எங்கே...
விருந்து கதைகள் பற்றி ப்ளாக் செய்ய போகிறேன் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டேன் என்று கேட்கிறீர்களா...
சாரி...சாரி...
நடுவில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறேன்...
இந்த விருந்து இருக்கிறதே...இதை எந்நாளும் மறக்க முடியவில்லை...சாபிட்டவரும் மறக்க முடியவில்லை என்று வாய் நிறைய,சந்தோஷமாக நிறைந்த வயிறுடன் certificate கொடுத்ததை இன்று வரை மறக்க முடிய வில்லை...
அன்று மாலை ...
ஒரு வார ஊர் பயணத்துக்கு பிறகு வீடு வந்து சேர்ந்தேன்...
ஒரு மாதிரி வீட்டை கொஞ்சம் சுத்தப்படுத்தி சிம்பிள் ஆக ஏதாவது சமைப்போம் என்று யோசித்து வாசலில் வந்த வண்டிக்காரனிடம்
வாங்கிய காய்களை வைத்து ஒரு தக்காளி ,வெங்காயம் ,கத்திரிக்காய் சேர்த்த புளிகுழம்பு செய்து,சாதம் வடித்து ஒரு உருளைக்கிழங்கு பொடிமாஸ் செய்வோமே என்று கிழங்கை வேக வைத்து விட்டு கொஞ்சம் டிவி பார்க்க உட்கார்ந்தால்...
வந்தார் என் கணவர்...
"இன்னிக்கு ...நம்ம BALDWIN டின்னருக்கு வரார்...பாவம் நார்த் இந்திய ப்ராஜெக்ட் போய்விட்டு காய்ந்து போயி நிக்கிறார்...நம்ம வீட்டுக்கு சாப்பிட வானு கூப்பிட்ட உடனே சந்தோஷமா வரேன் ன்னு சொல்லிட்டார்..."
Baldwin இவர் அலுவலகத்துக்கு வந்திருந்த German நாட்டுக்காரர்...பொறியாளர்...அத்துவானத்தில் செய்யப்படும் installationgalai பார்வையிட வந்தவர்...
"எப்போ வரார்?"
போன் பதில் சொன்னது...
அவர் 40 நிமிடங்களில் வீட்டில் இருப்பார் என்று தகவல் வந்தது...
திடீர் விருந்தாளிகள் எனக்கு புதிதல்ல...
ஆனால் இப்படி ஒரு ஆள்...இவர் என்ன சாப்பிடுவார்?நாங்கள் சைவம் வேறு ...
வீடு வேறு களேபரமாக இருக்கிறது...
பேச நேரமில்லை...
சட் என்று யோசித்தேன்...
ஹாலை நீட் செய்ய ஆரம்பித்தேன் (எக்ஸ்ட்ரா சாமான்களை ஒரு பெட்ரூமில் போட்டு பூட்டுங்க... )
சட சட வென்று வெள்ளிரிக்காய் ,காரட்,தக்காளி ஸ்லைஸ் செய்து ஒரு தட்டில் அடுக்கி வைத்தேன்...
குழம்பை ஓரளவு வடிகட்டி அதில் தாரளமாக தேங்காய் பால் (டப்பா வில் வருவது) கலந்தேன்...லேசாக ஒரு கொதி வைத்தேன்,...
மகனை பக்கத்தில் இருக்கும் கடைக்கு விரட்டி பிரட்,Pringles chips.coke,இன்ஸ்டன்ட் இடியாப்பம் ,முறுக்கு,தட்டை, ஸ்வீட்டுக்கு காஜூகதிலி , condensed milk ,என்று வாங்கி வர சொன்னேன்...
Fridge இல் உள்ள காரட் பட்டாணி ஆகிய காய்களை சட் என்று microwave இல் வேக வைத்து சிறிது உப்பு மிளகுதூள் வெண்ணை சேர்த்து சாதத்தில் பிரட்டி வைத்தேன்...
ஓடிபோய் புடவை மாற்றிக்கொண்டேன்...
அதற்குள் விருந்தாளியும் வந்தார்...
தட்டில் முறுக்கு,தட்டை,ப்ரிங்க்லஸ் சிப்ஸ் ,கோக் கொடுத்து "starters" என்று சொல்லி உபசரித்தேன் ...
தட்டை ,முறுக்கை விட அவர் ப்ரிங்க்லஸ் சிப்ச்சையும் ,கோகையும் விரும்பினார்...
