badge

Followers

Friday 13 June 2014

தெரிந்து கொள்வோமே ...




சில சுவாரசியமான  சில குறிப்புகள் ! ! !

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது
மாதத்திலிருந்துஉரு வாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள்ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும்40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளைநிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகி தம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால்அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும்போது நாக்கின் சுவைமொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடிய தாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக் கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டு பிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக் கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.
(Courtesy-internet)

11 comments:

  1. இதுவரை அறியாத பல தகவல்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்களுக்கும் பாராட்டுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...

      Delete
  2. அருமையான ஆச்சர்யம் அளிக்கும் தகவல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் கருத்துக்கு நன்றி,சார்.

      Delete
  3. //தெரிந்து கொள்ள்வோமே ...//

    என்பதை

    ‘தெரிந்து கொள்வோமே’

    எனத்தெரிந்துகொண்டு
    படிக்க வேண்டியதாக உள்ளது. ;)

    ReplyDelete
    Replies
    1. தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி."க் "கை நீக்கி விட்டேன்

      Delete
  4. பல தகவல்கள் வியப்பளித்தது...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,தனபாலன்.

      Delete
  5. சுவாரசியமான குறிப்புகள் அருமை. ! ! !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,ராஜராஜேஸ்வரி

      Delete
  6. சந்தோஷ தகவலுக்கு நன்றிகள்...தனபாலன்...

    ReplyDelete