badge

Followers

Wednesday, 30 November 2016

ஓம் ஸ்ரீ சாய் ராம் ...


ஓம் ஸ்ரீ சாய் ராம் ...




உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன்

நானே கர்த்தா (காரணமாவேன்) என்ற எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, அதற்கு சாயி தான் கர்த்தா என்பதை புரிந்துகொண்டு என்னிடம் அனைத்தையும் ஒப்படைத்தால் நான் பார்த்துக் கொள்வேன். 
இப்படியெல்லாம் செய்து, உன்னை முற்றிலுமாக என்னிடம் ஒப்படைத்து சரணாகதி செய்யும்போது, நான் நிரந்தரமாக உன்னிடம் தங்கி, உன் பிள்ளைகளை வளர்த்து, உன் பிரச்னைகளைப் போக்கி, உன் மனக் கவலையை தீர்த்து உனக்குள்ள அனைத்தையும் மாற்றி உன்னை இந்த உலகத்தில் நிம்மதியாகவும், உன் சந்ததியை வளமாகவும் வைப்பேன். 

-ஸ்ரீ சாயியின் குரல்-










Thursday, 24 November 2016

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா ...ஒரு சிறிய யூ ட்யூப் தொகுப்பு....







ஒரு சிறிய  யூ ட்யூப்  தொகுப்பு....

ஜெய் ஸ்ரீ சாய் ராம் ....

பூண்டு -ஆரோக்கியப் பெட்டகம்




வறுத்த 6 பூண்டு சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
இங்கு அந்த அற்புதங்கள் என்ன வென்று கொடுக்கப்பட்டுள்ளது .
மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால்…
உயர் இரத்த அழுத்தம்,
குறைந்த இரத்த அழுத்தம்,
உயர் கொலஸ்ட்ரால்,
இதய நோய்கள்,
மாரடைப்பு,
பெருந்தமனி தடிப்பு
போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
மேலும் பூண்டுகள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும்..
மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும்.
பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.
இத்தகைய பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும்.
இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது. 
1 மணிநேரம்:
வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.
2-4 மணிநேரம்:
2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.
4-6 மணிநேரம்:
4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.
6-7 மணிநேரம்:
பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.
7-10 மணிநேரம்:
இக்காலத்தில், பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.
10-24 மணிநேரம்:
முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.
அவை......
1. கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.
2. தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
3. இரத்த அழுத்தத்தை சீராக்கும்.
4. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.
5. உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.
6. எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.
7. அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.
8. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும்.


Wednesday, 23 November 2016

ஓம் ஸாயீ நமோ நமஹா ...





     ஓம் ஸாயீ  நமோ நமஹா ...
   ஸ்ரீ ஸாயீ  நமோ நமஹா ...
     ஸத்குரு ஸாயீ  நமோ நமஹா ...
ஷீர்டி ஸாயீ  நமோ நமஹா ......


Tuesday, 22 November 2016

கடுக்காயின் நன்மைகள்






கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம் என்பது பழமொழி

ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.

சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவு...ம் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்: கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

Monday, 21 November 2016

சத்குரு ஷிர்டி சாய்பாபா.....


இதோ....ஸ்ரீ ஷீர்டிசாய்பாபாவின் படங்கள் அடங்கிய ஒரு சிறிய ஸ்லைடுஷோ...... 

உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்...

நான் ஸ்தூல உடலுடன் ஷீரடியில் இல்லையென்று கருத வேண்டாம். என் மேல் நம்பிக்கை கொண்டு என்னை இதயபூர்வமாக நினைத்த மறு நிமிடமே உன் முன்னால் இருப்பேன். எப்போதும் உங்களுடனேயே இருப்பேன். உங்களுக்கு தாசனாய் இருப்பேன். உங்கள் சேவையில் தன்யனாய் இருப்பேன்.உங்கள் காரியங்களில் என் உதவியை கோரினால் உடனே நிறைவேற்றுகிறேன். என்னை எப்போதும் நினைப்பவர்களின் கடனை அவ்விதமாகத் தீர்த்துக்கொள்வேன்.
---சத்குரு ஷிர்டி சாய்பாபா

Saturday, 19 November 2016

ஸ்ரீ சாய் நாதாய நமஹா ....




