badge

Followers

Sunday, 15 July 2018

தேனின் பயன்கள்...



தேன்....

கொழுப்பைக் குறைக்க, நீரிழிவை கட்டுக்குள் வைக்க, வாயுத் தொல்லைகளை குறைக்க, தொற்று நோய்களை குணப்படுத்த, சக்தி கொடுக்க, குமட்டலைத் தடுக்க, உடல் எடையைக் கூட்ட, தூக்கமின்மையை போக்க, ஆஸ்துமாவைக் குறைக்க, பொடுகை நீக்க தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்த என எல்லாவற்றுக்கும் தேனை நாம் பயன்படுத்தலாம்.

தேன் அதன் இனிப்பான சுவை தவிர நம் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான எண்ணற்ற சத்துகளும் இயற்கையாகவே கொண்டுள்ளது. தேனில் இவ்வளவு பலன்களா? வியக்க வைக்கும் உண்மை என்னவென்றால் இனிப்பான ருசியோடு, இருமலை குணமாக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் எடையையும் கூட்டும் சக்தி தேனுக்கு உண்டு.


தேன் என்பது என்ன?


மனிதன் 8000 வருடங்களுக்கு முன் தேனைக் கண்டு பிடித்ததோடு நில்லாமல் அதை உபயோகப்படுத்துவதையும் ஆரம்பித்து இன்று வரை அதை நிறுத்த வில்லை. தேன் கிரேக்கத்திலும், எகிப்திலும் அதிகமாக பயன்படுத்தப்பட்டது. பின்னர் ஆயுர்வேதத்திலும், சீன பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பொருளாக சேர்க்கப்பட்டது. இந்த அற்புதக் கலவை இயற்கையான குணப்படுத்தும் தன்மையை மேலும் அற்புதமாக்கியது. இதிலுள்ள ரகசியக் கூட்டுப் பொருள் வீட்டு வைத்தியத்தில் முக்கிய பங்காற்றுகிறது. தேனை அப்படியே சுவைக்கலாம் அல்லது மசாலாக்கள் மற்றும் தண்ணீரோடு கலந்து அதன் அனைத்துப் பயன்களையும் பெறலாம்.


ஊட்டச்சத்துக்கள்----


• சோடியம் 6 மிகி
• புரதம் 15 மிகி
• கார்போஹைட்ரேட் 17கி
• கொழுப்பு 0
• பேந்தோத்தேனிக் அமிலம் 05 மிகி
• ரிப்போபிலேவின் 06 மிகி
• வைட்டமின் சி 1 மிகி
• துத்தநாகம் 03 மிகி
• இரும்பு 05 மிகி
• பொட்டாசியம் 0 மிகி
• கால்சியம் 0 மிகி
• பாஸ்பரஸ் 0 மிகி
• தண்ணீர் 6 கிராம்
• பிரக்டோஸ் 1 கிராம்
• மால்டோஸ் 5 கிராம்
• குளுக்கோஸ் 5 கிராம்


*⚡கொழுப்பு சேராது⚡*


கொழுப்பு உடலில் சேர்வது பயமுறுத்தும் உடல் பிரச்சினை. அதை உடனே சரி செய்ய வேண்டும். பல ஆய்வுகள் தெரிவித்த முடிவின் படி தேன் சாப்பிட்டால் உடலில் சேரும் கொழுப்பின் அளவு கட்டுப்படுத்தப்படுகிறது


ஒரு ஆய்வு தொடர்ந்து முப்பது நாட்கள் தினமும் 70 கிராம் தேனை உட்கொண்டதில் உடலில் சேர்ந்த கொழுப்பு மூன்று சதவீதம் குறைந்ததை நிரூபிக்கிறது. நீங்களும் இதை முயற்சித்து தேனை தினசரி சேர்த்துக் கொண்டு எளிதில் கொழுப்பைக் குறைக்கலாமே!


நீரிழிவிற்கு தேன் சிகிச்சை


இனிப்பானது தேன், ஆனால் ரத்தத்தில் சர்க்கரை சேராது. இயற்கையின் மகத்தான கொடை மனிதனுக்கு தேனே. நீரிழிவு நோயாளிகளுக்கு தேன் பாதுகாப்பானது. உணவிற்கு முன் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவை குறைத்து, ரத்தத்தில் உள்ள C-பெப்டைட் விரதத்தின் போது சீராக இருக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ளும் தேநீர், ஓட்ஸ் போன்றவற்றில் இப்போது தேன் கலந்த வகைகளும் கிடைக்கின்றன. தேன் இயற்கையான உணவாக இருப்பதால் எந்த வித பக்க விளைவுகளும் இல்லை, எனினும் உங்கள் மருத்துவரை கலந்தாலோசித்து தேன் எடுத்துக்கொள்ளலாமே! இதுவே பாதுகாப்பானது.