சமயலறையில் இன்ஸ்டன்ட் சூப்பை 2 நிமிடங்களில் சுட வைத்த படி ஹாலுக்கும் ,சமயலறைக்கும் ஓடிய படி அவர்களுடன் பேசிய படியே சூப்பை சுட சுட கொண்டு வந்தேன் ...vegetable salad உடன்...
கையோடு பிரட் ஓரங்களை வெட்டி விட்டு ,ஒரு தட்டில் அடுக்கினேன்...
இன்னொரு தட்டில் சீஸ் slice,சாலட் அடுக்கி வைத்தேன்...
தேங்காய் பால் சேர்த்த குழம்பு,உப்பு ,லேசான காரம் சேர்த்த உருளைக்கிழங்கு பொடிமாஸ் ,காய் கலந்த சாதம்,மிக லேசாக இட்லி மிளகாய் போடி தூவிய இடியாப்பம், சாதம்,தயிர் ஆகியவட்ட்ரை மேஜையில் அடுக்கி வைத்து எட்டிப்பார்த்தால்...
அவர் முறுக்கை சூப்பில் முக்கி சாபிட்டுகொண்டிருந்தார்...திரு ப்தியாக...
"இடியாப்பத்தை சாப்பிட்டு ...ஒ ...இந்தியன் நூடல்ஸ் ? நைஸ்..."என்று ருசித்தார்...
"Mashed potatoes...Indian style..." என்று ரொட்டியும் உருளை பொடிமாஸ் உம் ருசித்தார்...
சிறிது தேங்காய் பால் கலந்த குழம்பை காய் கறி கலந்த சாதத்தில் கலந்து சுவைத்தார்...
"this curry is good...the one I ate in the hotel is very hot..."என்று ருசித்தார்...
சிறிது condensed மில்க் இல் வறுத்த அவலை போட்டு பால் கலந்து செய்த இன்ஸ்டன்ட் அவல் பாயசத்தை ரசித்து குடித்தார்...
காஜூகதலியை சாப்பிட்டு விட்டு "This is just like Marzipaan" என்று குதூகலித்தார்...மார்ஜிபான் அவர் ஊரில் செய்யப்படும் முந்திரி ஸ்வீட்...
சந்தோஷமாக ,சுவைத்து சாப்பிட்டு விட்டு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார்...
"எப்படி சமாளிச்சே?"என்றார் கணவர்...
"தைரியமாக இதை இந்தியன் டின்னர் என்று எப்படி கதை விட்டாய்?"என்றான் மகன்...உப்பு ,சப்பு இல்லை...
"romba simple..."என்றேன்...
"வெளிநாட்டினர் பலருக்கு காரம்,என்னை,அதிக மசாலா,அதிக இனிப்பு...சுவைப்பதில்ல...அதிலு ம் காரமும் மசாலாவும் அவர்கள் நாவுக்கும் வயற்றிற்கும் ஒற்றுக்கொள்வதில்லை...அதனாலே சுற்றுலா போகும் இடங்களில் மிகவும் ரசித்து சாபிடுவதில்லை...
அவர் ஊர் உணவே அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்...அதை போல உள்ள உணவும் அவர்களுக்கு பிடிக்கும்...mashed potatoes,boiled rice with vegetables,cheese,bread,soup போன்ற உணவுகள் அவர்கள் ஊர் உணவு மாதிரி கிட்ட தாட்ட இருக்கும் .... அவர்களுக்கு சப்பாத்தி,தோசை,பிரியாணி ,சாம்பார் ,ரசம்,போன்ற இந்திய உணவுகள் அவர்கள் நா சுவைக்கு சட் என்று பழக்க படுவதில்லை...
நான் கொடுத்த விருந்தில் பரிமாறிய உணவுகள் அதனாலேயே அவருக்குப்பிடிதது..."என்றேன்.. .
ஒரு வாரம் கழித்து அவர் ஊருக்குப்போகும் முன் என் வீட்டுக்கு ஒரு பெரிய ரோஜா bouquet வந்தது ...பால்ட்வின் இடம் இருந்து...
அத்துடன் ஒரு சிறிய குறிப்பு...
"Thank you for the most satisfying dinner I had in India... Baldwin"
உஷா மேடம், சூப்பர், கலக்கிட்டீங்க! :)
ReplyDeleteகரெக்ட்டுதான், நம்ம உப்பு-காரம் அவங்களுக்கு தாங்காது. சமயோசிதமா யோசிச்சு வேகமா வேலைகளும் செய்து அசத்திட்டீங்க!
