badge

Followers

Sunday 1 July 2012

மாடு மேய்க்கும் கண்ணே...





பாடலைக்கேட்க இங்கே சொடுக்கவும்...
பாடலைக்கேட்க .....


மாடு மேய்க்கும் கண்ணே- நீ
போக வேண்டாம் சொன்னேன்
காய்ச்சின பாலு தரேன்; கல்கண்டுச் சீனி தரேன்
கை நிறைய வெண்ணை தரேன்; வெய்யிலிலே போக வேண்டாம்

காய்ச்சின பாலும் வேண்டாம்; கல்கண்டுச் சீனி வேண்டாம்
உல்லாசமாய் மாடு மேய்த்து, ஒரு நொடியில் திரும்பிடுவேன்

போக வேணும் தாயே
தடை சொல்லாதே நீயே


யமுனா நதிக் கரையில் எப்பொழுதும் கள்வர் பயம்
கள்வர் வந்து உனை அடித்தால் கலங்கிடுவாய் கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்

கள்ளனுக்கோர் கள்ளன் உண்டோ? கண்டதுண்டோ சொல்லும் அம்மா?
கள்வர் வந்து எனை அடித்தால் கண்ட துண்டம் செய்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)

கோவர்த்தன கிரியில் கோரமான மிருகங்கள் உண்டு
கரடி புலியைக் கண்டால் கலங்கிடுவாய் கண்மணியே
(மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்)

காட்டு மிருகமெல்லாம் என்னைக் கண்டால் ஓடி வரும்
கூட்டங் கூட்டமாக வந்தால் வேட்டை ஆடி ஜெயித்திடுவேன்
(போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே)


பாசமுள்ள நந்தகோபர் பாலன் எங்கே என்று கேட்டால்
என்ன பதில் சொல்வேனடா என்னுடைய கண்மணியே
மாடு மேய்க்கும் கண்ணே - நீ போகவேண்டாம் சொன்னேன்

பாலருடன் வீதியிலே பந்தாடுறான் என்று சொல்லேன்
தேடி என்னை வருகையிலே ஓடி வந்து நின்றிடுவேன்
போக வேணும் தாயே - தடை சொல்லாதே நீயே 
(நன்றி -internet)

உன் புல்லாங்குழல் இசையால் நீ உன் மாடுகளை மட்டும் கட்டிப் போடவில்லை கண்ணா ...
ஈரேழு உலகங்களையும் தான் உன் மாயக்குழலால்
கட்டிப் போட்டிருக்கிறாய் ...

11 comments:

  1. ஆஹா! மீண்டும் திருமதி அருணா சாய்ராம் அவர்களின் அழகான

    ”மாடு மேய்க்கும் கண்ணே”

    பாடலுடன், வெண்ணெய் திருடும் கண்ணன் படம், மிகவும் கலக்கலாக... ;)

    புத்தம் புதிய வெண்ணெய் போன்ற நல்ல வெள்ளை நிறத்தில் காட்டியுள்ளது, மிகவும் எடுப்பாக உள்ளது.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  2. //உன் புல்லாங்குழல் இசையால் நீ உன் மாடுகளை மட்டும்
    கட்டிப் போடவில்லை கண்ணா ...

    ஈரேழு உலகங்களையும் தான் உன் மாயக்குழலால்
    கட்டிப் போட்டிருக்கிறாய் ...//

    உண்மை தான் மேடம்.

    இன்றைய தங்களின் இரண்டு பதிவுகளும்
    நாங்கள் அடிக்கடி வீடியோவில் போட்டுக்
    கேட்டு மகிழும் பாடல்கள்.

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    ReplyDelete
  3. உங்கள் கைவண்ணம் மிகவும் அருமை அக்கா. அக்கா எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் அடிகடி கேட்பது உண்டு . நீங்கள் என்னை மறுபடியும் இப்பாடலை கேட்க்க வைத்துவிட்டீர்கள் பகிர்வுக்கு நன்றி அக்கா.....

    ReplyDelete
    Replies
    1. விஜி,இந்தப்பாடல் மனதை positive energy யால் நிரப்புப் அருமையான பாடல் அல்லவா..

      Delete
  4. Replies
    1. உங்களை என் ப்ளாக் கில் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி ...Welcome!

      Delete
  5. Thanx for the link.Will try to add it soon :)

    ReplyDelete
  6. Wowww! எல்லா ஓவியங்களுக்கும் பொருத்தமான பாடல்கள் போட்டிருக்கீங்களா? சூப்பர்! :)

    ReplyDelete
  7. Glad you liked the paintings and the songs too!

    ReplyDelete