எல்லாம் முடிந்து விட்டது.
கோர்ட்டில் விவாகரத்து வழங்கப்பட்டு விட்டது...
நரேனுடன் வாழ்ந்த 8 வருட வாழ்கை முடிவுக்கு வந்து விட்டது...
இன்னும் ஒரே வாரம் ...வீட்டை விட்டுப்போக வேண்டும்...
பிறகு,நரேனும் அவளும் இங்கே குடியேறுவார்கள்...புது தம்பதிகளாக ....
முதல் நாள்...இரவு முழுவதும் அழுதாள்...
காதலுடன் வாழ்ந்த வாழ்கை...
ஆசையாக வாங்கிய வீடு...போட்ட தோட்டம்........
நினைத்து நினைத்து விசும்பினாள்...
கோபம்...கழிவிரக்கம்...துக்கம் ...ஒரு சேர அவளை வாட்டி வதைத்தது...
இரண்டாவது நாள்...
சின்னதாய் ஒரு வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்தாள்...
தன் துணி மணிகளை பாக் செய்ய ஆரம்பித்தாள்...
யோசித்தாள்...
சற்று தெளிவானாள்...
மார்க்கெட்டுக்கு சென்றாள்.
அவளுக்கு பிடித்த மீன்,இறைச்சி,முட்டை, காலிபிளவர், கேக் வாங்கி வந்தாள்.
சமைத்தாள்.திருப்தியாக சாப்பிட்டாள்.
பிறகு...
மிச்சம்,மீதி இருந்த
அவித்த முட்டை,அரைவேக்காடு மீன்,இறைச்சி,பச்சை காலிபிளவர்
துண்டுகள் ஆகியவற்றை கர்ட்டன் ராட்ககுக்குள் மெதுவாகத் திணித்தாள்... .
கர்ட்டன் களை மாட்டினாள்.
false ceiling ஐ பிரித்தாள்.அதற்குள் ஒரு முட்டைகோஸை
தண்ணீரில் ஊறவைத்துப் போட்டாள்.
காலையில் அவன் வந்தான்.
வீட்டுசாவியை கொடுத்துவிட்டு துணிபெட்டியுடன் கிளம்பினாள்...
" நாம் நல்ல நண்பர்களாகவே இருப்போம் " என்றவனைப்பார்த்து
புன்னகைத்தாள்.
நான்கு நாட்கள் நரேனும் அவன் புதுக்காதலியும் அந்த வீட்டில் சந்தோஷமாக இருந்தனர்...
ஐந்தாம் நாள்...
"எங்கிருந்தோ எலி செத்த வாடை வீசுதே " மூக்கை சுளித்தனர்...
ஏழாம் நாள்.
"நாத்தம் குடலை பிடுங்குது..." அவளும் ,அவனும் வாந்தி எடுக்க...
"ஐயே நான் இந்த நாத்தம் புடிச்ச வீட்டில் வேலை செய்ய
மாட்டேன்"வேலைக்காரி நின்றுவிட்டாள்.
Pestcontrol ஆட்கள் வந்து வீடு பூராவும் பாத்தனர் ...
ஒண்ணுமே தெரியலே... கிளம்பிவிட்டனர்.
சாக்கடையை சுத்தம் செய்து பார்த்தான்...நோ ப்ராபளம்...
அக்கம் பக்கம் சண்டைக்கு வந்தனர்...
"உங்கள் வீட்டில் இருந்து ஏதோ செத்த வாடை வருது..."
"உடனே செரி செய்யாவிட்டால் nuisance கேஸ் போடுவோம்!"
இவன் தலையை பிய்த்து கொண்டான்...
அவளுடன் ஹோட்டல் ரூமில் தங்கினான்...
ராத்திரி இந்த "நறுமணம் " அழைக்க தெரு நாய்கள் வீட்டை
சுற்றி ஊளை இட்டன...
"வீட்டில் பேய் இருக்கு...அதனால் நாய்,நரியெல்லாம் ஊளையிடுது!"
அவன் தலையில் கை வைத்துக்கொண்டான்...
வீட்டை விற்க விளம்பரம் தந்தான்...ப்ரோகர்களிடம் சொன்னான்.
பாதி விலை கிடைத்தாலும் போதும் என்றான்...
வந்தவர்கள் மூக்கை பிடித்துக்கொண்டு ஓடினார்கள்...
நாத்தவீடு புகழ் அந்த ஊரெல்லாம் பரவியது...
ஊரார் தந்த புகார் பெயரில் நகர்மன்றம் நடவடிக்கை எடுத்தது...
"2 நாளில் நாத்தம் போகவிட்டால் வீட்டை நகர்மன்றம் கைப்பற்றும்"
நோட்டீஸ் வந்தது...
நரேன் கவலையுடன் ஆபீசில் உட்கார்திருந்தான்...
முதல் மனைவி வந்தாள்...
"என்ன கவலையாக இருக்கிறாய்?"
நட்பாக விசாரித்தாள்...
விஷயத்தை முழுவதும் வெளியில் சொல்ல அவன் தன்மானம் இடம் தரவில்லை...
"கொஞ்சம் ப்ராபளம்...வீட்டை உடனடியாக விற்க வேணும்..."
"அடடா ...எனக்கு பிடித்த வீடு...வாங்க ஆசை தான்..."
"எவள்ளவு எதிர்பார்க்கிறாய்?"
"உனக்கு என்றால் இந்த விலை...ஆனால் இன்றே வாங்க வேண்டும்"
அதன் உண்மை விலையில் 25 % சொன்னான்..."
"இதோ.."செக் கொடுத்தாள்... உடனடியாக பத்திரம் பதிவானது...
"நாளைக்கு வீடு இடிக்கபட்டலும் கவலை இல்லை...தப்பிச்சோம்டா சாமி"
என்று நாத்தவிவகாரத்தை சொல்லாமல் மறைத்தான்...
நகரமன்ற நோட்டீஸ் விஷயத்தை அமுக்கினான்...
"ஒரே கண்டிஷன் ...எல்லா சாமானும் வீட்டில் இருந்து வெளியே உடனடியாக
போகவேண்டும்...டேபிள்,chair ,கர்டன் ,கர்டன் ராட்,false ceiling உட்பட ..."
கண்டிஷன் போட்டாள்...
அவைகளும் போனது...அவற்றுடனே நாற்றமும் ...
வீடும் அவளது ஆனது...
(நெட்டில் படித்த இங்கிலீஷ் ஜோக்கை வைத்து எழுதியது....)