badge

Followers

Sunday, 30 November 2014

பிரதமர் மோடியின் சம்பளம் இதர படிகள் எவ்வளவு?





பிரதமர் மோடியின் சம்பளம் இதர படிகள் எவ்வளவு....?
பரப்பளவிலும் மக்கள் தொகையிலும் உலகின் பெரிய நாடுகள் பட்டியலைப் போட்டால், அதில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. இந்த எல்லா நாடுகளையும் எடுத்துக் கொண்டால், அதிக வேலைப்பளு இருப்பது இந்தியப் பிரதமருக்குத்தான். ஆனால், குறைந்த சம்பளம் வாங்குவதும் அவர்தான் என நிரூபிக்கின்றன புள்ளிவிவரங்கள்.
இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.50 ஆயிரம் அடிப்படைச் சம்பளம். இது தவிர செலவினங்கள் படி (Sumptuary Allowance) மாதம் ரூ.3 ஆயிரமும் தினசரி படி ரூ.2 ஆயிரம் வீதம் மாதத்திற்கு ரூ.62 ஆயிரமும் தொகுதி மற்றும் அலுவலகப் படி மாதம் ரூ.45 ஆயிரம்_-ஆக மொத்தம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பிரதமரின் உபயோகத்திற்கு கறுப்பு நிற 2009ம் ஆண்டு மாடல் பி.எம்.டபிள்யூ 7 வரிசை கார் அதிகபட்ச பாதுகாப்போடு வழங்கப்படுகிறது. இந்த கார் குண்டு துளைக்காத வகையிலும் வெப்பத்தைத் தாங்கக்கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. எந்த வித வாயுவினாலும் இதைத் தாக்க முடியாது. கார் உடைந்தாலும் எரிபொருள் டேங்க் வெடிக்காது. மெர்சிடஸ் நிறுவன தயாரிப்பான ஆம்புலன்ஸ் மற்றும் ஒரு டாடா சபாரி மற்றும் 5 கறுப்பு நிற பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 கார்கள் பிரதமருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு போயிங் 747 – 400 ரக விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தனி விமானங்களின் எண் எப்போதும் கிமி1 (Air India One) ஆக இருக்கும்.
இந்த விமானத்தில் பிரதமருக்கு தனி படுக்கையறை ஒன்றும் ஓய்வுக்கூடம் ஒன்றும் ஆறு பேர் அமரக்கூடிய அலுவலகம், செயற்கைக் கோள் தொலைபேசிகளும் உண்டு. எட்டு பேர் கொண்ட விமானிகளின் பட்டியலிலிருந்து நான்கு விமானிகள் பிரதமரின் விமானத்தை ஓட்டுவர். ஆயுதங்கள் விமானத்தில் இருக்கும். டெல்லி பாலம் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் கண்காணிக்கப்படும். பிரதமர் விமானத்தில் புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே விமானம் பிரதமரின் பிரத்யேக பாதுகாப்புக்காக இருக்கும் சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டிற்கு வந்துவிடும்.
உள்நாட்டில் 5000 கி.மீ தொலைவு வரை மட்டும் விமானங்கள் இயக்கப்படும். இந்திய விமானப் படையின் ராஜ்தூத், ராஜ்ஹான்ஸ், ராஜ்கமல் ஆகியவை பிரதமரின் பயணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களில் ஆயுதத் தாக்குதல் எதிர்ப்பு பாதுகாப்பு அமைப்புகளும் செயற்கைக்கோள் தொலைபேசி வசதிகளும் பிரதமருக்கான படுக்கையறை மற்றும் அலுவலகமும் உள்ளன. பாதுகாப்பான செய்தித் தொடர்பு அறையும் உண்டு.
பிரதமர் ஓய்வு பெற்றதும் மாதம் ரூ. 20,000 ஓய்வு ஊதியம் உண்டு. ஓய்வூதியம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை திருத்தி அமைக்கப்படும்.
டெல்லியில் வாழ்நாள் முழுவதும் தங்குவதற்கு வீட்டு வசதி செய்து தரப்படும். அந்த வீட்டுக்கு வாடகை, மின் கட்டணம், குடிநீர் வரி என எதுவும் விதிக்கப்பட மாட்டாது.
14 பணியாளர்கள் அடங்கிய செயலாளர் குழு அளிக்கப்படும். இது 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தனி உதவியாளர் மற்றும் ஒரு பியூனாக குறைக்கப்படும்.
ஆண்டுக்கு ஏழு முறை எக்ஸிகியூடிவ் வகுப்பு விமானப் பயணம் செய்யலாம்.
ஐந்தாண்டுகளுக்கு முழுஅலுவலகச் செலவுகள் வழங்கப்படும். பிறகு இது ஆண்டுக்கு ரூ. 6000 ஆக குறைக்கப்படும்.
சிறப்பு பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு ஓராண்டுக்கு அளிக்கப்படும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பிரதமரைப் போலவே மாதம் ரூ. 1,60,000 சம்பளம் மற்றும் படிகள் வழங்கப்படும்.
வீட்டு வசதி, பெட்ரோல், தொலைபேசி அழைப்புகள், மேஜை நாற்காலிகள் இலவசமாக வழங்கப்படும். வட்டியில்லா கடனில் கார் வாங்கலாம்.
ரயில்களில் இலவசமாக ஏ.சி. முதல் வகுப்பில் பயணம் செய்யலாம். ஆண்டுக்கு 34 இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்படும்.
.

No comments:

Post a Comment