badge

Followers

Sunday, 30 November 2014

பிரதமர் மோடியின் சம்பளம் இதர படிகள் எவ்வளவு?





பிரதமர் மோடியின் சம்பளம் இதர படிகள் எவ்வளவு....?
பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் பெரிய நாடுகள் பட்டியலைப் போட்டால், அதில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. இந்த எல்லா நாடுகளையும் எடுத்துக் கொண்டால், அதிக வேலைப்பளு இருப்பது இந்தியப் பிரதமருக்குத்தான். ஆனால், குறைந்த சம்பளம் வாங்குவதும் அவர்தான் என நிரூபிக்கின்றன புள்ளிவிவரங்கள்.
இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அடிப்படைச் சம்பளம். இது தவிர செலவினங்கள் படி (Sumptuary Allowance) மாதம் ரூ.3 ஆயிரமும் தினசரி படி ரூ.2 ஆயிரம் வீதம் மாதத்திற்கு ரூ.62 ஆயிரமும் தொகுதி மற்றும் அலுவலகப் படி மாதம் ரூ.45 ஆயிரம்_-ஆக மொத்தம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பிரதமரின் உபயோகத்திற்கு கறுப்பு நிற 2009ம் ஆண்டு மாடல் பி.எம்.டபிள்யூ 7 வரிசை கார் அதிகபட்ச பாதுகாப்போடு வழங்கப்படுகிறது. இந்த கார் குண்டு துளைக்காத வகையிலும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித வாயுவினாலும் இதைத் தாக்க முடியாது. கார் உடைந்தாலும் எரிபொருள் டேங்க் வெடிக்காது. மெர்சிடஸ் நிறுவன தயாரிப்பான ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு டாடா சபாரி மற்றும் 5 கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 கார்கள் பிரதமருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு போயிங் 747 – 400 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தனி விமானங்களின் எண் எப்போதும் கிமி1 (Air India One) ஆக இருக்கும்.
இந்த விமானத்தில் பிரதமருக்கு தனி படுக்கையறை ஒன்றும் ஓய்வுக்கூடம் ஒன்றும் ஆறு பேர் அமரக்கூடிய அலுவலகம், செயற்கைக் கோள் தொலைபேசிகளும் உண்டு. எட்டு பேர் கொண்ட விமானிகளின் பட்டியலிலிருந்து நான்கு விமானிகள் பிரதமரின் விமானத்தை ஓட்டுவர். ஆயுதங்கள் விமானத்தில் இருக்கும். டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கண்காணிக்கப்படும். பிரதமர் விமானத்தில் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே விமானம் பிரதமரின் பிரத்யேக பாதுகாப்புக்காக இருக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.
உள்நாட்டில் 5000 கி.மீ தொலைவு வரை மட்டும் விமானங்கள் இயக்கப்படும். இந்திய விமானப் படையின் ராஜ்தூத், ராஜ்ஹான்ஸ், ராஜ்கமல் ஆகியவை பிரதமரின் பயணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஆயுதத் தாக்குதல் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளும் செயற்கைக்கோள் தொலைபேசி வசதிகளும் பிரதமருக்கான படுக்கையறை மற்றும் அலுவலகமும் உள்ளன. பாதுகாப்பான செய்தித் தொடர்பு அறையும் உண்டு.
பிரதமர் ஓய்வு பெற்றதும் மாதம் ரூ. 20,000 ஓய்வு ஊதியம் உண்டு. ஓய்வூதியம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படும்.
டெல்லியில் வாழ்நாள் முழுவதும் தங்குவதற்கு வீட்டு வசதி செய்து தரப்படும். அந்த வீட்டுக்கு வாடகை, மின் கட்டணம், குடிநீர் வரி என எதுவும் விதிக்கப்பட மாட்டாது.
14 பணியாளர்கள் அடங்கிய செயலாளர் குழு அளிக்கப்படும். இது 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனி உதவியாளர் மற்றும் ஒரு பியூனாக குறைக்கப்படும்.
ஆண்டுக்கு ஏழு முறை எக்ஸிகியூடிவ் வகுப்பு விமானப் பயணம் செய்யலாம்.
ஐந்தாண்டுகளுக்கு முழுஅலுவலகச் செலவுகள் வழங்கப்படும். பிறகு இது ஆண்டுக்கு ரூ. 6000 ஆக குறைக்கப்படும்.
சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு ஓராண்டுக்கு அளிக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரைப் போலவே மாதம் ரூ. 1,60,000 சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படும்.
வீட்டு வசதி, பெட்ரோல், தொலைபேசி அழைப்புகள், மேஜை நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும். வட்டியில்லா கடனில் கார் வாங்கலாம்.
ரயில்களில் இலவசமாக ஏ.சி. முதல் வகுப்பில் பயணம் செய்யலாம். ஆண்டுக்கு 34 இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
.

Wednesday, 26 November 2014

மருந்து வாங்கும் பொது உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டிய எச்சரிக்கைகள்...!









