பல பல வடிவங்களில் விநாயகரை ஓவியமாக
(குறிப்பாக தஞ்சை பாணி ஓவியமாக)
வரைந்திருந்தாலும் ,இந்தப் பிள்ளையார் என்
மனதுக்கு மிகவும் நெருக்கமானவர்....
பொன் வேய்ந்த மண்டபத்தில் அமரவில்லை....
நவரத்தினங்கள் பதித்த பீடத்தில் அமரவில்லை...
ஏன் ,அபயஹஸ்தம் கூட காட்டி பக்தருக்கு
அருளவில்லை...
ஆனால்,உங்களைபோல் ...என்னைப்போல்....
ஹாயாக மஞ்சத்தில் சாய்ந்து படுத்துக்கொண்டு
மனதுக்குப் பிடித்த புத்தகத்தை நிம்மதியாகப்
படித்துக் கொண்டு "ரிலாக்ஸ் " செய்தபடி
ஓய்வெடுக்கிறார் இந்த கஜானனர்....
அல்லும் பகலும் அயராது பக்தகோடிகளை
காத்து,துயர் துடைக்கும் இவர் நம்மைப் போல
கால் மேல் கால் போட்டுக்கொண்டு படுத்த படி
ஓய்வெடுப்பதற்கும் நேரம் ஒதுக்குகிறார்
என்று நினைத்துப் பார்பதே அவருடன் நம்மை
இன்னும் நெருக்கமாக்குகிறதோ?
ஓவியம் மிகவும் அழகாக வரைந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteஓவியத்தைப்பற்றிய காவியம் அதைவிட ஜோராக எழுதியுள்ளீர்கள்.
மிகவும் ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.
தங்கள் கருத்துக்களுக்கும் பாராட்டுக்கும் நன்றி,சார்
Deleteஆகா...! அற்புதம்...!! எவ்வளவு நுணுக்கம்...!!!
ReplyDeleteபாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
தங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி,தனபாலன்...
Delete