badge

Followers

Saturday, 20 January 2018

பிருந்தாவன அற்புதங்கள்

கிருஷ்ணர் இரவில் வந்து உணவு உண்ணும் அதிசய கோவில்...!!

 அதிசயங்கள் நிறைந்த உலகம் இது. இன்னும் பல அமானுஷ்ய, ஆச்சரிய நிகழ்வுகள் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதற்கான விடையும் தேடப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

🌞 அப்படியொரு அதிசயங்கள் நிறைந்த, நம்மை வியக்க வைக்கும் வரிசையில் கிருஷ்ணரும் ராதையும் தினமும் இரவில் வந்து ஆடி பாடி உணவு உண்ணும் அதிசய கோவிலை பற்றி பார்க்கலாம்.

🌞 உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இதை ஹிந்தியில் விருந்தாவன் என்றும் அழைக்கின்றனர்.

🌞 இந்த இடம் மகாபாரதத்தில், கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடமாக குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் நிறைந்துள்ளன.

🌞 அதில் மிக முக்கியமானது, இங்குள்ள நிதிவனம் என்ற காட்டிற்குள் அமைந்துள்ள ரங் மகால் எனும் கோவில். இந்த கோவிலிலும், இந்த கோவிலிருக்கும் இடமான நிதிவனமும் பல அற்புதங்களையும், அமானுஷ்யங்களையும் தன்னுள் மறைத்து வைத்திருக்கும் இடமாகும்.

🌞 இந்த நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். ஆனாலும் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாக காணப்படுவது மிகவும் ஆச்சரியமான விஷயமாகும்.

🌞 மேலும் இந்த காட்டில் இருக்கும் எந்த மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக வளைந்தே காணப்படுகிறது என்பது மற்றொரு ஆச்சரியமான விஷயமாகும்.

🌞 மேலும் இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருவது மற்றொரு ஆச்சரியமாகும். இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என நம்பப்படுகிறது.

🌞 இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது, கட்டிலுக்கு அருகில் ஒரு கலசத்தில் நீரும், கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும், கிருஷ்ணர் போட்டுக்கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது.

🌞 இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள், பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர்.

🌞 மேலும் பகலில் இந்த காட்டுப்பகுதியில் காணப்படும் விலங்குகளும், பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப்பகுதியை விட்டு வெளியேறிவிடுவது ஆச்சரியப்படுத்தும் தகவலாகும்.

🌞 ஒவ்வொரு நாளும் இந்த கோவிலை திறக்கும்போதும் கட்டில் கலைந்து காணப்படுவதும், தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்துவரும் அதிசய நிகழ்வாகும்.

🌞 இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும், அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் நம்பப்படுகிறது.

🌞 கிருஷ்ணரின் இந்த ராஜ லீலைகளை பார்க்க இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

Courtesy_net

Wednesday, 17 January 2018

ஷீர்டி சாய் பாபா....சரணம்...


நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்...
சந்தோஷம் இல்லாத இடத்தில் யாருக்கும் நிம்மதி இருக்காது.
பக்தி இல்லாத இடத்தில் சத்தியம் இருக்காது.
 தியாகமனப்பான்மை இல்லாத இடத்தில் நிச்சயமாக அன்பும் இருக்காது.
அஹங்காரம் என்ற வலையில் சிக்காதவர்கள்,ஆண்டவனுடைய அரவணைப்பில் இருக்கும் பாக்கியத்தை பெறுகிறான்.






Saturday, 13 January 2018

மகர ஜோதி தரிசனம்...

சபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரும் மகரஜோதி தரிசனம்!
மகர ஜோதி தரிசனம்..!!
✳ மகிசீ என்பவர் அரக்கர்களின் அரசனான மகிசாசுரனின் தங்கையாவார். மகிசாசுரனின் வதத்திற்கு பிறகு, அதற்கு காரணமான தேவர்களை வதைக்க மகிசீ முடிவு செய்தார். அதற்காக பிரம்மாவை நோக்கி தவம் செய்தார். அதனால் மகிழ்ந்த பிரம்மா சிவனுக்கும், திருமாலிற்கும் பிறக்கும் குழந்தையால் மட்டுமே மகிசீக்கு மரணம் ஏற்படும் என்று வரம் அளித்தார்.