வாய்வுத் தொல்லை-----


இன்று குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு என்று வித்தியாசமில்லாமல் வாய்வுத் தொல்லைகள் ஏற்படுகின்றன. எல்லாவிதமான வயிற்று உபாதைகளுக்கும் ஆண்டிமைக்ரோபயல் மற்றும் ஆக்ஸிஜனேற்றக் கூறுகள் உள்ள தேன் இயற்கையான வழியில் குணப்படுத்த உதவுகிறது. தேனால் சிறந்த பயன் பெற வெதுவெதுப்பான நீரில் தேனை கலந்து பயன்படுத்தலாம். மெத்தில்க்ளைகோஜெல் எனப்படும் நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலுள்ள - தேனை எடுத்துக்கொள்வது விரைவாக வயிற்று உபாதைகளை சரி செய்யும். ஜீரணப் பாதையில் உள்ள நுண்கிருமிகளையும், பாக்டீரியாக்களையும் அழிக்கும் ஆற்றல் தேனில் உள்ளது.


*⚡நோய்த்தொற்று⚡*

பாக்டீரியா பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு காரணமாக உள்ளது. நம் உடலை இத்தகைய நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க தினசரி உணவில் தேன் சேர்த்துக் கொள்வது நல்லது. தேனில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதால் இதை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, மேலும் உடல்நிலை பாதிப்படையாமல் பாக்டீரியாக்களிடமிருந்து உங்களை ஒரு கவசம் போல் பாதுகாக்கும்.


உடற்சக்தி----


தேனில் இனிப்புச் சுவையுடன் மெத்தில்கிளையோக்ஸ்சால் சேர்ந்துள்ளதால் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். இந்தச் சேர்க்கை சைட்டோகைன் வளர்ச்சியைத் தூண்டி, உங்களின் நோய் எதிர்புச் சக்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஒருங்கிணைக்கிறது. தேனில் ஆக்ஸிஜனேற்றப் பண்புடன், இத்தகைய நோயெதிர்ப்பு சக்திகளும் சேர்ந்து உங்கள் உடல் சுறுசுறுப்புடனும், நல்ல சக்தியுடனும் செயல் பட உதவுகிறது.


குமட்டல்.....


காலை எழுந்தவுடன் ஏற்படும் குமட்டல் உணவை சரிவர எடுத்துக் கொள்ள முடியாமல் செய்கிறது. இதனால் உங்கள் உடல்நிலை நாளுக்கு நாள் பலவீனமாகி விடுகிறது. நீங்கள் தேனை சிறிதளவு எடுத்துக் கொள்வதால் இந்த பாதிப்புகளை விரைவாக மாற்றுகிறது. இந்த சிகிச்சைக்கு எலுமிச்சையுடன் தேன் கலந்து எடுத்துக் கொள்ளலாம். தேன் குமட்டலை நிறுத்துவதுடன் வாந்தி வராமலும் தடுக்கிறது. எலுமிச்சையின் புளிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நீங்கள் அதற்கு பதிலாக ஆப்பிள் சீடர் வினிகரைப் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பயன்படுத்தலாம்.


எடை இழப்பு-----


இந்த தங்க நிற தேன் நாவில் நீர் ஊரச் செய்யும் வகையில் உங்கள் எடையைக் குறைக்கிறது. மிக விரைவில் எடை குறைய நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேனைப் பயன்படுத்தலாம். நீங்கள் எடையைக் குறைக்க முயலும் இந்தப் பயணத்தில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து உபயோகிக்கும் போது சர்க்கரை சேர்த்துக் கொள்ளும் உணர்வை கொடுத்து, எடையையும் குறைக்கிறது. சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று தேனில் உள்ள இயற்கையான சர்க்கரை, வெள்ளைச் சர்க்கரையை விட வேறுபட்ட வழியில் நம் உடலினுள் செயல்படுவதை தெரிவிக்கிறது.


