badge

Followers

Saturday, 27 September 2014

பேரீச்சம்பழம் -ஆரோக்கியப் பெட்டகம்...






பேரீச்சம்பழம் -ஆரோக்கியப் பெட்டகம்...

அனைத்து ஊட்டச்சத்துக்களையும் அள்ளி வழங்கி இயற்கை ஆரோக்கியத்துக்கு அச்சாரமாக விளங்கும் ஆல் இன் ஆல் பழம் இது. ஆற்றலை அள்ளி வழங்குவதுடன் இதயம் முதல் முடி வரை அனைத்து உறுப்புக்களுக்கும் பலன் அளிக்கக்கூடியது.

சத்துக்கள் - பலன்கள்: வைட்டமின் ஏ, சி, இ, கே, பி காம்ப்ளெக்ஸ் என அனைத்து வைட்டமின்களும் இதில் நிறைவாக உள்ளன. வைட்டமின்களின் தங்கச்சுரங்கம் என்று இதை அழைக்கின்றனர். இந்த வைட்டமின்கள்தான் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அடிப்படையாக இருக்கின்றன. எனவே, இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால், ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும்.

அனைத்து அத்தியாவசிய தாது உப்புக்களும் இதில் நிறைவாக உள்ளன. இவை அனைத்தும் செல்களின் அன்றாட செயல்பாட்டுக்கு மிகவும் அவசியம். இரும்புச் சத்து இதில் அதிகம். உடலுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்துக்கு இரும்புச்சத்தின் தேவை மிகவும் அத்தியாவசியமானது. ரத்த சோகை உள்ளவர்கள் உலர் பேரீச்சம் பழத்தைச் சாப்பிடுங்கள்.
நம்முடைய உறுதியான எலும்பு மற்றும் பற்களுக்கு அவசியமான கால்சியம் சத்தும் நிறைவாக உள்ளது. கொலஸ்டிரால் இல்லை.

அதைவிட ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்தில் உள்ளதால், இதயத்துக்கு மிகவும் நல்லது. மேலும், இதில் சோடியம் மிகக் குறைவாகவும், பொட்டாசியம் அதிக அளவிலும் உள்ளன. இதனால் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதன் மூலம் இதயத்தைப் பாதுகாக்கிறது. இதயத் தசைகளை வலுப்படுத்துகிறது.

இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் செரிமானத்தை எளிமையாக்கி, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்துக்கு உதவியாக இருக்கிறது. இதில் உள்ள நீரில் கரையாத நார்ச்சத்துக்கள், குடல் உற்பத்தி செய்யும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களை உறிஞ்சி கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் அசிடிட்டி, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல் உள்ளிட்டப் பிரச்னைகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது.

முடி பிளவுறுவது, உதிர்வு போன்ற பிரச்னைகளைத் தீர்க்கும் ஆற்றல் பேரீச்சம் பழத்துக்கு உள்ளது. முடி வேர்களுக்கு நன்கு ஊட்டம் அளித்து முடி உதிர்வைத் தடுக்கிறது. முடியை வலுவாக்குகிறது. சருமத்தைப் பாதிக்கும் ஃப்ரீராடிக்கல்ஸ் பாதிப்புக்கு எதிராகப் போராடி இளமையானத் தோற்றத்தைத் தக்கவைக்க உதவுகிறது.
இதில் வைட்டமின் பி5 உள்ளதால், அது தோல் செல்களுக்கு ஊட்டம் அளித்து பாதிப்பை சரிசெய்கிறது.

தேவை: பேரீச்சம் பழத்தை ஒரு நாளைக்கு 5 சாப்பிடலாம். தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஆஸ்டியோபொரோசிஸ் உள்ளிட்ட எலும்பு பிரச்னைகள் வரவே வராது. கர்ப்பிணிகள் தினசரி குறைந்த அளவில் பேரீச்சம் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். இது கர்ப்பப்பைத் தசைகளை வலிமைப்படுத்துவதுடன் குழந்தைப் பிறப்பை எளிமையாக்குகிறது.



(Courtesy-internet)

Friday, 26 September 2014

வலைத்தளத்தில் என் பேட்டி




www .Smartindianwoman .com  வலைத்தளத்தில் வந்த என் பேட்டி  இதோ...



Wednesday, 24 September 2014

நன்மைகள் தரும் பாதாம் பருப்பு








பாதாம் என்பதும் ஒருவகை எண்ணெய் வித்துதான். புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. டயட் செய்கிறவர்களுக்கும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படும். ஆனால், பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் இ சத்தானது, இதய நோயைக் கட்டுப்படுத்த வல்லது. 100 கிராம் பாதாமில் 58 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும், அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது!
இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் எடுத்துக் கொண்டால், அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம். ‘அதெப்படி? பாதிக்கும் மேல் கொழுப்பு உள்ளது என்கிறார்கள்... இதயத்துக்கும் நல்லது என்கிறார்கள்?’ என்பதுதானே உங்கள் சந்தேகம்? ஏற்கனவே சொன்ன மாதிரி அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம்.
இன்னும் சொல்லப் போனால், பாதாம் எடுக்காதவர்களைவிட, பாதாம் எடுப்பவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ, அப்படியேவோ சாப்பிடலாம்.
பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயோதிகத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே எடுத்துப் பழக வேண்டும். நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்ட மின் இ சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.
பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பானது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.




