திருவேற்காடு கருமாரியம்மன்*
கோயில் பற்றி பார்ப்போம்,
🐉பாம்பே தலையணியாம், வேப்பிலையோ பஞ்சு மெத்தை' என அம்மன் தாலாட்டில் விவரிக்கும் திருவேற்காடு கருமாரியம்மன், மிகப்பெரிய புற்றில் கருநாகமாக அன்னை குடி கொண்டு இருந்ததும், வேம்பு வடிவமாகவே சக்தி உருமாறி நின்றதும் இங்குதான். அருள் பொழிய நாகமும், மருந்தாக வேம்பும் இங்கே காட்சி தருவது அற்புதமான காட்சி.
🐉🌸சிவபெருமான் தேவர்களின் துன்பம் நீக்வதற்காக தேவலோகம் செல்ல வேண்டிவந்தது. அப்போது உமையாளிடம் நீயே சிவனும் சக்தியுமாகி ஐந்தொழிலையும் (ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இந்த திருநீற்றினால் அருள்புரிவாயாக என்று கூறிச் சென்றார்.
🐉🌸அம்மையும் அகத்தியரிடம் தாம் ஆட்சி செய்ய தகுந்த இடம் வேண்டும் என கேட்க வேற்கண்ணி அருகில் வந்து இதுதான் சரியான இடம் என வேற்காட்டை சுட்டிக்காட்ட அவ்விடத்திலேயே தேவி ஏழு சக்திகளாகி
☄1. அந்தரக்கன்னி,
☄2. ஆகாயக்கன்னி,
☄3.பிரமணக்கன்னி,
☄4. காமாட்சி,
☄5. மீனாட்சி,
☄6.விசாலாட்சி,
☄7.கருமாரி செங்கோல் ஏந்தி காட்சி தந்தாள்.
🐉🌸இதில் கருமாரி திருவேற்காட்டில் கோயில் கொண்டு இரு உருவாய் ஆட்சி செய்தாள். பிறகு ஆறு சக்திகளும் அவரவர் இடம் சென்றனர்.
🐉🌸சக்தியாகிய கருமாரி இரண்டு உருவம் கொண்டாள். முதல் உருவம் பிரகாசத்துடன் இருந்தது.இரண்டாவது நீலநிறத்துடன் பெரிய உருவாக நின்றது.
🐉🌸கருமாரி மகாவிஷ்ணுக்கு காட்சி தந்தாள். இக்காட்சியை அகத்தியர் கண்டு போற்றினார். அப்போது அம்மன் அகத்தியரைப் பார்த்து முனிவா நான் உலக மக்கள் உய்வதற்காக பாம்பு உருவம் கொண்டு புற்றில் அமர்ந்து பலயுகாந்த காலங்கள் அருளாட்சி செய்வேன், கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவேன் என்று கருநாக வடிவம் எடுத்தாள். இவ்வாறு கருநாக வடிவம் எடுத்து அமர்ந்த புற்று இன்றும் இத்திருக்கோயிலின் அருகே உள்ளது.
🐉🌸அம்மன் இத்தலத்தில் சுயம்பு என்பது விஷேசம். மிகப்பெரிய நாகப்பெரிய நாகப் புற்று உள்ளது.
🐉🌸மரச்சிலை அம்மன் என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.இங்கு ரூபாய் நோட்டு மாலையாக அம்மனுக்கு அணிவிக்கப்படுகிறது.
🐉🌸இந்த சந்நிதியில் நாணயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. கடன் கந்து வட்டி தீர்தல், வியாதி வழக்குகளில் நொடிந்து போனவர்கள் இத்தலத்தில் வேண்டிக்கொள்கின்றனர்.
🐉🌸பூட்டுகளை கொண்டு வந்து சந்நிதி முன்பாக பூட்டி தொங்க விட்டுச் செல்வது வழக்கமாக உள்ளது. இப்படிச் செய்வதால் தங்கள் பிரச்சினைகள் தீர்வதாக கூறுகிறார்கள்.
🐉🌸பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு.
🐉🌸திருவேற்காடு தேவராம் என்ற பாடலில் திருஞானசம்பந்தர் வேற்காட்டு தலத்தைப் பற்றி பாடியுள்ளார்,திருஞானசம்பந்தர் பதிகம் பாடிய திருக்கோயிலான வேதபுரீஸ்வரர் - பாலாம்பிகை ஆலயமும் அருகிலேயே உள்ளது.
🐉🌸அகத்தியருக்குத் திருமணக் காட்சி அருளிய தலம் இது.
🐉🌸அருணகிரிநாதரும் இத்தலம் குறித்து தனது பாடல்களில் பாடியுள்ளது சிறப்பு.
🐉🌸அறுபத்து மூன்று நாயன்மார்களில் மூர்க்க நாயனார் அவதரித்த தலம் திருவேற்காடு.
🐉🌸கூரை வேய்ந்த கோவில் அமைத்து முதன் முதலில் கருமாரியம்மனுக்கு உருவமாக "ஏழு கரகங்கள்" பிரதிஷ்டை செய்தவர் மருளாளர் திரு. பாளையம் ஸ்வாமிகள்.
🐉🌸தற்போது ஒவ்வொரு கருமாரியம்மனின் திருவுருவப் படத்தில் வலது புறத்தில் பானையுடன் முகம் அமைய பெற்று மற்றும் வேப்பிலையுடன் காட்சி அளிக்கிறதே அதுதான் "கரகம்". இதன் பொருள் கருமாரியம்மனின் ஆதி உருவம் "கரகம்" என்பதுதான்.
🐉🌸மாரி என்றால் மழை போன்றவள். கருமாரி என்றால் கரியநிறத்து மழை மேகத்தை போன்று அருளை வாரி வழங்கும் அம்மன் என்று பொருள்.
☄க - கலைமகள்;
☄ரு - ருத்ரி;
☄மா - திருமகள்;
☄ரி - ரீங்காரி (நாத வடிவானவள்)
என இந்த அம்மனின் நான்கு அட்சரங்களுக்கும் பொருள் கூறுகிறது
🐉🌸மூலவரான அன்னை சுயம்புவாக சாந்தசொரூபியாக காட்சி அளிக்கிறாள். இவளுக்குப் பின்பு இருக்கும் அம்மன் கத்தி, சூலம், டமருகம், கபாலம் ஏந்தி காண்பவரை மெய்சிலிர்க்கச் செய்யும்படி காட்சி தருகிறாள்.
🐉🌸அரச மர விநாயகர், வள்ளி தெய்வயானை சமேத முருகர், பிரத்யங்கரா தேவி, நவகிரகம், சீனிவாச பெருமாள், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, காயத்ரி, மஹாலக்ஷ்மி, அங்காளம்மன், சாவித்ரி, துர்கை, ராஜராஜேஸ்வரி எனப் பல தெய்வங்களின் சந்நிதிகள் இந்த ஆலயத்தில் அமைந்துள்ளன.
🐉🌸சகல நோய்களையும் தீர்க்கும் அம்மனின் பிரசாதமான வேப்பிலையை மக்கள் பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர். தீர்த்தமும் வேப்பிலையும் தீராத நோய்களைத் தீர்க்கும் என்பது நம்பிக்கை. வேப்பிலையும் பிரம்பும் கொண்டு இங்கு மந்திரிக்கப்பட்ட மக்கள், எந்த பயமும் இன்றி மகிழ்ச்சி கொள்கிறார்கள்.
🐉🌸ராகு, கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள புற்றில் பால் ஊற்றினால் தோஷங்கள் விலகுகின்றன.
🐉🌸திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிஷேகம், உப்பு காணிக்கை, மாலை அணிவித்தல், சங்காபிஷேகம், கலசாபிஷேகம், கல்யாண உற்ஸவம், பொங்கல் வைத்தல், அக்கினி சட்டி எடுத்தல், அங்கபிரதட்சணம், கண்ணடக்கம், வெள்ளிக்காணிக்கை செலுத்தபடுகிறது.
🐉🌸ஒருமுறை சூரிய பகவான் சக்தியை அவமதித்ததால், கோபம் கொண்ட சக்தி அவனை சபித்து இருளாக்கினாள். பின்னர் கோபம் தணிந்த அன்னை சூரியனின் வேண்டுகோளுக்காக இந்த தலத்தில் அமர்ந்து சூரியனின் பூஜையைப் பெறுகிறாள் என்று வேறொரு வரலாறு கூறுகிறது.
🐉🌸புற்றில் வாழ்ந்த நாகம் ஒன்று அம்மனின் அருட்காட்சியைக் காட்டியதால் இங்கு கோயில் உருவானதாகக் கூறுகிறார்கள்.
புற்றில் இருந்த அம்மன் சுயம்புவாக வெளியானதால் கருவில் இல்லாத கருமாரி அன்னை என்று போற்றப்படுகிறாள்.
🐉🌸ஆடி மாதம் தொடங்கி புரட்டாசி வரையிலான 12 வாரங்களும் இங்கு அம்மனுக்கு சிறப்பான பண்டிகை நாள்கள். மேலும் தை மாத பிரம்மோற்ஸவம், அமாவாசை, சித்ரா பௌர்ணமி, நவராத்திரி என எல்லா மாதங்களுமே அம்மனுக்கு இங்கு விழா நாள்கள்தான்.
🐉🌸காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் பக்தர்களுக்கு ஒரு ஆன்மிக மருத்துவமனையாகவே விளங்கி வருகிறது,
🐉🌸இந்த ஆலயத்தில் இருக்கும் 'பதி விளக்கு' அணையாத விளக்கு. அம்மனையும், இந்த விளக்கையும் தரிசித்தால் மாங்கல்ய பலம் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
🐉🌸தன்னை நம்பி வரும் பெண்களுக்கு மாங்கல்ய வரமளித்து, அவர்களை சுமங்கலியாக வாழ வைக்கும் இந்த அம்மனுக்கு தாலிகளே அதிகம் காணிக்கையாக அளிக்கப்படுகிறது. செவ்வாய் தோறும் இங்கு காலை 10 மணியளவில் செய்யப்படும் மாங்கல்ய தோஷ பரிகார பூஜை சிறப்பானது.
🐉🌸தேவி கருமாரியம்மன் ஒரு நாடோடியாகத் திரிந்ததாகவும் அந்தப் பருவத்தில் அவர் சூரியக்கடவுளுக்குக் குறி சொல்வதற்காகச் சென்றதாகவும், அவரை அடையாளம் காணாத சூரியக்கடவுள் உரிய மரியாதை தராமல் அவரை அவமதித்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது, இதனால் கோபமடைந்த தேவி கருமாரியம்மன் சூரியக்கடவுளின் இடம் விட்டகன்றவுடன் சூரியனின் ஜொலிப்பும் பிரகாசமும் மறைந்து உலகம் இருண்டுவிட்டதாகவும், பின்னர் சூரியபகவன் அம்மனிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதற்கேற்ப வாரத்தின் 7ஆவது நாளை தேவிகருமாரித் தினமாகக் கடைபிடிக்கும்படி அம்மன் கேட்டுக்கொண்டதாகவும் புராணக்கதை உள்ளது. எனவே இந்தத் தலத்தின் அம்மனுக்கான சிறப்பு நாளாக ஞாயிற்றுக்கிழமை அமைந்துள்ளது.