badge

Followers

Thursday, 13 October 2016

செக்கு எண்ணெயும்,மனிதனின் சிறப்பான தேக ஆரோக்யமும்!




நீங்கள் வாங்கும் ஆயில் உடம்புக்கு நன்மை விளைவிக்குமா! அல்லது தீமை விளைவிக்குமா!! ஏன் இவ்வளவு புது புது நோய்கள், என்றாவது எண்ணி பார்த்தது உண்டா ?...
உடலில் உள்ள செல்கள்,மூட்டுகளில் உள்ள அசைவு கொடுக்கும் செல்கள் மற்றும் ஹார்மோன் சுரப்பிகள் இயங்க கொழுப்பு மிகவும் முக்கியம். தாவர கொழுப்புகளில் நேரடி கொலஸ்ட்ரல் கிடையாது .தவிர பல வைட்டமின்கள் கொழுப்பில் கரையும் தன்மை கொண்டது.
பள்ளி கூடத்தில் படித்ததை நினைவு படுத்தி கொள்ளுங்கள் .
உடலை என்றும் இளமையுடனும் பளபளப்பாகவும் புத்துணர்வுடன் வைத்து கொள்ளும் தன்மை தாவர எண்ணெய்க்கு நிச்சயம் உண்டு .இயற்கை தாவர எண்ணெய்கள் உடலிலும் ரத்த குழாய்களிலும் கொழுப்பை சேர்க்காது .தொப்பை விழாது பாதுகாக்கும்.
இயற்கையில் கிடைக்கும் கடலை எண்ணெய் ,தேங்காய் எண்ணெய் ,விளக்கென்னை , நல்லெண்ணெய் ஆகிய வற்றில் பல வைட்டமின்கள் குறிப்பாக ஆண்டி ஆக்சிடண்ட்கள் வைட்டமின் ,தாது உப்புகளான இரும்புசத்து ,துத்தநாகம் ,மக்னீசிம், செம்பு ,கால்சியம் முதலானவை உள்ளன . இந்த தாது பொருட்கள் முலம் உற்பத்தியாகும் மெழுகு போன்ற பொருட்கள் நம் கை , கால் மூட்டுகளுக்கு சென்று எலும்பு தேய்மானத்தை தடுக்கும்.இவை தான் எண்ணெயின் உண்மையான குணங்கள் .
ஆனால் இன்றைக்கு எண்ணெய் உடலுக்கு நல்லது இல்லை , ரத்தகொதிப்பு ,மாரடைப்பு ,உடல் பருமன், கேன்சர்,என்று எல்லாவற்றிற்கும் எண்ணெய்யை குறை சொல்ல தொடங்கி விட்டோம்.
சமையல் எண்ணெய் சுத்திகரிக்க படுவதை பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும் பல உள்நாட்டு கம்பனிகள் பெரிய பெரிய இரும்பு இயந்திரங்கள் முலம் கடலை மற்றும் எள்ளை ஆட்டி எண்ணெய் பிழிவார்கள்.அப்போது கடுமையான வெப்பம் இரும்பு உலக்கை உருளை களுக்கு
இடையே ஏற்படும் .அந்த வெப்பத்தால் இயற்கையாகவே எண்ணெய்களில் மறைந்திருக்கும் சில அதிசியமான மருத்துவ குணம் குறைந்து போய்விடும் .
இன்று நாம் சமையலுக்கு வாங்கும் ரீபைண்ட் ஆயில் இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழ கொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே இன்றைக்கு ரீஃபைண்ட் மற்றும் டபுள் ரீஃபைண்ட் சுத்திகரிப்பு என்று சொல்கிறார்கள். இதற்குச் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளீச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள். பிறகு தெளிவான எந்த மருத்துவ குணமும் இல்லாத வேதிய அமில எண்ணெய் நமக்கு கிடைக்கும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு நீக்கிவிடும். இந்த ரீஃபைண்ட் கடலை எண்ணெய், ரீஃபைண்ட் நல்ல எண்ணெய் என்பது அடர்த்தி இல்லாத தண்ணீர் போன்ற ஒரு திரவம். இறுதியாக அந்தந்தக் கம்பெனிகள் தங்களுக்கு என்று நிரந்தரமாக வைத்திருக்கும் நிறம், மணம், குணத்தைச் சேர்க்கிறார்கள்...
இப்போதெல்லாம் பதினைந்து வயதிலேயே முடி நரைத்து விடுகிறது.முடியின் இயற்கை நிறம் மாறி விடுகிறது. மூட்டுக்களில் தேய்மானம் மற்றும் மற்றும் மூட்டு வலி ஏற்படுகிறது.அது மட்டுமில்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்யில் தங்கியுள்ள கந்தக அமிலம் ,மனித உடலில் உள்ள எலும்பை பலவீனம் அடைய செய்து விடும் .
பரம்பரிய எண்ணெய் நல்லதுதான்!
நம் முன்னோர்கள் செக்கில் ஆட்டி எடுத்த தேங்காய் எண்ணெயையும், கடலை எண்ணெயையும், நல்லெண்ணையையும் அப்படியே (எந்தப் பிரத்யேக வடிகட்டுதலும் இன்றி வெய்யிலில் காய வைத்து) உபயோகித்தனர். இந்த எண்ணெய்கள் அடர்த்தியாகவும், நிறமாகவும், மணமாகவும், கொழ கொழப்பாகவும் இருக்கும் இதற்கு காரணம் அந்த எண்ணெய்களில் உள்ள ஊட்டசத்துக்கள்,உயிர் சத்துக்கள் தான் ,உடல் ஆரோக்யத்திற்கு தேவையான புரோடீன்கள் ,வைட்டமின்கள் ,தாது பொருட்கள் ,நார்சத்துக்கள்,