என்ன இருக்கிறது?
ஆற்றல் 655
புரதம் 20.8 கிராம்
கால்சியம் 230 மி.கி.
இரும்புச் சத்து 58 கிராம்
கொழுப்பு 58.9 கிராம்
பாஸ்பரஸ் 490 மி.கி.
வைட்டமின் பி (நையாசின்) 48 கிராம்.



ஸ்பெஷல் ரெசிபி


பாதாம் சட்னி

என்னென்ன தேவை?
ஊற வைத்து, தோல் உரித்த பாதாம் - 10,
புதினா - 1 கட்டு,
பச்சை மிளகாய் - 3,
சாம்பார் வெங்காயம் - 50 கிராம்,
தயிர் - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.
எப்படிச் செய்வது?
ஊறவைத்து, தோலுரித்த பாதாம் பருப்புடன், புதினா, பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து அரைத்து, தயிர் சேர்த்துக் கலந்து பரிமாறவும். இட்லி, தோசை மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறலாம். பிரெட்டின் மேல் தடவியும் சாப்பிடலாம்.



மெமரி ட்ரிங்க்


என்னென்ன தேவை?

பாதாம் - 5,
வால்நட் - 1,
பேரீச்சம் பழம் - 3,
அத்திப்பழம் - 2,
உலர்ந்த திராட்சை - 1 டீஸ்பூன்,
கேரட் துருவல் - 1 கைப்பிடி,
பால் - 1 டீஸ்பூன்,
தேன் - 1 டேபிள் ஸ்பூன்.
எப்படிச் செய்வது?
பாதாம் முதல் திராட்சை வரை எல்லாவற்றையும் ஊற வைத்துக் கொள்ளவும். அவற்றை பால் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். பிறகு கேரட் துருவல் சேர்த்து அரைத்து, தேன் கலந்து குளிர வைத்துப் பரிமாறவும்.



ஹெல்த்தி பாதாம் அல்வா



என்னென்ன தேவை?
பால் - 1 கப்,
தேங்காய்த் துருவல் - அரை கப்,
பாதாம் விழுது - அரை கப்,
நெய் - 1 கப்,
கடலை மாவு - 1 கப்,
சர்க்கரை - 3 கப்,
வறுத்த முந்திரி - சிறிது.

எப்படிச் செய்வது?

கடாயில் நெய்யை சூடாக்கவும். கடலை மாவை வறுத்து, பிறகு பாதாம் விழுது, தேங்காய் துருவல், பால், சர்க்கரை என ஒவ்வொன்றாகச் சேர்த்து நன்கு கிளற வேண்டும். விருப்பப்பட்டால் ஏலக்காய் தூள் சேர்க்கலாம். திரண்டு வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, வறுத்த முந்திரியால் அலங்கரித்து, ஆறியதும் துண்டுகள் போட்டுப் பரிமாறவும்

Saturday, 20 September 2014

சினிமா நமக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால்......







*இரட்டைப்பிறவிகளில் ஒருவர் நல்லவர்  என்றால் மற்றவர் நிச்சயம் கெட்டவர்  தான்...

*புவியீர்ப்பு விதிகள் போன்றவைகளுக்கு   சினிமா மனிதர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல...
சும்மா பறந்து பறந்து சண்டை போடுவார்கள்....

*ஹீரோ எந்த அளவுக்கு மார்க்கெட்டில் முக்கியமானவரோ,அந்த அளவுக்கு அவர் நடக்கும் போது ஷூ கால்களில் நெருப்புப்பொறி பறக்கும்....

*கதையில் யாராவது ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் பிடிக்க ரயிலை விட்டு இறங்கினால்,நிச்சயம்  ரயிலை தவற விட்டே ஆகணும்...

*அகம்பாவம் பிடித்த  ,பணக்கார ஹீரோயின் திருந்திவிட்டாள் என்றால் அவள் கட்டாயம் மாடர்ன் ட்ரெஸ்ஸிலிருந்து புடவைக்கு .மாறிவிடுவாள்...அவள் குடடை தலைமுடி கூட "ஏர்வமாட்டின் " தடவாமலே ஒரே நாளில் முழங்கால் வரை நீண்டு .விடும்..இப்போது அவள் ஆங்கிலம் கலக்காமல் சுத்தத்தமிழில் பேசுவாள்...பாடுவாள்...

*டாக்டர் கட்டாயம் "கரக்ட் டைமில் கொண்டுவந்து சேர்த்து விட்டர்கள்"என்று சொல்ல வேண்டும்...

*டாக்டர்/வக்கீல்  கதாபாத்திரங்கள் எந்த நேரமாக இருந்தாலும் ,எந்த இடமாக இருந்தாலும் கட்டாயம் வெள்ளை கோட்,ஸ்டெத் /கறுப்புக் கோட் சகிதம் வருவார்கள்...