மருந்து வாங்கும் பொது உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டிய எச்சரிக்கைகள்...!
1. மருத்துவரின் சீட்டு இல்லாமல் வாங்காதீர்கள்!
தமிழ் சினிமாவின் பிரபல வசனங்களில் ஒன்று, யார் சுட்டாலும் துப்பாக்கி சுடும. யார் வெட்டினாலும் கத்தி வெட்டும். மருந்து, டாக்டர் எழுதிக் கொடுத்தாலென்ன... கடைக்காரரே கொடுத்தால் என்ன? என்று நினைப்பவர் அநேகர். அது உண்மையல்ல. குடும்ப மருத்துவருக்குக் கொடுக்கும் பணம் உங்கள் உடல் நலத்திற்கான முதலீடு என்பதை உணருங்கள். நீங்கள் சரியான மருத்துவரிடம் 50, 100 ரூபாய் கொடுத்தால் அவர் குறைந்தது 5 மடங்கு பணம் மிச்சப்படுத்தும் வேலையைச் செய்வார்!
இப்போது பெரும்பாலான மருத்துவர்கள் தங்கள் மருந்துச் சீட்டை தெளிவாக, தனித்தனியாக கொட்டை எழுத்துக்களில் தான் எழுதித் தருகின்றனர். சிலர் கம்ப் யூட்டர் மூலம் பிரிண்ட் செய்யப்பட்ட மருந்துச் சீட்டை கொடுக்கிறார்கள்.
கையெழுத்துப் புரியவில்லை என்றால் கேட்டு விடுங்கள்! கோபிக்க மாட்டார்! சிலர் பழைய சீட்டை வைத்தே வருடக் கணக்கில் வாங்குவார்கள். அதுவும் தவறு! அவ்வப்போது மருத்துவரைப் பாருங்கள்!
2. செல்போனில் மருந்துச் சீட்டு நீண்ட காலத்திற்கு சாப்பிட வேண்டிய உயிர் காக்கும் மருந்துகளின் பெயர், டோஸ் அளவு போன்றவற்றை Cell Phone™ மெஸேஜ் ஆக எழுதி பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த Message வீட்டில் உள்ள அனைத்து செல்ஃபோனி லும் இருக்கட்டும். அவசரத்தில் சிகிச்சை யளிக்க மருத்துவர் கேட்கும்போது இது உயிர் காக்க உதவும்.
3. பில் இல்லா மருந்து மருந்தல்ல -எங்கே வாங்கினாலும், எவ்வளவு வாங்கினாலும் எவ்வளவு அவசரமானாலும், பில் இல்லாமல் மருந்துகளை வாங்காதீர்கள். பில்லில் உங்கள் பெயர், மருத்துவரின் பெயரும் இருக்கட்டும். மருத்துவரின் மருந்துச் சீட்டுடன், பில்லை வைத்து கவனமாக சரிபார்த்து, வாங்குங்கள். சந்தேகம் இருக்கும் பட்சம் மருத்துவரிடமோ அவரது உதவியாளரிடமோ Cross Check செய்து கொள்ளுங்கள்.
4. உதிரிகள் வேண்டவே வேண்டாம் மருந்தின் பெயர், மருந்துப் பொருட்களின் பெயர், தயாரித்த கம்பெனியின் பெயர், விற்கும் கம்பெனியின் பெயர் மருந்தின் வீரிய அளவு, மருந்து தயாரித்த தேதி காலாவதி தேதி ஆகியவற்றை முழு அட்டையாக மாத்திரை வாங்கும் போதுதான் கவனித்து வாங்க முடியும். எனவே கூடுமானவரை உதிரியாக மாத்திரை வாங்குவதை தவிர்த்து விடுங்கள். உதிரி மாத்திரைகள், காலாவதி, போலி, சாம்பிள் மாத்திரைகளாகக் கூட இருக்கக் கூடும். எனவே கூடுதல் கவனம் தேவை.
5. வீரியமில்லாமல் காரியமில்லை மாத்திரை பெயர் பார்த்து வாங்கும் போது அதன் அளவு 2 மிலி, 5 மிலி, 10 மிலி என வீரியத்தின் அளவு பார்த்து வாங்க வேண்டும். இது மிக முக்கியம்.
6. காலாவதி மாத்திரை காலனிடம் சேர்க்கும் எந்த மருந்தையும் நீங்களாகப் பார்த்து, காலாவதி தேதி சரிபாருங்கள். சில மாத் திரைகளில், 18 மாதங்கள், 24 மாதங்கள். தயாரித்த தேதியிலிருந்து என போட்டிருப் பார்கள். அதையும் சரிபாருங்கள்.
ஒரே வகையான மருந்து 6 மாதம் ஒரு கம்பெனியும் மற்றொரு கம்பெனி 3 வருடம் கழித்தும் காலாவதி தேதியை குறிப்பிட்டிருக்கும். அது மருந்து தயாரிக் கும் முறை, மருந்தின் உட்பொருட்கள் பொறுத்து மாறக்கூடும். நீங்களாக ஒரு முடிவுக்கு வர வேண்டாம்.
