கலர்கலராய் மாத்திரைகள்,காப்சூல்கல்,
டானிக்குகளை அனுதினமும் சாப்பிட்டு உங்கள்
ஆரோகியத்தை காக்க மெனக்கெடுபவரா நீங்கள்?
ஒன் மினிட் ,ப்ளீஸ் ...
எல்லா இடங்களிலும் எளிதாகக் கிடைக்கும்
வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தாலே
போதும்... நீங்கள் ஆரோக்கியமாக இருப்பீர்கள்...
டாக்டர் / மருந்துக்கடை விசிட்டை
குறைத்துக் கொள்ளவீர்கள்...
# தினமும் இரவில் ஒரு டேபிள்ஸ்பூன்
வெந்தயத்தை ஒரு கப் தண்ணீரில் ஊறப்
போடுங்கள் .இதை ,காலையில் வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வாருங்கள்...
ஒரு மாதம் இதை தொடர்ந்து செய்து வந்தாலே
போதும்... உங்கள் உடம்பில் உள்ள பல உபாதைகள்
குட் பை சொல்லிவிட்டு ஓடியே போய்விடும்...
குட் பை சொல்லிவிட்டு ஓடியே போய்விடும்...
#தினமும் 15 கிராம் வெந்தயம் உட்கொண்டு
வந்தால்....
*ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
*ரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து (cholesterol )அளவு
குறையும்.
*ரத்தத்தில் உள்ள சர்கரையின் அளவு கட்டுக்குள்
வரும் .
*ஜீரணசக்தி அதிகரிக்கும்.
*மலச்சிக்கல் சரியாகும்.
*மூட்டு வலி குறையும் .
*எடையும் குறையும்.
*சிறுநீர் நன்கு பிரியும்.
*இரத்த சோகை குறையும்.
வேறு விதமாகவும் வெந்தயத்தை பயன்
படுத்தலாம்...
# முளை கட்டிய வெந்தயத்தை பொடியாக்கி
தினசரி உணவில் கொஞ்சம் கொஞ்சம் சேர்த்து வரலாம்.
இதை இட்லி ,தோசை, அடை ,சப்பாத்தி
மாவில் கலந்து சமைக்கலாம்.
சாம்பார்,பொரியல் வகைகளிலும் சேர்க்கலாம்.
#வெந்தயத்தை முளைக்கட்டி,ஊறவைத்து அரிது
சீயக்காயுடன் தலைக்குத் தெய்துக்குளித்து வந்தால்
கூந்தல் மிருதுவாகவும்,பளபளப்பாகவும் ,
ஆரோகியமாகவும் ஆகும்.
#வெந்தயத்தையும் ,செம்பருத்தி இதழ்களையும்
சேர்த்து தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி
தைலமாக உபயோகித்து வர தலை முடி
உதிர்தல் குறையும்.உடம்பு குளிர்ச்சியாகும் .
#வெந்தயப் பொடி , முல்தானி முட்டி இரண்டையும்
தண்ணீருடன் குழைத்து face pack க்காக முகத்தில்
பூசி கொஞ்ச நேரம் விட்டு ,முகம் பளிச் என்று
இருக்கும்.
*வெந்தயத்தை தாளிக்க மட்டும் பயன் படுத்தாமல்
உணவில் சற்று தாராளமாகப் பயன் படுத்தும்
போடு தான் அதன் முழு சத்தும்
நமக்குக்கிடைக்கிறது.
*வெந்தயக்கீரையை பொரியல்,கூட்டு ,சாம்பார்,
மசியல்,போன்ற பல பதார்த்தங்கள் செய்யலாம்.
#வட இந்திய சமையலில்
மேத்திசப்பாத்தி,மேத்தி பராத்தா ,மேத்தி புலாவ்
போன்றவை எளிதில் செய்யக்கூடிய ஆரோக்கிய
உணவுகள்...
#முளைக்கட்டிய வெந்தயத்தை அரிந்த
தக்காளி,வெள்ளரிக்காய் துண்டுகளுடன் கலந்து
சாலட் செய்யலாம்...(முளைக்கட்டிய வெந்தயத்தை
ஓரிரு முறை களைந்தால் அதன் கசப்புத்தன்மை
நீங்கிவிடும்)
#ஊற வாய்த்த வெந்தயத்தை தயிர் பச்சிடியாக
சாப்பிடலாம்...
#"அயம் " என்பது இரும்பைக்
குறிக்கும் தமிழ்ச்சொல் .
வெந்த அயம் வெந்தயம் என்று .ஆகி உள்ளது.
இதிலிருந்தே நமக்குப் புரியும்...நம் முன்னோர்
வெந்தயத்தில் உள்ள அபரிமிதமான
இரும்புச்சத்தை எந்தக்காலத்திலோ அடையாளம்
கண்டு விட்டனர் என்று...
(Pics Courtesy -Internet )
வெந்தயம் போன்றே மிகவும் பயனுள்ள தகவல்களாகத் திரட்டிக்கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் கருத்துக்கு நன்றி,VGK சார்.
Delete