*எத்தனை பேர் அடித்தாலும் வழியில் முகம் சுளிக்காத ஹீரோ,ஹீரோயின் ஒத்தடம் தரும் போது மட்டும்  "ஹா "என்று அலறுவார்...

*யாராவது பொது இடத்தில டான்ஸ் ஆட ஆரம்பித்தால் அங்கே இருக்கும் அனைவருக்குமே அதே தாளம் தப்பாமல் கூட ஆடத் தெரியும்...

*ஹீரோ பாம் ஒயர்களை வெட்டினால் விஷயம் தெரியாவிட்டால் கூட கரெக்டான ஓயரையே  கடைசி நொடியில் வெட்டுவார்.

*கதாநாயகி பாரின் லோகேஷனில்தான் கனவு கானுவாள் ...

*எல்லா பார்க்,பீச்களிலும் லாலாலா பாட ஆட்கள் தயாராக .இருப்பார்கள்..

*ஒரு விபத்தில் ஹீரோயினுக்கு ஞாபக மறதி ஏற்ப்பட்டால் மீண்டும் அதே விபத்தில் அவள் ஞாபகம் திரும்பிவிடும்...

*ஹீரோ மாறுவேடம் போட்டால் ஆடியன்ஸில் உள்ள குழந்தைக்குக்கூட அது ஹீரோ என்பது தெரியும்...ஆனால் ,வில்லன் கும்பலுக்குத் தெரியாது...ஏன் ,கதாநாயகிக்குக் கூட அடையாளம் தெரியாது...இத்தனைக்கும் ,மாறுவேஷம் என்பது ஒட்டப்பட்ட ஒரே ஒரு மரு -அல்லது ஒரு மீசை தான்!

*நகைச்சுவையாளர்கள் பொதுவாகவே ரொம்ப நல்லவர்கள் !

*ஹீரோ ஒரே பாட்டில் கூலிவேலை செய்வதில்  ஆரம்பித்து கோடீஸ்வரராகிவிடுவார்...

*வீட்டில் ஒரு பிரம்மாண்ட மாடிப்படி இருந்தால் அதில் யாராவது உருண்டு விழுந்தே ஆகவேண்டும்...

*10000 ருபாய் வேலையில் சேரும் ஹீரோவுக்கு கம்பனியில் 50000 ரூபாய் வாடகை பெறுமான வீடு .குடியிருக்கத்தரப்படும்..

*மூன்றாவது மாடியிலிருந்து ஹீரோ குதித்தாலும் ஒரு சுளுக்கு கூட வராது....





Wednesday, 17 September 2014

நம்ம காலம் வேறு




1970 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இக்கால ஜெனரேஷன் குழந்தைகள் என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே! 

·தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம்தான்.

·எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

·கிச்சன் அலமாரிகளில் 'சைல்டு புருஃப் லாக்' போட்டு இருந்ததில்லை.

·புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

·சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டியதில்லை.

·பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

·நாங்கள் விளையாடியது நிஜநண்பர்களிடம் தான் நெட்நண்பர்களிடம் இல்லை.


லீவ் விட்டால் தாத்தா ,பாட்டி  வீட்டுக்குப் போய்  கும்மாளம் அடித்தோம்.

·தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் மினரல் வாட்டர் பாட்டில் தேடியதில்லை.

·ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

·அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

·காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

·சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

·உடல் வலிமை பெற ஊட்டச்சத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

·எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

·எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் "பணம்.. பணம்.." என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர்.

அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.

·அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள "ஏலேய்ய்ய்.." என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

·உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.

.·எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

·எங்களிடம் செல்போன், டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.

·வேண்டும்பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

·எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமூகச் செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.


எங்கள் வீடுகளில் தபால்க்காரர் தினமும் எதிர்பார்க்கப்படும் வி ஐ பி ...!!!அவர் உறவினர்களும்,நண்பர்களும் கைப்பட எழுதிய கடிதங்களை கொண்டு வந்தார்...இன்று போல  junk மெயில்லை அல்ல ...

·உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.

·நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம்; ஆனால் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

·இலவசம் பெறும் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை.

·இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்போது சொல்லுங்கள்

Sunday, 14 September 2014

தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....





தவறாக பொருள் கொள்ளப்படும் பழமொழிகள்....


1.ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்த
பண்ணு...
தப்புங்க தப்பு,,,
ஆயிரம் பேரிடம் போய்
சொல்லி ஒரு கல்யாணத்த பண்ணு... இதாங்க
சரி...


2.படிச்சவன் பாட்டை கெடுத்தான்,
எழுதுனவன் ஏட்டை கெடுத்தான்....
இதுவும் தப்பு
சரியானது என்னன்னா ...........
படிச்சவன் பாட்டை கொடுத்தான் ,
எழுதுனவன் ஏட்டை கொடுத்தான் ...

.
3.ஆயிரம் பேரை கொன்றவன்
அரை வைத்தியன்...
இது பேரை அல்ல வேரை (மூலிகை வேரை )
ஆயிரம் வேரை கொன்றவன்
அரை வைத்தியன்.......