குளோபில்.கால்சியம் ,மாக்னீசியம் ,காப்பர் ,இரும்பு ,பாஸ்பரஸ் வைட்டமின் போன்றவையுடன் அறிவியல் அறிவுக்கு எட்டாத பல தாதுக்களும் இவற்றில் இயற்கையாகவே அமைந்து இருக்கின்றன .உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பையும் கொடுக்கும் எண்ணெய்கள் இவை .
செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தினால் அது உடலில் தேவையற்ற கொலஸ்ட்ட்ரலை குறைக்கும் .செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் தாய்பாலுக்கு இணையான பல நோய் எதிர்ப்பு தன்மை கொண்ட அமிலங்கள் உள்ளது .
செக்கில் ஆட்டிய விளக்கெண்ணை எனப்படும் ஆமணக்கு எண்ணெயில் ரிசிநோலியிக் அசிட் அதிகம் உள்ளது .இந்த அசிட் ஒரு சிறந்த ஆண்டி பாக்டீரியல் மற்றும் அழற்சியை சரி செய்ய கூடியது தவிர குடல் சுத்திகரிப்புக்கும் ஏற்ற தன்மை கொண்டது.ந்தால் தினமும் விளக்கெண்ணை தடவி வர குதிகால்களில் இருக்கும் வறட்சி நீங்கி வெடிப்புகளும் விரைவில் போய் விடும்.
செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய் நோய் மற்றும் முதுமையை தடுக்கும் வைட்டமின் ஈ யும் கொலஸ்ட்ட்ரலை குறைக்கும்.
"லெக்சீதீன்" என்ற பொருளும் உள்ளது எள்ளிலிருந்து எடுக்கப்படும் எண்ணைக்கு நிகரே இல்லை எனலாம்.அதனாலையே இதற்கு"குயின் ஆப் ஆயில் " என்றும் அழைகிறார்கள்.
மூல தொந்தரவு , மாத விலக்கு தொந்தரவு மூச்சுகுழல் பிரச்சனைகள் ,சரும பிரச்சனைகள் முதலிய பிரச்சனை உள்ளவர்கள் நல்லெண்ணை தொடர்ந்து பயன்படுத்த இந்த தொந்தரவுகள் நீங்கும் .செசாமின் என்ற பொருள் நல்லெண்ணையில் இருப்பதால் வாதம் ,இதய நோய் வராமல் முன் கூட்டியே தடுத்து உடல் உறுதியை நன்கு கட்டுபாட்டில் வைத்து கொள்கிறது .
வாழ்க்கையில் வெறுப்பு கவலை மனச்சோர்வு முதலியவற்றை தடுக்கும் பைரோரெசினால் என்ற அமில பொருளும் நல்லெண்ணையில் இருக்கிறது
செக்கு என்பது எண்ணெய் வித்துக்க்களில் (கடலை,தேங்காய், எள்ளு,ஆமணக்கு)இருந்து எண்ணெய் எடுக்கும் ஒரு கருவி .செக்கானது மரத்தலோ ,கல்லாலோ செய்யபட்டிருக்கும் .
ஆரம்ப காலத்தில் செக்கில் எண்ணெய் ஆட்ட மாடுகளை பயன்படுத்தி வந்தனர்.தற்பொழுது மின்சாரம் அல்லது எரிபொருள் முலம் இயக்கபடுகிறது .பழைய கிரைண்டர் போன்ற அமைப்பின் நடுவில் வித்துகளை நசுக்கும் படியாக உலக்கை கொண்டு அதனுடன் நசுக்கப்பட்ட வித்துகளில் இருந்து வரும் எண்ணெய் வெளியேறும் படியாக ஒரு குழாய் போன்ற உபகரணம் பொருத்தப்பட்டு இருக்கும்.
செக்கில் நல்லெண்ணெய் ஆட்டுவதற்கும் சுத்தம் செய்த எள் கருப்பட்டி அல்லது நாட்டு சக்கரை (ஆட்டும் பொழுது ஏற்படும் வெப்பத்தை தணிக்க ) சேர்த்து ஆட்டுவது வழக்கம்.
சிறிது சிறுதாக ஒரே வேகத்தில் மரத்திலான அல்லது கல்லால் ஆன செக்குகளை சுழல வைப்பதின் முலம் எள்ளில் இருந்து எண்ணெய் சிறிது சிறிதாக வெளியேறும் .
செக்கில் கருபட்டியுடன் சேர்த்து எள்ளை ஆற்றும் பொழுது அவ்வளவாக வெப்பம் ஏறாது .இப்படி மர,கல் செக்கில் ஆட்டிப் பிழிந்து எடுக்கப்படும் நல்லெண்ணைக்கு அபாரமான மணமும் குணமும் இருப்பது இயற்கை .இவ்வாறு ஆட்டப்படும் எண்ணையின் மனம், மருத்துவ குணம் சுவை இதெல்லாம் அலாதி தான் .
மர,கல் செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு கொஞ்சம் நிறம் குறைவாக இருக்கும்.
ஆனால் நல்ல ருசியுடன் ஒரு வருட காலத்திற்கு கெட்டுப் போகாமலும் இருக்கும்.
ஒரு முறை மர,கல் செக்கு எண்ணெய் சாப்பிட்டால் ...
அதன் ருசி கால கால காலத்திற்கும் மறக்காது .இந்த எண்ணெய்யில் சமைக்கும் உணவுகள் ஆரோக்கியத்தை கொடுக்கும்

2 comments:

  1. செக்கில் ஆட்டப்படும் எண்ணெய்கள் + தன்மைகள் பற்றிய மிகவும் பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. hi ji very useful unknown informations thanks

    ReplyDelete