badge

Followers

Sunday 12 February 2012

டி.வி. சீரியலில் பெண்கள்




பார்த்தாலே போதும்...மனுஷன்/மனுஷி தலையை பிய்த்துக்கொண்டு பாயை பிராண்ட ஆரம்பித்து விடுவோம்!

அதிலும்,இந்த சீரியல் பெண்கள் இருக்கிறார்களே!!! அவர்களைப்போல இந்த கிரகத்தில் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் தெரியவில்லை!!!

நான் பார்த்தவரையில், டி வீ  பெண்களின் பிம்பம் நிஜப்பெண்ணின் பிரதிபலிப்பில்  இருந்துரொம்பவே  மாறுபட்டது.

# டி வீ  ஹீரோயின்  எப்போதுமே...நல்லவள்...வல்லவள்...நாலும் தெரிந்தவள்.

#எப்போதுமே  கூட்டுக்குடும்பதையே விரும்புவாள்...என்ன இன்னல்கள் வந்தாலும் பொறுமையாக சகித்துக்கொண்டு  குடும்பத்தை அனுசரித்துக்கொண்டு வாழ்வாள்.

#கதாநாயகி -நல்லவள்-எப்போதுமே  சிம்பிள் ஆக உடை உடுத்துவாள்.அளவாக நகை அணிவாள்...

வில்லி உடை அலங்காரம்,மேக் அப் ,நகைகள்..எல்லாமே ஓவராகத்தான் இருக்கும்.


#மாமியார்/ நாத்தநார்  வில்லிகளாக இருந்தால் (வேற யாரு இன்னும் suitable !!!) விதவிதமாக ரூம் போட்டு  யோசிக்காமலே கொடுமைகள் செய்வார்கள்! அவர்கள் கொடுமைகள் செய்யச் செய்ய டி.ஆர்.பீ. rating எகிறும்!!!!!
நல்ல ஹீரோயினோ அத்தனையும் தாங்கிக்கொள்வாள்.(அப்போதும் டி ஆர் பீ எகிறும்!!!!!)

#டிவீ  பெண்கள் எல்லோருமே உச்சஸ்தாயியில் தான் பேசுவார்கள்...அழுவார்கள்...

#அவர்கள் வாழ்கை ஒரு roller coaster  சவாரி போல...
திடீர் என்று கோடீஸ்வரர்கள் ஆவார்கள்..
திடீர் என்று நடுதெருவுக்கு வருவார்கள்...அடுத்த எபிசொடிலேயே பெரிய பிசினஸ் ஆரம்பிப்பார்கள்...
பென்ஸ் காரில் வலம் வருவார்கள்...(ஏனோ மாத சம்பள வேலையில் அதிகம் ஹீரோயின்கள் இருக்கமாட்டார்கள்...)

#டி.வீ.பெண்கள் வீட்டில் அரிசி,பருப்பு,ஷெல்பில்  'விஷம்' என்ற பெயர் எழுதிய விஷ பாட்டில் வைத்திருப்பார்கள்!!!!

# போலீஸ் ஸ்டேஷன்,கோர்ட்,ஜெயில் எல்லாம்  டி.வீ.ஹீரோயின்   சென்று வரும் பிக்னிக் ஸ்பாட்கள் !!!!!

#கடைசி எபிசோட்களில் ஹீரோயின்  பொங்கி எழுவாள்...வில்லி  திருந்துவாள்...ஹீரோயின்  மன்னித்துவிடுவாள்..அவள் ரொம்ப...நல்லவள் ஆச்சே!!!!!!

# டி வீ ஹீரோயின்கள்  எப்பேர்பட்ட குடும்ப பாரத்தையும் அலேக்காக சுமப்பாள்!

#ராட்ஷசி மாமியார்...உதவாக்கரை உறவுகள்...பூச்சி போன்ற புருஷன்...பிசினஸ்  போட்டிகள்...வழக்குகள்...
குழந்தை...சமையல்..என்று எல்லாமே ' ஜஸ்ட் லைக் தட்'  handle  செய்வாள்.

#ஹீரோயனே குடும்பத்தின் முக்கிய சம்பாத்தியம் செய்வாள்.

#ஆனால் ஒன்று...நம்  பெண்கள் நாள் முழுவதும் சீரியல் பார்பார்கள்...
டி வீ பெண்கள்...சீரியல் பார்ப்பதாக எந்த சீரியலிலும் நாம் பார்ப்பது இல்லை !!!!!!


9 comments:

  1. Congratulations.

    In serials a poor family which struggles to get its daily requirements is shown to travel by auto and they wear new dresses :-)

    ReplyDelete
    Replies
    1. Welcome to my blog,Mira.
      Why not fine dresses...they even wear designer wear and accessories...live in a sprawling house...etc.

      Delete
  2. காட்டப்பட்டுள்ள மயில் அழகோ அழகு. அதுபோலவே இந்தத்தங்களின் பதிவும் அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  4. அழ்கான படம்..
    அருமையாய் விரிந்து பரந்த கருத்துக்கள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  5. தங்கள் மேலான கருத்துக்கு நன்றி,ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  6. மேடம் ! தங்கள் படைப்புகளை மங்கையர் மலரில் படித்திருக்கிறேன். தங்கள் பதிவுலக பிரவேசத்திற்கு வாழ்த்துக்கள். சீரியல் பெண்கள் பற்றிய பதிவு அருமை, அனைத்துமே உண்மை.

    ReplyDelete
  7. Welcome to my blog,Thanaithalaivi.

    ReplyDelete
  8. மயிலின் படம் மிகவும் அழகாக இருக்கிறது!

    ReplyDelete