badge

Followers

Monday, 23 June 2014

தமிழ் சினிமா இலக்கணம் மாறுமோ???




இலக்கணம் மாறுமோ?

நம்ம சினிமா இலக்கணம் மாறுமோ?????

இது இல்லாத தமிழ் சினிமா இருக்கா..?

1) போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..
* ஹீரோ போலிஸா இருக்கணும்..
* ஹீரோயின் அப்பா போலிஸா இருக்கணும்..
* இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..



2) ரெண்டு கதாநாயகி இருந்தா...
* ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
* வெளிநாட்டுக்கு போயிடணும்..
* இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.



3) ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...
* ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
* ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
* இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..




4) ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...
* படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..
* வில்லனை தான் லவ் பண்ணனும்..

*அவள் புருஷனால் கொடுமைப்படுத்தப்பட வேண்டும்...
*அவளைப்பார்த்து ஹீரோ கண்கலங்கியே தீர வேண்டும்...
* எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.




5) காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...
* அடி வாங்கணும்..உதை வாங்கணும்...
* அடி கொடுக்கணும்..உதைக்கணும்...

* இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
*ரொம்ப குண்டாகவோ,ஒல்லியாகவோ இருக்க வேண்டும்!


6) ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..
* கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..
* போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி காட்டணும்..

*கட்டாயம் ஒரு அரசியல்வாதியை எதிர்க்கணும் ...
* கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.

7) கதாநாயகன் , வக்கீலா இருந்தா...
* யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..

ஹ்வகில் வேடம் போட்டாலே அவர் கட்சிக்காரரை வீட்டில் போய் பார்க்கும் போது கூட வக்கீல் கருப்புக்கோட்டு அணிந்திருக்க வேண்டும்...
* எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..
* இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.

8) கதாநாயகன் குள்ளமா இருந்தா..
* கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..
* ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..
* ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.

9) கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..
* ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..
* சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..
* கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.


10) கதாநாயகி பணக்காரியா இருந்தா..
* திமிர் பிடிச்சவளா இருக்கணும்..
* புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும்..

*அவசியம் ஹீரோ  கதாநாயகியை கிண்டல் செய்து பாடும் பாடு ஒன்று இருக்க வேண்டும்.
*திமிர் அடங்கி திருந்தியவுடன் புடவை கட்டிவந்து காலில் விழவேண்டும்!
*அதுவரை ஆறு இன்ச் கூந்தலாக இருந்த அவள் தலை முடி ஒரே சீனில் இடுப்பு வரை வளர வேண்டும்!
* கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..



11)குழந்தை கதாபாத்திரங்கள்...
*வயசுக்கு மீறிய கருத்துக்களை பேசவேண்டும்...
*மிக புத்திசாலியாக  திட்டமிட்டு வில்லன் கோஷ்டிக்கு கடுக்காய் கொடுப்பதில் எக்ஸ்பெர்ட்டாக இருக்க வேண்டும்.
*குழந்தைத்தனமே இருக்கக்கூடாது!


12)சினிமா காதல் கஷ்ட்டமானது!என்னென்றால்....
*காதலியுடன் பாட/ஆட ரொமான்ஸ் பண்ண வேண்டும் என்றால் உடனே ஊட்டி ,கோடை,சிம்லா,அமெரிக்கா ,சுவிட்சர்லாந்து ,என்று கிளம்பி விட வேண்டும்...
*கூடவே லாலாலா பாட ஒரு டஜன் வெள்ளை உடை தேவதைகளாவது வேண்டும்!
தைரியமாக மஞ்ச கலர் பண்ட,பஞ்சுமிட்டாய் கலை கோட் போட்டு உச்சி வெய்யிலில் ஆட வேண்டும்!







8 comments:

  1. மாறுவது சந்தேகம் தான்...

    சிறிது நாள் ஆகலாம்...!

    ReplyDelete
    Replies
    1. நம்புவோம் ...என்றாவது மாறும் என்று...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,தனபாலன்.

      Delete
  2. என்னாச்சு மேடம்?? நம்ம கலையுலகத்தினர இப்படி வெளுத்துட்டீங்களே!! ஒய் சோமச் கோபம் ஆன் அவர் ஆர்ட்டிஸ்ட்ஸ்? :)

    ReplyDelete
    Replies
    1. கோபம் எல்லாம் இல்லை,தலைவி...கடுப்புத்தான் !
      ரசிகர்கள் அவ்வளவு முட்டாள்கள் என்று அவர்கள் நினைப்பது கண்டு!

      Delete
  3. தமிழ் சினிமாக்கள் பற்றி நல்ல அலசல். நீங்க சொல்வதெல்லாம் சரியே ! இவைகள் மாறுவது மிகவும் கஷ்டம் தான். சினிமா ரஸிகர்கள் மாறினால் இவையும் மாறலாம்.

    ReplyDelete
    Replies
    1. காலம் பதில் சொல்லட்டும்...மாறுதல் வரட்டும் .
      தங்கள் கருத்துக்கு நன்றி,சார்.

      Delete
  4. முற்றிலும் உண்மை

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி,சார்.

      Delete