4.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு ....
சூடு அல்ல சுவடு...
சந்தையில்
மாட்டை வாங்கும்போது அது பதிக்கும் தடம்
சுவடு.. அழுத்தமான சுவட்டை பதிக்கும்
மாடே அதிக பலம் வாய்ந்தது...
ஒரு சுவட்டை பார்த்தாலே மாட்டின் பலம்
புலனாகும்....


5.அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த
ராத்திரியில் கொடை புடிப்பான்....
அர்பணித்து வாழ்ந்து வந்தால் அர்த்த
ராத்திரியிலும் கொடை கொடுப்பான்....
வள்ளல் ஆனவரை கஞ்சனாக
மாற்றி விட்டோம் ...


காலப்போக்கில்....நம் முன்னோர்கள் நம் நல்வாழ்வுக்காக
சொல்லி வைத்ததை நாம் பிறரை குறை கூற உபயோகிக்கிறோம்..

Saturday, 13 September 2014

திராட்சைப்பழம் தரும் நன்மைகள்








வயிற்றுப்புண்,மலச்சிக்கல் போக்கும் திராட்சை!

திராட்சைப்பழம்ருசியானது என்பது எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.

அல்சரில்  அவதிப்படுகிறவர்களுக்கு  இந்த திராட்சை அற்புதமான மருந்து. 
காலையில்  வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடித்து வந்தால் ... அல்சர் குணமாகும் . அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். 

நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.
மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்கள் . 

இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டு காலயில்  எழுந்ததும்  அதை நசுக்கி அந்த சாறை குதித்து வந்தால் ஓரிரு நாட்களில் பிரச்சினை சரியாகிவிடும் . 
இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். 
கர்ப்ப ஸ்திரீகளுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டால்  பலன் கிடைக்கும்.

எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது.




Friday, 12 September 2014

சிறுநீரகக் கல் - சில தகவல்







சிறுநீரகக் கல் என்பது இப்போது ஆண்களுக்கு மட்டும் அல்ல பெண்களுக்கும் சகஜமான ஒரு விஷயமாகி விட்டது. வேலை காரணமாக பெண்களும் இப்போது அதிக நேரம் தண்ணீர் குடிக்காமல் மறந்து விடுகின்றனர். அதிக நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தாலும், தவறான உணவுப் பழக்கங்கள் என்று உள்ளதால் அவர்களுக்கும் சிறுநீரகத்தில் கல் வர வாய்ப்புள்ளது. கால்சியம் அதிகமாக உள்ள பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்ளும் போது, அது நாம் உண்ணும் காய்கறிகள் மற்றும் கீரை வகையில் உள்ள ஆக்சலேட் அமிலத்துடன் சேர்ந்து பி.எச்.8 போன்ற உப்பாக மாறுகிறது.
அது வயிறு, சிறு மற்றும் பெருங்குடல்களில் முழுவதும் உறைந்து ரத்தத்தில் சேரும்போது சிறுநீரகத்தில் வடிகட்டப்படுகிறது. கால்சியம் என்ற பொருள் உடலின் எலும்புகளில் மட்டுமின்றி ரத்தத்திலும், தசைகளிலும் ஊறி பொறிந்து கிடக்கின்றன. சில சமயத்தில் அவையும் கற்களாக மாற வாய்ப்புகள் உள்ளன. சிறுநீரகத்தில் உள்ள கால்சியம் ஆக்சலேட் அல்லது வெறும் ஆக்சலேட் சிறு நீரக நெஃப்ரான் குழாய்களில் பதிந்து செல் மற்றும் நியூக்ளியர் பாதிப்பை  உண்டாக்குகிறது. இந்த உப்புக்கள் தினமும் நாம் ஒன்றரை அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர், பழச்சாறு போன்றவை அருந்தும் போது அகன்று சிறுநீரில் வெளிவந்து விடும். இப்படித்தான் ஒரு சுழற்சியில் நம் உடலில் உள்ள பாதுகாப்பு மெக்கானீசம் நமது சிறுநீரக சம்பந்தப்பட்ட உறுப்புகளை சுத்தம் செய்து நம்மை ஆரோக்கியமாக வைக்கிறது.
சிறுநீர் கற்கள் எப்படி உண்டாகிறது?
குடும்ப பாரம்பரியம் இதற்கு முக்கிய காரணம். ஆக்சலேட் நிறைந்த காய்கறி உணவுகள், தண்ணீரில் உள்ள தாதுப்பொருட்கள், மாமிசம், அதிக புரதச் சத்துள்ள உணவுகள் ஆகியவை சிறுநீர் கற்கள் உருவாக முக்கிய காரணம் ஆகும்.  இதற்கு கீழ்கண்டவற்றை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்.
1. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. எல்லாச் சத்துகளும் கலந்த சமச் சீரான உணவை உட்கொள்ள வேண்டும்.
3. ஃபைபர் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
4. பிரத்யேக உறுப்புகளின் சுத்தமும் பராமரிப்பும் முக்கியம்!

