிறது.  எஃப் எம் மட்டுமல்லாமல் மீடியம் வேவும் இருக்கிற ரேடியோவாக இருப்பது நலம்

14. மழை புயல் காரணமாக வீட்டை விட்டு வெளியே போகாமல் இருக்க நேரிடும்.  ஸ்மார்ட் ஃபோனும் வேலை செய்யாது.  சிக்னலும் இருக்காது, இந்த மாதிரி நேரங்களில் சீட்டுக் கட்டு, தாயக்கட்டை, பல்லாங்குழி, ஆடு-புலி ஆட்டம் போன்ற நமது பழைய விளையாட்டுக்களை குடும்பத்தினரோடு விளையாடலாம்.  ஸ்மார்ட் ஃபோனுக்கு அப்பாலும் ஒரு உலகம் இருக்கின்றது என்பதை உணரலாம்.

15. பயன்படுத்தாத பழைய உடைகள், போர்வைகள், குடைகள், ரெயின் கோட் போன்றவற்றைத் தேடி எடுத்து தெருவோரங்களில் வசிப்பவர்கள், நடைபாதைவாசிகள், ஏழைகள் போன்றவர்களுக்குக் கொடுக்கலாம்.

Courtesy-Net

இறைவா.... இது என்ன நியாயம்????



பக்தனுக்கு தூரத்திலும்..... காசுள்ள மனிதனுக்கு அருகிலும் காட்சி அளிக்கிறாயே இறைவா......!!!  இது என்ன நியாயம்.....??? " என்று  கேட்டான் பக்தன் இறைவனிடம் ,,,

கலகலவென சிரித்தான் இறைவன்

"தாயிற் சிறந்தொரு கோயிலுமில்லை என்றேன் நீங்கள் வணங்கவில்லை;

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்றேன் நீங்கள் கேட்கவில்லை;

தூணிலும் இருக்கிறேன் துரும்பிலும் இருக்கிறேன் என்றேன் நீங்கள் நம்பவில்லை;

ஏழைக்கு உதவுங்கள் அது எனக்கே செய்வது என்றேன் நீங்கள் செய்யவில்லை;

எனக்கான இடத்தை, எனக்கான நேரத்தை, எனக்கான விழாக்களை, என்னை வணங்கும் முறையை எல்லாம் நீங்களே முடிவு செய்தீர்கள்.....!!!

இப்போது எனக்குக் கட்டணத்தையும் வைத்து என்னை காட்சிப்பொருளாக்கி விட்டு என்னையே கேட்பது என்ன நியாயம்.....???" என்றான் இறைவன்.....!!!

சரிதானே.......!!!

நம்முடைய வசதிக்கு ஏற்றார்போல் ஒவ்வொன்றும் மாற்றியமைத்துக் கொண்டு.......

குறையை மட்டும் கடவுளின் மேல் சுமத்தினால் கடவுள் எழுந்து வந்து பேசப்போவதில்லை என்ற துணிச்சல் தானே.....!!!

Sunday, 1 October 2017

ஓம் சாய்ராம்









ஓம் சாய்ராம் என்று நீங்கள் ஒரு வார்த்தை சொன்னால் உங்களுடை நோக்கம் வேகமாக முடியும். சந்தேகமே இல்லாமல் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். என் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தையைக் காப்பாற்றுவதற்க்காக என்னுடைய உயிரையும் கொடுப்பேன்.





--ஷிர்டி சாய்பாபா