badge

Followers

Wednesday, 10 September 2014

கிரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!!!





கிரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும்  நன்மைகள்!!!

கிரீன் டீ குடிப்பதால் உடல் எடை குறையும் என்று அனைவருக்குமே நன்கு தெரிந்த விஷயம் தான். மேலும் பல திரையுலக நட்சத்திரங்களின் அழகின் இரகசியம் என்னவாக இருக்குமென்றால் அது 
கிரீன் டீயாகத் தான் இருக்க முடியும். பலரிடம் கிரீன் டீயைப் பற்றி கேட்டால் அனைவரும் சொல்வது, 
கிரீன் டீ குடித்தால், உடல் எடை குறையும். அதுமட்டுமல்லாமல், முகம் பொலிவாக இருக்கும்" என்பது தான்.
ஆனால் கிரீன் டீ குடிப்பதால், தலை முதல் கால் வரை நிறைய அதிசயத்தக்க நன்மைகள் நிறைந்துள்ளன. ஏனெனில் இதில் உள்ள அளவுக்கு அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் இதர ஆரோக்கியமான பல ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. சரி, இப்போது இந்த கிரீன் டீ குடிப்பதாலும், சருமத்திற்கு பயன்படுத்துவதாலும், என்ன மாதிரியான அழகு நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!




இளமை தோற்றம்.

கிரீன் டீயில் எண்ணற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், அவை சருமத்தில் பழுதடைந்துள்ள செல்களை புதுப்பித்து, முதுமைத் தோற்றம் விரைவில் ஏற்படுவதை தடுக்கும். அதற்கு கிரீன் டீயை குடித்தாலோ அல்லது அதனை சருமத்திற்கு தேய்த்து, மசாஜ் செய்து வந்தாலோ, அவை சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களை தடுத்து, ஆங்காங்கு இருக்கும் கருமையையும் போக்கும்.

பருக்கள்.
பருக்கள் அடிக்கடி உடைந்து பரவுவதற்கு காரணம், சருமத்தில் டாக்ஸின்கள் தங்கியிருப்பதே ஆகும். ஆகவே 
கிரீன் டீயை குடித்தால், அவை சருமத்தின் அடியில் தங்கியிருக்கும் டாக்ஸின்களை வெளியேற்றி, பருக்கள் அதிகம் ஏற்படுவதைத் தடுக்கும்.

சரும பாதுகாப்பு.

கிரீன் டீயை சருமத்திற்கு தேய்த்தாலோ அல்லது குடித்தாலோ, அவை சருமத்தை தாக்கும் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தை எதிர்த்து, செல்கள் பாதிப்படையாமல் பாதுகாக்கும். அதுமட்டுமில்லை ,இவை சருமத்தின் நிறம் மாறாமலும் தடுக்கும்.

அழகான சருமம்.
எப்போது சருமத்தில் டாக்ஸின்கள் அதிகம் இருக்கிறதோ, அப்போது தான் சருமம் பொலிவின்றி காணப்படும். ஆகவே இத்தகைய டாக்ஸின்களை முற்றிலும் போக்கும் திறன் 
கிரீன் டீயில் உள்ளது. எனவே அழகான மற்றும் பொலிவான சருமம் வேண்டுமெனில் 
கிரீன் டீயை தொடர்ந்து பருகுவது நல்லது.


சரும புற்றுநோய்.
சருமத்தின் மீது அதிகப்படியான சூரியனின் புறஊதாக்கதிர்கள் பட்டால், சில சமயங்களில் சரும செல்கள் பாதிப்படைந்து, சரும புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. ஆகவே அத்தகைய தாக்கத்தை தடுத்து, சருமத்திற்கு சரியான பாதுகாப்பை 
கிரீன் டீ கொடுக்கும்.

எடை குறைவு.

கிரீன் டீ உடலின் மெட்டபாலிசத்தின் அளவை அதிகரித்து, செரிமானப் பிரச்சனையை சரிசெய்யும். அதாவது,
கிரீன் டீ உண்ணும் உணவை சரியாக செரிமானமடைய வைத்து, சாப்பிட வேண்டிய நேரத்தில் மட்டும் சாப்பிட வைக்கும். இதனால் தான் கிரீன் டீ குடித்தால், உடல் சிக்கென்று ஸ்லிம்மாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.




முடி உதிர்தல்.
நீண்ட நாள் பிரச்சனை என்றால் அது முடி கொட்டுவது தான். இத்தகைய பிரச்சனைக்கு கிரீன் டீ ஒரு நல்ல தீர்வை கொடுக்கும். எப்படியெனில் கிரீன் டீயை வைத்து, தலைக்கு மசாஜ் செய்தால், அவை மயிர்க்கால்களை வலுவாக்கி, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும். மேலும் இது நரைமுடி ஏற்படுவதையும் குறைக்கும் .

1 comment:

  1. அழகும் பொலிவும் தந்திடும்
    பசுமையான க்ரீன்-டீ பதிவுக்கும்
    விளக்கங்களுக்கும் மிக்க நன்றி.

    கிரீன் டீ இப்போ யாராவது கலந்து கொடுத்தால் பரவாயில்லை. :)

    தாங்கள் சொல்வதுபோல என் உடம்பும் ஸ்லிம்மாகி, அழகும், பொலிவும் ஏற்படுகிறதா என நான் சோதிக்கலாம். :)

    ReplyDelete