ஷீர்டி சாய் நாதருக்கு ஜெய் !!!!ஒரு சிறிய ஸ்லைடு ஷோ ....
(ஸ்லைடு ஷோவை பார்க்க படத்தை சொடுக்கவும் )
பாபா எப்போதும் தன் பக்தர்களுடனேயே இருக்கிறார்( நாயோ, பன்றியோ, பூனையோ, உங்களிடம் பிச்சை கேட்பவராகவோ, உங்கள் கற்பனைக்கும் எட்டாத ஒரு உருவமாகவோ அல்லது கண்ணுக்கு தெரியாமல் சூக்ஷம ரூபமாகவோ). இதை உணர்ந்த பக்தன் மிகவும் அதிர்ஷ்டசாலி என பாபாவே தெரிவித்துள்ளார்.
பாபா, உண்மையில் மும்மூர்த்தி (பிரம்மா,விஷ்ணு,சிவன்) அவதாரம். இந்த உண்மையை உணர்ந்த பக்தனின் பாக்கியத்தை என்னவென்று கூறுவது என்று பாபா குறிப்பிட்டுள்ளார். பிரேமை பொங்கும் பஜனையாலும், தொடர் நாமஜபத்தாலும், பாபாவின் இருப்பை பக்தர்களால் உணரமுடியும்.
நான் இந்த பெளதீக உடலுடன் ஷிரிடியில் மாத்திரம் இருக்கிறேன் என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். நான் எங்கும் வியாபித்துள்ளேன் என்று பாபா தெளிவாக கூறியுள்ளார். பாபா தன் பக்தர்களை எல்லா திசைகளிலும் சூழ்ந்து நின்று பாதுகாக்கிறார்.
பாடலுடன் சிலைட் சோ
ReplyDeleteமிக மிக அருமை
தரிசித்து மகிழ்ந்தோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
வழக்கம்போல் நல்லா இருக்குது. இன்று வியாழக்கிழமைக்கு ஏற்ற பதிவு.
ReplyDelete