✳ பாற்கடலில் அமுதம் கடைந்து அதை தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் மோகினி உருவத்தில் இருந்த விஷ்ணு பகிர்ந்தளித்த லீலையின் போது சிவபெருமான் ஆழ்ந்த தியானத்தில் இருந்ததால் சிவபெருமானால் அந்த மோகினி அவதாரத்தினை தரிசிக்க இயலவில்லை.

✳ பின்னர் தியானம் களைந்து எழுந்த பொழுது நடந்த திருவிளையாடல்களை அறிந்த சிவபெருமான் விஷ்ணுவின் அந்த மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டினார். அதனால் சிவபெருமானுக்காக விஷ்ணு மோகினியாக மீண்டும் அவதரித்த பொழுது சிவனுக்கும், மோகினிக்கும் பிறந்தவரே ஐயப்பன். இதன் காரணமாகவே ஐயப்பனுக்கு ஹரி (விஷ்ணு) - ஹரன் (சிவன்) என்ற பெயரும் உண்டு.

✳ குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர். அந்த சமயத்தில் வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் மரத்தடியில் தேஜசுடன் குழந்தை ஐயப்பனை கண்டார். அந்த குழந்தையை அரண்மனைக்கு கொண்டு சென்றார். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்று பெயரிட்டு அன்போடு வளர்த்து வந்தனர்.

✳ பிறகு ஐயப்பனை குருகுலத்தில் சேர்க்க மன்னன் முடிவு செய்தார். தெய்வக்குழந்தையான ஐயப்பன் குறுகிய காலத்திலேயே நான்கு வேதம், ஆறு சாஸ்திரம், 64 கலைகள் ஆகிய அனைத்தையும் கற்று தேர்ந்தார்.

✳ பிறவியிலேயே ஊமையாக குருகுலத்தில் இருந்த குருவின் மகனான கண்ணனை மணிகண்டன் பேசவைத்தார். மணிகண்டனின் அபூர்வ சக்திகளையும், செயல்களையும் கண்ட குரு அவரை தாங்கள் யார் என்பதனை அறிய விரும்புவதாக கூறினார். குருவுக்கு உண்மையை மறைக்க விரும்பாத மணிகண்டன் தான் யார் என்பதை கூறி அதனை இரகசியமாக வைத்திருக்க வேண்டினார். அத்துடன் குருதட்சணையாக ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தில் ஜோதி சொரூபனாக காட்சி தருவதாக கூறினார்.

✳ இதனால் ஆண்டுதோறும் மகர சங்கராந்தி தினத்தன்று ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சியளித்து அருள்பாலிக்கிறார். எப்போதும் தவக்கோலத்தில் அருளும் ஐயப்பன், ஆண்டுதோறும் மகர சங்கராந்தி நாளில் மட்டும் திருவாபரணம் அணிந்து முழு அலங்காரத்துடன் அருள்பாலிப்பார். அன்றைய தினம் சன்னிதானத்திற்கு எதிரில் உள்ள ஐயப்பனின் ஐந்தாவது மலையான காந்த மலையில் ஜோதி சொரூபமாக ஐயப்பன் காட்சிதருவார்.

✳ மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை தற்போது திறக்கப்பட்டுள்ளது. வருகிற 14-ந்தேதி ஜோதி தரிசனம் நடைபெறும்.

✳ சபரிமலையில் நடக்கும் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் மிகவும் பிரசித்தி பெற்றது. இதைக்காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

✳ மகர விளக்கு பூஜையையொட்டி சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள் வருகிற 12-ந்தேதி பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.

✳ 16-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை இரவில் படி பூஜை நடைபெறும். 20-ந் தேதி பந்தளம் கொட்டாரம் ராஜ பிரதிநிதியின் தரிசனத்திற்கு பின்னர் கோவில் நடை சாத்தப்படும்..

Thursday, 11 January 2018

ஐயப்பனுக்கு அபிஷேகம் ...காணக் கண் கோடி வேண்டும்....


(காணொளியை  காண படத்தை சொடுக்கவும்)



ஐயப்பனுக்கு அபிஷேகம் ...காணக் கண் கோடி வேண்டும்....