சிறுநீரகக் கற்கள் யாருக்கு உண்டாகிறது?
30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த பிரச்னை வருவதற்கு வாய்ப்பு அதிகம். ஏனெனில், ஆண்கள், வேலை காரணமாக வெயிலில் செல்கின்றனர். கடும் வேலை பளு காரணமாக தண்ணீர் குடிக்காமல் சிறுநீர் கற்கள் ஏற்படுகிறது. டெஸ்டோஸ்டிரோன் ஆன்ட்ரோஜன் என்ற ஹார்மோன்கள் ஆக்சலேட்டை உடலில் அதிகமாக உற்பத்திச் செய்கின்றன.
சிறுநீரகக் கல் உருவானது அறிகுறி:
அடி வயிற்றில் வலி இருக்கும். குமட்டல், வாந்தி, படபடப்பு, சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறலாம். இப்படி இருந்தால் மருத்துவரை உடனே சந்திக்க வேண்டும்.   ஙீக்ஷீணீஹ். மிக்ஷிறி   மற்றும் 24 மணி நேர யூரின் டெஸ்ட் செய்ய வேண்டும்.
சிறுநீரகக் கல் உருவானது எப்படித் தெரியும்?
மலைப் பகுதியான வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர் போன்ற ஏரியாக்களில் தண்ணீரில் சால்ட்கள் அதிகமுள்ளன. அந்த ஏரியாவின் பள்ளியில் உள்ள சிறுவர்கள் அடி வயிறு வலிக்கிறது என்று சொன்னதால் அவர்களுக்கு டெஸ்ட் செய்து பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது தெரிய வந்திருக்கிறது. மாம்பழம், சீதாப்பழம் போன்றவை அதிக ஆக்ச லேட் கொண்டவை. பால், தயிர் மற்றும் பால், பொருட்கள் போன்றவை மூலம் கால்சியம் உள்ளே செல்வதால் உடலில் உள்ள உறுப்புகளில் கால்சியம் ஊறித் ததும்பிய நிலையில் இருக்கும்.
தவிர தொடர்ந்த சில கெட்ட பழக்கங்கள், தவறான உணவுகள், வேகமான லைஃப் ஸ்டைல், அதிகமான வேலைகள், டென்ஷன் போன்றவை பி.பி. போன்ற பிரச்னைகளுக்கு மட்டுமல்ல சிறுநீரகக்கல்லுக்கும் ஒரு காரணம். முறையான வாழ்க்கை ஆரோக்கியமான உணவு நல்ல உறக்கம். மன அழுத்தமில்லா நிலை போன்றவை கிட்னி ஸ்டோனுக்கான சிகிச்சை எடுப்பவர்களுக்கு மிக முக்கியம். சிறுநீர் கற்கள் உற்பத்தியாவதை தடுப்பது மருந்துகளில் இல்லை. அது நம் கையில்தான் உள்ளது. கிட்னி ஸ்டோன் பிரச்னைகளால் வலி மட்டுமல்லாமல் இறப்புகளும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் சொல்கின்றன. அதனால் உணவில் கவனமாக இருங்கள்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்:
தேநீர், பருப்புக் கீரை
வாழைப்பூ, வாழைக்காய், கொள்ளு
கேசரி பருப்பு
மாம்பழம், சீதாப்பழம்
அரைக்கீரை, முருங்கைகாய்
தாமரைத்தண்டு, எள்
பச்சைமிளகாய், 
உட்கொள்ள வேண்டியவை:
நிறைய தண்ணீர்,
பழச்சாறு (எலுமிச்சை, மாதுளம், தர்பூசணி)
கேழ்வரகு
புழுங்கல் அரிசி
பருப்பு, காய்ந்த பட்டாணி
கோஸ், கேரட், வெங்காயம், முள்ளங்கி, பாகற்காய், அவரை, வெண்டைக்காய்.


(Courtesy-Internet)

Wednesday, 10 September 2014

கிரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!!!





கிரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும்  நன்மைகள்!!!

கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும் பல திரையுலக நட்சத்திரங்களின் அழகின் இரகசியம் என்னவாக இருக்குமென்றால் அது 
கிரீன் டீயாகத் தான் இருக்க முடியும். பலரிடம் கிரீன் டீயைப் பற்றி கேட்டால் அனைவரும் சொல்வது, 
கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்லாமல், முகம் பொலிவாக இருக்கும்" என்பது தான்.
ஆனால் கிரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த கிரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், என்ன மாதிரியான அழகு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!




இளமை தோற்றம்.

கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு கிரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.

பருக்கள்.
பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே 
கிரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

சரும பாதுகாப்பு.

கிரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமில்லை ,இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.

அழகான சருமம்.
எப்போது சருமத்தில் டாக்ஸின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்ஸின்களை முற்றிலும் போக்கும் திறன் 
கிரீன் டீயில் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் 
கிரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.


சரும புற்றுநோய்.
சருமத்தின் மீது அதிகப்படியான சூரியனின் புறஊதாக்கதிர்கள் பட்டால், சில சமயங்களில் சரும செல்கள் பாதிப்படைந்து, சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அத்தகைய தாக்கத்தை தடுத்து, சருமத்திற்கு சரியான பாதுகாப்பை 
கிரீன் டீ கொடுக்கும்.

