badge

Followers

Saturday 11 October 2014

தோணி,ஏணி,எலுமிச்சை பழம்,வாத்தியார்




தோணி,ஏணி,எலுமிச்சை பழம்,வாத்தியார்..,
------------------------------------------------------------------------------
மேற்கண்ட வார்த்தைகளை நான் சிறுவயதாக இருக்கும்போது என்னுடைய ஆசிரியர் கூறுவார்.அதற்கான அர்த்தம் அப்போது தெரியாவிட்டாலும்,இந்த வார்த்தைகள் மிகப்பெரிய தத்துவத்தை சொல்லக்கூடியவைகள்..
தோணி.
--------------
தோணி தண்ணீரில் தத்தளிப்பவர்களை கரையேற்றியவுடன் மற்றவர்களை கரையாற்ற சென்றுவிடுகிறது.நாமும் வாழ்வில் தத்தளிப்பவர்களை(தடுமாறுகிறவர்களை) பத்திரமாக அவர்களை கரையேற்றவேண்டும்(வழிகாட்டி உதவிட வேண்டும்). உதவி செய்து கரையேற்றியவுடன் அதையே நினைத்துகொண்டியிருக்காமல் அதேபோல் சிரமப்படுகிற மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.இது தோணி நமக்கு உணர்த்தும் பாடமாகும்.
ஏணி.
--------
எத்தனையோ பேர்களை உயரத்தில் ஏற்றிவிடுகிறது.இதன் மூலமாக உயரத்திற்குவந்தவர்கள் நன்றியுணர்ச்சியுடன் நினைக்காவிட்டாலும் அதை பற்றி கவலைபடாமல் மற்றவர்களை உயர தயாராக  இருக்கிறது சில நேரங்களில் நாமும் ஏணியாக இருப்பதில் தவறில்லை.
எலுமிச்சை.
----------------------
மற்ற கனிகள் ஒவ்வொரு பருவத்திலும் ஓவ்வொரு சுவையில் இருக்கக்கூடியது ஆனால் எலுமீச்சை மட்டும் எல்லா பருவத்தில் ஒரே புளிப்பு சுவை மட்டும்தான் அதேபோல் நாம் எந்த நிலையில் இருந்தாலும் நம்முடைய குணாசதியங்கள் மாறக்கூடாது என்பதை உணர்த்துகிறது.
வாத்தியார்.
----------------------
கல்வி சொல்லிகொடுக்கும் வாத்தியாராகட்டும் அல்லது கலைகள் சொல்லிகொடுப்பவராகட்டும் தனக்கு தன்னிடம் பயில வருபவர்களுக்கு தெரிந்தவற்றை சொல்லிகொடுத்து அதன் ந்ன்றியுனர்வை அவர்கள் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அதைபற்றி கவலைபடாமல் தன்னை தொடர்ந்து தேடிவருபவர்களுக்கு மனப்பூர்வமாக பிரதிபலன் பாராமல் சொல்லிகொடுக்கிறார்கள் அதேபோல் நாமும் பிரதிபலன் பாராமல் வாழவேண்டும்.

2 comments:

  1. நல்ல கருத்துக்கள். ‘ஏணி, தோணி, கோணி’ என மூன்று மட்டுமே பிறர் சொல்லி நான் கேள்விப்பட்டுள்ளேன்.

    ’நான் ஏறிவந்த ஏணி, தோணி, கோணி’ என்ற தலைப்பில் என் 200வது பதிவினையும் கொடுத்திருந்தேன். http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

    பகிர்வுக்கு நன்றிகள். - VGK

    ReplyDelete
  2. ஏணி, தோணி, உபாத்தியாயர், நார்த்தங்காய் (எலுமிச்சை அல்ல!)
    ஏணி மேலே ஏறிச்செல்ல ஏதுவாகும்; ஆனால் அது இருக்கும் இடத்திலேயே இருக்கும்.
    தோணி நீர்ப்பரப்பை கடந்து, அக்கரை சென்று முன்னேற உதவுகிறது; ஆனால் அது கரையிலேயே இருக்கும்.
    ஆசிரியர் மாணவர்களை ஊக்கிவித்து வாழ்க்கையில் வெற்றி பெற உதவினாலும், அவர்
    வாழ்க்கையில் பெரிய மாறுதல் ஏதும் இருப்பதில்லை. (வேதக்கூற்று: ஆசார்ய தேவோ பவ: ஆசிரியரைத் தெய்வமாகக் கொள்ளவும்.)
    நார்த்தங்காய் மற்ற உணவுப்பொருட்களை ஜீரணிக்கும்; ஆனால் அது சுலபத்தில் ஜீரணிப்பதில்லை (ஏப்பம் விட்டால் நார்த்தங்காய் நெடி!!).

    ReplyDelete