அன்பு குழந்தையே... உன் வாழ்க்கையில் எத்தனை ஏற்றமும் சறுக்கமும் ,அவற்றில் நீ பெற்றது இழந்தது என ஒரு நாள் பட்டியலிட்டு பார்த்துள்ளாய். அவற்றில் பார் நீ பெற்றது தான் அதிகம் இருக்கும் நீ இழந்ததை காட்டிலும். ஆனால் நீயே நான் இழந்துவிட்டடேன் என்றே புலம்பிக் கொள்கிறாய். வாழ்க்கையில் உனக்கான எல்லாம் உன்னிடத்தில் வந்து சேர்ந்தன சேர்ந்தது சேரும். முதலில் வாழ்க்கையின்் மகிமையை புரிந்தக் கொள். பிறகு அதனை நன்றியுடன் ரட்சித்து பார் வாழ்க்கையில் எல்லா அம்சங்களும் தேடி வரும். ஒன்றை சொல்கிறேன் நன்றாக புரிந்துக் கொள் ஒரு பூவை பறிப்பவர்க்கு தான் அதனை எதற்கு பறிக்கிறோம் என்று தெரியும் கப்பலை ஓட்டி செல்வோர்க்கு தான் போகும் பாதையின் புதிரான வழிகள் தெளிவாக விளங்கும். அதை போலவே தான் உன்னை படைத்தவரான எனக்கு தான் தெரியும் உன் நற்பண்புகள் என்ன உனது மனம் எல்லாம். அதனால் புதிரான வழியில் கப்பலோட்டியாய் உன்னை கூட்டி அரவணைத்து செல்வேன். அப்படி என்னுடன் வரும் போது பொங்கி வரும் எல்லாம் நதியின் சங்கமத்தை பார்ப்பது கோடி புண்ணியம் அதனை உனக்கு பார்வைக்கு பாக்கியமளிப்பேன். உனது வாழ்க்கை என் பொறுப்பு. அதனால் நீ எதற்கும் பயப்படாதே கலங்காதே உன்னில் நிச்சயம் வெற்றி என்ற தீபத்தை நான் ஏற்றுவேன். உன் அன்பின் ஆழத்தையும் உன் பக்தியின் தூய்மையையும் உன் நம்பிக்கை பொறுமை எதையும் எதிர்நோக்கி தாங்கும் உணர்வு உன் பலத்தையும் உன் விசுவாசத்தையும் எவ்வளவு உன்னதமானது என்பதை உன் சாய்தேவா நான் அறிவேன். என் பரிபூரண அருளும் ஆசிர்வாதமும் அன்பும் பெற்ற என் பிள்ளை நீ. நீ ஜெயமாக நல்ல பெயருடன் நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கையை பெறுவாய்..." ஓம் ஸ்ரீ சாய் ராம்...
தெளிவைத் தரும் அருமையான போதனை
ReplyDeleteபதிவாக்கித் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்