சில மருந்துகள் 1 நாள் தாண்டினால் கூட விஷமாக மாற வாய்ப்பு உண்டு. உதாரணம் டெட்ராசைக்ளின் வகை மருந்துகள். சில மருந்துகளில் காலாவதி தேதி நீண்ட நாட்கள் இருந்தாலும், குறிப்பாக குழந்தைகளுக்கு பவுடர் வடிவில் கொடுக்கப்படும் ‘ஆன்டி பயாடிக்Õ வகை மருந்துகள், காய்ச்சி ஆறவைத்த நீரில் கலந்து 5 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என சிறிய எழுத்தில் எழுதியிருப்பார்கள். அதுபோன்ற மருந்து களை 5 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது.
7. நீண்ட நாட்களுக்கு...
நீண்ட நாட்களுக்கு சாப்பிட வேண்டிய, தினசரி தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய மருந்துகள் குறைந்தது 1 வாரத்துக்கான அளவாவது வீட்டில் இருக்கட்டும். இரவு ஒரே மாத்திரை இருந்து அதுவும் கீழே தவறி விழுந்துவிட்டால், தேவையில்லாத, பயம், பதட்டம், கவலை, அலைச்சல் டென்ஷன் இதை தவிர்க்க கைவசம் சற்று மாத்திரைகள், பர்ஸ், அல்லது ஹேண்ட் பேகில் இருக்கட்டும்.
8. குறைந்த செலவில் நிறைய மருந்துகள் சில மொத்த மருந்து வியாபாரிகளின் சில்லறை விலைக் கடைகளிலோ, சேவை நிறுவனங்கள் நடத்தும் கடைகளிளோ, 10 முதல் 20% வரை எம்.ஆர்.பி. விலையில் இருந்து தள்ளுபடி விலையில் மருந்து கிடைக்கும். ஒரு மாதத்திற்குத் தேவை யான மருந்துகளை இதுபோன்ற கடை களில் வாங்கினாலே கணிசமான பணம் மிச்சமாகும். சில கடைகளில் போனில் ஆர்டர் கொடுத்தால் இலவச டோர் டெலிவரி வசதியும் உண்டு. பயன்படுத்திக் கொள்ளுங்கள். நேரத்தை மிச்சப்படுத்துங்கள்.
9. அதே மருந்து... வேறு கம்பெனி சில மருந்து கம்பெனியின் தயாரிப் புகள் இல்லாதபோது நீங்களாகவே வேறு கம்பெனி மருந்துகளை மருத்துவரின் அனுமதியில்லாமல் வாங்காதீர்கள். போலி கம்பெனியா, தடைசெய்யப்பட்ட மருந்துகள் கலந்துள்ளனவா என்பதை உங்கள் மருத்துவர் அறிவார். குறிப்பாக வலிப்பு/ சர்க்கரை வியாதி/ ரத்தக் கொதிப்பு மாத்திரை வாங்கும்போது, வீரியம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ, தேவையில்லாத பாதிப்புகள் ஏற்படக் கூடும்.
அதுபோலவே மருத்துவர் எழுதிக் கொடுத்த மருந்தை நீங்களாகவே குறைத்துக் கொள்ளவோ அதிகரித்துக் கொள்ளவோ வேண்டாம்.
என் நண்பர் ஒருவர் ‘விருந்துக்குப் போய்விட்டு வந்தால் சர்க்கரை மாத்திரை இரண்டாகப் போட்டுக் கொள்வேன்’ என்பார். தலைக்கு மேல் கத்தி தொங்கு வது போன்றது இது. எப்போதும் ஆபத்து நேரலாம்.
10. மருந்துகள் பாதுகாக்க குழந்தைகள் கைக்கு எட்டாமல் வைக்கவும். பல மாத்திரைகள் கலர் கலராக ஜெம்ஸ் மிட்டாய் போல இருப்பதால் குழந்தைகள் வாயில் போட்டுக் கொள்ளும் ஆபத்து அதிகம்.
சில மருந்து மாத்திரைகள் குறிப்பாக நெஞ்சுவலி மாத்திரைகள் போன்றவை கைக்கு எட்டும் வகையிலும், தேவைப்பட்டால் ஒவ்வொரு அறையிலும் இருப்பது நலம்.
சில மருந்துகளை குளிர் சாதனப் பெட்டியில் தான் (இன்சுலின் போன்றவை) வைக்க வேண்டும். ஆனால் ஓபஸ் பெட்டியில் (ப்ரீஜரில்) வைக்கக் கூடாது.
பொதுவாக எல்லா மருந்துகளையும் வெயில், சூடுபடாத, ஈரம் இல்லாத உலர்ந்த இடத்தில் வைப்பது அவசியம். அடுப்பு அருகே, ப்ரிட்ஜின் மேல், சூடான பாத்திரம், ஹீட்டர் அருகே அல்லது வெயில்படும் இடங்களில் மருந்துகளை வைத்தால் மருந்து கெட்டுப்போக வாய்ப்பு உண்டு. சிலவகை தடுப்பு மருந்துகளில், மருந்தின் வீரியம் கெட்டுப் போனதை அந்த லேபிள் கலர் மாறு வதைப் பொறுத்து கண்டுபிடிக்க இயலும்.
மருந்து வாங்கும் போது... மேல் கண்ட விஷயங்களை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். இது உயிர் பற்றிய விஷயம். எனவே அக்கறை அவசியம்.

