badge

Followers

Friday 14 October 2016

தினமும் காலையில் வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...





தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் 
வெந்நீர் /சுடுநீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...

மனிதன் உயிர் வாழ மிகவும் இன்றியமையாதது தண்ணீர். மனித உடல் சுமார் 60% நீரால் நிறைந்தது. தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கலாம் என்று பலர் சொல்லிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். மேலும் மருத்துவர்களும் தண்ணீர் அதிகம் குடிக்க பரிந்துரைப்பார்கள்.

அதிலும் வெந்நீர் குடிப்பது நல்லது என்று சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். அதிலும் காலையில் எழுந்ததும் சுடுநீர் குடித்து வந்தால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அது என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். குறிப்பாக சுடுநீரை காலையில் வெறும் வயிற்றில் மட்டுமின்றி, நாள் முழுவதும் குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

எடை குறைவு :-
வெந்நீரை தினமும் குடித்து வந்தால் உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரையும். எனவே நீங்கள் குண்டாக இருந்தால் உங்கள் எடையைக் குறைக்க நினைத்தால் சுடுநீரை தினமும் தவறாமல் குடித்து வாருங்கள்.

சளி, இருமல் நீங்கும் :-
வெந்நீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலைத் தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.

மாதவிடாய் கால வயிற்றுப்பிடிப்பு :-
வெந்நீரை பெண்கள் தினமும் குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்பிடிப்பு போன்றவை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

உடல் சுத்தமாகும் :-
உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள நினைத்தால், சுடுநீர் குடியுங்கள். இதனால் உடலின் வெப்பநிலை அதிகரித்து, வியர்வையின் மூலம் உடலில் இருந்து டாக்ஸின்கள் வெளியேற்றப்படும். இன்னும்

முதுமையைத் தடுக்கும் :-
வெந்நீரை ஒருவர் தினமும் குடித்து வந்தால், பாதிக்கப்பட்ட செல்கள் புதுப்பிக்கப்பட்டு, சருமத்தின் நெகிழ்வுத்தன்மை அதிகரித்து, விரைவில் முதுமைத் தோற்றம் ஏற்படுவது தடுக்கப்படும்.

செரிமான பிரச்சனை :-
செரிமான பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமானால், குளிர்ந்த நீரை விட சுடுநீர் குடியுங்கள். ஆய்வுகளிலும் உணவை உண்ணும் போது குளிர்ந்த நீர் குடிப்பதால், உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே குடலில் படிந்து, அதனால் குடல் புற்றுநோய் வரும் வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. எனவே உண்ணும் போது மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும் சுடுநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

மலச்சிக்கல் :-
செரிமான பிரச்சனை வந்தால் குடலியக்கத்தின் செயல்பாடு பாதிக்கப்படும். குடலியக்கம் சீராக இல்லாவிட்டால் மலச்சிக்கலால் அவஸ்தைப்படக்கூடும். உங்களுக்கு மலச்சிக்கல் ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில், தினமும் சுடுநீர் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும் :-
சுடுநீர் உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உடலில் இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே எந்த ஒரு நோயும் அண்டாமல் இருக்கும். எனவே உங்களுக்கு எந்த ஒரு நோயுடன் தாக்காமல் இருக்க சுடுநீரை தினமும் குடியுங்கள்.

4 comments:

  1. மிகவும் பயனுள்ள பதிவு.

    //சளி, இருமல் நீங்கும் :-
    வெந்நீரைக் குடித்து வந்தால், சளி, இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். எப்படியெனில் சுடுநீர் சளியை முறித்து, சுவாச பிரச்சனைகளில் இருந்து விடுதலை தரும். அதுமட்டுமின்றி சுடுநீர் சுவாச பாதையை சுத்தமாகவும் வைத்துக் கொள்ளும்.//

    நான் கடந்த 3-4 ஆண்டுகளாக, எப்போதுமே (கோடையோ, குளிரோ .... 365 நாட்களும்) வெந்நீர் மட்டுமே அருந்தி வருகிறேன். இதனால் எனக்கு முன்பு அடிக்கடி ஏற்பட்டு வந்த வரட்டு இருமல் முற்றிலுமாக நீங்கியுள்ளது.

    என் அருகே ஒரு 5 லிட்டர் எவர்சில்வர் பாத்திரத்தில் எப்போதுமே வெந்நீர் வைத்துக்கொண்டுள்ளேன். தினமும் காலையில் அதில் தண்ணீர் நிரப்பி e-cook இல், நானே சுட வைத்துக்கொள்வேன். ஆறினாலும் கூட அதை மட்டுமே நான் தொடர்ச்சியாக நாள் முழுவதும் அருந்தி வருகிறேன். அதன் பலனை என்னால் நன்கு உணரமுடிகிறது.

    இது தங்களின் தகவலுக்காக மட்டுமே.

    ReplyDelete
  2. சிறந்த உளநல வழிகாட்டல்

    ReplyDelete
  3. To those who drink more water than necessary......
    the recent researches on NEPHROLOGY have proved that one should drink water only when they feel thirsty...
    Gulping water enormously would make your kidney weak....many complications arise
    if you see a NEPHROLOGIST he would advice you to take adequate water only....

    ReplyDelete