*⚡தூக்கம்⚡*


தினமும் எட்டு மணி நேரத் தூக்கம் ஆரோக்கியமான வாழ்விற்கு மிகவும் தேவை. எனவேதான் உணவு வல்லுனர்களும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கு தூக்கமும் ஓய்வும் மிகத் தேவை எனப் பரிந்துரைக்கிறார்கள். போதுமான அளவில் தூங்காத போது, அது பலவிதமான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தி விடுகிறது. ஒரு மேசைக் கரண்டி அளவில் தேனை படுக்கைக்குச் செல்லும் முன் எடுத்துக் கொண்டால் தூக்கமின்மையைப் போக்கி விடும். இந்த வழியில் கல்லீரலில் உள்ள, ஆற்றலை உருவாக்க மிகவும் அவசியமான கிளைகோஜென் அளவை சீராக்கி, அவை காலியாகாமல் பாதுகாக்கிறது. இந்த செயல்முறை ஆழ்ந்த உறக்கத்தின் போதும் நடை பெற தேன் பெரிதும் உதவுகிறது.


ஆஸ்துமா---


அச்சுறுத்தும் ஆஸ்துமா பிரச்சனையைக் குறைக்க தேன் உதவும் என்பதில் ஆச்சரியமில்லை. தொல்லை தரும் இருமல், மூச்சுத்திணறல் போன்றவற்றை குணப்படுத்துவதோடு மூச்சுக்குழாயில் ஏற்படும் அடைப்பைப் போக்கி சுவாசத்தை எளிமையாக்குகிறது. மேலும் காற்று செல்லும் வழியில் உள்ள சளிச் சவ்வுகளை மென்மையாக்குகிறது. குறிப்பிட்ட அளவில் உட்கொள்ளும் தேன் ஆஸ்துமா அறிகுறியான மூச்சுக்குழாயில் சேரும் சளியை எதிர்த்துப் போராடுகிறது.


பொடுகு---


பொடுகுத் தொல்லை தலையில் நமைச்சலை ஏற்படுத்தி எரிச்சலூட்டும். இங்கே அதற்கான எளிய சிகிச்சையைப் பார்ப்போம். தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்தி இத்தகைய எல்லாப் பிரச்சினைகளையும் சரி செய்கிறது. தேனை உணவில் சேர்த்துக் கொள்வது போலவே, தலையில் தேய்ப்பதும் பாதுகாப்பானது. போடுகினால் பாதிப்படைந்த தலையை குணப்படுத்த தண்ணீரும், தேனும் சம அளவில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி பொடுகு உள்ள இடத்திலும் தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து முடியை அலச வேண்டும். தொடர்ந்து செய்யும் போது வித்தியாசத்தை சில வாரங்களில் காணலாம்.


தோலுக்கு தேன்---

பளபளப்பான, கரைகளற்ற முகப் பொலிவிற்கு தேன் ஒன்றே தீர்வாகும். தொடர்ந்து தேனை முகத்தில் தடவும் போது, முகப்பரு, வடுக்கள் போன்ற பலவித தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது. தேனில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்திக்கும், கிருமி அழிப்பு சக்திக்கும் நன்றி சொல்வோம். சுவை மிகுந்த தேன் வடுக்களை நீக்கி, கரைகளைப் போக்குவதோடு மட்டுமன்றி மீண்டும் மீண்டும் அவை வராமல் தடுக்கிறது. கவலை தரும் முகத்தில் தோன்றும் சுருக்கங்களையும் கோடுகளையும் போக்க இன்றே தேனைத் தடவி நிவாரணம் பெறுங்கள். நிறைய பணம் செலவு செய்து அழகு சாதனங்களை வாங்குவதற்கு முன் ஒரு தேன் குடுவையை வாங்குங்கள். இதுவே முகத்திற்கு பொலிவையும், அழகையும் தந்து மினுமினுக்க வைக்கும்.


✦ தேனின் பயன்கள் எண்ணிலடங்காதவை. தேனால் குணமாக்க முடியாத உடல் நலப் பிரச்சனையை காண்பது கடினம். இது ரசாயனங்கள் கலந்த பானங்களுக்கு மாற்றாக பாதுகாப்பான வழியில் அளவற்ற சக்தியையும் ஆரோக்கியமான வழியில் கிடைக்கச் செய்கிறது.

1 comment:

  1. பயனுள்ள வழிகாட்டல்

    ReplyDelete