பொங்கல் ....ஒரு பார்வை...
தைத் திருநாளாம் பொங்கலுக்கு உலகெங்கும் உள்ள தமிழர்களாகிய நமக்கு அறிமுகம் தேவையில்லை தான்...
உழவர்கள் புதியதாய் அறுவடையான நெல்,தானிய வகைகளையும் , வெல்லம் ,பால்,ஆகியவற்றை சூரியக் கடவுளுக்குப் பொங்கல் பொங்கிப் படைத்தது நன்றி கூறும் நாள்....
கிராமத்தில் இப்படி என்றால்,மெட்ரோ சிட்டியில் வாழ்பவர்களுக்கு
பொங்கல் என்றால்....நாலைந்து நாட்கள் சேர்ந்தாற்போல விடுமுறை...(பெரிய சந்தோஷம்)
சூப்பர்மார்கெட் விற்பனை செய்யும் புது அரிசி,புது வெல்லம் வீடு வந்து சேரும்...எதற்கும் இருக்கட்டும் என்று ஜோடி கரும்பும் வீட்டிற்கு வரும்...(ஆனால் பண்டிகை முடிந்த பிறகு கரும்பு ஒரு மூலையில் வாடி வதங்கும்...பல வீட்டுக் கரும்புகள் வீட்டு வேலையாட்கள் கைக்குத்தான் போகிறது...அவை Pizza சுவையில் விளைவதில்லை என்பதாலோ????)
சிட்டி பொங்கல் ,விறகடுப்பு ,மண் பானை இல்லாமல்,எவர் சில்வர் பானை,காஸ் அடுப்பு,பிரஷர் குக்கர் என்று பல வீடுகளிலும் மாறிவிட்டாலும் ,(என் வீட்டுலேயும் தான்)சிலர் விடாப்பிடியாக பழைய பழக்க வழக்கங்களை மறக்காமல்,குட்டியூண்டு ஐந்தாவது மாடி balconyஇல் சூரிய பொங்கல் இடும் அழகே தனி தான்...
சர்க்கரைப் பொங்கல் போல தமிழர்களின் ரத்தத்தில் கலந்த ஒரு பொங்கல் பண்பு....பட்டி மன்றம் ...பாப்பையா தலைமையில் !!!
எது எப்படியோ ,பொங்கல் ஒரு பாசிட்டிவ் வான பண்டிகை ....
வீடுகள் பொங்கலுக்காக சுத்தப்படுத்தப்படுகிறன்றன....
வெள்ளை அடிக்கவிட்டாலும்,பழைய ஓட்டை உடைசல்,லொட்டு லொசுக்கு பொங்கலுக்கு முன்பே send off தரப்பட்டு...சில இடங்களில் கொளுத்தப்படுகிறது...அது தான் வருத்தம்...இன்னும் மாசு அதிகப்படுவது காப்பாற்றிய விழிப்புணர்வு இன்னும் போதவில்லை என்பது நிஜம் ....
வண்ணக்கோலங்கள்...வீடுகள்,வாசல்,தெரு எங்கும் வானவில்லை வாரி இரைத்து அழகாக்குகிறது....
எது எப்படியோ , பொங்கல்- ஒரு நன்றி நவிலும் பண்டிகை....
ஒளி தரும் சூரியனுக்கு,பயிர் தரும் விவசாயிக்கு,அதற்க்கு துணை நிற்கும் மாடு,கன்று, என்று எல்லாவற்றுக்கும் அன்று நன்றி காட்டுவது மனதுக்கு சந்தோஷம் தரும்...நன்றி மறப்பதே வாழ்க்கை முறையான இன்று கூட இந்த பழைய நற்பண்பை நம்மை கொஞ்சமாவது மறக்காமல் வைத்திருக்க பொங்கல் உதவுவது உண்மையே....
ஒரு முக்கியமான விஷயம்....
மற்ற பண்டிகைகளைப்போல பொங்கல் எந்த ஒரு கடவுளின் பிறப்பையோ ,,அசுரனின் இறப்பையோ,போரில் வெற்றியையோ கொண்டாடுவதில்லை...
அனுதினமும் நாம் கண்ணால் காணும் சூரியனைக் கொண்டாடும் திருநாளாகிறது....
பொங்கலோ பொங்கல்....
(உங்களுக்காக நான் செய்த பிரஷர் குக்கர் பொங்கலும் கூட ...)
No comments:
Post a Comment