துளசியின் மகிமை ...
எந்த இடத்தில துளசி செடி வளர்ந்திருக்கிறதோ அந்த இடத்தில மும்மூர்த்திகளும் சகல தேவதைகளும் வாசம் செய்கின்றனர். துளசி பெருமாளுக்கு மகாத்மியம் மிக்கது. சத்தியபாமா தன் ஆபரணங்களால் பெருமாளை எடைபோட நினைத்த போது , ருக்மிணி ஒரு துளசி தளத்தால் பெருமாளின் மகிமையை எடுத்துரைத்தாள். துளசியின் இருப்பிடம் மஹாலக்ஷ்மியின் வசிப்பிடம்.
அனுமன் சீதா பிராட்டியைத் தேடி அலைந்த போது ஒரு மாளிகையில் துளசி மாடத்தையும், நிறைய துளசி செடியையும் கண்டு, இங்கு யாரோ ஒரு விஷ்ணு பக்தர் ஆசிக்கிறார் என்று நினைத்து, அங்கு சென்று பார்த்தபோது , அது விபீஷணனின் மாளிகை என்பது தெரிய வந்தது.
சீதா தேவி துளசியை பூஜை செய்ததன் பலனாக ஸ்ரீ இராமபிரானைத் தன் கணவனாக அடையப் பெற்றாள் என்று துளசி இராமாயணம் கூறுகிறது. எவரது இல்லத்தில் துளசி செடி நிறைய உள்ளனவோ அந்த இடம் புனிதமான திருத்தலம் என்று போற்றலாம். துளசி தளத்தால் திருமாலுக்கு அர்ச்சனை செய்து ஆராதிப்பவர்களுக்கு மறுபிறவி என்பது கிடையாது என்று பத்ம புராணம் தெரிவிக்கின்றது.
No comments:
Post a Comment