பார்த்தாலே போதும்...
மனுஷன்/மனுஷி தலையை பிய்த்துக்கொண்டு பாயை பிராண்ட ஆரம்பித்து விடுவோம்!
அதிலும்,இந்த சீரியல் பெண்கள் இருக்கிறார்களே!!! அவர்களைப்போல இந்த கிரகத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் தெரியவில்லை!!!
நான் பார்த்தவரையில், டி வீ பெண்களின் பிம்பம் நிஜப்பெண்ணின் பிரதிபலிப்பில் இருந்துரொம்பவே மாறுபட்டது.
# டி வீ ஹீரோயின் எப்போதுமே...நல்லவள்...வல்லவள்...நாலும் தெரிந்தவள்.
#எப்போதுமே கூட்டுக்குடும்பதையே விரும்புவாள்...என்ன இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக சகித்துக்கொண்டு குடும்பத்தை அனுசரித்துக்கொண்டு வாழ்வாள்.
#டி வீ பெண்கள் பேங்க் லாக்கர் பற்றி கேள்விப் பட்டிருக்க மாட்டார்கள் போலும்....அதனால் தான் வீட்டில் இருக்கும் அத்தனை நகைகளையும் சதா சர்வ காலமும் மாட்டிக்கொண்டு .திரிவார்கள்..(heroine மட்டும் விதிவிலக்கு )
#கதாநாயகி -நல்லவள்-எப்போதுமே சிம்பிள் ஆக உடை உடுத்துவாள்.அளவாக நகை அணிவாள்...
வில்லி உடை அலங்காரம்,மேக் அப் ,நகைகள்..எல்லாமே ஓவராகத்தான் இருக்கும்.
#மாமியார்/ நாத்தநார் வில்லிகளாக இருந்தால் (வேற யாரு இன்னும் suitable !!!) விதவிதமாக ரூம் போட்டு யோசிக்காமலே கொடுமைகள் செய்வார்கள்! அவர்கள் கொடுமைகள் செய்யச் செய்ய டி.ஆர்.பீ. rating எகிறும்!!!!!
நல்ல ஹீரோயினோ அத்தனையும் தாங்கிக்கொள்வாள்.(அப்போதும் டி ஆர் பீ எகிறும்!!!!!)
#டிவீ பெண்கள் எல்லோருமே உச்சஸ்தாயியில் தான் பேசுவார்கள்...அழுவார்கள்...
#அவர்கள் வாழ்கை ஒரு roller coaster சவாரி போல...
திடீர் என்று கோடீஸ்வரர்கள் ஆவார்கள்..
திடீர் என்று நடுதெருவுக்கு வருவார்கள்...அடுத்த எபிசொடிலேயே பெரிய பிசினஸ் ஆரம்பிப்பார்கள்...
பென்ஸ் காரில் வலம் வருவார்கள்...(ஏனோ மாத சம்பள வேலையில் அதிகம் ஹீரோயின்கள் இருக்கமாட்டார்கள்...)
#போலி சாமியார் ,பிராடு ஜோசியர் போன்றவர்கள் வாக்கே கதாநாயகி தவிர மற்ற பெண்களுக்கு வேத வாக்கு ....எபிசொட் முடிவில் அவளே இந்த முட்டாள் வில்லி காங்கை இந்த பிராடுகளின் பிடியில் காப்பாற்றுவாள்....
#டி.வீ.பெண்கள் வீட்டில் அரிசி,பருப்பு,ஷெல்பில் 'விஷம்' என்ற பெயர் எழுதிய விஷ பாட்டில் வைத்திருப்பார்கள்!!!!
# போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,ஜெயில் எல்லாம் டி.வீ.ஹீரோயின் சென்று வரும் பிக்னிக் ஸ்பாட்கள் !!!!!
#கடைசி எபிசோட்களில் ஹீரோயின் பொங்கி எழுவாள்...வில்லி திருந்துவாள்...ஹீரோயின் மன்னித்துவிடுவாள்..அவள் தான் ரொம்ப...நல்லவள் ஆச்சே!!!!!!
# டி வீ ஹீரோயின்கள் எப்பேர்பட்ட குடும்ப பாரத்தையும் அலேக்காக சுமப்பாள்!
#ராட்ஷசி மாமியார்...உதவாக்கரை உறவுகள்...பூச்சி போன்ற புருஷன்...பிசினஸ் போட்டிகள்...வழக்குகள்...வியாதிகள்...
குழந்தை...சமையல்..என்று எல்லாமே ' ஜஸ்ட் லைக் தட்' handle செய்வாள்.
#ஹீரோயனே குடும்பத்தின் முக்கிய சம்பாத்தியம் செய்வாள்.
#ஆனால் ஒன்று...நம் பெண்கள் நாள்
முழுவதும் சீரியல் பார்பார்கள்...
டி வீ பெண்கள்...சீரியல் பார்ப்பதாக
எந்த சீரியலிலும் நாம் பார்ப்பது இல்லை !!!!!!
நல்லதொரு அருமையான அலசல். கடைசியில் பச்சை எழுத்துக்களில் காட்டியுள்ளவை மேலும் ரஸிக்க வைத்த உண்மைகள்.
ReplyDeleteபாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
நன்றி.தங்கள் பாராட்டுக்கும் ,ஊக்கத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் V.G.K.Sir
Deleteநீங்க சீரியல் பாக்கறீங்களா மேடம் ?? :) வேண்டாம் அவங்க சம்பாதிக்க அப்படியெல்லாம் நடிக்கிறாங்க அதை பாக்கிற நமக்கு என்ன கிடைக்கிறது???
ReplyDeleteசீரியல் பார்க்கிற பழக்கம் இருந்தா இந்நேரம் பைத்தியம் பிடிச்சிருக்குமே ,தலைவி...என்ன நீங்களும் என் கட்சி தானா?
Delete