ஸ்ரீ சாய் நாதாய நமஹா ....

ஷீர்டி சாய்பாபா படங்களின் கோவையை ஒரு சிறிய யு ட்யூப்  ஸ்லைடு ஷோவாக தொகுத்து சமர்ப்பித்து உள்ளேன்....
இதுவே என் முதல் முயற்சி...
தங்கள்  மேலான கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்...நன்றி....

Thursday, 17 November 2016

ஸ்ரீ ஷீரடி சாய் பாபா.... (4)


உன் வீட்டிற்கு வருகிறேன்...
என்னுடைய பக்தனின் வீட்டில் தேவை என்பதே இருக்காது என்றவர்.. உன் சுமைகளை என் மீது வைத்துவிட்டால் சத்தியமாகவே அதை சுமப்பேன் என வாக்குறுதி தந்தவர். அவர் மிக விரைவில் உன் வீட்டிற்குப் பணமாகவோ, பிரச்சினைக்குத்தீர்வாகவோ வரப் போகிறார்.. புத்திசாலியாக இருந்து அவரைப் பிடித்துக்கொள்.





Tuesday, 15 November 2016

காணவில்லை ....முதலைகளை !!!!!



காணவில்லை ....முதலைகளை....



போன செவ்வாய் இரவு வந்த அறிவிப்பைக் கேட்டு முதலில் அதிர்ச்சி...

பிறகு  ஞானோதயம் ...."நாம எதுக்கு அதிறணும்...
நமக்கு கணக்கில் வராதது ஒண்ணு மில்லயே..."

"பண முதலைகள் தான் கவலைப் படணும் "

கையோடு  ,பீரோ ,பெட்டி,டிராயர் ,பர்ஸ் ,ஹாண்ட் பாக் ,தலைகாணிக்கு கீழே ,டைரிக்குள்,சாமி உண்டியல் ,சிறுவாடு டப்பா ,கடுகு டப்பா  ....
என்று வீடு முழுக்க ஒரு ரெய்டு நடத்தி 

கிடைத்த 1000,500 களை பத்திரமாக எண்ணிக் கட்டி (முதல் வாரமில்லையா ,பெரிய நோட்டுக்கள் தான் நிறைய ....)

எங்கோ இடுக்கு மூடுக்குகளில் சில ஆபத்வாந்தவ சில்லறை நோட்டுக்கள் சிரித்தன...

பெரிய நோட்டுக்களை எண்ணி  ரப்பர் பேண்ட் போட்டு கட்டி,challan எழுதி வைத்து 
வியாழக்கிழமை காலையிலேயே வங்கிக்கு கிளம்பி  , கியூவில் கால் கடுக்க நின்று உச்சி வேளையில் பணத்தை சந்தோஷமாக கட்டிவிட்டு (போன வாரம் 2 நிமிடத்தில் எடுத்தது!!!!!)

பக்கத்துக்கு கியூவில் இன்னும் ஒரு மணி நேரம் நின்று  5  ரோஜா அழகிகளை (2000 ருபாய் நோட்டுக்கள்) புது வாசனை மாறாமல்  வாங்கி வந்தேன்...
(அதற்க்கு இன்று வரை சில்லறை கிடைக்க வில்லை என்பது வேறு கதை)
நான் நின்றிருந்த கியூவிலும் ,
என் உறவு,நட்பு,அக்கம் பக்கம்  நின்ற வரிசையிலும் 
டீ.வி  இல் நாள் முழுவதிலும் காட்டப் படும் பல வங்கி /எ.டீ.எம்  கியூக்களிலும் 
கால் கடுக்க ,வியர்வை ஒழுக  கையில் சில பல நோட்டுகளுடனோ /நோட்டுக்களுக்ககவோ தவமாய் தவமிருப்பவர்கள் 

சாமானியர்கள் மட்டுமே...

அவர்கள்....பண முதலைகள்  இல்லை....

பணத்திமிங்கலங்கள் இல்லை ....

