மாமரம்,தென்னை மரம் ,பலா மரம்
பார்த்திருப்பீர்கள்...
ஏன் -பணம் காய் ச்சி மரம் கூட கேள்விப்படிருபீர்கள்...
(நானும் கேள்வி தான் பட்டிருக்கிறேன்...
பார்த்ததில்லை! பாத்தால் சொல்லுங்கள் ...
நம் வீட்டிலும் ஒன்று நட்டு வைப்போம் !!!)
ஆனால்,முத்துக்கள் காய்த்துக் குலுங்கும்
ஒரு தங்க மரத்தை பார்த்து இருகிறீர்களோ?
இதோ...
நான் செய்த முத்து மரம் ....
செய்வது ரொம்ப சிம்பிள் தான்...
செலவும் ரொம்ப ஆகாது...
சீக்கிரம் பழசும் ஆகாது...
(இந்த மரத்தின் வயசு 25 என்றால் நம்ப முடிகிறதா?)
இதை செய்ய தேவையான பொருட்கள்...
#ஒரு பீங்கான் கோப்பை
#15-25 தங்க நிற அலுமினியம் கம்பிகள்
#1 சரம் முத்துக்கள் (சாதா பிளாஸ்டிக் முத்துக்கள்)
#பிளாஸ்டர் ஆப் பாரிஸ் -1 கப்
#பழுப்பு நிற அக்ரிலிக் பெயிண்ட் -சிறிதளவு
செய்முறை
- கம்பிகளை இரண்டாக மடிக்கவும்.
- கம்பியின் ஒவ்வொரு நுனியிலும் ஒரு முத்தை கோர்த்து முது விழாத வண்ணம் முறுக்கிவிடவும்.
- 4-5 கம்பிகளை கொத்தாக சேர்த்து ஒரு ஓரத்தை முறுக்கி கிளைகள் போல வடிவமைக்கவும்.
- எல்லாக் கிளைகளையும் சேர்த்து கம்பிகளை கெட்டியாக முறுக்கி அடிப்பாகத்தை லேசாக விரித்து விடவும்.
- இதை கோப்பைக்குள் பொருத்தி முதுக்கம்பிகளை மரம் வடிவத்தில் வளைத்து நெளித்து வைக்கவும்.
- பிளாஸ்டர் ஆப் பாரிஸ் இல் தண்ணீர் சேர்த்து கோப்பைக்குள் ஊற்றவும்.
- 10 -15 நிமிடங்களில் அது சிமெண்ட் போல செட் ஆகி விடும்.
- நன்றாக காய்ந்தபின் பழுப்பு நிற வர்ணம் பூசி அதற்கு மண் போன்ற தோற்றத்தை கொடுக்கவும்.
#அழுக்கானால் கவலை இல்லை ...அவ்வப்போது வாட்டர் வாஷ் செய்து விட்டால் பளிச் என்று புதுசு போல ஆகிவிடும்...