எடை குறைவு.

கிரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, செரிமானப் பிரச்சனையை சரிசெய்யும். அதாவது,
கிரீன் டீ உண்ணும் உணவை சரியாக செரிமானமடைய வைத்து, சாப்பிட வேண்டிய நேரத்தில் மட்டும் சாப்பிட வைக்கும். இதனால் தான் கிரீன் டீ குடித்தால், உடல் சிக்கென்று ஸ்லிம்மாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.




முடி உதிர்தல்.
நீண்ட நாள் பிரச்சனை என்றால் அது முடி கொட்டுவது தான். இத்தகைய பிரச்சனைக்கு கிரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் கிரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் குறைக்கும் .

Tuesday, 9 September 2014

இட்லி சாப்பிடுங்கள்...








இட்லி சாப்பிடுங்கள்!

நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.
அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.
அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதல்ல ... எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.
எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.

Sunday, 7 September 2014

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்...






வெங்காயத்தில் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகை இருக்கிறது. ஜலதோஷம் வந்தால் ஒரு சின்ன வெங்காயத்தை மென்னு தின்று, வெந்நீர் குடித்தால் ஜலதோஷம் குறையும், தும்மல், நீர்க்கடுப்பு குணமாகும். வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.


நெஞ்சு படபடப்பு
நெஞ்சில் படபடப்பு ஏற்பட்டால் சின்ன வெங்காயத்தை தின்று வெந்நீர் குடித்தால் குணமாகும். குறிப்பாக இதய நோயாளிகளுக்கு இப்படிபட்ட பிரச்னைகள் வரும்போது முதலுதவி சிகிச்சையாக இந்த முறையை செய்யலாம். வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு குறைந்து, இதயம் பலமாகும்.

மூல நோய்
மூல நோய் இருப்பவர்கள் உணவில் அதிகமாக வெங்காயம் சேர்ப்பது நல்லது. மோரில் சின்ன வெங்காயத்தை நறுக்கி குடித்தாலும் பலன் கிடைக்கும்.

வெங்காயச்சாறு
* வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* புகை பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

* தேள் கொட்டிய இடத்தில் வெங்காயச்சாறை தேய்த்தால் விஷம் ஏறாது. அதேபோல் படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை தடவினாலும் மறைந்துவிடும்.

* வெங்காயச் சாறுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.

* வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து சாப்பிட்டால் சீதபேதி குணமாகும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.

* வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, அஜீரணம் சரியாகும்.

Friday, 5 September 2014

பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....




* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து......!
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக்கும்......!
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!





* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.....!
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது......!
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....

Wednesday, 3 September 2014

பசி வந்திடப்பத்தும் பறந்து போகும்....








பசி வந்திடப்பத்தும் பறந்து போகும்... 


நாம் அடிக்கடி கேட்கும் பழமொழி....

அந்த பத்து....என்னென்னவென்று தெரியுமா?

அவைதான்.....
1. பெருமையோடு வாழ்தல்
2. குடும்பப்பாங்குடன் மிளிர்தல்
3. நல்ல உயர்தாமான கல்வி
4. நோயற்ற வலிமையான உடல் நலம்
5. சிறந்த அறிவுடைமை
6. பிறருக்கு ஈயும் நற்குணம்
7. நாழ்ந்த நிலை தியானம்
8. தவமாகிய உயரிய பண்பு
9. நலன்களுடன் கூடிய நல் வாழ்வு
10.நல்ல தொழில்

மானங் குலம்கல்வி அறிவுடையாமை
தானம் தவம் உயர்ச்சி தாளான்மை - தேனின்
கசிந்து வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்...


-----------ஔவையார்

Tuesday, 2 September 2014

டீ .வீ .சீரியல்களில் பெண்கள் சித்தரிக்கப்படும் விதம்...








பார்த்தாலே போதும்...

மனுஷன்/மனுஷி தலையை பிய்த்துக்கொண்டு பாயை பிராண்ட ஆரம்பித்து விடுவோம்!

அதிலும்,இந்த சீரியல் பெண்கள் இருக்கிறார்களே!!! அவர்களைப்போல இந்த கிரகத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் தெரியவில்லை!!!

நான் பார்த்தவரையில், டி வீ  பெண்களின் பிம்பம் நிஜப்பெண்ணின் பிரதிபலிப்பில்  இருந்துரொம்பவே  மாறுபட்டது.

# டி வீ  ஹீரோயின்  எப்போதுமே...நல்லவள்...வல்லவள்...நாலும் தெரிந்தவள்.

#எப்போதுமே  கூட்டுக்குடும்பதையே விரும்புவாள்...என்ன இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக சகித்துக்கொண்டு  குடும்பத்தை அனுசரித்துக்கொண்டு வாழ்வாள்.