எங்க வீட்டுக்கு வந்த ஒரு அமெரிக்கருக்கு பஃப் பேஸ்ட்ரில ஒரு அபடைஸர், பூரி-மசாலா, லெமன் இடியப்பம்,தேங்காய் சட்னி, பீன்ஸ் கேஸரோல், சேமியா பாயசம் என்று செய்து கொடுத்தேன்.ரசித்து ருசித்துவிட்டுப் போனார். ஆனா உங்க அளவுக்கு இன்ஸ்டன்ட் சமையல் எல்லாம் இல்லை நான் செய்தது! முன்பே முடிவு செய்தது. :)
உங்க அனுபவம், எங்களுக்கெல்லாம் ஒரு பாடம்! பகிர்வுக்கு நன்றி!
திடீர் விருந்தாளியாக வருகை தந்த ஒரு வெளிநாட்டுக்காரரை, தாங்கள் மிகுந்த சிரத்தையுடன் கவனித்து அனுப்பியது மிகவும் பாராட்டுக்குரிய செயல் தான்.
ReplyDelete//அவர் முறுக்கை சூப்பில் முக்கி சாப்பிட்டுகொண்டிருந்தார்...
திருப்தியாக...//
அடடா, கரகரப்பாகக் கடித்துச் சாப்பிட வேண்டிய முறுக்கை இப்படி ஊற வைத்து விட்டாரே! நான் எழுதிய
”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?”
கதையில் வரும் பஞ்சாமி போல!
http://gopu1949.blogspot.in/2011/01/1.html
//ஓடிபோய் புடவை மாற்றிக்கொண்டேன்...//
ReplyDeleteஇந்த இடத்தில் மிகவும் யதார்த்தமாக இதை எழுதியுள்ளது தான் தங்கள் எழுத்தின் சிறப்பு.
//ஒரு வாரம் கழித்து அவர் ஊருக்குப்போகும் முன் என் வீட்டுக்கு ஒரு பெரிய ரோஜா bouquet வந்தது ...பால்ட்வின் இடம் இருந்து...//
படத்திலேயே அழகாக உள்ளது.
//அத்துடன் ஒரு சிறிய குறிப்பு...
"Thank you for the most satisfying dinner I had in India... Baldwin"
//
அருமை. விருந்துபசாரத்திற்குக் கிடைத்த மகத்தான பரிசு தான்.
வாழ்த்துகள். பாராட்டுக்கள்.
பகிர்வுக்கு நன்றிகள்.
vgk
நன்றி மகி ...
ReplyDeleteஉங்கள் விருந்தும் சூப்பர்...
இந்த விருந்தின் வெற்றி க்கு காரணம் சமயோசிதம் +ரெடி உணவுகள்...
தங்கள் அழகான பின்னூட்டத்துக்கு நன்றி VGK Sir:)
ReplyDeleteமிகவும் அருமை அக்கா . இப்போ எனக்கும் உங்கள் மூலமாக திடீர் விருந்தினரை எப்படி கவனிப்பது என்று தெரிந்து விட்டது.
ReplyDeleteகலக்கிட்டிங்க அக்கா .
Pinnootathukku nandri,Viji...
ReplyDelete"மூன்றாவது விருந்து எங்கே?", என்று நானே கேட்கவேண்டும் என்றிருந்தேன்.நல்ல விருந்து, படிக்கவும் தான். :))
ReplyDeleteThank you,Thanai thalaivi :)
ReplyDeleteஅருமையான விருந்துப் பறிமாறலுக்குப் பாராட்டுக்கள் !
ReplyDeleteKarutthukku nandri,Rajarajeshwari:)
ReplyDeleteஇன்ஸ்டன்ட் விருந்து பலே ...
ReplyDeleteThank you,Sravani
Deletev விருந்து சூப்பரா இருக்கு எங்களுக்கெல்லாம் எப்ப விருந்து?
ReplyDeleteLakshmi Madam,Eppo varenga...sollungo ...jamaaichudhuvom!
Deletegood idea thanks for sharing
ReplyDeleteThanks for your comments and visit...
DeleteIndha sandhosha thagavalai enakku thandhadharkku Mikka nandri...
ReplyDeletesila vaarangalaaga blog pakkam vara mudiyalai...adhanaal indru paarthavudan badhil alikkiren...