பண டினோசார்கள்  இல்லை...

பண அனகோண்டாக்கள் இல்லை......


அம்பானி,அதானி,டாட்டா ,பிர்லாக்கள் 
எந்த பாங்கில் இருந்து கைச்  செலவுக்கு பணம் எடுத்தார்கள்....

அமைச்சர்கள்,நடிகர்கள், VIP க்கள் எந்த ஏ டீ எம் களில் காசு வாங்கினார்கள்....


தெரியலையே....


ஒரு பண முதலை கூடவா வங்கி முன் நிற்பதை நம்ம மீடியாக் காரர்கள் கவனிக்கவில்லை....

தெரிந்தால் சொல்லுங்களேன் ....


எனக்கு இப்போது எங்கோ படித்த கதை தான் ஞாபகம் வருகிறது.....

ஒரே ஒரு ஊரில் 
ஒரு குளம் இருந்தது....
அந்தக்குளத்தில் சில முதலைகளும் வாழ்ந்தன ....
முதலை வேட்டை ஆட ராஜா முடிவெடுத்தார்....
குளத்து நீரை இரைக்க உத்தரவு பிறப்பித்தார்.....
குளம் காலி செய்யப்பட்டது....
வந்து பார்த்த ராஜாவுக்கு ஆச்சரியம்...

குளத்தில் ஒரு முதலை கூடக் காணோம்....
மாறாக மீன்கள் செத்துக்  கிடந்தன.....சில துடித்துக்  கொண்டிருந்தன.....

"முதலை தண்ணீரிலும் தரையிலும் வாழும்....அவைகள் எங்கேயோ தப்பி ஓடி விட்டன...ஆனால் பாவம் மீன்கள் ...அவை வாழ தண்ணீர் மட்டும் தான் உண்டு"


ஊர்க்காரர் ஒருவர் சொல்ல....ராஜாவுக்கு ஏதோ புரிந்த மாதிரி இருந்தது .....




Friday, 11 November 2016

கார அப்பம்





கார அப்பம் ....
சுடச்சுட.....கர கர ...முர முர....
உப்பு ,காரம்,லேசான புளிப்புடன்....
இந்தக் குளிர் கால மாலை நேரத்துக்கு ஏற்ற ...
சுவையான டிபன் .....




தேவையான பொருட்கள் 

  • தோசை மாவு -3 கப் 
  • அரிந்த வெங்காயம் -1 கப் 
  • இஞ்சி துண்டுகள்-1/2 டீ ஸ்பூன் 
  • அரிந்த பச்சை மிளகாய் -4
  • கறிவேப்பிலை -சிறிதளவு 
  • பெருங்காயத்தூள் -3 சிட்டிகை 
  • உப்பு -தேவையான அளவு 
  • எண்ணை -தேவையான அளவு 






செய்முறை


  • தோசை மாவில் (சிறிது புளித்தது ) உப்பு,அரிந்த இஞ்சி ,மிளகாய் ,வெங்காயம் ,கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்துக்கலக்கவும்.
  • ஒரு அப்பக்காரலை (குழிப்பணியார கல்லை )அடுப்பில் வைக்கவும்.
  • அதில் எண்ணை  விட்டுக் காயவைக்கவும்.
  • காய்ந்த எண்ணையில் குழிகளில் பாதி அளவு மாவுக்கலவையை ஊற்றி ஒரு பக்கம் சிவக்கும் வரை வேக விடவும் 
  • பிறகு ஒரு நீண்ட கம்பியால் அதை திருப்பி அந்தக் குழியிலே எண்ணையில் வேகவிடவும்.
  • நன்கு சிவந்தவுடன் அதை எண்ணெயில் இருந்து கம்பியால் குத்தி எடுத்து எண்ணையை வடிய விடவும்.
  • சூடாகப் பரிமாறவும்.
  • சட்னி இதற்க்கு சிறந்த சைடு டிஷ். 
  • (அப்படியேவும் சாப்பிடலாம்! அருமையாக இருக்கும்!)


Wednesday, 9 November 2016

சிறந்த பொன்மொழிகள் 25...