#டி வீ  பெண்கள் பேங்க் லாக்கர் பற்றி கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள் போலும்....அதனால் தான் வீட்டில் இருக்கும் அத்தனை நகைகளையும் சதா சர்வ காலமும் மாட்டிக்கொண்டு .திரிவார்கள்..(heroine மட்டும் விதிவிலக்கு )
#கதாநாயகி -நல்லவள்-எப்போதுமே  சிம்பிள் ஆக உடை உடுத்துவாள்.அளவாக நகை அணிவாள்...

வில்லி உடை அலங்காரம்,மேக் அப் ,நகைகள்..எல்லாமே ஓவராகத்தான் இருக்கும்.


#மாமியார்/ நாத்தநார்  வில்லிகளாக இருந்தால் (வேற யாரு இன்னும் suitable !!!) விதவிதமாக ரூம் போட்டு  யோசிக்காமலே கொடுமைகள் செய்வார்கள்! அவர்கள் கொடுமைகள் செய்யச் செய்ய டி.ஆர்.பீ. rating எகிறும்!!!!!
நல்ல ஹீரோயினோ அத்தனையும் தாங்கிக்கொள்வாள்.(அப்போதும் டி ஆர் பீ எகிறும்!!!!!)

#டிவீ  பெண்கள் எல்லோருமே உச்சஸ்தாயியில் தான் பேசுவார்கள்...அழுவார்கள்...

#அவர்கள் வாழ்கை ஒரு roller coaster  சவாரி போல...
திடீர் என்று கோடீஸ்வரர்கள் ஆவார்கள்..
திடீர் என்று நடுதெருவுக்கு வருவார்கள்...அடுத்த எபிசொடிலேயே பெரிய பிசினஸ் ஆரம்பிப்பார்கள்...
பென்ஸ் காரில் வலம் வருவார்கள்...(ஏனோ மாத சம்பள வேலையில் அதிகம் ஹீரோயின்கள் இருக்கமாட்டார்கள்...)

#போலி சாமியார் ,பிராடு ஜோசியர் போன்றவர்கள் வாக்கே கதாநாயகி தவிர மற்ற பெண்களுக்கு வேத வாக்கு ....எபிசொட் முடிவில் அவளே இந்த முட்டாள் வில்லி காங்கை இந்த பிராடுகளின் பிடியில்  காப்பாற்றுவாள்....
#டி.வீ.பெண்கள் வீட்டில் அரிசி,பருப்பு,ஷெல்பில்  'விஷம்' என்ற பெயர் எழுதிய விஷ பாட்டில் வைத்திருப்பார்கள்!!!!

# போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,ஜெயில் எல்லாம்  டி.வீ.ஹீரோயின்   சென்று வரும் பிக்னிக் ஸ்பாட்கள் !!!!!

#கடைசி எபிசோட்களில் ஹீரோயின்  பொங்கி எழுவாள்...வில்லி  திருந்துவாள்...ஹீரோயின்  மன்னித்துவிடுவாள்..அவள்  தான்  ரொம்ப...நல்லவள் ஆச்சே!!!!!!

# டி வீ ஹீரோயின்கள்  எப்பேர்பட்ட குடும்ப பாரத்தையும் அலேக்காக சுமப்பாள்!

#ராட்ஷசி மாமியார்...உதவாக்கரை உறவுகள்...பூச்சி போன்ற புருஷன்...பிசினஸ்  போட்டிகள்...வழக்குகள்...வியாதிகள்...
குழந்தை...சமையல்..என்று எல்லாமே ' ஜஸ்ட் லைக் தட்'  handle  செய்வாள்.

#ஹீரோயனே குடும்பத்தின் முக்கிய சம்பாத்தியம் செய்வாள்.

#ஆனால் ஒன்று...நம்  பெண்கள் நாள் 

முழுவதும் சீரியல் பார்பார்கள்...


டி வீ பெண்கள்...சீரியல் பார்ப்பதாக

எந்த சீரியலிலும் நாம் பார்ப்பது இல்லை !!!!!!

Monday, 1 September 2014

அடுக்களையில் ஆரோக்கியம் !








நாம் அன்றாட சமையலுக்கு பொதுவாக பயன் படுத்தக்கூடிய மசாலாக்கள் உணவில் சுவை கூட்டுவதாகவும், சத்து நிறைந்த உணவாகவும் கருதப்படுகிறது, மேலும் அவை கை வைத்தியத்திற்கும் உதவுகின்றன..

1. கொத்தமல்லி
சமையலுக்கு சிறந்த நண்பனாக உதவி புரிவது கொத்தமல்லி விதைகள். இதை சமையலில் தனியாக பயன்படுத்தாமல் மசாலா பொருள்களுடன் சேர்த்து பயன்படுத்துகின்றனர். கொத்தமல்லி விதைகள் ஆயுர் வேதத்தில் உடல் மற்றும் மனதை சமநிலைப்படுத்து வதற்காகப் பயன்படுத்துகின்றனர்..
ஆரோக்கியமான உடலுக்கு நன்மை சேர்க்கும் கொத்தமல்லி விதைகள் செரிமான பிரச்சினையை தவிர்த்து மூச்சுப் பிரச்சினைகள், சிறுநீர் கோளாறுகள், பித்தம் அதிகமாவதால் ஏற்படக்கூடிய தோல் வியாதி ஆகியவற்றை சரி செய்கிறது. பித்தம் அதிகமாகி பித்த வாந்தி ஏற்பட்டால் கொத்தமல்லி விதைகளை இடித்து போட்டு காபி குடித்தால் பித்தம் தெளியும்.

