badge

Followers

Friday 11 November 2016

கார அப்பம்





கார அப்பம் ....
சுடச்சுட.....கர கர ...முர முர....
உப்பு ,காரம்,லேசான புளிப்புடன்....
இந்தக் குளிர் கால மாலை நேரத்துக்கு ஏற்ற ...
சுவையான டிபன் .....




தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு -3 கப் 
  • அரிந்த வெங்காயம் -1 கப் 
  • இஞ்சி துண்டுகள்-1/2 டீ ஸ்பூன் 
  • அரிந்த பச்சை மிளகாய் -4
  • கறிவேப்பிலை -சிறிதளவு 
  • பெருங்காயத்தூள் -3 சிட்டிகை 
  • உப்பு -தேவையான அளவு 
  • எண்ணை -தேவையான அளவு 






செய்முறை


  • தோசை மாவில் (சிறிது புளித்தது ) உப்பு,அரிந்த இஞ்சி ,மிளகாய் ,வெங்காயம் ,கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக்கலக்கவும்.
  • ஒரு அப்பக்காரலை (குழிப்பணியார கல்லை )அடுப்பில் வைக்கவும்.
  • அதில் எண்ணை  விட்டுக் காயவைக்கவும்.
  • காய்ந்த எண்ணையில் குழிகளில் பாதி அளவு மாவுக்கலவையை ஊற்றி ஒரு பக்கம் சிவக்கும் வரை வேக விடவும் 
  • பிறகு ஒரு நீண்ட கம்பியால் அதை திருப்பி அந்தக் குழியிலே எண்ணையில் வேகவிடவும்.
  • நன்கு சிவந்தவுடன் அதை எண்ணெயில் இருந்து கம்பியால் குத்தி எடுத்து எண்ணையை வடிய விடவும்.
  • சூடாகப் பரிமாறவும்.
  • சட்னி இதற்க்கு சிறந்த சைடு டிஷ். 
  • (அப்படியேவும் சாப்பிடலாம்! அருமையாக இருக்கும்!)


2 comments:

  1. ஆஹா ..... படமும், செய்முறையும் அருமையாக உள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி,சார் .

      Delete