 சிறந்த பொன்மொழிகள்  25

1. அதிகம் பேசாதவனை உலகம் அதிகம் விரும்புகிறது. அளந்து பேசுபவனை அதிகம் மதிக்கிறது. அதிகம் செயல்படுபவனையே கைகூப்பித் தொழுகிறது.
2. கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
3. ந‌ம்மு‌ட‌ன் வா‌ழ்வோரை‌ப் பு‌ரி‌ந்து கொ‌ள்வத‌ற்கு ந‌ம்மை முத‌லி‌ல் பு‌ரி‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.
4. ந‌ம்‌பி‌க்கை குறையு‌ம் போது ஒ‌வ்வொரு ம‌னிதனு‌ம் நெ‌றிய‌ற்ற கொ‌ள்கையை மே‌ற்கொ‌ள்‌கிறா‌ன்.
5. சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.
6. ம‌கி‌ழ்‌ச்‌சி எ‌ன்ற உண‌ர்‌ச்‌சி ம‌ட்டு‌ம் இ‌ல்லா‌‌வி‌ட்டா‌ல் வா‌ழ்‌க்கை எ‌ன்பது சும‌க்க முடியாத பெ‌ரிய சுமையா‌கி‌யிரு‌க்கு‌ம்.
7. உலகம் ஒரு விசித்திரமான கல்லூரி. இங்கே பாடம் சொல்லிக்கொடுத்துத் தேர்வு வைப்பது இல்லை. தேர்வு வைத்த பிறகே பாடம் கற்பிக்கப்படுகிறது.
8. சிக்கனம் என்பது ஒருவன் பணத்தை எவ்வளவு குறைவாகச் செலவு செய்கிறான் என்பதைப் பொறுத்தது அல்ல. அதை அவன் எவ்வளவு உபயோகமாகச் செலவிடுகிறான் என்பதைப் பொறுத்தது ஆகும்.
9. எதை இழந்தீர்கள் என்பதல்ல முக்கியம், என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்.
10. அரிய சாதனைகள் அனைத்தும் வலிமையினால் செய்யப்பட்டவை அல்ல; விடாமுயற்சியினால் தான்.
11. முன்நோக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
12. ரகசியத்தை வெளிப்படுத்தியவனுக்கும், துக்கத்தை வெளிப்படுத்தாதவனுக்கும் மனதில் நிம்மதி இருக்காது.
13. எல்லோரையும் நம்புவது அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது.
14. எல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம்.
15. எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்.
16. ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
17. செயல் புரியாத மனிதனுக்கு தெய்வம் ஒருபோதும் உதவி செய்யாது.
18. சண்டைக்குப் பின் வரும் சமாதானத்தைவிட, என்றும் சண்டையே இல்லாத சமாதானம்தான். வேண்டும்.
19. நேற்றைய பொழுதும் நிஜமில்லை; நாளைய பொழுதும் நிச்சயமில்லை; இன்றைக்கு மட்டுமே நம் கையில்.
20. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல.
21. பழமையைப் பற்றி ஒன்றுமே தெரியாமல் புதுமையைச் சிறப்பாகப் படைக்க முடியாது.
22. வாசிப்புப் பழக்கம் என்பது அருமையான ருசி, அழகான பசி. ஒரு முறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும்.
23. நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்கு கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்கு த‌குதியான‌து உங்க‌ளுக்கு க‌ண்டிப்பாக‌ கிடைத்தே தீரும்.
24. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்.
25. தவறு நேர்ந்து விடுமோ என்று அஞ்சி அஞ்சி எந்த செயலையும் செய்யாமல் பின் வாங்குவது இழிவானது.

Tuesday, 8 November 2016

மனித உறவுகள் சீராக இருக்க..... A to Z tips....




