badge

Followers

Saturday, 20 September 2014

சினிமா நமக்குக் கற்றுக்கொடுத்தது என்னவென்றால்......*இரட்டைப்பிறவிகளில் ஒருவர் நல்லவர்  என்றால் மற்றவர் நிச்சயம் கெட்டவர்  தான்...

*புவியீர்ப்பு விதிகள் போன்றவைகளுக்கு   சினிமா மனிதர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல...
சும்மா பறந்து பறந்து சண்டை போடுவார்கள்....

*ஹீரோ எந்த அளவுக்கு மார்க்கெட்டில் முக்கியமானவரோ,அந்த அளவுக்கு அவர் நடக்கும் போது ஷூ கால்களில் நெருப்புப்பொறி பறக்கும்....

*கதையில் யாராவது ரயில்வே ஸ்டேஷனில் தண்ணீர் பிடிக்க ரயிலை விட்டு இறங்கினால்,நிச்சயம்  ரயிலை தவற விட்டே ஆகணும்...

*அகம்பாவம் பிடித்த  ,பணக்கார ஹீரோயின் திருந்திவிட்டாள் என்றால் அவள் கட்டாயம் மாடர்ன் ட்ரெஸ்ஸிலிருந்து புடவைக்கு .மாறிவிடுவாள்...அவள் குடடை தலைமுடி கூட "ஏர்வமாட்டின் " தடவாமலே ஒரே நாளில் முழங்கால் வரை நீண்டு .விடும்..இப்போது அவள் ஆங்கிலம் கலக்காமல் சுத்தத்தமிழில் பேசுவாள்...பாடுவாள்...

*டாக்டர் கட்டாயம் "கரக்ட் டைமில் கொண்டுவந்து சேர்த்து விட்டர்கள்"என்று சொல்ல வேண்டும்...

*டாக்டர்/வக்கீல்  கதாபாத்திரங்கள் எந்த நேரமாக இருந்தாலும் ,எந்த இடமாக இருந்தாலும் கட்டாயம் வெள்ளை கோட்,ஸ்டெத் /கறுப்புக் கோட் சகிதம் வருவார்கள்...

*எத்தனை பேர் அடித்தாலும் வழியில் முகம் சுளிக்காத ஹீரோ,ஹீரோயின் ஒத்தடம் தரும் போது மட்டும்  "ஹா "என்று அலறுவார்...

*யாராவது பொது இடத்தில டான்ஸ் ஆட ஆரம்பித்தால் அங்கே இருக்கும் அனைவருக்குமே அதே தாளம் தப்பாமல் கூட ஆடத் தெரியும்...

*ஹீரோ பாம் ஒயர்களை வெட்டினால் விஷயம் தெரியாவிட்டால் கூட கரெக்டான ஓயரையே  கடைசி நொடியில் வெட்டுவார்.

*கதாநாயகி பாரின் லோகேஷனில்தான் கனவு கானுவாள் ...

*எல்லா பார்க்,பீச்களிலும் லாலாலா பாட ஆட்கள் தயாராக .இருப்பார்கள்..

*ஒரு விபத்தில் ஹீரோயினுக்கு ஞாபக மறதி ஏற்ப்பட்டால் மீண்டும் அதே விபத்தில் அவள் ஞாபகம் திரும்பிவிடும்...

*ஹீரோ மாறுவேடம் போட்டால் ஆடியன்ஸில் உள்ள குழந்தைக்குக்கூட அது ஹீரோ என்பது தெரியும்...ஆனால் ,வில்லன் கும்பலுக்குத் தெரியாது...ஏன் ,கதாநாயகிக்குக் கூட அடையாளம் தெரியாது...இத்தனைக்கும் ,மாறுவேஷம் என்பது ஒட்டப்பட்ட ஒரே ஒரு மரு -அல்லது ஒரு மீசை தான்!

*நகைச்சுவையாளர்கள் பொதுவாகவே ரொம்ப நல்லவர்கள் !

*ஹீரோ ஒரே பாட்டில் கூலிவேலை செய்வதில்  ஆரம்பித்து கோடீஸ்வரராகிவிடுவார்...

*வீட்டில் ஒரு பிரம்மாண்ட மாடிப்படி இருந்தால் அதில் யாராவது உருண்டு விழுந்தே ஆகவேண்டும்...

*10000 ருபாய் வேலையில் சேரும் ஹீரோவுக்கு கம்பனியில் 50000 ரூபாய் வாடகை பெறுமான வீடு .குடியிருக்கத்தரப்படும்..

*மூன்றாவது மாடியிலிருந்து ஹீரோ குதித்தாலும் ஒரு சுளுக்கு கூட வராது....

4 comments:

 1. சினிமாச்செய்திகளை
  இனிமா கொடுப்பதுபோலச்
  சொல்லி அசத்தியுள்ளீர்கள்.

  வாஸ்தவம் தான் !

  சினிமா பார்ப்பவர்களின் மூளையைச் சுத்தமாக மழுங்கச்செய்யும் இதையெல்லாம் நாம் மறுப்பதற்கே இல்லை. பகிர்வுக்குப்பாராட்டுகள் + நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. இன்னும் நிறைய points கைவசம் இருக்கு,சார்.இன்னொரு பதிவு எழுதப் போகிறேன் ,கூடியசீக்கிரம்....

   Delete
 2. நல்லாவே யோசிச்சு இருக்கீங்க! இதன் தொடர்ச்சியான, அடுத்த பதிவையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். சினிமாவில் நல்லவனா நடிப்பவன் நிஜ வாழ்க்கையிலும் நல்லவனாகவே இருப்பான் என்ற பார்முலாவை நம்பும் மக்கள் – என்று இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம்

  ReplyDelete