நேரில் சென்றால் கூட இவ்வளவு அற்புதமான  தரிசனம் கிடைப்பது அரிது...

ஸ்வாமியே சரணம்  ஐயப்பா ....


Tuesday, 9 January 2018

ஏரி காத்த ராமர் கோவில், மதுராந்தகம்



!! ஜெய் ஸ்ரீ சீதாராம்!!

மெய் சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம் !

உண்மையிலேயே கடவுளைக் காண முடியுமா, அப்படிக் கண்டவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால், பதில், ஆம். இருக்கிறார்கள் என்பதுதான். கடவுளைக் கண்டது மட்டுமல்ல; அவ்வாறு கண்டதை அவர்கள் பதிவு செய்தும் வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு சம்பவம் தான் இது.

 Colonel Lionel Blaze (கர்னல்  லையோனெல் ப்ளேஸ்)
என்பவர் 1795 – 1799 காலகட்டத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்தார். அவர் ஒரு ஆங்கிலேயே அதிகாரி.

இந்துக்கள் என்றாலே முட்டாள்கள், படிக்காதவர்கள் என்பது அவர் எண்ணம். இந்துக்கள் சரியான காட்டுமிராண்டிகள், மூடர்கள், ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள் என்று இந்தியர்களைப் பற்றி மிகவும் இளக்காரமாக அவர், தனது சக அதிகாரிகளிடம் கூறிக் கொண்டிருப்பார். அது மட்டுமல்ல; சிலையை வணங்கும் இந்துக்கள் பைத்தியக்காரர்கள் என்பதும் அவர் எண்ணம்.

 ஒருநாள்…
அவரது ஆட்சிக்குட்பட்ட மதுராந்தகம் பகுதியில் பெரு மழை ஏற்பட்டது. மிகப் பெரிய வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ள ஏரி உடைந்து விடும் சூழ்நிலை வந்தது. அவ்வாறு உடைந்தால் அந்த ஊரும் சுற்றி உள்ள சின்னச் சின்ன கிராமங்களும் வெள்ளத்தால் அழிந்து விடும்.

அதனால் அந்த ஊர்ப் பொதுமக்கள் அவரைச் சந்தித்து ஏதாவது செய்யும் படி வேண்டிக் கொண்டனர்.

அந்த அதிகாரி  மக்களிடம், ”நீங்கள் கோயில் கட்டி வணங்குகிறீர்களே! ஒரு தெய்வம். அந்த தெய்வம் இந்த ஏரியின் கரையை உடைபடாமல் காக்க வேண்டியதுதானே?” என்று கேட்டார்.

உடனே அங்குள்ள பெரியவர் ஒருவர், “ஐயா, அதிலென்ன சந்தேகம்? நாங்கள் எப்போதும் வணங்கும் ஸ்ரீராமர் எங்களைக் கைவிட மாட்டார். நிச்சயம் எங்களையும், இந்த ஊரையும், ஏன் உங்களையும் கூட எல்லா துன்பங்களிலிருந்தும் காப்பார்” என்றார் நம்பிக்கையுடன்.

”ம், அதையும் தான் பார்ப்போமே” என்று சொல்லி விட்டு தனது இருப்பிடத்திற்குச் சென்று விட்டார் அந்த அதிகாரி. மக்களும் ஸ்ரீ ராம பிரானை நோக்கிப் பிரார்த்தனை செய்தவாறே கலைந்து சென்றனர்.

நள்ளிரவு நேரம். மழை இன்னும் தீவிரமானது. நிச்சயம் ஏரி உடைந்து இருக்கும் என்று நினைத்தார் அதிகாரி.

சரி, நிலைமை என்னவென்று பார்த்து, மேலதிகாரிக்குத் தகவல் கொடுப்போம் என்று நினைத்து, தனி ஆளாக, கையில் ஒரு குடையுடன் ஏரியை நோக்கிச் சென்றார்.

 வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. ” இந்த மழைக்கு நிச்சயம்  இந்நேரம் ஏரி தூள் தூளாகி இருக்கும்” என்று நினைத்த அதிகாரி, மெல்ல சிரமப்பட்டு கரை மீது ஏறி நின்று பார்த்தார்.

