badge

Followers

Wednesday 17 September 2014

நம்ம காலம் வேறு




1970 வரை பிறந்த நம்மை போன்றவர்களை இக்கால ஜெனரேஷன் குழந்தைகள் என்ன நினைத்தாலும் கேலி செய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே! 

·தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூட படுத்து உறங்கியவர்கள் நாம்தான்.

·எந்த வித உணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாக இருந்ததில்லை.

·கிச்சன் அலமாரிகளில் 'சைல்டு புருஃப் லாக்' போட்டு இருந்ததில்லை.

·புத்தகங்களை சுமக்கும் பொதிமாடுகளாக இருந்ததில்லை.

·சைக்கிள் ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டியதில்லை.

·பள்ளியில் இருந்து வீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரே விளையாட்டுதான். ரூமிற்குள் அடைந்து உலகத்தை பார்ப்பதில்லை.

·நாங்கள் விளையாடியது நிஜநண்பர்களிடம் தான் நெட்நண்பர்களிடம் இல்லை.


லீவ் விட்டால் தாத்தா ,பாட்டி  வீட்டுக்குப் போய்  கும்மாளம் அடித்தோம்.

·தாகம் எடுத்தால் தெரு குழாய்களில் தண்ணீர் குடிப்போம். ஆனால் மினரல் வாட்டர் பாட்டில் தேடியதில்லை.

·ஒரே ஜூஸை வாங்கி நாலு நண்பர்களும் மாறி மாறி குடித்தாலும் நோய்கள் எங்களை வந்தடைந்ததில்லை.

·அதிக அளவு இனிப்பு பண்டங்களையும் தட்டு நிறைய சாதம் சாப்பிட்டு வந்த போதிலும் ஒவர் குண்டாக இருந்ததில்லை.

·காலில் ஏதும் அணியாமல் இருந்து நாள் முழுவதும் சுற்றி வந்தாலும் காலுக்கு ஏதும் நேர்ந்ததில்லை.

·சிறு விளக்கு வெளிச்சத்தில் படித்து வந்தாலும் கண்ணாடி அணிந்ததில்லை.

·உடல் வலிமை பெற ஊட்டச்சத்து பானங்கள்அருந்தியதில்லை .மிஞ்சிய சாதத்தில் ஊற்றி வைத்த நீரைச் சாப்பிட்டே உடல் வலிமை பெற்றவர்கள்.

·எங்களுக்கு வேண்டிய விளையாட்டு பொருட்களை நாங்களே உருவாக்கி விளையாடி மகிழ்வோம்

·எங்கள் பெற்றோர்கள் பண வசதி மிக்க லட்சாதிபதிகள் அல்ல. ஆனாலும் அவர்கள் "பணம்.. பணம்.." என்று அதன் பின்னால் ஓடுபவர்கள் அல்லர்.

அவர்கள் தேடுவதும் கொடுப்பதும் அன்பை மட்டுமே பொருட்களை அல்ல.

·அவர்கள் தொடர்பு கொள்ளும் அருகாமையில்தான் நாங்கள் இருந்து வந்தோம். அவர்கள் எங்களை தொடர்பு கொள்ள "ஏலேய்ய்ய்.." என்ற ஒரு வார்த்தை போதுமானதாக இருந்தது அதனால் தொடர்பு கொள்ள செல்போனை தேட அவசியமில்லை.

·உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டர் வீடு தேடி வருவார் டாக்டரை தேடி ஒடியதில்லை.

.·எங்களது உணர்வுகளை போலியான உதட்டசைப்பினால் செல்போன் மூலம் பறிமாறவில்லை

உள்ளத்தில் இருந்து வரும் உண்மைகளை எழுத்தில் கொட்டி கடிதமாக எழுதி தெரிவித்து வந்தோம். அதனால் சொன்ன சொல்லில் இருந்து என்றும் மாறியதில்லை.

·எங்களிடம் செல்போன், டிவிடி, ப்ளை ஸ்டேஷன், எக்ஸ்பாக்ஸ், வீடியோ கேம், பெர்சனல் கம்ப்யூட்டர், நெட், சாட் போன்றவகள் இல்லை ஆனால் நிறைய நிஜமான நண்பர்கள் இருந்தனர்.