2. இஞ்சி
பெரும்பாலானோர் வீட்டில் இஞ்சி இல்லா சமையலை காண்பது அரிது. சமையலறையில் இருக்கவேண்டிய மிக முக்கியமான ஒரு நறுமணப் பொருள் இஞ்சி. இது உணவிற்கு சுவையை கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செரிமானத்திற்கும் பயன்படுகிறது.
சிறந்த மருந்து என அழைக்கப்படும் இஞ்சியானது கபம் மற்றும் வாதம் தீவிரமடைவதால் ஏற்படக்கூடிய மூச்சு பிரச்சினைகளுக்கு சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது.
காய்கறிகள் மற்றும் பயறுகள் உட்கொள்வதால் நமது உடலில் ஏற்படக்கூடிய உற்சாகத்தை, நறுமணப் பொருளான இஞ்சி நமக்கு தருகிறது. மேலும் சளி, இருமலை குணப்படுத்தக்கூடிய மூலிகைத் தேநீராகவும் பயன்படுத்தபடுகிறது. சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் இஞ்சியை பயன்படுத்தலாம் ..
இது பெரும்பாலும் சுவையைக் கூட்டுவதற்காக ஊறுகாய் மற்றும் குழம்பு வகைகளில் சேர்க்கப்படும் நறுமணப் பொருளாக உள்ளது. இது செரிமானக் கோளாறைப் போக்கி கிருமிநாசினியின் தூண்டியாக செயல்படுகிறது. அதாவது உடலில் திரட்டப்பட்ட நச்சு களை சுத்தப்படுத்தும்போது அவற்றிலிருந்து வெளி யாகும் சிறந்த சத்துக்களை உறிஞ்சி நமது உடலைப் பாதுகாக்கிறது. கல்லீரல் மற்றும் கணையத்தின் செயல்பாட்டை இது மேம்படுத்துகிறது.

3. வெந்தயம்
உடல்நலத்திற்குத் தேவைப்படும் சிகிச்சைமுறை பண்புகளை மிகச்சிறப்பாக கொண்டுள்ளது வெந்தயம். இந்த வெந்தயமானது செரிமானம், மூச்சுக் கோளாறு, நரம்பு மற்றும் மாதவிடாய் கோளாறுகளை சீர்படுத்த பெரிதும் பயன்படுகிறது, மேலும் தோல்களை தூய்மைப் படுத்துகிறது.
எடைக்குறைப்புக்கு மிக எளிய முறையில் வெந்தயம் பயன்படுத்தப்படுகிறது. இரவில் ஊறவைத்த வெந்தயத் தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. இந்திய சமையலில் வெந் தயத்தை வாசனைப்பொருளாகவும் பயன்படுத்துவார்கள்.

4. மஞ்சள்
இந்தியாவின் குங்குமப்பூ என்று மஞ்சளை குறிப்பிடுகிறார்கள். கசப்பை கட்டுபடுத்தக்கூடிய காரமான வாசனை கொண்ட மஞ்சள் பல மருத்துவ குணங்களைக் கொண் டுள்ளது. நம் உடலில் உள்ள நச்சுப் பொருள்களை அழிப்பதில் மஞ்சளுக்குப் பெரிய பங்குண்டு. டைப் 2 நீரிழிவுக்காரர்களுக்கும் மஞ்சள் சிறந்த மருந்து.
மஞ்சளானது இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது குளூக்கோஸ் கட்டுப்பாட்டை ஒரே அளவில் தக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. நம் உடம்பில் எந்த இடத்தில் புண் வந்தாலும் வீக்கத்தைக் குறைத்து விரைவில் ஆற வைப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் மிகச் சிறந்த ஆன்ட்டி ஆக்சிடன்ட் மருந்தாகும்.
நாம் சாப்பிடுகிற உணவுப் பொருள்களின் வழியே உள்ளே செல்கிற நச்சுக் கிருமிகளை அழித்து, நம் ரத்தத்தை சுத்திகரிக்க வல்லது.

5. சீரகம் - சீர் + அகம் = சீரகம் . நம்முடைய உடலை சீர்படுத்தி ஆரோக்கியமாக வைத்து கொள்வதில் சீரகத்திற்கு ஈடு இணையே இல்லை. தண்ணீரில் சிறிது சீரகத்தை போட்டு காய்ச்சி குடித்து வந்தால் ஜீரணத்திற்கு நல்லது . மேலும் நாளைடைவில் உடலும் பொன் நிறத்தில் மின்னும்.
பொன்னாங்கண்ணி கீரையுடன், பருப்பு, சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டால் ஒரு ஸ்பூன் சீரகத்தை மென்று சாப்பிடலாம் . இது சீக்கிரம் ஜீரணம் ஆகும்.


பசு நெய் அளவோடு சேர்ப்பது மிகவும் நல்லது.