கரு வானம் சூழ்ந்திருந்ததால் அந்த இருட்டில் அவருக்கு ஒன்றுமே தெரியவில்லை. சற்று நேரம் அப்படியே நின்று கொண்டிருந்தபோது
திடீரென்று ஒரு மின்னல் வெட்டியது.

பளீரென்ற அந்த மின்னல் வெளிச்சத்தில் அதிகாரி அந்த அற்புதக் காட்சியைக்கண்டார்.

 அந்த வெளிச்சம் அடங்கும்போது  , ஏரியின் கரை மீது இரண்டு வீரர்கள் நின்றுகொண்டிருந்தனர். இருவர் கைகளிலும் வில்லேந்தியிருந்தார்கள்.

ஒரே கணம்தான் அந்தக் காட்சியை அந்த அதிகாரி கண்டார். அடுத்தாற்போல் அக்காட்சியைக் கண்ட அந்த ஆங்கிலேய அதிகாரி, தரையில் மண்டியிட்டு விழுந்து ஏதேதோ சொல்லிச் சொல்லி அரற்றினாராம்.

மறுநாள் பொழுது புலர்ந்தது.
வெள்ளம் வடிந்திருந்தது. பெருமழை பெய்த அறிகுறிகள் ஏதும் இல்லாமல் வழக்கம் போல் ஏரி அமைதியாக இருந்தது.
ஏரிக்குச் சென்று அதைப் பார்த்துச் சிலிர்த்த அந்த அதிகாரி, தான் கடவுளைக் கண்ட சம்பவத்தை மக்களுக்குச் சொன்னதுடன்

அன்று முதல் ஸ்ரீ ராமபிரானின் பக்தராகவும் ஆனார். ஸ்ரீ தாயார் சன்னதியைக் கட்டிக் கொடுத்ததுடன், பல திருப்பணிகளை அந்த ஆலயத்திற்குச் செய்தார்.

நடந்த சம்பவத்தை அந்த ஆலயக் கல்வெட்டிலும் வெ பதிப்பித்தார்.

“இந்த தர்மம் கும்பினி ஜாகிர் கலெக்டர் லியோனெல் ப்ளேஸ் துரை அவர்களது”
என்ற வாசகத்தை இன்றும் நாம் அந்தக் கல்வெட்டில் பார்க்கலாம்.


அந்த ராமர் கோயிலின் பெயர்

ஏரி காத்த ராமர் கோவில், மதுராந்தகம்...

Monday, 8 January 2018

பொங்கல் ....ஒரு பார்வை...





பொங்கல் ....ஒரு பார்வை...


தைத் திருநாளாம் பொங்கலுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்களாகிய நமக்கு அறிமுகம் தேவையில்லை தான்...

உழவர்கள் புதியதாய் அறுவடையான நெல்,தானிய வகைகளையும் , வெல்லம் ,பால்,ஆகியவற்றை  சூரியக் கடவுளுக்குப் பொங்கல் பொங்கிப் படைத்தது நன்றி கூறும் நாள்....

கிராமத்தில் இப்படி என்றால்,மெட்ரோ சிட்டியில் வாழ்பவர்களுக்கு
பொங்கல் என்றால்....நாலைந்து நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை...(பெரிய சந்தோஷம்)
சூப்பர்மார்கெட் விற்பனை செய்யும் புது அரிசி,புது வெல்லம்  வீடு வந்து சேரும்...எதற்கும் இருக்கட்டும் என்று ஜோடி கரும்பும் வீட்டிற்கு வரும்...(ஆனால் பண்டிகை முடிந்த பிறகு கரும்பு ஒரு மூலையில் வாடி வதங்கும்...பல வீட்டுக் கரும்புகள் வீட்டு  வேலையாட்கள் கைக்குத்தான் போகிறது...அவை Pizza சுவையில் விளைவதில்லை என்பதாலோ????)

சிட்டி பொங்கல் ,விறகடுப்பு ,மண்  பானை இல்லாமல்,எவர் சில்வர் பானை,காஸ் அடுப்பு,பிரஷர் குக்கர்  என்று  பல வீடுகளிலும் மாறிவிட்டாலும் ,(என்  வீட்டுலேயும் தான்)சிலர் விடாப்பிடியாக பழைய பழக்க வழக்கங்களை மறக்காமல்,குட்டியூண்டு ஐந்தாவது மாடி balconyஇல் சூரிய பொங்கல் இடும் அழகே தனி தான்...