·வேண்டும்பொழுது நினைத்த நண்பர்கள் வீட்டிற்கு சென்று உணவுண்டு உரையாடி மகிழந்து வந்தோம். அவர்கள் வீட்டிற்கு போவதற்கு போனில் அனுமதி பெற தேவையில்லை.

·எங்கள் காலங்களில் திறமை மிக்க தலைவர்கள் இருந்தனர். அவர்கள் சமூகத்திற்காக தங்கள் செல்வங்களை செலவிட்டனர் இந்த காலம் போல சமூகச் செல்வங்களை கொள்ளை அடித்தவர்கள் அல்லர்.


எங்கள் வீடுகளில் தபால்க்காரர் தினமும் எதிர்பார்க்கப்படும் வி ஐ பி ...!!!அவர் உறவினர்களும்,நண்பர்களும் கைப்பட எழுதிய கடிதங்களை கொண்டு வந்தார்...இன்று போல  junk மெயில்லை அல்ல ...

·உறவுகள் அருகில் இருந்தது உள்ளம் நன்றாக இருந்ததால் உடல் நலம் காக்க இன்சூரன்ஸ் எடுத்தத்தில்லை.

·நாங்கள் எடுத்த புகைப்படங்கள் கருப்பு வெள்ளையாக இருந்தாலும் அதில் உள்ளவர்களிடம் வண்ணமயமான நல்ல எண்ணங்கள் இருப்பதை உணரலாம். ஆனால் இப்போது எடுக்கப்படும் படங்கள் கலராக இருக்கலாம்; ஆனால் அதில் உள்ளவர்களின் எண்ணங்கள் கருப்பாகவே இருக்கின்றன.

·இலவசம் பெறும் பிச்சைக்காரர்களாக இருந்ததில்லை.

·இந்த காலங்களில் பிறந்து வளர்ந்த வந்த நாங்கள் அதிர்ஷ்ட சாலிகளா இல்லையா என்பதை இப்போது சொல்லுங்கள்

7 comments:

  1. அருமையான பதிவு
    இல்லையில்லை எனச் சொல்லிப் போகும்
    ஒவ்வொன்றுக்குப் பின்னும் எத்தனை இருந்தது
    என்பதை உணரச் செய்த விதம் அற்புதம்
    மனம் கவர்ந்த பதிவு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி,சார்.

      Delete
  2. Very rightly said,turning me into nostalgic memories!the bondage is missing now, may be due to changing times!vishwanath

    ReplyDelete
    Replies
    1. Thanks for the visit and the nice comments :)

      Delete
  3. அந்தக்காலத்தையும் இந்தக்காலத்தையும் ஒப்பிட்டுள்ளது படிக்க மிகவும் அருமையாகத்தான் உள்ளது..

    நாம் இரண்டு காலங்களிலும் வாழ நேர்ந்துள்ளதால் இவற்றை தாங்கள் துல்லியமாக இவ்வாறு எடுத்துச்சொல்ல முடிகிறது. என்னாலும் இவற்றை முற்றிலும் புரிந்துகொள்ள முடிகிறது.

    இன்னும் ஒரு 30-40 ஆண்டுகளுக்குப்பின் இதை சொல்வாரும் இருக்கப்போவது இல்லை. சொன்னால் நம்புவோரும் இருக்கப்போவது இல்லை என்பதே நிஜம்.

    மாற்றங்கள் காலத்தின் கட்டாயம். மாற்றம் ஒன்றே என்று மாறாதது என்பது தான் நிஜம்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. //மாற்றங்கள் காலத்தின் கட்டாயம். மாற்றம் ஒன்றே என்று மாறாதது என்பது தான் நிஜம். //

      100% நிஜம்...

      Delete
  4. சரியாக அளவிட்டிருக்கின்றீர்கள். எல்லாம் இருந்து ஒன்றுமே இல்லாத வாழ்வு வாழும் எண்கள் இளையவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய பதிவு.

    ReplyDelete