மனித உறவுகள் சீராக இருக்க..... A to Z


A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.
B - Behaviour
புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.
C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்.
D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.
E - Ego
மற்றவர்களை விட உங்களையே உயர்த்தி கர்வப்படாதீர்கள்.
F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும், நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த்தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.
G - Genuineness
எந்தக் கட்டத்திலும் சந்தேகம் வேண்டாம். எந்த விடயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.
H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்புக் கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.
I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் சிறியவன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.
J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம் அது கொண்டவனையே அழிக்கும்.
K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.
L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.
M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.
N - Neutral
எப்போதும் எந்த விடயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். முக்கியமாக நடுநிலை தவறவேண்டாம்.
O - Over Expectation
அளவுக்கு அதிகமாகவும் தேவைக்கு அதிகமாகவும் ஆசைப்படாதீர்கள்.
P - Patience
சில சங்கடங்களை சகித்துத் தான் ஆகவேண்டும் என உணருங்கள்.
Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்சனைகளுக்குக் காரணம் தெரியாததைப் பேசுவது தான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.
R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.
S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.
T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.
U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.
V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திரமால் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்சனை வரும்போது எதிர்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள். பின்பு, அதற்கு பதில் கொடுங்கள்.
W - Wound
எந்தப் பேச்சும், செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.
X - (e)Xpectation
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.
Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.
Z - Zero
இவை அனைத்தையும் கடை பிடித்தால் பிரச்சனை என்பது பூஜ்ஜியம் ஆகும்.

Sunday, 6 November 2016

பச்சை தேங்காயின் பயன்கள்




தேங்காய் உபயோகம் மாரடைப்பில் முடியும் என்று நிறைய பேர் கைவிட்டனர் உண்மை இதோ :--
பச்சை தேங்காயின் பயன்கள்.....
தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மை....
பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான்....ஆனால் எப்பொழுது கொழுப்பு உருவாகும் என்றால் அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாக மாறும்........
தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால் ,அதுதான் அமிர்தம்......சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும்....
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும்...
இரத்தத்தை சுத்தமாக்கும்...
உடலை உரமாக்கும்.....
உச்சி முதல் பாதம் வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்......
தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை...... நாம் அன்னை வயிற்றில் இருந்து பூமிக்கு வர 10 மாதம் அதுபோல...தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும்....
இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்...
குறிப்பு :
தேங்காய் குருமா
தேங்காயை சமைத்து சாப்பிட்டால் கெட்ட கொழுப்பாக(கொலஸ்ட்ரால்) மாறிவிடும்.
சமைக்காமல் அப்படியே உண்டால் நல்ல கொழுப்பு ( கொலஸ்ட்ரால்)
தேங்காயை துருவி சிறிது நாட்டு சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு சாயங்காள சிற்றுண்டி தந்து பாருங்கள்...அவ்வளவு ஆரோகியம்...
பழங்காலத்தில் இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களுக்கு தேங்காய் பால் கொடுத்து, வாழ்நாட்களை நீட்டிப்பு செய்துள்ளார்கள்.
தாய்ப்பால் மாற்றாக, தேங்காய் பால் குழந்தைகளுக்கு கொடுத்து காப்பாற்றி இருக்கிறார்கள், ஆன இப்போது பாக்கெட் பால்?
காலையில் தேங்காயை துருவி அதனை அரைத்து பாலெடுத்து அதனுடன் நாட்டு
சர்க்கரை (அ)
கருப்பட்டி (அ)
தேன்
சேர்த்து பாக்கட் பாலைதவிர்த்து விட்டு அதற்கு பதிலாக தந்து பாருங்கள்...
ஆரோகியத்தை தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தி தேங்காயை தவிர வேரெதிலும் இல்லை...

Wednesday, 2 November 2016

Tuesday, 1 November 2016

வெற்றி!!! வெற்றி!!!!!!வெற்றி!!!!!!!!



*4 வயதில்*, தனியாக நடக்க முடிந்தால், அது வெற்றி !
*8 வயதில்*, தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
*12 வயதில்*, நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
*18 வயதில்*, வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
*22 வயதில்*, பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
*25 வயதில்*, நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
*30 வயதில்*, தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
*35 வயதில்*, போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
*45 வயதில்*, இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
*50 வயதில்*, தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
*55 வயதில்*, நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
*60 வயதில்*, ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
*65 வயதில்*, நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*70 வயதில்*, மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
*75 வயதில்*, பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
*80 வயதிற்கு மேல்* மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !