சாதாரண அலுமினியம் தகட்டில் வரையப்பட்ட இந்த மாயக்கண்ணனின்
குழல் ஓசை தான் இந்தக் காற்றினிலே மிதந்து வரும் இனிய கீதமோ???
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே...
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திட பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்
பண்ணொளி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுரமோகன கீதம்
நெஞ்சினிலே
நெஞ்சினில் இன்பக் கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
சுனை வண்டுடன் சோலைக்குயிலும்
மனங் குவிந்திடவும்
வானவெளிதனில் தாரா கணங்கள்
தயங்கி நின்றிடவும்
ஆ.. என் சொல்வேன் மாயப்பிள்ளை
வேய்ங்குழல் பொழி கீதம்
காற்றினிலே வரும் கீதம்
காற்றினிலே வரும் கீதம்
நிலா மலர்ந்த இரவினில் தென்றல்
உலாவிடும் நதியில்
நீல நிறத்து பாலகன் ஒருவன்
குழல் ஊதி நின்றான்
காலமெல்லாம்
காலமெல்லாம் அவன் காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே வரும் கீதம்..
காற்றினிலே..
பாடலும், அதற்கு உங்கள் ஓவியமும் சேர்ந்து மனத்தைக் கவருகின்றன உஷா!
ReplyDeleteபாராட்டுக்கள்!
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,ரஞ்சனி
Deleteஅழகான பாடல். அதற்கேற்ற ஓவியம். காற்றினிலே தந்துள்ள கீதம்
ReplyDeleteபாராட்டுக்கள்.
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,VGK Sir...
Deleteஇந்தப்பாடல் M .S .சுப்பலட்சுமி அவர்களின் தேன் குரலை நினைவு படுத்துகிறது...
ரசிக்க வைக்கும் பாடல்... படமும் அருமை... நன்றி...
ReplyDeleteவருகை தந்து பின்னூட்டம் தந்த தங்களுக்கு என் நன்றிகள்
ReplyDeleteHave no words to appreciate...just awesome
ReplyDeleteThanx for the visid and comment,Ranjana
Deleteபடம் ரொம்ப நல்லா இருக்குங்க. பாடல் சான்சே இல்லைங்க அவ்வளவு இனிமையான பாடல் பகிர்வுக்கு நன்றிங்க.
ReplyDeleteவருகைக்கும் commentukkum நன்றி,பூந்தளிர்...அழகான கவித்துவமான பெயர்!
DeleteVery nice ! yeppadi seiyarathunnum oru post pootinganna romba nanaa irukkum.
ReplyDelete