தகவல் தோரணம்...






*இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.
* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.
* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல் பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.
* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.
* கம்ப்ïட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.
* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.
* 60 வயதாகும்போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.
* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.
* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது.
6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.
* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.
* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.
* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.
* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.
* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.
* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.
* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறார்.
* அமெரிக்கர்கள் தங்கள் வாழ்நாளில் 50 டன் உணவைச் சாப்பிடுகிறார்கள். 13 ஆயிரம் கேலன் திரவப் பொருளைச் சாப்பிடுகிறார்கள்.
* ஒரு கண்ணில் பார்வை போய்விட்டால் பாதி கண் பார்வை போய்விட்டது என்று அர்த்தம் அல்ல. பார்வைத் திறனில் ஐந்தில் ஒரு பங்கு பார்வைதான் குறைந்து போகிறது.
* அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் 6 டிரைவர்கள் இயேசு கிறிஸ்து என்ற பெயரில் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுள்ளனர்.
* கங்காருக்களால் பின்னோக்கி நடக்க முடியாது.
* ஜெடி என்றொரு மதம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. 70 ஆயிரம்பேர் இந்த மதத்தில் இருக்கிறார்கள்.
* எலித்தொல்லை அமெரிக்காவில் பெருந்தொல்லையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 24 ஆயிரம் பேர் அங்கே எலியால் கடிபடுகிறார்கள்.
* இளம் பருவ ஆண்-பெண்களின் முடியில் 25 சதவீத நீளம் எந்த வித முறிவும் இல்லாமல் இருக்கும்.
* பெரும்பாலான கனவுகள் 5 முதல் 20 நிமிடம் வரை நீடிக்கின்றன.
* பெண் ஒட்டகச்சிவிங்கி குட்டியை ஈன்றெடுக்கும்போது 6 அடி கீழ் நோக்கி விழுகின்றன. ஆனாலும் குட்டிகளுக்கு எந்தக் காயமும் ஏற்படுவதில்லை.
* சுறாமீன்கள் எதிரே வரும் மீன்களை அறிந்து வேட்டையாடுவது எப்படி என்பது தெரியுமா?... வெகு தூரத்தில் இருக்கும் மீனின் இதயத்துடிப்பைக் கூட சுறா மீன்களால் கேட்க முடியும். இதனால் சுறாமீனிடமிருந்து எந்த மீனாலும் தப்பிக்க முடியாமல் போகிறது.
*பெங்குவின் பறவைக்கு ஒரு அபூர்வ மகிமை உண்டு. உப்புத் தண்ணீரைக் கூட அது நன்னீராக மாற்றிவிடும்.
*10 நிமிடம் வீசும் கடும் புயல்காற்று உலகில் உள்ள அணு ஆயு தங்களின் பாதியளவிற்கு இணையான சக்தியை வெளிப்படுத் துகிறது.
*உலகில் 50 சதவீதம் பேருக்கு தொலைபேசி அழைப்பு வரு வதில்லை. அவர்கள் வேறு யாருடனும் தொலைபேசியில் பேசு வதும் கிடையாது.
*ஒவ்வொரு காரும் தனது ஆயுள்காலத்தில் விடும் புகை 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றுப்புறச் சூழல் பாதிப்பை உரு வாக்கும்.
அண்டார்டிகா கண்டத்தின் நிலம் மட்டும்தான் இந்த உலகில் எந்த நாடும் உரிமை கொண்டாட முடியாத இடமாகும்.
*மிக அதிகமாக மின்சக்தியை வெளிப் படுத்தும் ஈல் மீன்கள் பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப் படுகிறது. இந்த ஈல் மீன்கள் வெளிப்படுத்தும் மின்சக்தியின் அளவு 400-முதல் 650 வோல்ட்டுகள் ஆகும்.
*உலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 22 ஆயிரம் செக்குகள் உரியவர்களின் பெயர்களில் வரவு வைக்கப்படாமல் வேற்று நபர்களின் கணக்கில் சேர்க்கப்பட்டு விடுகின் றன.
*மற்ற எந்த மாதங்களையும் விட ஜுலை மாதத்தில்தான் உலகம் முழுவதும் விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன.
*வவ்வால்கள் குகைக்குள் இருந்து வெளியேறும்போது இடது பக்கமாகவே வெளியேறும்.

Monday, 24 November 2014

தானத்தில் சிறந்தது கண் தானம்...









கண் தானம் செய்யும் சாத்தியகூறுகள்
1. இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும்.
2. மின்விசிறியை இயக்கக்கூடாது.
3. இறந்த நபரின் தலையை ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி படுக்க வைக்க வேண்டும்.
4. அருகில் இருக்கும் கண் வங்கிக்கு உடனடியாக தொடர்பு கொண்டு விரைவாகவும், எளிதாகவும் வந்து சேரும் வகையில் தகவல் தெரிவிக்க வேண்டும்.
5. இறந்த நபரின் மகன்/மகள் ஒப்புதல் மற்றும் இரண்டு பேரின் சாட்சி இருந்தால் மட்டும் கண்தானம் செய்ய முடியும்.




யார் கண்தானம் செய்ய முடியாது?

நாய் கடியால் இறந்தவர்கள், டெட்டானஸ், எய்ட்ஸ், மஞ்சள் காமாலை, புற்றுநோய், மூளைக்கட்டி, உணவு விஷத்தினால் இறந்தவர்களிடம் இருந்து கண்களை தானமாக பெற முடியாது.

