badge

Followers

Wednesday 15 August 2012

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா...




குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா..
பழகவே அவனும் நல்ல தோழனல்லவா
வழங்கும் தமிழில் நானும் அதைச் சொல்லவா...
(குழந்தை கண்ணன்..)

வெண்ணை பானை உடைத்து சிரிக்கின்றான்
உண்டிவில் கொண்டு தயிர்பானை தகர்க்கின்றான்
அண்ணன் பலராமன் பலசொல்லி கேளாதவன்
கண்ணன் குறும்புகளில் என்றும் குறையாதவன்
(குழந்தை கண்ணன்..) 


அரக்கரை அழித்திடவே அவனும் வந்தான்
அரவம் ஒன்றின்மேல் நடமாடி நின்றான்
உரலொன்றில் அன்னைதான் கட்டி வைத்தால்
மரம்மோதி ஆங்கே மோட்சம் தந்தான்.
(குழந்தை கண்ணன்..)

தின்ன இவன் மண்கொண்டான் என்றே
அன்னை கேட்க வாய்திறந்து வையகம்
தன்னை காட்டியவன் மயங்க வைத்தான்.
இன்னும் என்னென்ன இவனே செய்வான்.

குன்றொன்றை அவனும் குடையாய் கொண்டான்
கன்றுபசுக்கள் யாவிற்கும் அபயம் தந்தான்.
இன்றுஇக் கண்ணன் யாது செய்வான்
என்று யாவரையும் நோக்கச் செய்தான்.

குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...


4 comments:

  1. அழகாக பாடலை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

    பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. //குழந்தை கண்ணன் என்றால் குறும்பல்லவா
    அழகான அவன் செயல்கள் அமிழ்தல்லவா...//

    அருமையான பாடல் வரிகளுடன் அழகான படம் கொடுத்துள்ளீர்கள்.
    நவநீத சோரன் [வெண்ணெய் திருடும் கண்ணன்] நம்மைக் காத்து அருளட்டும்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். அன்புடன் vgk

    ReplyDelete
  3. Please visit my post of today

    Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

    தயவுசெய்து தங்களுக்கான விருதினை ஏற்றுக்கொள்ள்வும். அன்புடன் vgk

    ReplyDelete
  4. http://gopu1949.blogspot.in/2012/07/10th-award-of-2012.html “SUNSHINE BLOGGER AWARD"

    தயவுசெய்து தங்களுக்கான விருதினை ஏற்றுக்கொள்ள்வும். அன்புடன் vgk

    ReplyDelete