சர்க்கரைப் பொங்கல் போல தமிழர்களின் ரத்தத்தில் கலந்த ஒரு பொங்கல் பண்பு....பட்டி மன்றம் ...பாப்பையா தலைமையில் !!!

எது எப்படியோ ,பொங்கல் ஒரு பாசிட்டிவ் வான பண்டிகை ....

வீடுகள் பொங்கலுக்காக  சுத்தப்படுத்தப்படுகிறன்றன....

வெள்ளை அடிக்கவிட்டாலும்,பழைய ஓட்டை உடைசல்,லொட்டு லொசுக்கு பொங்கலுக்கு முன்பே send off தரப்பட்டு...சில இடங்களில் கொளுத்தப்படுகிறது...அது தான் வருத்தம்...இன்னும் மாசு அதிகப்படுவது காப்பாற்றிய விழிப்புணர்வு இன்னும் போதவில்லை என்பது நிஜம் ....

வண்ணக்கோலங்கள்...வீடுகள்,வாசல்,தெரு எங்கும் வானவில்லை வாரி இரைத்து அழகாக்குகிறது....

எது எப்படியோ , பொங்கல்- ஒரு நன்றி நவிலும் பண்டிகை....

ஒளி தரும் சூரியனுக்கு,பயிர்  தரும் விவசாயிக்கு,அதற்க்கு துணை நிற்கும் மாடு,கன்று, என்று எல்லாவற்றுக்கும் அன்று நன்றி காட்டுவது மனதுக்கு சந்தோஷம் தரும்...நன்றி மறப்பதே வாழ்க்கை முறையான இன்று கூட இந்த பழைய நற்பண்பை நம்மை கொஞ்சமாவது மறக்காமல் வைத்திருக்க பொங்கல் உதவுவது உண்மையே....

ஒரு முக்கியமான விஷயம்....
மற்ற பண்டிகைகளைப்போல பொங்கல்  எந்த ஒரு கடவுளின் பிறப்பையோ ,,அசுரனின் இறப்பையோ,போரில் வெற்றியையோ கொண்டாடுவதில்லை...

அனுதினமும் நாம் கண்ணால் காணும் சூரியனைக் கொண்டாடும் திருநாளாகிறது....

பொங்கலோ பொங்கல்....

(உங்களுக்காக நான் செய்த பிரஷர் குக்கர் பொங்கலும் கூட ...)













Sunday, 7 January 2018

சாம்பார் தமிழ் உணவா மராட்டிய உணவா ?







சாம்பார் தமிழ்  உணவா மராட்டிய உணவா ?

தஞ்சாவூரை மராத்திய மன்னர் ஷாஜி ஆண்டுகொண்டிருந்தார். அவர் சிவாஜியின் உறவு.

அப்பொழுது சிவாஜியின் மகன் சாம்பாஜி தஞ்சை விஜயம் செய்தார். அங்கு சாம்பாஜி மாஹாராஷ்டிர உணவான டாலை சாப்பிட ‌விரும்பினார். அதில் ஒரு பிரச்சினை எழுந்தது. மாஹாராஷ்டிர டாலை தயாரிக்க பயன்படும் பதார்த்தங்கள் முக்கியமாக கோகம் என்னும் பழம் தஞ்சையில் கிடைக்கவில்லை.

அதற்கு பதிலாக புளியை உபயோகித்து டாலை தயாரித்தனர். சாம்பாஜி உட்பட எல்லோரும் அதை விரும்பி உண்டனர். அந்த உணவு தஞ்சை அரச குடும்பத்தின் ஆஸ்தான உணவாகவே மாறியது.

சாம்பாஜி ஆகர் (ஆகாரம்/உணவு) என்று அழைக்கபட்டது. நாளடைவில் அந்த பெயர் சுருங்கி சாம்பார் என்று ஆனது. இந்த விஷயம் சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள மராட்டிய அரசவை குறிப்புகளில் காணப்படுகின்றது.

இப்பொழுது சொல்லுங்கள் சாம்பார் தமிழா மராட்டியா