கண்தானம் குறித்து மேலும் தகவல்கள்:
1. ஒருவர் இறந்த 4 முதல் 6 மணி நேரத்துக்குள் கண்தானம் செய்ய வேண்டும்.
2. அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்கலாம்.
3. கண் வங்கிக்குழு இறந்த நபரின் விழிகளை வீட்டிற்கோ அல்லது மருத்துவமனைக்கோ வந்து பெற்றுக்கொள்ளும்.
4. கண்தானம் செய்ய 20-30 நிமிடங்கள் போதும். இதனால், இறுதிச்சடங்கு எதுவும் பாதிக்காது.
5. இறந்த நபரிடம் இருந்து சிறிதளவு ரத்தம் சேகரிக்கப்படும். இதனால், அவருக்கு நோய் தொற்று உள்ளதா என்பதை அறியமுடியும்.
6. கண் புரைக்கு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குளுக்கோமா மற்றும் மூக்குக் கண்ணாடி அணிந்தவர்கள் கண்தானம் செய்யலாம்.
7. ஒரு நபரின் கண்தானம் இருநபர்களுக்கு கண் ஒளியை தரும்.
- எனவே , கண் தானம் செய்வோம்...!!!

Saturday, 22 November 2014

இப்படியும் ஒரு தலைவர் வாழ்ந்தார்...





முதலமைச்சர் காமராசரும் பிரதமர் நேருவும் கூட்டமொன்றில் பங்கேற்க மதுரையைத் தாண்டி மகிழுந்தில் சென்று கொண்டிருக்கிறார்கள்.
உரையாடலின் நடுவே நினைவுகூர்ந்தவரான நேரு ‘மிஸ்டர் காமராஜ்... உங்க சொந்த ஊர் இந்தப் பக்கம்தானே...?’ என்று கேட்கிறார்.
‘ஆமாங்க. இங்ஙனதான். இன்னும் கொஞ்ச தூரத்தில் வரப்போகிறது’ என்று கூறுகிறார் காமராசர்.
‘அப்படியானால் உங்கள் வீட்டுக்குப்போய் உங்கள் தாயாரைப் பார்த்து நலம் விசாரித்துவிட்டுச் செல்லவேண்டும் அல்லவா...’ என்று நேரு கேட்க ‘அது எதுக்குன்னேன். இப்பவே கூட்டத்துக்கு நேரமாயிட்டு...’ என்று காமராசர் மறுக்கிறார்.
‘நோ நோ... இவ்வளவு தூரம் வந்துவிட்டு உங்கள் தாயாரைப் பார்க்காமல் சென்றால் நன்றாக இருக்காது. நீங்கள் பார்க்க நினைக்காவிட்டாலும் பரவாயில்லை. நான் அவர்களைப் பார்த்தேயாக வேண்டும். என்னை அவர்களிடம் கூட்டிச் செல்லுங்கள்’ என்று அன்புக் கட்டளையிடுகிறார் நேரு.
‘விடமாட்டேன்னுதீகளே...’ என்ற காமராசர்., வண்டி சற்று தூரம் சென்றதும் ஓட்டுநரிடம் ‘ஏப்பா. வண்டிய இப்படி ஓரங்கட்டு...’ என்று நிறுத்தச் சொல்கிறார்.
அது வீடுகளே இல்லாத பகுதி. சாலையின் இருமருங்கிலும் விவசாய நிலங்கள். அந்நிலங்களில் அப்பகுதிப் பெண்கள் களை பறித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தாயாரைப் பார்க்க வீட்டுக்கு அழைத்துச் செல்லச் சொன்னால் இப்படி அத்துவான வெயிலில் வண்டியை நிறுத்தியிருக்கிறாரே என்ற வினாவுடன் வண்டியை விட்டிறங்குகிறார் நேரு.
காமராசர் களைபறிக்கும் பெண்டிர் கூட்டத்திலிருந்து வயதான பெண்மணி ஒருவரை அழைக்கிறார் ‘ஆத்தா... நான்தான் உன் மகன் காமராசு வந்திருக்கேன். உன்னப் பார்க்க நேரு வந்திருக்காரு...’ என்று கூவியிருக்கிறார்.
புன்செய்க் காட்டுப் புழுதியுடன் உழைத்து வியர்த்த முகத்துடன் ‘ஏ காமராசு... வந்திட்டியாப்பா... நல்லாருக்கியா...’ என்று தன் மகனைக் கண்ட மகிழ்ச்சியில் உள்ளம் நெகிழ அருகில் வருகிறார் காமராசரின் தாயார்.
தாயும் மகனும் அளவளாவிக் கொள்கிறார்கள். நேருவைக் காட்டி அறிமுகப்படுத்துகிறார்.
நேருவால் தன் முன்னால் நடந்துகொண்டிருப்பதை நம்ப முடியவில்லை. சிலையாகி நிற்கிறார் !
அவர்தான் நம் அய்யா காமராசர்!

Thursday, 20 November 2014

கொய்யாப்பழத்தின் நன்மைகள்...






கொய்யாப்பழத்தின் நன்மைகள்...


கட்டாயம் கொய்யாபழம் சாப்பிடுங்க..
1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.
2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.
3. கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றிவிடுகிறது.
4. புகைப்பழக்கம் உடையவர்களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும். இவர்கள் கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
6. கொய்யாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
7. ஜீரணக் கோளாறுகளைக் குணப்படுத்து கிறது.
8. மதுப் பழக்கமுடையோர், தொடர்ச்சியாகக் கொய்யாப்பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்றுவிடும்.
9. அல்சரைக் கொய்யாப்பழம் குணப்படுத்திவிடும்.
10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வு தருகிறது

Thursday, 13 November 2014

கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!




அந்நியன் படம் பார்த்த  நம்மில் பலர் கருட புராணத்தை பற்றிக் கேள்விப்பட்டு .இருப்போம்...

இதோ...


கருட புராணம் கூறும் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள்!!!!!

ஒருவர் வாக்கால் செய்த பாவ புண்ணியங்களை வாக்காலும், உடலால் செய்தவற்றை உடலாலும், மனத்தால் செய்தவற்றை மனத்தாலும் அனுபவிக்க வேண்டியிருக்கும். வேத, சாஸ்திர, புராணம் கற்ற பண்டிதன் வாக்குத் திறமையால் வெற்றி அடைவான். புனித நீராடியவர்கள், பாகவதர்கள், பௌராணிகர்கள் போன்றோர், மற்ற புண்ணிய செயல்கள் புரிந்தோர் இணக்கமான சரீரத்தைத் தனக்கு இசைவாகப் பெற்று மகிழ்வர். உலக நன்மையைக் கருதி நற்காரியங்கள் செய்தவர்கள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பர். குடை, மரவடி, தண்டம், வஸ்திரம், மோதிரம், உதககும்பம், தாமரைச் சொம்பு, அரிசி ஆகியவற்றைச் சத்பிரா மணர்களுக்கு அளித்தல் வேண்டும். ஜீவன் செல்லும் போது குடைதானம் குளிர்ந்த நிழலில், அழைத்துச் செல்லப்படும். மரவடி தானம் குதிரைபோல் ஏறிச் செல்ல உதவும். நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.
1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2. கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3. சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4. குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5. தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6. பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7. தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8. கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9. துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10. நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11. பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12. கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13. தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14. அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15. ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16. பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17. டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18. இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19. தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20. பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21. மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22. தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷõரகர்த்தமம்.
23. நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ர÷க்ஷõணம்.
24. தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25. தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26. உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27. விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28. செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.
தாமிஸிர நரகம்: பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும். அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும். பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும். இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.
அநித்தாமிஸ்ர நரகம்: கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும். கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும். இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
ரௌரவ நரகம்: பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும். இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.
மகா ரௌரவ நரகம்: மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும். இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும். இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
கும்பிபாகம்: சுவையான உணவுக்காக, வாயில்லா உயிர்களை வதைத்தும் கொன்றும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது. எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும். இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.
அசிபத்திரம்: தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது. இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள். இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.
பன்றி முகம்: குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும். நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும். இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும். அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.
அந்தகூபம்: உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது. கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
அக்னிகுண்டம்: பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள். இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
வஜ்ரகண்டகம்: சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம். நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.
கிருமிபோஜனம்: தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும். பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.
சான்மலி: நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது. இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
வைதரணி: நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது. வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.
பூபோதம்: சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்.
பிராணி ரோதம்: பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது. இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.
விசஸனம்: பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
லாலா பக்ஷம்: மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது. இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
சாரமேயாதனம்: வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது. இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.
அவீசி: பொய்சாட்சி சொன்னால்  நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்.
மார்க்கண்டேய புராணம் கூறும் பாவத்திற்கேற்ற தண்டனைகள்:
1. பிறர் மனைவியை காமக்கண் கொண்டு நோக்கியவர்களின் கண்கள் இரும்புமுகம், நீண்ட அலகுள்ள கொடிய பறவைகளால் கொத்திப் பிடுங்கப்படும்.
2. குருவை அவமதித்தல், சாஸ்திரத்தைச் சாதுக்களைக் கேலி செய்தல், கோள் சொல்பவர்கள் நாக்கு இடுக்கிகளால் பிடுங்கப்படும்.
3. விருந்தோம்பாமல் தான் மட்டுமே உண்டு மகிழ்பவன் மலம், சிறுநீர், குருதி போன்றவற்றை உணவாகக் கொள்ளச் செய்யப்படுவர்.
4. அக்கினி, குரு, பசு ஆகியவற்றை காலால் தீண்டியவன் கால்கள் வெட்டப்படும்.
5. தெய்வநிந்தனை, குருவை இகழ்தல் செய்வதைக் கேட்டவர் காதில் இரும்பு ஆணி அடிக்கப்படும்.
6. தீர்த்தத்தில் மலம், சிறுநீர் கழிப்பவன் கல்லுக்குள் தேரையாய்ப் பிறப்பான்.
7. நீசனிடம் தானம் கேட்டோர், யாசகர், குருவிடம் பொய் கூறியோர் நாயாகப் பிறப்பர்.
8. தானியத்தை திருடியவன் எலியாகவும், சகோதரர் மனைவியைக் கெடுத்தவன் குயிலாகவும், குரு பத்தினியைக் கூடியவன் பன்றியாகவும், உணவு பால் திருடியவன் கொக்காகவும், கொழுந்து விட்டு எரியாத தீயில் ஓமம் செய்தவன் செரிமானம் இன்றி அவதிப்படுபவனாகவும் பிறப்பர். இப்படி வேறு, வேறு பாவங்களுக்கு ஏற்ப ஏராளமான தண்டனைகள் நரகத்தில் அளிக்கப்படும். எனவே மனிதன் பாவத்திற்கு ஏற்ற தண்டனை நரகில் நிச்சயம் என்று அறிந்து புண்ணியத்தையே சம்பாதிக்க வேண்டும்.

Wednesday, 12 November 2014

இதயத்தை பாதுகாக்க 10 கட்டளைகள்





நம்முடைய வாழ்வு சிறக்க நம் இதயத்தை காக்க நாம் கடைபிடிக்க 10 கட்டளைகள் உள்ளன அவை..

• 0 தொலைக்காட்சியின் முன் அமர்வது

• 1 மணிநேரம் உடற்பயிற்சி

• 2 லிட்டர் தண்ணீர் அருந்துவது

• 3 கப் சூடான கிரீன் டீ அருந்துவது

• 4 முறை நம் வேலைகளின் நடுநடுவே சிறிதளவு மூளைக்கும், இதயத்திற்கும் ஓய்வு தருவது

• 5 முறை சிறிய சிறிய அளவில் உணவு உண்பது

• 6 மணிக்கு காலையில் எழுவது

• 7 நிமிடங்களாவது வாய்விட்டு மனம் விட்டு சிரிப்பது

• 8 மணிநேரம் தூக்கம்

• 9 மணிக்கு வேலைகளை முடித்து கொண்டு உறங்க செல்வது

• 10 நிமிடமாவது மனதை ஒரு நிலைப்படுத்தி தியானிப்பது

- இந்த 10 கட்டளைகளையும் கடைபிடித்தால் இருதய நோய் வராது.

இருதய நோய் வராமலிருக்க முக்கியமான ஆறு "S" களை தவிர்க்க வேண்டும். அவை ...

1. SALT(உப்பு)
2. SUGAR (இனிப்பு)
3. SMOKE(புகைப்பிடித்தல்)
4. SPIRIT(மதுபானம்)
5. STRESS(மனஅழுத்தம்)
6. SEDENTARY LIFE (சோம்பித்திரிதல்)

இந்த ஆறு "S" களையும் விட்டுவிட்டால் உங்கள் இருதயம் "S" அதாவது SAFE ஆக பாதுகாப்பாக இருக்கும். உணவில் பொதுவாகவே வெள்ளை நிறத்திலுள்ளவற்றை தவிர்ப்பது நல்லது. அதாவது சர்க்கரை, வெண்ணை, பால், தயிர், பாலாடை கட்டி, வெள்ளை அரிசி போன்றவற்றை தவிர்த்தால் இருதயநோய் வராது.

மாறாக வண்ண நிறங்கள் கொண்ட பழங்கள்,காய்கறிகள், கைகுத்தல் அரிசி போன்றவற்றை உண்பதால் இருதயத்தை காப்பாற்றலாம். முறையான வாழ்க்கை, முறையான உணவு, பழக்கவழக்கம், முறையான அணுகுமுறை இவை இருந்தாலே இருதய நோய் வராது. நாமும் நம் இதயத்தை காப்போம்

Tuesday, 11 November 2014

தூய தமிழ்ச்சொல் அறிவோம்








வேற்றுமொழிச்சொல்-தமிழ்ச்சொல் 




பஜனை - கூட்டுவழிபாடு

வைத்தியர் - மருத்துவர்

ஜனம் - மக்கள்

கர்வம் - செருக்கு

வாபாஸ் - திரும்பபெறுதல்

தபால் - அஞ்சல்

கிஸ்தி - வரி

அலமாரி - நெடும்பேழை

முண்டாசு - தலைப்பாகை

சிம்மாசனம் - அரியணை

அகங்காரம் - ஆணவம்

பஜார் - கடைத்தெரு

சாதம் - சோறு

சபை - அவை

நாஷ்டா - சிற்றுண்டி

ஆசீர்வாதம் - வாழ்த்து

நமஸ்காரம் - வணக்கம்

லாபம் - ஈவு

இஷ்டம் - விருப்பம்

வக்கீல் - வழக்குரைஞர்

தராசு - துலாக்கோல்

ஹாஸ்டல் - விடுதி

சர்க்கார் - அரசு

கேப்பை - கேழ்வரகு

ஐதீகம் - சடங்கு

வேதம் - மறை

ஜானவாசம் - மாப்பிளை அழைப்பு

அபிஷேகம் - திருமுழுக்கு

யாத்திரை - புனிதப் பயணம்

ஆயுள் - வாழ்நாள்

தீர்த்தம் - புனித நீர்

ஜனநாயகம் - குடியாட்சி

நதி - ஆறு

சந்தா - கட்டணம்

பிரதிநிதி - சார்பாளர்

பத்திரம் - ஆவணம்

மத்தியாணம் - நண்பகல்

சிபாரிசு - பரிந்துரை

பரீட்சை - தேர்வு

பிரார்த்தனை - தொழுகை

சென்ட்ரல் கவர்ன்மெண்ட் - நடுவண் அரசு

உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம்




உணவுக்கும் மருந்துக்கும் பயன்படும் வெங்காயம் 


தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும்.

சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிடச் செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும்.

காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச் சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும்.

அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர மப்பு குறைந்து ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும்.

விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து ஜில்லிப்புடன் காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும்.

தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும்.

மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும்.

வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும் சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும்.

வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீர்யம் அதிகரிக்கும்
 

Sunday, 2 November 2014

கருப்பு வைரம்-மிளகு


‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது பழமொழி.மிளகிற்கு விசத்தை முறிக்கும் தன்மை உண்டு.
விஷக்கடி,ஒவ்வாமை நோய்க்கு- வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிடலாம்.அருகம்புல் வேருடன் பத்து மிளகு சேர்த்து நீர் விட்டுக் கொதிக்க வைத்துக் கசாயமாகக் குடிக்கலாம்.

இருமலுக்கு-பசும்பாலுடன் மிளகுத்தூள், மஞ்சள்பொடி, பனங்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிக் குடிக்கலாம்.
இரைப்பு நோய்க்கு- வெற்றிலையுடன் மிளகு சேர்த்து சாப்பிட இரைப்பு உடனேயே குறையும்.இதை அவசரகால மருந்தாகப் பயன்படுத்தலாம்.
தொண்டைப்புண்,தொண்டைக்கம்மல் நீங்க-மிளகுத்தூள் 51கிராம்,நீர் 700மிலி விட்டு அரை மணிநேரம் காய்ச்சி வடிகட்டி அதில் 30-60 மிலி வீதம் தினம் 2,3 முறை குடிக்கலாம்.


புழுவெட்டிற்கு- மிளகுத்தூள்,சிறிய வெங்காயம்,கல்லுப்பு இவைகளை சேர்த்தரைத்துப் பூசலாம்.
பற்பொடியில் சேரக்கூடிய சரக்குகளில் முக்கியமான ஒன்று.
நமது முன்னோர்கள் உணவில் காரம் சேர்ப்பதற்கு மிளகையே பயன்படுத்தினர்.
இது திரிகடுகில் ஒன்று.
இதன் மதிப்பு கருதியே இது ‘கருப்பு வைரம்’ என்றழைக்கப்படுகிறது

Saturday, 1 November 2014

கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் . . .






கொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் உணவுகள் . . .
பார்லி :
தானியங்களுள் ஒன்றான பார்லியில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், இதனை உண்டால், உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகரிப்பது தடைபடுவதோடு, கொலஸ்ட்ராலும் கரைந்து விடும்.


கத்திரிக்காய் :
கத்திரிக்காயில் கலோரிகள் மிகவும் குறைவு என்பதை விட, கலோரிகளே இல்லை என்று சொல்லலாம். ஆனால் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவது குறைக்கப்படும்.


மீன் :
மீன்களில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதால், மீன்களை அதிகம் உட்கொண்டால், கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் சேர்வதை தவிர்க்கலாம். ஆகவே மீன்களில் சால்மன் மற்றும் டூனா போன்றவற்றை சாப்பிட்டு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறையுங்கள்.


ஆப்பிள் :
ஆப்பிள்களில் வைட்டமின் `சி' மற்றும் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால், உடலில் தங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை எளிதில் குறைக்கலாம்.


நட்ஸ் :
நட்ஸில் ஒமேகா3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளதால், இது கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். ஆகவே ஸ்நாக்ஸ் நேரத்தில் பாதாம், வால்நட் போன்றவற்றை உட்கொண்டு, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

டீ :
அனைவருக்குமே டீயில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளது என்று தெரியும். இருப்பினும், அந்த டீயில் ப்ளாக் டீயை குடித்து வந்தால், உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்.


வெங்காயம் :
வெங்காயத்தில் உள்ள க்யூயர்சிடின் என்னும் ஃப்ளே வோனாய்டு, ரத்த குழாய்களில் தங்கியுள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே வெங்காயத்தை அதிகம் உட்கொண்டால், கொலஸ்ட்ரால் குறைவதோடு, இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.


ஓட்ஸ் :
ஓட்ஸை காலை உணவாக உட்கொண்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிப்பதை குறைக்கலாம். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலில் தங்கியிருக்கும் கொலஸ்ட்ராலின் அளவும் குறையும்.


முழு தானியங்கள் :
முழு தானியங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளன. எனவே தினை, கேழ்வரகு போன்றவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.


சிட்ரஸ் பழங்கள் :
சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, எலுமிச்சை, பெர்ரி போன்வற்றில் கரையக் கூடிய நார்ச்சத்தான பெக்டின் வளமையாக உள்ளது. இது ரத்த நாளங்களில் படிந்திருக்கும் கொழுப்புக்களை கரைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.


பசலைக் கீரை :
பசலைக் கீரையில் லுடீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் தமனிகளில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டவை. ஆகவே பசலைக் கீரை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து வந்தால், நிச்சயம் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்