badge

Followers

Friday 28 October 2016

ஷிர்டியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்...




ஷிர்டியில் உள்ள சாய்பாபா சிலை உருவான விதம்.....

36 வருடங்களாக பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர். அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. 

அது அப்பொழுது எதற்கு வந்தது, ஏன் வந்தது, அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக நிர்வாகம் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். 

இதை அறிந்த சாய் சன்ஸ்தான் அதிகாரி அதை ஏலத்தில் எடுத்து அதை பம்பாயில் உள்ள பாலாஜி வசந்த் தாலிம் என்னும் சிற்பியிடம் பாபாவின் கருப்பு வெள்ளை புகைப்படத்தை அளித்து அதே மாதிரி சிலை செய்ய கூறினார்கள். 

அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி தாலிம் மிகவும் கஷ்டப்பட்டார்.
அப்பொழுது பாபா அவர் கனவில் தோன்றி அவருடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தை போக்கி அவரை உற்சாகப்படுத்தினார். சிற்பி பின்னர் தெளிவு பெற்று மிகவும் சிறப்பாக எல்லோரும் எதிர்ப்பார்த்தது போல் மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.

பின்னர் அந்தச் சிலை 7ம் தேதி அக்டோபர் மாதம் 1954ம் ஆண்டு பிரதிஷ்டை செய்தார்கள்.

 அன்று விஜயதசமி, அந்தச் சிலையை உண்மையான மனிதராக எண்ணி அதிகாலை வெந்நீர் ஸ்நானம் செய்து காலை, மதியம் , மாலை,இரவு என  வேலையும் உடை மாற்றி தங்க க்ரிடம் சார்த்தி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இரவு ஆரத்திக்குப்பின் கொசுவலை சார்த்தி சமாதி மீது பருத்தியினால் ஆன வெள்ளைத் துணியை போர்த்தி விடுவார்கள். சிலை வைப்பதற்கு முன்பு வழிபட்ட கருப்பு வெள்ளை புகைப்படம் இன்றும் சமாதியில் இருக்கிறது.

தற்போது உள்ள கோயில் கட்டிடம் முந்தைய கட்டிடத்தை விட இருமடங்கு பெரியதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

5 comments:

  1. ஸ்ரீ ஷீர்டி சாய் பாபா சிலை வரலாறு அறிந்துகொள்ள முடிந்தது.

    மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி.மனம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

      Delete
  2. ஷிர்டி சாய்பாபா பற்றிய தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி,Sir.

      Delete
  3. இனிய தீபாவளி வாழ்த்துகள்

    ReplyDelete