தங்கம் விலை ஆகாசத்துக்கு ஏறிப்போச்சு...
தங்க நகை வாங்கி வச்சால்
திருட்டு பயம் வேற....
என்று சொல்பவரா நீங்க ?
ஒண்ணா ...ரெண்டா...
ஒரு பானை நிறைய
நகைகள் வேண்டும்...
லாட்டிரி பரிசு...
ஜாக்பாட் அடிச்சால்...
புதையல் கிடைச்சால்
வாங்கிட வேண்டியது தான்...
என்பவரா நீங்க...
அதெல்லாம் கெடக்கட்டும்...
இப்போது ஒரு அழகான மண் பானைக்கு
நிறைய நகைகள் செஞ்சு போட்டு
அழகு பாருங்கள்...
உங்கள் வீட்டையும்
அழகாக்குங்கள் ....
இதற்குத் தேவையான பொருட்கள்...
*ஒரு அழகான மண் பானை(டெர கோட்டா பானை)
* கருப்பு நிற எனாமல் பெயிண்ட்
*குந்தன் கற்கள் (பச்சை ,சிகப்பு,வெள்ளை நிற கற்கள்...விருப்பமான அளவுகளில்)
*fevi bond -1 tube
கோல்ட் 3-d liner -சில tubes
செய்முறை
*பானையை உப்புத்தாள் போட்டு நன்றாக தேய்க்கவும்.
*பானை மீது கருப்பு பெயிண்ட் பூசி ஒரு நாள் காய விடவும்.
*விரும்பிய வடிவங்களில் கல் நகைளை டிசைன் செய்து பானை மீது சாக் கால் வரையவும்.
*கல் பதிக்க வேண்டிய இடங்களில் கற்களை fevibond பூசி ஒட்டவும்.
*நன்றாக காய்ந்த வுடன் கற்களுக்கு இடைப்பட்ட இடங்களிலும் ,தேவையான பிற இடங்களிலும்
3-d liner கொண்டு நிரப்பவும்.
*தப்பானால்...உடனடியாக காட்டன் பட் கொண்டு துடைத்துவிட்டு மீண்டும் செய்யவும்...
*ஒரு நாள் காய விடவும்...
*நகைகளால் ஜொலிக்கும் பானை
*விரும்பினால் வார்னிஷ் பூசலாம்.
உங்கள் வீட்டை அலங்கரிக்க தயார்!
இதற்க்கு தேவை...
மிக மிகப்பொறுமை ...
கற்பனைதிறன்...
அழகுணர்ச்சி...
செய்து பாருங்களேன்....
விலை பற்றி கவலை இல்லை
பானை நிறைய நகைகள் உங்கள் வீட்டிலும் ரெடி!
திருடர்கள் பயமில்லை...
பானை நிறைய நகைகள் - கிடைத்தது..
ReplyDeleteபாராட்டுக்கள்.!
நன்றி,ராஜேஸ்வரி
Delete//இதற்குத் தேவை...மிக மிகப்பொறுமை ... கற்பனைதிறன்... அழகுணர்ச்சி...//
ReplyDeleteஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !
இதெல்லாம் உள்ளதால் தான் நீங்க பதிவு கொடுக்கிறீர்கள் .........
இதெல்லாம் இல்லாததால் தான் நாங்க ரஸித்து மகிழ்கிறோம்.
சூப்பராகச் செய்துள்ளீர்கள். அருமையாக செய்முறை சொல்லியுள்ளீர்கள்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள், அன்பான இனிய நல்வாழ்த்துகள், பதிவுக்கும் பகிர்வுக்கும் நன்றியோ நன்றிகள்.
பிரியமுள்ள கோபு
தங்கள் மேன்மையான கருத்துகளுக்கும் பாராட்டுக்கும் நன்றி,V G K சார்
Deleteநன்றாக செய்துள்ளீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteகருத்துக்கு நன்றி,தனபாலன்
Delete